2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல்
2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Mizoram Legislative Assembly election) 7 நவம்பர் 2023 அன்று மாநிலத்தின் 40 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.[3][4]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மிசோரம் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 40 இடங்களும் அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 80.66% (▼0.95pp[1][2] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய மிசோரம் சட்டப் பேரவை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இத்தேர்தலுக்கான முடிவுகள், இராசத்தான், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மற்றும் தெலங்காணா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளுடன் 4 திசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 இடங்களில் வென்றதன் மூலம் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைத்தது.[2]
பின்னணி
தொகுமிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 17 திசெம்பர் 2023 அன்று முடிவடைகிறது.[5] இதற்கு முன் 2018 நவம்பரில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தது. தேர்தலுக்குப் பிறகு, மிசோ தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை அமைத்தது, சோரம்தாங்கா முதலமைச்சரானார்.[6]
மிசோரமில் 19,93,937 ஆண்கள், 20,84,675 பெண்கள் மற்றும் 69 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 40,78,681 வாக்காளர்கள் உள்ளனர்.[7]
அட்டவணை
தொகுதேர்தல் நிகழ்வுகள் | அட்டவணை |
---|---|
அறிவிக்கை நாள் | 13 அக்டோபர் 2023 |
வேட்பு மனு தாக்கல் துவக்கம் | 13 அக்டோபர் 2023 |
வேட்பு மனு தாக்கல் இறுதி தேதி | 20 அக்டோபர் 2023 |
வேட்பு மனு பரிசீலனை | 21 அக்டோபர் 2023 |
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி தேதி | 23 அக்டோபர் 2023 |
வாக்குப் பதிவு நாள் | 7 நவம்பர் 2023 |
வாக்கு எண்ணிக்கை நாள் | 4 திசம்பர் 2023 |
கட்சிகளும் கூட்டணிகளும்
தொகுகட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் தொகுதிகள் | |
---|---|---|---|---|---|
மிசோ தேசிய முன்னணி | சோரம்தாங்கா | 40 | |||
இந்திய தேசிய காங்கிரசு | இலால்சவ்தா[8] | 40 | |||
ஜோரம் மக்கள் இயக்கம் | இலால்துகோமம் | 40 | |||
பாரதிய ஜனதா கட்சி | வன்கலால்முகா | 23 | |||
ஆம் ஆத்மி கட்சி | ஆண்ட்ரூ இலால்ரெம்கிமா பச்சுவா | 4 |
தேர்தல் முடிவுகள்
தொகுமொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.[9]
கட்சி வாரியாக முடிவுகள்
தொகுகட்சி | வாக்குகள் | இடங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±pp | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றிபெற்ற தொகுதிகள் | +/− | ||||
ஜோரம் மக்கள் இயக்கம் | 266,127 | 37.87% | 37.87 | 40 | 27 | 19 | |||
மிசோ தேசிய முன்னணி | 246,676 | 35.11% | ▼ 2.59 | 40 | 10 | ▼ 16 | |||
இந்திய தேசிய காங்கிரசு | 146,172 | 20.80% | ▼ 9.18 | 40 | 1 | ▼ 4 | |||
பாரதிய ஜனதா கட்சி | 35,524 | 5.05% | ▼ 3.04 | 23 | 2 | 1 | |||
ஆம் ஆத்மி கட்சி | 615 | 0.09% | 0.09 | 4 | – | ||||
சுயேட்சை | 4,753 | 0.68% | ▼22.26 | 27 | – | ||||
நோட்டா | 2,779 | 0.40% | ▼0.06 | ||||||
மொத்தம் | 702,646 | 100% |
மாவட்டவாரியாக முடிவுகள்
தொகுமாவட்டம் | இடங்கள் | ||||
---|---|---|---|---|---|
ஜோமஇ | மிதேமு | பாஜக | இதேகா | ||
மாமித் | 3 | 0 | 3 | 0 | 0 |
கோலாசிப் | 3 | 1 | 2 | 0 | 0 |
அய்சால் | 14 | 13 | 1 | 0 | 0 |
சாம்பாய் | 5 | 4 | 1 | 0 | 0 |
செர்ச்சிப் | 3 | 3 | 0 | 0 | 0 |
லுங்லேய் | 7 | 5 | 2 | 0 | 0 |
லாங்தலாய் | 3 | 1 | 1 | 0 | 1 |
சாய்கா | 2 | 0 | 0 | 2 | 0 |
மொத்தம் | 40 | 27 | 10 | 2 | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Women voters' turn out in Mizoram assembly polls higher than men". The Shillong Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-11-11. Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-18.
- ↑ 2.0 2.1 "80.66 percent voting in Mizoram elections, more women voters cast their votes than men". ETV Bharat News (in இந்தி). Archived from the original on 18 November 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-11-18.
- ↑ "List Of Upcoming Elections in India 2020 - 2021 | Elections.in". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
- ↑ "List of Upcoming Elections in India - Oneindia News". www-oneindia-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Zoramthanga takes oath as Mizoram CM". Deccan Herald (in ஆங்கிலம்). 2018-12-15. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Assembly elections Highlights: Voting for Mizoram, Chhattisgarh phase 1 concludes, over 70% voter turnout recorded". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-11-10.
- ↑ "Who Is Lalsawta? State Congress Chief And Former Finance Minister Of Mizoram". TimesNow (in ஆங்கிலம்). 2023-11-04. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ மிசோரம் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023