கலாநிதி அசோக ரன்வல (Ashoka Ranwala) இலங்கை அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும், கல்வியாளரும் ஆவார். இவர் 2024 நவம்பர் 21 முதல் நாடாளுமன்ற சபாநாயகராக இருந்து வருகிறார். இவர் இளவயதிலேயே மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[1][2] இதற்கு முன்னர் பியகம உள்ளூராட்சி மன்றத்தை ஒரு முறையும் மேல் மாகாண சபையை இரண்டு முறையும் பிரதிநிதித்துவப்படுத்தி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.[3]

அசோக ரன்வல
Ashoka Ranwala
22-ஆவது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
குடியரசுத் தலைவர்அனுர குமார திசாநாயக்க
பிரதமர்அரிணி அமரசூரியா
முன்னையவர்மகிந்த யாப்பா அபேவர்தன
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 நவம்பர் 2024
பெரும்பான்மை109,332 விருப்பு வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிமக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி
தொழில்கல்வியாளர்

அசோக ரன்வல தனது தொடக்கக் கல்வியை யட்டியான தொடக்கப் பாடசாலையிலும், ஹெனிகம மத்திய கல்லூரியிலும் கற்றார். மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தார். சப்பான், வசேடா பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் பயோஜெனிக் பசுமைத் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.[3]

தேர்தல் வரலாறு

தொகு
அசோக ரன்வலவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2024 நாடாளுமன்றம் கம்பகா மாவட்டம் மக்கள் விடுதலை முன்னணி தேசிய மக்கள் சக்தி 1,09,332 தெரிவு[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Parliamentary General Election 2024". Adaderana. 16 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
  2. "Gampaha District preference votes results: Vijitha breaks Harini's record". Newswire. 15 November 2024. பார்க்கப்பட்ட நாள் 16 November 2024.
  3. 3.0 3.1 "Dr. Ashoka Ranwala: From Trade Union Activist to Speaker of Sri Lanka's Parliament". Lanka Sara. 2024-11-21. பார்க்கப்பட்ட நாள் 2024-11-21.
  4. "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". EconomyNext. 15 நவம்பர் 2024 இம் மூலத்தில் இருந்து 21 நவம்பர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.is/SsbJk. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக_ரன்வல&oldid=4147039" இலிருந்து மீள்விக்கப்பட்டது