அகம் (1992 திரைப்படம்)

அகம் (மொ.பெ. Self) என்பது 1992 இல் வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும். வேணு நாகவல்லி அவர்களுடைய கதையினை ராஜீவ்நாத் இயக்கி இருந்தார்.‌ இத்திரைப்படத்தில் மோகன்லால், ஊர்வசி, மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அகம்
இயக்கம்ராஜீவ்நாத்
தயாரிப்புபி. கே. ஆர். பிள்ளை
திரைக்கதைவேணு நாகவல்லி
இசைரவீந்திரன்
நடிப்புமோகன்லால்
ஊர்வசி
ரம்யா கிருஷ்ணன்
ஒளிப்பதிவுசந்தோஷ் சிவன்
வேணு
படத்தொகுப்புரவி
கலையகம்ஸ்ரீ சங்கரா ஆட்ஸ்
விநியோகம்சீரடி சாய் வெளியீடு
வெளியீடு1 மே 1992 (1992-05-01)
ஓட்டம்119 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ரவீந்திரன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சந்தோஷ் சிவன்‌ மற்றும் வேணு ஒளிப்பதிவு செய்திருந்தனர். இத்திரைப்படம் 46 லட்சம் ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டிருந்தது[1]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஒரு தேவாலயத்தில் சித்தார்த்தன் ஒரு சாமியாராக இருக்கிறார். தேவனைப் பற்றிய பாடல்களை பாடிக்கொண்டும் அழகிய படங்களில் வரைந்து கொண்டும் மனதிற்கு தோன்றிய தத்துவங்களை கூறிக் கொண்டும் தேவாலயத்தின் மணி இசைக்கக் கூடியவராக சித்தார்த்தன் வாழ்ந்து வருகிறார். மாதா நோபல் ஆக வரக்கூடிய கன்னியாஸ்திரி சித்தார்த்தன் மற்றும் அவரைப் போன்ற பிற மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை பராமரித்து வருகின்றார். மாதா நோபிளின் உறவினராக வரக்கூடிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மிரியானா வர்கீஸ், சித்தார்த்தனுடன் நட்பை வளர்த்து, அவரை தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்துகிறார். சித்தார்த்தன் மரியண்ணா வர்கீஸ் அவர்களை காதல் செய்கின்றார். ஆனால் மரியானா ஒரு கிஸ் தன்னை வெறும் ஆராய்ச்சிக்கான பொருளாக மட்டுமே இதுவரை பார்த்து வந்தார் என்பதும்.. தன்னுடைய மருத்துவர் ஏற்பாட்டின் பெயரில் அவர் அமெரிக்காவிலிருந்து வந்து ஆராய்ச்சி செய்ததும் சித்தார்த்திற்கு தெரிய வருகிறது. அவர் உடைந்து போகின்றார்.

இதற்கிடையே ஆராய்ச்சியாளரான மரியானா வர்கீஸ் சித்தார்த்தன் உடைய பழைய வாழ்க்கையை முழுவதுமாக அறிந்து கொள்கிறார். அவர் பெற்றோரிடமிருந்து அன்பு இல்லாததால், சித்தார்த்தனின் ஒரே நண்பராக இருந்த தங்கள் வேலைக்காரன் மற்றும் அவரது குடும்பத்தினரின் மரணத்திற்கு காரணமான நீதிபதியான தனது தந்தை மீது வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார். வளர்ந்து வங்கி மேலாளராக பணி செய்கிறார். வாழ்க்கையைப் பற்றிய வித்தியாசமான கண்ணோட்டத்தைக் கொண்டவராத உள்ளார். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அவர் சரியானவராக இருக்க விரும்புகிறார், மேலும் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் அவர் நினைக்கும் விதத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்.

சித்தார்த்தன் ரஞ்சினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். தன்னைப் போலவே அவளும் சுத்தமான பெண்ணாகவும் அனைத்திலும் சரியான விதத்தில் இருக்கக்கூடிய பெண்ணாகவும் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். ரஞ்சினி வேறு பணியிடங்களுக்கு சென்று உழைத்து அதில் கிடைக்கக்கூடிய பணத்தில் தன்னுடைய கணவனுடைய பிறந்த நாளிற்கு ஒரு பரிசு நீ அளிக்க விரும்புகிறார். ரஞ்சினி மற்றும் கேப்டன் மகேந்திரன் ஆகியோர் உணவகத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக சித்தார்த்தன் தவறாக எண்ணுகிறார். தன்னுடைய மனைவி கள்ளக்காதல் செய்வதாகவும் அதில் கிடைக்கும் கூடிய பணத்திலேயே கணக்கு பிறந்தநாள் பரிசு வாங்கி தந்ததாகவும் தவறாக முடிவெடுக்கின்றார்.

இதனால் சித்தப்பன் மற்றும் ரஞ்சனி ஆகியவருக்கு வாக்குவாதம் வருகின்றது அதில் ரஞ்சனி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து கோமாவிற்கு செல்கின்றார். இந்த நிலையில் வங்கிக்கு வருகின்ற விமலா மேத்யூ என்ற கணவனை இழந்த பெண்ணுடன் சித்தார்த்திற்கு ஒரு கள்ளத்தொடர்பு உருவாகின்றது. நாளடைவில் தன்னுடைய மனைவி ரஞ்சினி அவர்கள் மீதான குற்றங்கள் எதுவும் இல்லை என்பதை சித்தார்த்தன் புரிந்து கொள்கிறார். தன்னுடைய மனைவி கோமாவிற்கு செல்லக்கூடிய அளவிற்கு மோசமான நிலையை அடைய தானே காரணம் என்பது நீ நினைத்து நினைத்து பின்னர் தன் மனநிலை தவறிய மனிதனாக மாறி இருக்கிறார் அதனால் கோமாவில் இருக்கும் ரஞ்சனி அவருக்கு நேரில் தெரிவதாகவும் அவருடன் பேசிக் கொண்டதாகவும் என்ன தொடங்குகின்றார்.

சித்தார்த்திடம் ரஞ்சனி அவர் கள்ளத்தொடர்பு வைத்திருக்க கூடிய விமலா மாத்தி வை கொல்ல சொல்கிறார். அதன்படியே மேக்சிவை சித்தர் கொலை செய்கிறார். ஆனால் ரஞ்சனி கோமாவில் இருந்து நினைவு திரும்பாமலேயே இறந்து போகின்றார். அவள் தன்னுடைய பேசுவதாகவும் தற்போது மருத்துவமனையில் எங்கும் தொலைந்து கொண்டு விளையாடுவதாகவும் சித்தாள் மருத்துவமனையில் அடம்பிடிக்க அவரை மனநிலை மருத்துமனைக்கு அனுப்புகின்றனர்.

இவ்வாறு சித்தார்த்தின் வாழ்க்கை அனைத்தையும் தெரிந்து கொண்ட மரியானா வச்சு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொள்ள தேவாலயத்திற்கு அழைத்து வருகின்றார். அன்னை நோபல் அவர்கள் சித்தார்த்திடம் மரியானா வர்கீஸ் குறித்தும் அவருடைய திருமணம் குறித்தும் பேசுகின்றார் இருவரும் இணைந்து மரியாதை திருமணம் செய்து வைக்கின்றனர். இருந்தாலும் தன்னுடைய மனைவி ரஞ்சனி அவர்களுடைய அன்பு வேறு எவனும் இருந்தும் கிடைக்காத காரணத்தினால் அன்று இரவு தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றார். சித்தார்த்தும் ரஞ்சனியும் இணைந்ததாக சிறையில் காட்டப்பட்டு திரைப்படம் முடிகிறது.

நடிகர்கள்

தொகு

விருதுகள்

தொகு
கேரள மாநில திரைப்பட விருதுகள்[2]

ஆதாரங்கள்

தொகு
  1. "Mothering A Revival - The New Indian Express". www.cscsarchive.org. பார்க்கப்பட்ட நாள் 2023-04-03.
  2. Kerala State Chalachitra Academy (1992). "State Film Awards - 1992". Department of Information and Public Relations. Archived from the original on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2017.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகம்_(1992_திரைப்படம்)&oldid=4117020" இலிருந்து மீள்விக்கப்பட்டது