அனிதா ஹசானந்தனி

இந்திய நடிகை

அனிதா ஹசானந்தனி (Anita Hassanandani) (பிறப்பு: 1981 ஏப்ரல் 14) ஒரு இந்திய நடிகையான இவர் முதன்மையாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றுகிறார். ஸ்டார் பிளஸின் காவ்யாஞ்சலி என்ற நாடகத் தொடரில் அஞ்சலியாகவும், யே ஹை முஹப்பதீனில் ஷாகுன் அரோராவாகவும், கலர்ஸ் தொலைக்காட்சியின் நாகினி 3 மற்றும் நாகினி 4 இல் விசாகா கன்னாவாகவும் நடித்ததில் இவர் மிகவும் பிரபலமானவர். [3]

அனிதா ஹசானந்தனி
2019இல் நடந்த ஏக்தா கபூரின் தீபாவளி விருந்தில் அனிதா ஹசானந்தனி
பிறப்புநடாஷா ஹசானந்தனி [1]
14 ஏப்ரல் 1981 (1981-04-14) (அகவை 42)[2]
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்Indian
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ரோஹித் ரெட்டி (தி. 2013)
பிள்ளைகள்1

சொந்த வாழ்க்கை தொகு

 
'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் வெற்றி விழாவில் ஹசானந்தானி தனது கணவர் ரோஹித் ரெட்டியுடன்.

1981 ஏப்ரல் அன்று மும்பையில் ஒரு சிந்தி குடும்பத்தில் பிறந்தார்.[4][2][5][6] 2013 அக்டோபர் அன்று கோவாவில் ஒரு தொழிலதிபரான ரோஹித் ரெட்டியை மணந்தார்.[7] அக்டோபர் 10,2020 அன்று, ரெட்டி மற்றும் தன்னை உள்ளடக்கிய ஒரு இன்ஸ்ட்டாகிராம் காணொளியில் தனது கர்ப்பத்தை அறிவித்தார். இந்த இணைக்கு 2021 பிப்ரவரி 9 அன்று முதல் குழந்தை பிறந்தது.[8] இவர்கள் தங்கள் மகனுக்கு ஆரவ் ரெட்டி என்று பெயரிட்டனர். [9]

தொழில் தொகு

ஹசானந்தனி, இதார் உதார் பருவம் 2இன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். [10] 2002 ஆம் ஆண்டில் சாமுராய் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் வருஷமெல்லாம் வசந்தம் படம் முதலில் வெளிவந்தது. [11] 2003ஆம் ஆண்டு குச் தூ ஹை என்ற அதிரடித் திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் இவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அமானுஷ்யத் திரைப்படங்களான கோய் ஆப் சா, கிருஷ்ணா காட்டேஜ் [12] போன்ற படங்களில் பணியாற்றினார்.[13] பின்னர், காவ்யாஞ்சலி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இவர் நடித்தார். [14] தனது பிரதான பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தவிர, நேனு பெல்லிகி ரெடி, தொட்டி கேங் மற்றும் நுவ்வு நேனு உள்ளிட்ட சில தென்னிந்தியத் திரைப்படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது நுவ்வு நேனு படம் துஷார் கபூர் நடிப்பில் இந்தியில் யே தில் என மறு ஆக்கம் செய்யப்பட்டது. நேனுன்னானு என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றினார். கன்னட உச்ச நட்சத்திரம் புனீத் ராஜ்குமாருடன் சேர்ந்து வீர கன்னடிகா என்ற கன்னடப் படத்திலும் நடித்தார்.

2013 ஆம் ஆண்டு முதல், யே ஹை மொஹபதீன் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஷாகுன் அரோராவின் பாத்திரத்தில் தோன்றினார். ஜலக் டிக்லா ஜாவின் பருவம் 8 இல் இவர் வெளியேறிய பின்னர் வைல்ட் கார்டு நுழைவு மூலம் உள்ளே வந்தார். 2018 சூன் முதல் 2019 மே வரை ஏக்தா கபூரின் நாகினி 3இல் இவர் விசாகா என்ற வேடத்தில் நடித்தார். [15]

மேலும் சூலை 2019 இல், இவர், நாச் பாலியே என்ற நடன நிகழ்ச்சியின் பருவம் 9இன் இரண்டாவது வெற்றியாளர் ஆனார். [16]

2020 சனவரி மாதம் இவர் நாகினி:பாக்யா கா ஜெஹ்ரீலா கேலில் விசாகா என்ற பாத்திரத்தை மீண்டும் செய்தார். [17] ஆகத்து 2020இல் நாகின் 5இல் ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றினார்.

மேற்கோள்கள் தொகு

 1. "Rashami Desai to Nia Sharma: Did you know the original names of these famous TV celebs?" (in en). The Times of India. 20 November 2019. https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/rashami-desai-to-nia-sharma-did-you-know-the-original-names-of-the-famous-tv-celebs/photostory/72146010.cms. 
 2. 2.0 2.1 Goswami, Parismita (14 April 2016). "'Yeh Hai Mohabbatein' actress Anita Hassanandani celebrates her birthday with Karan Patel and others". International Business Times, India Edition. http://www.ibtimes.co.in/yeh-hai-mohabbatein-actress-anita-hassanandani-celebrates-her-birthday-karan-patel-others-674694. 
 3. Sen, Sreejeeta. "Anita Hassanandani: It makes you nervous when you are stepping into a show like Naagin" (in en-US). http://www.bollywoodlife.com/news-gossip/anita-hassanandani-it-makes-you-nervous-when-you-are-stepping-into-a-show-like-naagin/. 
 4. "Anita H Reddy on Instagram: "As a Sindhi, born & brought up in Mumbai, my sense of ethnic fashion varied.... but I always loved sarees... I was fascinated by South…"". https://www.instagram.com/p/Bj9rcavAEK9/. 
 5. "Anita Hassanandani gets a special birthday gift from husband". The Indian Express. 12 April 2016. http://indianexpress.com/article/entertainment/bollywood/anita-hassanandani-gets-a-special-birthday-gift-from-husband/. 
 6. "PICS & VIDEOS: Anita Hassanandani rings in her 38th birthday with Divyanka, Surbhi & other TV celebs!". 14 April 2019. https://www.abplive.in/television/anita-hassanandani-birthday-naagin-3-actress-turns-38-celebrates-with-hubby-friends-in-a-grand-bash-see-pics-videos-964640. 
 7. "Anita Hassanandani ties the knot with Rohit Reddy". Times of India. 16 October 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/love-matters/Anita-Hassanandani-ties-the-knot-with-AnantRauniyar-Reddy/articleshow/24239113.cms. 
 8. "Anita Hassanandani confirms pregnancy by flaunting her baby bump in this video with husband Rohit Reddy" (in en). The Times of India. 10 October 2020. https://m.timesofindia.com/tv/news/hindi/anita-hassanandani-confirms-pregnancy-by-flaunting-her-baby-bump-in-this-video-with-husband-rohit-reddy/amp_articleshow/78591906.cms. 
 9. "Anita Hassanandani-Rohit Reddy announce name of baby boy in most interesting way, find out" (in en). DNA India. 20 February 2021. https://www.dnaindia.com/television/report-anita-hassanandani-rohit-reddy-announce-name-of-their-baby-boy-aaravv-reddy-in-most-interesting-way-find-out-2876569. 
 10. "debut on the television screen". http://www.indianexpress.com/news/back-to-the-start/755632/. 
 11. "34th Tamil film of the year 2002". Cinematoday3.itgo.com. http://cinematoday3.itgo.com/Review%20-%20Samurai.htm. 
 12. "Movie Review : Krishna Cottage". sify.com. http://www.sify.com/movies/krishna-cottage-review-bollywood-13455589.html. 
 13. "Movie Review : Krishna Cottage". sify.com. http://www.sify.com/movies/krishna-cottage-review-bollywood-13455589.html. 
 14. "Natasha Kavyanjali". YouTube. https://www.youtube.com/watch?v=e1jcHY3DhUU. 
 15. "Naagin 3 fame Anita Hassanandani overcomes shyness, steps out of the pool in a monokini - Times of India". https://timesofindia.indiatimes.com/tv/news/hindi/naagin-3-fame-anita-hassanandani-overcomes-shyness-steps-out-of-the-pool-in-a-monokini/articleshow/69577602.cms. 
 16. Jogani, Shreni (31 October 2019). "Nach Baliye 9: Anita Hassanandani opens up after results are announced". Republic World. https://www.republicworld.com/entertainment-news/television-news/nach-baliye-9-anita-hassanandanis-cryptic-post-on-instagram.html. 
 17. Nair, Tarun (24 January 2020). "'Naagin 4' to see comeback of Anita Hassanandani, Ekta Kapoor reveals with Insta post". Republic World. https://www.republicworld.com/entertainment-news/television-news/anita-hassanandani-to-comeback-on-the-show.html. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_ஹசானந்தனி&oldid=3721425" இருந்து மீள்விக்கப்பட்டது