அத்தனூர்
அத்தனூர் (ஆங்கிலம்:Athanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அத்தனூர் பேரூராட்சி | |||
ஆள்கூறு | 11°30′N 78°08′E / 11.5°N 78.13°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | நாமக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | எஸ். உமா, இ. ஆ. ப | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
9,827 (2011[update]) • 1,897/km2 (4,913/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 5.18 சதுர கிலோமீட்டர்கள் (2.00 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/athanur |
இப்பேரூராட்சியில் விசைத்தறிகள், வேளாண்மை மற்றும் நூற்பாலைகள் ஆக முக்கியத் தொழில்கள் ஆகும். இப்பேரூராட்சியைச் சுற்றி அலவாய்மலை அமைந்துள்ளது. இங்கு அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது[3] இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது[4]இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. [5]
அமைவிடம்
தொகுஅத்தனூர் பேரூராட்சிக்கு நாமக்கல் 37 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 7 கிமீ தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது. இதன் மேற்கில் வெண்ணந்தூர் 5 கிமீ மற்றும் வடக்கில் மல்லூர் 5 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு5.18 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 28 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [6]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,666 வீடுகளும், 9,827 மக்கள்தொகையும் கொண்டது. [7]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-20. பார்க்கப்பட்ட நாள் 2013-01-04.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-18. பார்க்கப்பட்ட நாள் 2013-01-04.
- ↑ http://www.dinamalar.com/News_Detail.asp?Id=602284&Print=1
- ↑ அத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Athanur Population Census 2011