அஞ்சல் குறியீடு

(அஞ்சற் குறியீடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அஞ்சல் குறியீடுகள் (பல நாடுகளில் பலவிதமாக, அஞ்சல் எண், அஞ்சலகச் சுட்டு எண், சிஃப் எண் என அறியப்படுகிறது). அஞ்சலை சரியாகப் பிரித்தெடுக்க அஞ்சலகத்திற்கு உதவும்பொருட்டு முகவரியில் சேர்க்கப்படும் எண்களையும் எழுத்துக்களையும் குறிப்பனவாகும்.

அஞ்சல் குறியீடு காட்டும் அவுஸ்திரேலியா அஞ்சலகம்.

1941 ஆம் ஆண்டு ஜெர்மனி தான் இத்தகைய அஞ்சல் குறியீட்டை அறிமுகப்படுத்திய முதல் நாடாகும். ஐக்கிய இராச்சியம் 1959இல் பின்பற்றியது; ஐக்கிய அமெரிக்க நாடுகள் 1963இல் இம்முறையைத் தழுவியது. பிப்ரவரி 2005 கணக்கின்படி, உலக அஞ்சல் ஒன்றியத்தில் இணைந்துள்ள 190 நாடுகளில் 117 நாடுகளில் அஞ்சல் குறியீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய முறையை பின்பற்றாத நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அயர்லாந்து மற்றும் பனாமா உள்ளன. சீனாவின் அங்கமாக இணைந்த ஹாங்காங்க் தனது நெடுங்கால அஞ்சல் அமைப்பையே பின்பற்றுகிறது; உள்ளூர் அஞ்சல்களுக்கு எந்த குறியீட்டையும் பாவிப்பதில்லை. சீனாவும் ஹாங்காங்கிற்கு எந்த குறியீட்டையும் வழங்கவில்லை.

பொதுவாக அஞ்சல் குறியீடுகள் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கு வழங்கப்பட்டாலும், சிறப்பு காரணங்களுக்காக அரசு அலுவலகங்கள், பெரிய வணிக நிறுவனங்கள் போன்ற கூடுதல் அஞ்சல் பெறும் தனி முகவரிகளுக்கோ நிறுவனங்களுக்கோ கொடுக்கப்படலாம். பிரெஞ்ச் செடெக்ஸ் முறை ஒரு காட்டு.

பயன்பாட்டு வழக்கங்கள்

தொகு

அஞ்சல் சேவைகள் அவர்களுக்கென்று தனி வடிவமைப்பையும் அஞ்சல் குறியீடுகளை இடவேண்டிய முறைகளையும் சீர்படுத்துகின்றன. பெரும்பாலான ஆங்கிலம் பேசும் நாடுகளில் இக்குறியீடு முகவரியின் இறுதியில் இடப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இது ஊர் அல்லது நகரின் பெயருக்கு முன்னால் இடப்படுகிறது.

தேசிய முன்னொட்டுகள்

தொகு

ஐரோப்பாவின் நாடுகள் பலவற்றிலும் ஒரே 4 அல்லது 5 இலக்க எண்கள் பயன்படுத்துவதால் சிலசமையங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் அஞ்சல்களைப் பிரித்தறிய என்று எளிதாக ஒரு நாட்டுக்கென ஒரு முன்னொட்டு பயன்படுத்தப் படுகின்றது. இது சில நேரங்களில் குழப்பத்தை உண்டாக்கலாம்.[1] பல ஆண்டுகளாக பன்னாட்டு ஊர்திகளின் உரிமத்தட்டு எண்கள், செருமனிக்கு (இடாய்ட்சுலாந்து என்பதால்)"D-" என்றும், பிரான்சிற்கு "F-" என்றும் பயன்படுத்தப்பட்டு வந்தன; ஆனால் உலக அஞ்சல் ஒன்றியம் இதனை ஏற்கவில்லை.[1] 1994 முதல் ஐ.எசு.ஓ 3166-1 ஆல்பா-2 குறிகளை பயன்படுத்த பரிந்துரைக்கபட்டது[2], இருப்பினும் பரவலாக பின்பற்றப்படவில்லை.ஐரோப்பிய செந்தரப்படுத்தல் குழு ஐ.எசு.ஓ ஆல்பா 2 குறிகளை பயன்படுத்த பரிந்துள்ளது.

எண்ணும் எழுத்தும் கொண்ட அஞ்சல்குறிகள்

தொகு

பல நாடுகளில் எண்களை மட்டுமே கொண்ட அஞ்சல்குறிகள் இருந்தாலும் சில எண்ணெழுத்து குறிகளை பயன்படுத்துகின்றன. ஐக்கிய இராச்சியத்திலும் நெதர்லாந்திலும் போலு இவை துல்லியமாக தெரு மற்றும் கட்டிடம் வரை காட்டுகின்றன. இது போல எண்ணெழுத்துக்களை பாவிக்கும் நாடுகள்:

அஞ்சல் மண்டலங்கள்

தொகு

முன் கூறிய அஞ்சல்குறியீடுகளுக்கு முன்னரே பெரும் நகரங்கள் அஞ்சல் மண்டலங்களாக அல்லது அஞ்சல் மாவட்டங்களாக, 1இலிருந்து துவங்கி, எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. புதிய அஞ்சல் குறியீடுகள் இந்த பழைய மண்டல எண்களை தங்களில் உள்ளடக்கிக் கொண்டன. காட்டு:இலண்டன் அஞ்சல் மாவட்டம் ஆனால் நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து, வெலிங்க்டன் மற்றும் கிரைஸ்ட்சர்ச் பகுதிகளில் முந்தைய அஞ்சல் எண்கள் பயன்படாது,புதிய அஞ்சல் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அஞ்சல் குறியீடுகள்

தொகு

அல்ஜீரியா

தொகு

ஆர்ஜென்டீனா

தொகு

அவுஸ்திரேலியா

தொகு

அவுஸ்திரேலியா அஞ்சல்குறிகள் நான்கு எண்கள் கொண்டிருக்கும். அவை 1967 ஆண்டில் அப்போதைய அஞ்சல் துறையினால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவுஸ்திரேலிய அஞ்சலின் வரலாறு: [3]

அஞ்சல்குறியீடுகள் புத்தகவடிவில் அஞ்சலகங்களில் கிடைக்கின்றன; தொலைபேசி வெள்ளை பக்கங்களிலும் இவற்றை காணலாம்.

அஞ்சல் அட்டைகளிலும் உறைகளிலும் கீழே வலது முனையில் இவற்றை இட வெண்சிவப்பு (ஆரஞ்ச்) வண்ணத்தில் நான்கு கட்டங்கள் வழமையாக இருக்கும்.

அவுஸ்திரியா

தொகு

பெல்ஜியம்

தொகு

பிரேஸில்

தொகு

புரூணை

தொகு

புருணையில் அஞ்சல்குறியீடுகள் எண்ணெழுத்துகளால் ஆனது. முதல் இரு எழுத்துக்களை அடுத்து நான்கு எண்கள் இருக்கும். அவற்றின் ஒழுங்கு YZ0000 என இருக்கும்; Y மாவட்டத்தையும் Z முகிம்மையும் முதல் இரு எண்கள் நகர்ப்பகுதி அல்லது கிராமம் மற்றும் கடைசி இரு எண்கள் அஞ்சலகத்தைக் குறிக்கும்.

புருணை அஞ்சலக குறியீடுகளுக்கு செல்க: http://www.pos.gov.bn/postcode/images/Poskod1.htm பரணிடப்பட்டது 2011-10-01 at the வந்தவழி இயந்திரம்

பல்கேரியா

தொகு

பல்கேரியா அஞ்சல் குறிகள் நான்கு எண்கள் கொண்டவையாகும்.

கனடா

தொகு
 
கனடிய அஞ்சல்குறியீடுகள்

கனடாவின் அஞ்சல்குறியீடு எழுத்தும் எண்ணும் கொண்ட ஆறு குறிகள் கொண்டதாகும். அவை X#X #X# என்ற ஒழுங்கில் அமைந்திருக்கும். இதில் X என்பது விலக்கப் பட்ட ஒருசில இலத்தீன் எழுத்துகளைத் தவிர மற்ற ஏதேனும் ஓர் இலத்தீன் எழுத்தைக் குறிக்கும்,# என்பது ஏதேனும் ஓர் ஓரிட எண்ணைக் குறிக்கும் (0-9). மூன்றாம் இடத்திற்கும் நான்காம் இடத்திற்கும் இடையே இடைவெளி விடவேண்டும். காட்டாக, கனடா அஞ்சலின் ஒட்டாவா தலைமையகத்திற்கு அஞ்சல் குறியீடு K1A 0B1.

இலத்தீன் எழுத்துகளில் D, F, I, O, Q, U ஆகிய ஆறு எழுத்துகாளும் அஞ்சல்குறியீடுகளில் பயன்படுத்துவதில்லை. அஞ்சல்களை தானியங்கியாக பிரிக்கும்போது இவை மற்ற எழுத்து/எண்ணுடன் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் அவை தவிர்க்கப்படுகின்றன.

வெர்டே முனை

தொகு

இங்கு அஞ்சல்குறிகள் நான்கு எண்களைக்கொண்டிருக்கும். முதல் எண் எந்த தீவு எனக்குறிக்கும்.

சிலி

தொகு

சீனா

தொகு

மக்கள் சீனக் குடியரசு ஆறு எண்களைக் கொண்ட அஞ்சல் குறியீட்டினை பின்பற்றுகிறது. முதல் இரு எண்கள் மாநிலத்தை அல்லது மாநிலத்திற்கிணையான நகராட்சியை அல்லது தன்னாட்சிபெற்ற ஆட்சிப்பகுதியை குறிக்கும். மூன்றாம் எண் அஞ்சல் வலயத்தையும் நான்காவது பிரிபெக்ட்சர் அல்லது அதற்கிணையான நகரையும் குறிக்கும். கடைசி இரு எண்கள் வழங்கும் அஞ்சலகத்தைக் குறிக்கும். ஹாங்காங்க் மற்றும் மகௌ தங்களுக்கான தனியான அஞ்சல் முறைகளைக் கொண்டுள்ளன.

பார்க்க:சீனக் குடியரசு (தாய்வான்) தனக்கென தனி அஞ்சல் குறியீடுகளைக் கொண்டுள்ளது

சீனக் குடியரசு (தாய்வான்)

தொகு

சீனக் குடியரசு மூன்று + இரண்டு எண்கள் கொண்ட அஞ்சல் குறியீடுகளை பயன்படுத்துகிறது.[4] கிராமப்புறங்கள், கௌன்டி ஆளும் நகரங்கள்,மாவட்டங்களுக்கு 368 மூன்று எண் குறியீடுகளை வழங்கியுள்ளது. சின்சூ நகரம் மற்றும் சியாயி நகரம் இவற்றிறகு 300 மற்றும் 600 என மேல்பிரிவுகள் இல்லாது குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. தவிர சப்பான் ஆட்சிகீழுள்ள,சீக் குடியரசு தனதாக்க் கோரும், பரேட்ஸ் தீவுகள், ஸ்ப்ராட்லி தீவுகள் மற்றும் தியாயுதி தீவுகளுக்கும் குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளன. முழு ஐந்து எண்களை வேண்டியிருந்தாலும் கடைசி இரு எண்கள் இல்லாவிடினும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


குரோசியா

தொகு

குரோசியக் குடியரசில் ஐந்து எண்கள் கொண்ட அஞ்சல் குறிகள் பயன்படுத்தப்படுகின்றன. குரோசியா - அஞ்சல் எண் தேட


சைப்பிரஸ்

தொகு

1 அக்டோபர் 1994 முதல் நான்கு எண்கள் கொண்ட அஞ்சல் குறியீடுகள் சைப்பிரஸில் அறிமுகப் படுத்தப்பட்டன. அந்நாட்டின் ஆறு ஆட்சி மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண்தொகுதி வழங்கப்பட்டுள்ளது.சிறிய நிலப்பரப்புகளான தெருக்கள்,ஊரக கம்யூன்கள் மற்றும் கிராமங்களுக்கு நான்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. சில எண்கள் அரசு பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

  • நிகோசியா மாவட்டம்: 1000 - 2999
  • லிமாசோல் மாவட்டம்: 3000 - 4999
  • பாமகுஸ்டா மாவட்டம்: 5000 - 5999
  • லார்நாகா மாவட்டம்: 6000 - 7999
  • பபோஸ்மாவட்டம்: 8000 - 8999
  • கைரேனியா மாவட்டம்: 9000 - 9999
  • 1974 துருக்கி ஆட்கிரமிப்பின் பின்னர் கிரேக்க சைப்பிரஸில் மட்டுமே அஞ்சல்குறியீடுகள் பயனாகிறது. வடக்கு சைப்பிரஸிற்கு அனுப்பப்படும் அஞ்சல்கள் தென்துருக்கியின் மெர்சின் வழியே மெர்சின் 10,துருக்கி வழியே என முகவரியிடப்பட வேண்டும். மற்றொரு விலக்காக பிரித்தானிய இரு அரசுப்பகுதிகள் சைப்பிரஸ் குடியரசின் கீழில்லாவிடினும் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் சைப்பிரஸ் அஞ்சல்குறிகளையே பாவிக்கின்றன. பிரித்தானிய இராணுவ அமைப்புகளும் அலுவலர்களும் பிரித்தானிய இராணுவ அஞ்சலகம் எண்களை (BFPO 57 for Akrotiri and BFPO 58 for Dhekelia) பாவிக்கின்றனர்.

    செக் குடியரசு

    தொகு

    அஞ்சல் வழியிடல் எண் (PSČ,Poštovní směrovací číslo) செக்கோசுலோவேகியா நாட்டில் 1973 முதலே இருந்து வருகிறது. இங்கு அஞ்சல் குறியீடு ஐந்து எண்களைக் கொண்டதாக உள்ளது. அது XXX XX என்ற படிவத்தில் எழுதப்பட வேண்டும். முதல் எண் மண்டலத்தைக் குறிக்கும்:

    1 - செக் குடியரசின் தலைநகர்,பிராக் (இரண்டாவது எண் மாவட்டத்தைக் குறிக்கிறது).
    2 - மத்திய பொகிமியா எண்கள் 200 00 - 249 99 அஞ்சல்துறை பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது,எந்த மண்டலத்திற்கும் வழங்கப்படுவதில்லை. பிராக்கின் மத்திய வினியோக அஞ்சலகம் 225 00 எண்ணைப் பயன்படுத்துகிறது.
    3 - மேற்கு மற்றும் தென் பொகிமீயா
    4 - வடக்கு பொகிமியா
    5 - கிழக்குபொகிமியா
    6 - தென் மொரோவியா
    7 - வட மொரோவியா
    8,9,0 சுலோவிகாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    கூடுதல் அஞ்சல்கள் உள்ள நிறுவனங்கள் தனி அஞ்சல் குறியீடு பெற முடியும்.

    முகவரி எழுதும்போது ஊர்பெயரின் முன்னால் அஞ்சல்குறியீடு இடப்பட வேண்டும். காட்டாக: நா பிரிகோபெ28
    115 03 பிராகா 1

    டென்மார்க்

    தொகு

    டென்மார்க்கில் நான்கு எண்கள் கொண்ட அஞ்சல் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தவிர ஐந்து சிறப்பு மூன்று எண் குறியீடுகளும் உள்ளன. கூட்டாட்சி பகுதிகளான கிரீன்லாந்து[5] மற்றும் பாரோ தீவுகள் முறையே 4- மற்றும் 3-எண் குறியீடுகளைக் கொண்டுள்ளன.

    புதிய கட்டுப்பாடுகளின்படி அஞ்சல்குறியீட்டுடன் நாட்டு குறிDK சேர்க்கப்பட வேண்டும்; ஆனால் பெரும்பாலும் இது கடைபிடிக்கப்படுவதில்லை. நகரின் பெயரின் முன்னால் அஞ்சல் குறியீடு எண் இடப்படவேண்டும்.

    சில எடுத்துக்காட்டுகள்:
    1000 København C (கோபன்ஃகேகன் நகரம்)
    6100 Haderslev
    DK-9000 Aalborg

    பின்லாந்து

    தொகு

    பின்லாந்து 1971 முதலே ஐந்து எண்கள் கொண்ட அஞ்சல்குறியீடுகளை பயன்படுத்தி வருகிறது.முதல் இரு எண்கள் நகராட்சியை அல்லது ஐந்தைவிடக் குறைவான ஊராட்சி தொகுதிகளைக் குறிக்கிறது.எண் 1இல் முடியும் குறியீடுகள் அஞ்சல்பெட்டியைக் குறிக்கின்றன. கூடுதல் அஞ்சல் பெறும் பெரும் நிறுவனங்கள் தனி குறியீட்டெண்ணைக் கொண்டுள்ளன.புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் தந்தை வாழுவதாகக் கூறப்படும் கோர்வதுன்துரி தனி அஞ்சல் குறியீடான 99999 எண்ணைப் பெறுகிறது.


    பிரான்ஸ்

    தொகு

    பிரான்ஸ் ஐந்து எண்கள் கொண்ட அஞ்சல் குறியீட்டை கடைபிடிக்கிறது. முதல் இரு எண்கள் நகரம் அமைந்துள்ள டிபார்மென்டை குறிக்கிறது. பிரெஞ்சுப் புரட்சியின்போது அகரவரிசையில் கொடுக்கப்பட்ட இந்த டிபார்ட்மென்ட் எண்கள், பின்னர் டிபார்ட்மென்ட்கள் பிரிக்கப்பட்டதாலும் பெயர்கள் மாற்றப்பட்டதாலும், தற்போது அகரவரிசையில் இல்லை. இந்த எண்முறை பிரெஞ்ச் நாட்டின் அயல் ஆட்சிப்பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இறுதி மூன்று எண்கள் அனுப்பப்படவேண்டிய இடத்தினை துல்லியமாக குறிக்கின்றன.

    ஜெர்மனி

    தொகு

    ஜெர்மனியில்ஜூலை 25, 1941 இரு எண்கள் கொண்ட குறியீடு அஞ்சல்பொதிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அஞ்சல்களுக்கும் விரிவாக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இது நான்கு எண்கள் கொண்ட குறிநீடுகளுக்கு மாற்றப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு ஜெர்மானிய சனநாயக குடியரசு தனது நான்கு எண் முறையை அறிமுகம் செய்தது.

    இன்று,1993 முதல், ஜெர்மன் அஞ்சல் குறியீடுகள் ஐந்து எண்களைக் கொண்டுள்ளது.இது 1990களில் மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மனிகளில் இருந்த நான்கு எண் குறிகளை மாற்றியது.

    கிரீஸ்

    தொகு

    இங்குள்ள அஞ்சல் குறியீடுகள் ஐந்து எண்கள் கொண்டதாகும். 1983 வரை ஏதென்ஸ் மற்றும் பிற நகரங்களில் மூன்று எண்கள் கொண்ட அமைப்புகள் இருந்தன.

    ஹங்கேரி

    தொகு

    ஹங்கேரியின் அஞ்சல் குறியீடுகள் நான்கு எண்கள் கொண்டவை. முதல் எண் அஞ்சல் வலயத்தைக் குறிக்கும்.

    • 1000 புடாபெஸ்ட்
    • 2000 சென்தெந்தெடர்
    • 3000 ஹத்வான்
    • 4000 டெப்ரெசென்
    • 5000 ஸ்சோல்நோக்
    • 6000 கெக்ஸ்மெட்
    • 7000 சார்போகார்ட்
    • 8000 Székesfehérvár
    • 9000 க்யோர்

    புடாபெஸ்ட் அஞ்சல்குறியின் படிவம் 1XYZ, X மற்றும் Y மாவட்ட எண்கள் (01 - 23), கடைசி எண் குறிப்பிட்ட அஞ்சலகம். அஞ்சல்பெட்டிகளுக்கான குறியீடுகள் வேறு அமைப்பை கையாளுகின்றன. பிற சிறப்புகள்:

    • கௌன்டி தலைநகரங்கள் "00" என முடிகின்றன. எனினும் "00" முடிவடைவந்தாலும் கௌன்டி தலைநகரங்களாக இல்லாத ஊர்களும் உள்ளன.
    • நகரங்கள் பெரும்பாலும் "0" முடிவடைகின்றன.

    ஹங்கேரியின் அஞ்சல்குறியீடுகளுக்கு: ஹங்கேரியின் அஞ்சல் சேவை

    இந்தியா

    தொகு

    இந்தியாவின் அஞ்சல் எண்கள், அஞ்சலக சுட்டு எண் அல்லது அஞ்சல் குறியீடு எண் (PIN) என வழங்கப்படும். இது ஆறு எண்களைக் கொண்டிருக்கும்.

    உ.தா: கோவை விமான நிலையத்தின் அஞ்சல் குறியீடு எண், 641014 ஆகும்.

    இலங்கை

    தொகு

    இலங்கையின் அஞ்சல் குறியீடுகள் ஐந்து எண்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு அஞ்சலகத்திற்கும் துணை அஞ்சலகத்திற்கும் எண் கொடுக்கப்படுள்ளது. முதல் எண் மாகாண இலக்கமாகும்.அஞ்சல் எண்களுக்கு இங்கே தேடவும் :[6]

    மேற்கோள்கள்

    தொகு
    1. 1.0 1.1 da Cruz, Frank (2008-05-17). "Frank's Compulsive Guide to Postal Addresses". Columbia University. பார்க்கப்பட்ட நாள் 2008-06-04. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
    2. "Formatting an international address" (PDF). Universal Postal Union. Archived from the original (PDF) on 2008-10-03. பார்க்கப்பட்ட நாள் 2008-06-04. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
    3. "Our History". Auspost.com.au. Archived from the original on 2008-04-06. பார்க்கப்பட்ட நாள் 2008-11-02.
    4. "postalservices Zip Code". Post.gov.tw. Archived from the original on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2008-11-02.
    5. "Find dit TELE-POST Center (Find your TELE-POST Center)". Greenland Tele-Post website (in Danish). Archived from the original on மே 20, 2016. பார்க்கப்பட்ட நாள் January 17, 2009.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
    6. "Postal Codes of Sri Lanka :: Mohanjith". Mohanjith.net. Archived from the original on 2008-10-08. பார்க்கப்பட்ட நாள் 2008-11-02.

    வெளியிணைப்புகள்

    தொகு

    இவற்றையும் காணவும்

    தொகு
    "https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சல்_குறியீடு&oldid=4125666" இலிருந்து மீள்விக்கப்பட்டது