2024 பாக்கித்தான் பொதுத் தேர்தல்
2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 8 பிப்ரவரி 2024 அன்று336 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுவதாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அறிவிக்கையும், தேர்தல் அட்டவணையும் வெளியிட்டது. இத்தேர்தலுடன் பாகிஸ்தானின் 4 மாகாணங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் நடத்தப்பட உள்ளது.
| |||||||||||||
| |||||||||||||
பாகிஸ்தான் தேசிய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் காட்டும் வரைபடம் | |||||||||||||
|
நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமாக இம்ரான் கான் தலைமையிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப், கோகர் அலி கான் தலைமையிலான பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் கட்சி, நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி மற்றும் பிலாவல் பூட்டோ ஜர்தாரி தலைமையிலான பாக்கித்தான் மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
பின்னணி
தொகுபாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். கடைசியாக 25 சூலை 2018 அன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவுற்றதால் தேர்தல்கள் நடைபெறுகிறது.
தேர்தல் அட்டவணை
தொகுபாகிஸ்தான் நாடாளுமன்ற மக்களவைக்கான 336 தொகுதிகளுக்கான தேர்தலை 8 பிப்ரவரி 2024 நடத்த தேர்தல் ஆணையம் 15 டிசம்பர் 2023 அன்று அறிவிக்கை அட்டவணை வெளியிட்டது. [1]
வரிசை எண் | தேர்தல் நிகழ்வு | அட்டவனை |
---|---|---|
1 | தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிக்கை வெளியிடல் | 19 டிசம்பர் 2023 |
2 | வேட்பு மனு தாக்கல் செய்தல் | 20 டிசம்பர் 2023 முதல் 22 டிசம்பர் 2023 வரை |
3 | வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடல் | 23 டிசம்பர் 2023 |
4 | வேட்பு மனு பரிசீலனை முடிவு நாள் | 24 டிசம்பர் 2023 to 30 டிசம்பர் 2023 |
5 | வேட்பு மனு மீதான் ஆட்சேபனைகளை பரிசீலித்து முடிவு செய்தல் | 3 சனவரி 2024 |
6 | வேட்பு மனுக்களை மேல்முறையீட்டு தீர்வாணையம் முடிவு செய்தல் | 10 சனவரி 2024 |
7 | திருந்திய வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடுதல் | 11 சனவரி 2024 |
8 | வேட்பு மனு திரும்பப் பெறும் நாள் | 12 சனவரி 2024 |
9 | வேட்பாளர்களுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் நாள் | 13 சனவரி 2024 |
10 | தேர்தல் நாள் & வாக்கு எண்ணிக்கை நாள் | 8 பிப்ரவரி 2024 |
தேர்தல் நடைமுறை
தொகுபாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்களுக்கு நேரடித் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[2] பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 இடங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை யில், பாக்கித்தானின் 4 மாகாணங்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெற்ற மொத்த வாக்குகள் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள்
தொகுபெயர் | கோரிக்கை கருத்தியல் |
தலைவர் | வாக்கு பங்கீடு in 2018 |
2018 நாடாளுமன்றத் தேர்தல் | தேர்தலுக்கு முந்தைய இடங்கள் | ||
---|---|---|---|---|---|---|---|
PTI | பாக்கித்தான் தெஹரீக்-எ-இன்சாஃப் | மக்களைக் கவரும் கொள்கை இஸ்லாமிய ஜனநாயகம் ஊழல் எதிர்ப்பு |
இம்ரான் கான் | 31.82% | 116 / 272
|
149 / 342
| |
PML(N) | பாகிஸ்தான் மக்கள் கட்சி (நவாஸ்) | பழைமை வாதம் பொருளாதார விடுதலை கூட்டாட்சி |
நவாஸ் ஷெரீப் | 24.35% | 64 / 272
|
82 / 342
| |
PPP | பாகிஸ்தான் மக்கள் கட்சி | சமூக ஜனநாயகம் இஸ்லாமிய ஜனநாயகம் முன்னேற்றம் |
பிலாவல் பூட்டோ ஜர்தாரி | 13.03% | 43 / 272
|
54 / 342
| |
JUI-F | ஜமியத் இ இஸ்லாம் (பாசில்) | இசுலாமியம் பழமைவாதம் |
பாசில் உர் ரகுமான் | 4.85% | 11 / 272
|
14 / 342
| |
JI | ஜமாத் இ இஸ்லாமி பாகிஸ்தான் | இஸ்லாமியம் சமூக பழமைவாதம் |
சிராஜ் உல் ஹக் | 1 / 272
|
1 / 342
| ||
MQM(P) | முத்தஹிதா குவாமி இயக்கம் | தாராளவாதம் சமூக தாராளவாதம் சமூக ஜனநாயகம் புலம்பெயர்ந்தோர் தேசியவாதம் மதச்சார்பின்மை |
காலித் மக்பூர் சித்திக் | 1.38% | 6 / 272
|
7 / 342
| |
TLP | டெக்ரீக் இ லப்பைக் பாகிஸ்தான் | இசுலாமியவாதம் | சாத் உசைன் ரிஸ்வி | 4.21% | 0 / 272
|
0 / 342
| |
GDA | ஜனநாயகப் பெருங்கூட்டணி | பிரதேச வாதம் | பகோரோவின் எட்டாம் பீர் | 2.37% | 2 / 272
|
3 / 342
| |
ANP | அவாமி தேசிய கட்சி | பஷ்தூன் தேசியவாதம் ஜனநாயக சோசலிசம் |
அஸ்பன்தியர் வாலி கான் | 1.54% | 1 / 272
|
1 / 342
| |
PML(Q) | பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (Q) | பழமைவாதம் தேசியவாதம் |
சுஜாத் உசைன் | 0.97% | 4 / 272
|
5 / 342
| |
BAP | பலுசிஸ்தான் அவாமி கட்சி | கூட்டாச்சி இஸ்லாமிய ஜனநாயகம் |
காலித் உசைன் மக்சி | 0.60% | 4 / 272
|
5 / 342
| |
BNP(M) | பலுசிஸ்தான் தேசிய கட்சி (எம்) | பலூச்சி தேசியவாதம் | அக்தர் மெங்கல் | 0.45% | 3 / 272
|
4 / 342
| |
AML | அவாமி முஸ்லீம் லீக் (பாகிஸ்தான்) | இஸ்லாமியவாதம் | சேக் ரசீத் அகமது | 0.22% | 1 / 272
|
1 / 342
| |
JWP | ஜம்பூரி வட்டன் கட்சி | பலூச் தேசியவாதம் | சாஜெயின் புக்தி | 0.04% | 1 / 272
|
1 / 342
|
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sadozai, Irfan (2023-12-15). "ECP issues election schedule for Feb 8 general polls". DAWN.COM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-15.
- ↑ ECP decreases NA seats to 336 in preliminary delimitation of constituencies GEO TV, 31 May 2022