அடிலெயிட் கணேசர் கோயில்

(அடிலெய்ட் கணேஷர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கணேசர் கோயில் தெற்கு அவுஸ்திரேலியா மாநிலத் தலைநகர் அடிலெயிடில் உள்ள ஓக்லண்ட்ஸ் பார்க் என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

வரலாறு

தொகு

கோயிலை அமைப்பதற்கு முன்னோடியாக 1985இல் அடிலெய்டில் இயங்கி வந்த இந்து சங்கம் ஒரு தேவாலயத்தை வாங்கியது. பின்னர் இத்தேவாலயத்தைக் கோவிலாக்கி அருள்மிகு கணேசரை முதன்மைக் கடவுளாக நிறுவுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மாமல்லபுரத்தில் இருந்து கருங்கல்லாலான கணேசர் சிலையை நிறுவி 1986 ஜூலை மாதத்தில் குடமுழுக்கு நடத்தினர். இறை வழிபாட்டுடன் இந்து தத்துவம், பண்பாடு, இந்திய மொழிகள் போன்றவற்றையும் கற்பிப்பதற்கான இடமாகவும் திகழ்ந்தது. அந்தக் காலகட்டத்தில் இதுவே அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது கோயிலாக இருந்தது.

1993 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் கோயிலுக்கு அருகில் இருந்த நிலம் வாங்கப்பட்டு, 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் புதிய கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அத்திவாரம் இடப்பட்டது. கோயிலை உருவாக்குவதற்காக இந்தியாவிலிருந்து சிறந்த ஸ்தபதி வரவழைக்கப்பட்டார். கோயில் கட்டப்பட்டு 2000 ஆம் ஆண்டு நவம்பரில் குடமுழுக்கு செய்யப்பட்டது. தென்னிந்திய மரபின்படி கருங்கல், வெண்கலம் ஆகியவற்றாலான சிலைகளும், வட இந்திய மரபின்படி பளிங்கிலான சிலைகளும் அமைக்கப்பட்டன.

அமைப்பு

தொகு

சித்தி கணேசர் கருவறையிலும், சிவலிங்கம், வள்ளி தெய்வானை உடனிருக்க முருகன், துர்க்கை, லட்சுமி, நாராயணன் ஆகியோர் பரிவார தெய்வங்களாகவும் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒன்பது கிரகங்கள், வைரவர், அநுமன் ஆகியோரையும் அவரவர்க்குரிய இடங்களில் நிறுவினர்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிலெயிட்_கணேசர்_கோயில்&oldid=3854086" இலிருந்து மீள்விக்கப்பட்டது