2023 சூடான் மோதல்கள்
2023ஆம் ஆண்டில் ஜனநாயக முறைப்படி புதிய சூடான் அரசை அமைப்பதில் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக சூடான் இராணுவத்தினருக்கும், சூடானின் துணை-இராணுவப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் ஆயுத மோதலாகும்.[5] இந்த மோதல்கள் 15 ஏப்ரல் 2023 அன்று தொடங்கி, தற்போது நாடு முழுவதும், முக்கியமாக தலைநகர் கர்த்தூம் மற்றும் தார்பூர் பிரதேசங்களில் மோதல்கள் வெடித்தன. இம்மோதல்களில் ஏப்ரல் 21 வரை குறைந்தது 420 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 3,700க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.[4] சூடான் இராணுவத்தினர்க்கு உதவ வந்த 200 எகிப்திய இராணுவத்தினர், சூடான் துணை-இராணுவப்படைகளால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
சூடான் ஜனநாயகப் பாதைக்கு திரும்பும் காலப் பகுதி | |||||||||
இராணுவம்-துணை இராணுவம் மோதல்கள் நிலவரம், தற்போது வரை 1 சனவரி 2025 சூடான் இராணுவத்தினர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் சூடான் துணை-இராணுவப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
சூடான் துணை-இராணுவப்படைகள் | சூடான் இராணுவம் ஆதரவு நாடுகள்: எகிப்து |
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
முகமது ஹம்தான் டாகோலா | அப்தெல் பட்டா அல்-புர்ஹான் | ||||||||
பலம் | |||||||||
70,000–150,000[3] | 110,000–120,000[3] | ||||||||
இழப்புகள் | |||||||||
சுமார் 420 கொல்லப்பட்டனர் மற்றும் 3700 பேர் காயமடைந்தனர்[4] சூடான் இராணுவத்தினருக்கு உதவ வந்த 200 எகிப்திய இராணுவத்தினரை, சூடான் துணை-இராணுவப் படைகளால், போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர். |
முக்கிய அரசாங்க தளங்களில் துணை-இராணுவப் படைகள் (RSF) நடத்திய தாக்குதல்களுடன் சண்டை தொடங்கியது. கார்ட்டூம் உட்பட சூடான் முழுவதும் வான்வழித் தாக்குதல்கள், பீரங்கிகள் மற்றும் கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 21, 2023 நிலவரப்படி, சூடான் துணை-இராண்வப்படைகளின் தலைவர் முகமது ஹம்தான் டகாலோ மற்றும் சூடானின் இராணுவத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் இருவரும் பல முக்கிய அரசாங்க தளங்கள் மற்றும் தலைமையகத்தின் கட்டுப்பாட்டைக் கோரினர்.[6]
பின்னணி
தொகுஅரசியல் சூழல்
தொகு2019இல் சூடான் நாட்டின் முன்னாள் அதிபர் ஓமார் அல்-பஷீர் இராணுவத்தினர் மற்றும் துணை-இராணுவத்தினர் ஒன்று சேர்ந்து பதவியிலிருந்து விரட்டி அடித்தனர். பிரதம மந்திரி அப்தல்லா ஹம்டோக் தலைமையில் ஒரு இடைக்கால கூட்டு சிவிலியன்-இராணுவ ஐக்கிய அரசாங்கம் நிறுவப்பட்டது. இருப்பினும் அக்டோபர் 2021இல், சூடான் இராணுவத் தலைவர் அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் மற்றும் துணை-இராணுவப் படைகளின் தலைவர் டகாலோ தலைமையிலான ஒரு சதிப்புரட்சியில் இராணுவம் சூடான் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியது. துணை-இராணுவப் படைகளின் தலைவர் அல்-புர்ஹான் ஏகபோக அதிகாரம் கொண்ட சூடானின் இடைக்கால ஆட்சிக்குழுவின் தலைவர் ஆனார். உருவாகப் போகும் புதிய சூடான் ஜனநாயக அரசில் துணை-இராணுவப்படையினரை, இராணுவப் படைகளில் சேர்த்துக் கொள்வது குறித்து இராணுவத்தினருக்கும், துணை-இராணுவத்தினர்க்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.[7]
இதன் விளைவாக பிப்ரவரி மற்றும் மார்ச் 2023இல் சூடான் துணை-இராணுவத்திற்கும் மற்றும் சூடான் இராணுவத்திற்கும் மோதல்கள் அதிகரிக்கத் துவங்கியது. சூடான் முழுவதிலும் துணை-இராணுவப்படையில் புதிய உறுப்பினர்களை சேர்க்கத் தொடங்கியது. தலைநகரம் கார்ட்டூமை துணை-இராணுவப்படையினர் கைப்பற்றினர். ஏப்ரலில் தார்பூர் பிரதேசம் நியாலா, கப்கபியா மற்றும் ஜெனைனா நகரங்களை துணை-இராணுவப் படைகள் கைப்பற்றியது.
விளைவுகள்
தொகு22 மார்ச் 2023 அன்று ரம்ஜானை முன்னிட்டு சூடான் இராணுவம் மற்றும் துணை-இராணுவப்படைகள் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டது.[8] ஐக்கிய் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் தங்களின் தூதுவர்களை சூடானிலிருந்து திரும்பி அழைத்துக் கொண்டுள்ளது.[9]
இந்தியாவின் காவேரி நடவடிக்கை
தொகுஇந்திய அரசு காவேரி நடவடிக்கை எனும் பெயரில் சூடானில் சிக்கியுள்ள 3,500 இந்தியர்களில் 360 பேரை மீட்டு, சூடான் துறைமுகம் வழியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.[10]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sudan: Deadly Sudan Army-RSF Clashes Spark Human Tragedy, Widespread Looting in Darfur பரணிடப்பட்டது 19 ஏப்பிரல் 2023 at the வந்தவழி இயந்திரம், 17 April 2023
- ↑ Salih, Zeinab (April 16, 2023). "Sudan fighting rages for second day despite UN-proposed ceasefire" இம் மூலத்தில் இருந்து April 16, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230416191956/https://www.theguardian.com/world/2023/apr/16/sudan-fighting-rages-for-second-day-despite-un-proposed-ceasefire.
- ↑ 3.0 3.1 "Sudan: Stalemates rule out one-man victory". DW. 19 April 2023 இம் மூலத்தில் இருந்து 19 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230419193223/https://www.dw.com/en/sudan-stalemates-rule-out-one-man-victory/a-65373902#:~:text=%22The%20range%20of%20the%20RSF,duty%20personnel%2C%22%20she%20added..
- ↑ 4.0 4.1 https://edition.cnn.com/2023/04/22/africa/sudan-army-foreign-evacuations-intl/index.html.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ Sudan crisis: What's the conflict all about?
- ↑ Sudan crisis
- ↑ "At least 56 killed, hundreds injured in clashes across Sudan as paramilitary group claims control of presidential palace" (in en-UK). CNN. 16 April 2023 இம் மூலத்தில் இருந்து 16 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230416003054/https://edition.cnn.com/2023/04/15/africa/sudan-presidential-palace-intl.
- ↑ Clashes in Sudan on Eid holiday despite truce announcements
- ↑ U.S. and Other Countries Evacuate Embassy Staff From Sudan
- ↑ சூடானிலிருந்து விமானம் வாயிலாக 360 இந்தியர்கள் மீட்பு