ஃபிரெட்டி பிரவுண்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஃபிரெட்டி பிரவுண் (Freddie Brown ), பிறப்பு: டிசம்பர் 16 1910,[1] இறப்பு: சூலை 24 1991) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 335 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1931 - 1953 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

ஃபிரெட்டி பிரவுண்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஃபிரெட்டி பிரவுண்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 22 335
ஓட்டங்கள் 734 13325
மட்டையாட்ட சராசரி 25.31 27.36
100கள்/50கள் 0/5 22/56
அதியுயர் ஓட்டம் 79 212
வீசிய பந்துகள் 3260 65967
வீழ்த்தல்கள் 45 1221
பந்துவீச்சு சராசரி 31.06 26.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 62
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 11
சிறந்த பந்துவீச்சு 5/49 8/34
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
22/0 212/0
மூலம்: [1]

பிரவுன் 1933 ஆம் ஆண்டில் இந்த ஆண்டின் விசுடன் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார். ஆனால் 1949 இல் நார்தாம்ப்டன்ஷைர் மற்றும் இங்கிலாந்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பிரவுன் 1951 முதல் 1953 வரை இங்கிலாந்து தேர்வாளராக இருந்தார்.பின்னர் 1953 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி ஆஷஸை மீண்டும் பெற்றது. அப்போது தேர்வாளர்கள் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவர் 1971-72ல் மேரிலேபோன் துடுப்பாட்ட சங்கத்தின் (எம்.சி.சி) தலைவராகவும், 1977 இல் துடுப்பாட்ட குழுமத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரீட்டிலிருந்து பிரித்தானிய இராணுவத்தையும் 1980 ஆம் ஆண்டில் சிபிஇயையும் கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றுவதில் இவர் காட்டிய துணிச்சலுக்காகவும் இவரது சேவையினைப் பாராட்டும் விதமாகவும் இவருக்கு 1942 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பேரரசின் எம் இ இ விருது வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

இவரின் தந்தை ரோஜர் கிரவுண்ட்ஸ் பிரவுன் , துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1926-27ல் மேரிலேபோன் துடுப்பாட்ட சஙகத்திற்கு (எம்.சி.சி) எதிராக லிமா துடுப்பாட்ட மற்றும் கால்பந்து சங்கத்திற்காக துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் 50 ஓட்டங்களுக்கு 5 இழப்புகளைக் கைப்பற்றினார். இவர் ஒரு தொழிலதிபராக இருந்தார்.[2] பிரவுனின் சகோதரி ஆலைன் 1934 முதல் 1948 வரை மகளிர் துடுப்பாட்ட சங்கத்தின் இடது கை வீரராக இருந்தார். பின்னர், இவரது மகன்களான ரிச்சர்ட் பிலிப் மற்றும் கிறிஸ்டோபர் ஃபிரடெரிக் ஆகியோர் துடுப்பாட்டம் விளையாடினர்.[3][4] பிரவுன் இயல்பாகவே இடது கைப் பழக்கம் கொண்டவராக இருந்தார். ஆனால் சிறு வயதிலிருந்தே வலது கையைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். ஆனால் அது துடுப்பாட்டம் விளையாடும் திறனை பாதிக்கவில்லை.[5]

சிலியில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியிலும், 1921 ஆம் ஆண்டு முதல் மைடன்ஹெட்டில் உள்ள செயின்ட் பிரான்ஸ் பள்ளியிலும் கல்வி கற்றார். அங்கு அவருக்கு தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணியின் பன்முக வீரரான ஆப்ரி பால்க்னர் கூக்ளி பந்துவீச்சு கற்பித்தார்.[6] 1925 ஆம் ஆண்டில், பிரவுன் கேம்பிரிட்ஜில் உள்ள தி லேஸ் பள்ளியில் பயின்றார். அப்போது பள்ளி அளவிலான துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் மட்டையாட்டம் மற்றும் பந்துவீச்சுகளில் சிறப்பான தரவரிசைகளைப் பெற்றார்.[5] கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் தனது படிப்பைத் தொடர்ந்தார் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக துடுப்பாட்ட சங்கத்திற்காக 1930 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.[5]

முதல் தரத் துடுப்பாட்டம்

தொகு

பிரவுன் 1930 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 52 ஓட்டங்கள் எடுத்தார் [7] மற்றும் அதற்கு அடுத்த போட்டியில் ஃப்ரீ ஃபாரெஸ்டர்ஸ் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 9 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இழப்புகளைக் கைப்பற்றினார்.இவர் இடதுகை எதிர்ச் சுழல் பந்துவீச்சாளர் ஆவார்.[8] தி ஓவலில் சர்ரேக்கு துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் நூறு ஓட்டங்களை எடுத்தார். அந்தப் போட்டியில் இவர் 150 ஓட்டங்கள் எடுத்தார்.எச்.டி.ஜி லெவ்சன்-கோவரின் லெவன் அணிக்கு எதிராக 140 ஓட்டங்கள் எடுத்தார். தொடரின் முடிவில், கேம்பிரிட்ஜ் வீரர்களில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இவர் முதலிடத்தில் இருந்தார்.[5]

சான்றுகள்

தொகு
  1. Bateman, pp. 34–35.
  2. "Lima v MCC". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
  3. "Lima v MCC". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
  4. "Lima v MCC". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
  5. 5.0 5.1 5.2 5.3 "Wisden obituary". Wisden Cricketers' Almanack. 1992. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
  6. Fingleton, p.124.
  7. "Cambridge University v Australians". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
  8. "Cambridge University v Free Foresters". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரெட்டி_பிரவுண்&oldid=3924454" இலிருந்து மீள்விக்கப்பட்டது