ஏழாம் அறிவு (திரைப்படம்)

தமிழ் திரைப்படம்
(7ம் அறிவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏழாம் அறிவு (7aum Arivu) சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 2011 இல் வெளியான ஒரு அறிவியல் புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும்.

ஏழாம் அறிவு
இயக்கம்ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்புஉதயநிதி ஸ்டாலின்
கதைஏ. ஆர். முருகதாஸ்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புசூர்யா
சுருதி ஹாசன்
ஜானி ட்ரை ஙுயென்
ஒளிப்பதிவுரவி கே. சந்திரன்
படத்தொகுப்புஅண்டனி
கலையகம்ரெட் ஜயன்ட் மூவிஸ்
விநியோகம்ரெட் ஜயன்ட் மூவிஸ்
வெளியீடுஅக்டோபர் 26, 2011 (2011-10-26)[1]
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு50cro[2]
மொத்த வருவாய்மதிப்பீடு. 50cro[3]

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதி தர்மர் (சூர்யா), அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்குக் களரியைக் கற்றுக் கொடுக்கிறார். புத்தமதத்தின் புதிய பிரிவைத் தோற்றுவிக்கிறார்.

அவரது பரம்பரையில் வந்த சாகசக் கலைஞரான அரவிந்தைத் (சூர்யா) தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டித் விடுகிறார்கள். இதனால் அவருக்குப் போதி தர்மரின் திறமைகளான போர்த்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.

சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பப்படும் வில்லன் டாங் லீ (ஜானி ட்ரை ஙுயென்), நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி சுபா (ஸ்ருதி ஹாசன்).

விவரங்கள்

தொகு
  • சூர்யா இப்படத்தில் போதி தருமன்(புத்த துறவி)[4], வட்டரங்கு கலைஞர் என 2 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.[5][6]
  • இப்படத்தில் ஒரு 10 நிமிட காட்சிக்காக 10 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.[7]
  • டோனி ஜாவின் டாம் யம் கூங் திரைப்படத்தில் ஜானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த ஜானி ட்ரை ஙுயென் இந்தப் படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார்.[8]
  • கன்னட நடிகர் அவினாஷ் சூரியாவின் தந்தை வேடத்தில் நடித்திருக்கிறார்.[9]
  • இப்படத்தில் 1,000 நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட பாடல் காட்சி இடம் பெறுகிறது.[10]
இத்திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்திருந்தார்.
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "ஓ ரிங்கா ரிங்கா"  பா. விஜய்ரோசன், ஜான், தயால், சுசித்ரா 5:34
2. "முன் அந்தி"  நா. முத்துக்குமார்கார்த்திக், மேகா 6:14
3. "ஏலேலமா"  நா. முத்துக்குமார்விஜய் பிரகாஷ் , கார்த்திக், சாலினி, சுருதி ஹாசன் 5:21
4. "யம்மா யம்மா"  கபிலன்எஸ். பி. பாலசுப்ரமணியம், சுவேதா மேனன் 6:06
5. "இன்னும் என்ன தோழா"  பா. விஜய்பல்ராம், நரேஷ், சுஜித் 4:58
6. "ரைஸ் ஆஃப் டெமோ
(The Rise of Damo)
" (சீன மொழிப் பாடல்)
மதன் கார்க்கிஹவோ வாங்[11] 3:16

மேற்கோள்கள்

தொகு
  1. "Surya’s 7 Aam Arivu satellite rights sold to Sun TV". CineBuzz. 24 August 2011 இம் மூலத்தில் இருந்து 26 ஆகஸ்ட் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110826020702/http://cinebuzz.in/suryas-7-aam-arivu-satellite-rights-sold-to-sun-tv. பார்த்த நாள்: 24 August 2011. 
  2. T.N.Ashok (16 February 2013). "Tamil films alive and kicking". Madras Musings.
  3. "Top Hero's 100 crore club Movies". cineulagam. Archived from the original on 2016-10-11. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
  4. Surya turns the transmitter of Zen, 2011 {{citation}}: Cite has empty unknown parameter: |4= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Suriya joins the circus! - Rediff.com Movies
  6. "Is Suriya playing a triple role in 7Aum Arivu? | TamilWire.com". Archived from the original on 2011-08-31. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  7. "7ம் அறிவு படத்தில் 10 நிமிட காட்சிக்காக 10 கோடி செலவு-முருகதாஸ் தகவல்". cineikons.com. 2011. பார்க்கப்பட்ட நாள் 11 September 2011.
  8. "IndiaGlitz - Expectations running high for '7am Arivu' - Tamil Movie News". Archived from the original on 2011-05-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.
  9. IndiaGlitz - Avinash Is Suriya Father - Tamil Movie News
  10. ‘ezham Arivu’ And 1000 Dancers - Ezham Arivu - Suriya - Harris Jayaraj - A R Murugdoss - Tamil Movie News - Behindwoods.com
  11. 7am Arivu With A Chinese Track, IndiaGlitz, 16 May 2011, archived from the original on 18 மே 2011, பார்க்கப்பட்ட நாள் 9 August 2011

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாம்_அறிவு_(திரைப்படம்)&oldid=4155090" இலிருந்து மீள்விக்கப்பட்டது