அடூர் பங்கஜம்

இந்திய நடிகை

அடூர் பங்கஜம் (1929 - 26 சூன் 2010) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அடூரில் பிறந்தார்.[1] இவர் துணை நடிகையாகவும் நகைச்சுவை நடிகையாகவும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி அடூர் பவானியும் மலையாள திரைப்படத்துறை நடிகை ஆவார். [2]

அடூர் பங்கஜம்
பிறப்பு1929
அடூர்,  திருவிதாங்கூர்
இறப்பு26 சூன் 2010
அடூர், கேரளா,  இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1937–1996
பெற்றோர்கே. இராமன் பிள்ளை, குஞ்சுகுஞ்சம்மா
வாழ்க்கைத்
துணை
தாமோதரன் போற்றி
பிள்ளைகள்அஜயன்

பங்கஜம் நடித்த மிகவும் குறிப்பிடத்தக்கப் படமாக, தேசிய விருது பெற்ற செம்மீன் உள்ளது. இத்திரைப்படத்தில் இவர் "நல்ல பெண்ணு" எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தியாவின் முதல் புதிய யதார்த்த படமான நியூஸ்பேப்பர் பாய் (1955) படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 2008ஆம் ஆண்டில், கேரள சங்கீத நாடக அகாதமி பங்கஜம் மற்றும் பவானி சகோதரிகளின் நாடகம் மற்றும் திரைத்துறை பங்களிப்பிற்காகக் கவுரவித்தது.[3]

இவர் தனது 81ஆவது வயதில் 26 ஜூன் 2010 அன்று இறந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அடூர் பங்கஜம் 1925இல் அடூர் பாறப்புறத்து குஞ்சுராமன் பிள்ளை மற்றும் குஞ்சுஞ்சம்மா ஆகியோருக்குப் மகளாகப் பிறந்தார். இக்குடும்பத்தில் மொத்தம் 8 குழந்தைகள். இவர்களில் இரண்டாவது குழந்தையாகப் பங்கஜம் பிறந்தார்.[1] இவரது சகோதரி அடூர் பவானியும் நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் பிரபலமானார்.

குடும்ப வறுமை காரணமாக இவரால் 4ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. ஆனாலும் தனது 11வது வயது வரை பந்தளம் கிருஷ்ணபிள்ளை பாகவதரிடம் இசைப் படிப்பைத் தொடர்ந்தார். இந்த நேரத்தில், இவர் தனது கிராமத்தைச் சுற்றியுள்ள பெரும்பாலான கோவில்களில் இசைக் கச்சேரி செய்தார்.

12 வயதில், இவர் தனது பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக கண்ணூர் கேரள கலாநிலைய குழுவில் நடிக்கத் தொடங்கினார். இவர் 300க்கும் மேற்பட்ட மேடைகளில் மதுமாதுர்யம் என்ற நாடகத்தில் நடித்தார். இவரது அடுத்த நாடகம் ரக்தபந்தம் செங்கன்னூரில் உள்ள ஒரு திரையரங்கின் சார்பில் நடந்தது. இந்த நாடகத்தில், இவர் நகைச்சுவை பாத்திரத்தை ஏற்று நடித்தார். இவரது நடிப்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கொல்லம் பரத கலா சந்திரிகாவின் உரிமையாளரான தேவராஜன் போற்றியை இந்த குழுவில் பணிபுரிந்தபோது இவர் சந்தித்தார். பின்னர் போற்றியை திருமணம் செய்து கொண்டார். போற்றி பின்னர் பார்த்தசாரதி திரையரங்கம் என்ற மற்றொரு குழுவைத் தொடங்கினார். இந்த குழுவுடன் இவர் பணியாற்றிய காலத்தில், திரைப்படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.

அஜயன் என்ற திரைப்படம்/தொலைக்காட்சி நடிகர் இவரது மகன் ஆவார்.

தொழில் தொகு

கலாநிலைய நாடக சபையின் மது மாதுர்யம் என்ற மேடை நாடகத்துடன் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். இவரது முதல் திரைப்படம் பாப்பா சோமன் தயாரித்த பிரேமலேகனம். ஆனால் வெளியான முதல் திரைப்படம் போபன் குஞ்சாக்கோ இயக்கிய விசப்பின்றே வில . இவர் கடைசியாக நடித்த திரைப்படம் திலீப் நடித்த குஞ்சிக்கூனன். இவர் தனது வாழ்க்கையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1976 ஆம் ஆண்டில், இவரும் இவரது சகோதரி அடூர் பவானியும் அடூர் ஜெயா திரையரங்கம் என்ற நாடகக் குழுவைத் தொடங்கினர். பின்னர் இச்சகோதரிகள் பிரிந்தனர்; பவானி குழுவினை விட்டு வெளியேறினார். பங்கஜம் தனது கணவர் தேவராஜன் போற்றியுடன் தொடர்ந்து குழுவினை நடத்தினார். மேலும் அவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாடகக் குழுவினை சிறப்பாக நடத்தி வந்தார்.

2008 ஆம் ஆண்டில், கேரள சங்கீத நாடக அகாதமி பங்கஜம் மற்றும் பவானியை நாடகத்தின் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக கவுரவித்தது.[3] சபரிமலை அய்யப்பன் திரைப்படத்தில் நடித்ததற்காக இரண்டாவது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார்.

திரைப்படவியல் தொகு

1952ஆம் ஆண்டு அச்சன் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர் 2014ஆம் ஆண்டில் தாரங்கள் திரைப்படம் வரை செம்மீன், நீலகிரி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வருடம் திரைப்படம் கதாபாத்திரம்
2014 தாரங்கள் காப்பக காட்சிகள்
2006 அம்மாத்தொட்டில்
2004 சினேகபூர்வம்
2003 மார்க்கம்
2002 அதீனா
2002 குஞ்சிக்கூனன்
2001 சினேகபூர்வம் அன்னா
2001 சூத்திரதாரன் ரமேசின் பாட்டி
1998 குடும்ப வார்த்தகள் மீராவின் தாய்
1998 தடாகம் மீனாட்சி தல்லா
1997 அடுக்கள ரஹஸ்யம் அங்காடி பாட்டு கரிமேலி
1996 கார்பர் பிளமேனா அம்மாச்சி
1996 மயூர நிருத்தம் பவானியம்மா
1995 திரீ மென் ஆர்மி இந்திரா தேவியின் தாய்
1995 அச்சன் ராஜாவு அப்பன் மரியம்மா
1995 தும்போலிகடப்புரம் காக்கம்மா
1995 கதாபுருஷன்
1995 அரபிக்கடலோரம் அசனின் தாய்
1995 ஆலஞ்சேரி தம்ப்ராக்கலள் கெட்டிலம்மா
1995 விருத்தன்மாரே சூக்ஷிக்குக குசுமாவல்லி
1993 வரம் தரும் வடிவேலன்(தமிழ்) தேவி
1992 அஹம் மாரியம்மா
1992 குடும்பசமேதம்
1991 பெரும்தச்சன் உன்னிமாயா வள்ளியம்மை
1991 மேதினம் மரியா
1991 நீலகிரி முதியம்மா
1990 ஏய் ஆட்டோ பங்கச்சி
1990 லால் சலாம்
1989 சுவாகதம் திருமதி பிள்ளை
1989 ஸஜனன்களுடே கொச்சு டாக்டர்
1989 ஆத்தினக்காரே
1988 கண்டதும் கேட்டதும்
1988 ஓணக்கச்சவடம்
1987 அனந்தரம் லெட்சுமி அம்மா
1981 அரிக்காரி அம்மு
1981 வாடகை வீட்டு அதிதி
1980 பாலாட்டு குஞ்சிகண்ணன்
1980 அம்மையும் மகளும் பிரஹன்னலா
1980 தீக்கடல் கார்த்தியாயனி
1979 ராஜவீதி
1979 எடவழியிலே பூச்சா மிண்டா பூச்சா குஞ்சிக்காளியம்மா
1978 சக்கராயுதம்
1978 கடத்தநாட்டு மாக்கம்
1978 ஆறு மணிக்கூர்
1978 படக்குதிரை
1978 வாடக்கக்கொரு ஹ்ருதயம் கார்த்தியாயனி
1977 சூண்டக்காரி
1977 கொடியெற்றம்
1977 கண்ணப்பனுண்ணி
1977 அச்சாரம் அம்மிணி ஓசாரம் ஓமனா கல்யாணி
1976 சென்னாய வளர்த்திய குட்டி பத்மாட்சி
1976 மல்லனும் மாதேவனும்
1976 யக்ஷகானம் நானியம்மா
1975 நீல பொன்மான் அக்கம்மா
1975 நீல சாரி
1975 நாத்தூன்
1975 மா நிஷாதா
1975 தர்ம க்ஷேத்ரே குருக்ஷேத்ரே
1975 பிரியமுள்ள சோபியா
1975 சுவர்ணமால்யம்
1975 சீனவலா கார்த்தியாயனி
1974 வண்டிக்காரி
1974 தேவி கன்னியாகுமரி
1974 யுவனம்
1974 துர்கா யசோதா
1974 தும்போலார்ச்சா பொண்ணி
1973 ராக்குயில் மாதவி
1973 சுவர்க்கபுத்திரி மரியகுட்டி
1973 பொன்னாபுரம் கோட்ட கொச்சுகும்மா
1973 தேனருவி கொத்தா
1973 பாவங்கள் பெண்ணுங்கள்
1973 யாமினி தக்ஷாயணி
1973 பணிதீராத்த வீடு உரோசி
1973 சாயம்
1973 தொட்டாவாடி கமலம்மா
1973 ஏணிப்படிகள்
1972 ஆத்யத்தே கத
1972 அரோமாலுண்ணி நாணிப்பெண்ணு
1972 பிரதிகாரம் கமலம்
1972 போஸ்ட்மேனே காண்மானில்ல
1972 கந்தர்வக்ஷேத்திரம் லில்லி
1972 ஒரு சுந்தரியுடே கத பச்சியக்கா
1972 ஸ்ரீ குருவாயூரப்பன்
1971 லோறா நீ எவிடே
1971 போபனும் மோளியும்
1971 கரகாணாக்கடல் தாமசின் அன்னை
1971 பஞ்சவன் காடு நாகேலி
1971 அக்னிமிருகம் கார்த்தியாயினி
1970 தத்துபுத்திரன் அச்சம்மா
1970 ஒதேனன்றே மகன் உப்பாட்டி
1970 தாரா விடுதி காப்பாளர்
1970 நிங்கள் ஒரு கம்யூனிஸ்ட் கமலம்மா
1970 பேள் வியூ இரதி மாதவ
1969 உறங்காத்த சுந்தரி மாதவி
1969 சுசி அச்சம்மா
1969 கூட்டு குடும்பம் சங்கரி
1969 ஜுவாலா பங்கி
1969 குமார சம்பவம் வசுமதி
1968 புன்னப்ர வயலார் பிகே விலாசினியம்மா
1968 கொடுங்கலூரம்மா கொங்கிமாமி
1968 ராகிணி
1968 திருச்சடி அம்முகுட்டி
1967 மைனத்தருவி கொலக்கேஸு ஓரதா
1967 காவாலம் சுண்டன்
1967 ஒள்ளதுமதி
1966 ஜெயில் சங்கரி
1966 செம்மீன் நல்லா பெண்ணு
1965 தொம்மன்றெ மக்கள் மேரிக்குட்டியின் தாய்
1965 முதலாளி
1965 கடத்துக்காரன் நாணியம்மா
1965 இணப்பிராவுகள் மரியா
1965 தேவத பங்கஜாக்ஷி அம்மா
1965 ஓடையில் நின்னு சாரா
1965 கொச்சுமோன் மாது
1965 காட்டுதுளசி கமலம்மா
1965 காட்டுப்பூக்கள் சாரதா
1965 சகுந்தலா
1964 ஆத்யகிரணங்கள் குஞ்சேலி
1964 ஆயிஷா பீட்டு
1964 ஆற்றம் பாம் கல்யாணிக்குட்டி
1964 ஓமனக்குட்டன் பங்கஜாக்ஷி
1964 கறுத்த கை மகேஸ்வரி
1964 மணவாட்டி கல்யாணி
1964 அன்ன
1964 பர்த்தாவு சீதா
1964 களஞு கிட்டிய தங்கம் பங்கஜம்
1963 சிலம்பொலி பாரிஜாதம்
1963 ஸ்னாபக யோகன்னான் ரகேல்
1963 சத்யபாமா ஹரிணி
1963 டாக்டர் தங்கம்மா
1963 கலையும் காமினியும் பங்கி
1963 கடலம்மா காளியம்மா
1963 நித்ய கன்னிக
1963 சுசீலா
1962 சினேகதீபம் கொச்சு நாராயணி/நானி
1962 பாக்யஜாதகம் வேலைக்காரி
1962 கால்பாடுகள்
1962 கண்ணும் கரளும் பருக்குட்டியம்மா
1962 பாரியா ரஹெல்
1962 ஸ்ரீராம பட்டாபிஷேகம் மந்தாரா
1961 பக்த குசேல காமாட்சி
1961 ஞானசுந்தரி கத்ரி
1961 கிறிஸ்துமஸ் ராத்திரி மரியா
1961 சபரிமல அய்யப்பன் பார்வதி
1959 நாடோடிகள் ஜானூ
1959 சதுரங்கம்
1958 ரண்டிடங்கழி (திரைப்படம்)
1957 மின்னூன்னதெல்லாம் பொன்னல்ல கல்யாணி
1957 பாடாத்த பைங்கிளி தேயி
1957 தேவ சுந்தரி
1956 கூடபிறப்பு
1956 மந்திரவாதி மாயாவதி
1956 அவர் உணருன்னு நானி
1955 நியூஸ்பேப்பர் பாய் லட்சுமி அம்மா
1955 ஹரிச்சந்திரா கலகந்தனின் மனைவி
1955 கிடப்பாடம் கைவண்டிகாரன் மனைவி
1955 சிஐடி பங்கி
1954 அவன் வருன்னு மாதவியம்மா
1954 அவகாசி ஷீலாவதி
1954 பால்யஸகி கெளரி
1953 சரியோ தெற்றோ பாரு
1953 பூங்கதிர் ஜானு
1952 விசப்பின்றே விளி மாதவி
1952 பிரேமலேகா தேவகி
1952 அச்சன் பங்கஜம்

நாடகங்கள் தொகு

இவர், பரித்ராநயம், பம்சுலா, ஹோமம், இரங்கா பூசை, பாசுபத்திராஸ்திரம், மதுமதுரையம், இரக்தபந்தம், கல்யாண சித்தி உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்துள்ளார்.

தொகைக்காட்சித் தொடர் தொகு

இவர் பரிமாணம் எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Archived copy". Archived from the original on 19 December 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-12-19.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. 3.0 3.1 "Adoor Bhavani, Pankajam to be honoured". Archived from the original on 2011-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-09-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடூர்_பங்கஜம்&oldid=3809562" இலிருந்து மீள்விக்கப்பட்டது