அனுராதபுரச் சிலுவை

அனுராதபுரச் சிலுவை (Anuradhapura cross) என்பது கிறிஸ்தவச் சிலுவை வகைகளில் ஒன்று ஆகும். இது இலங்கை கிறித்தவத்தின் பண்டைய சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது.[1][2][3] இலங்கையில் இது நொஸ்ரியன் சிலுவை எனவும் இலங்கைச் சிலுவை எனவும் அழைக்கப்படுகிறது.

அனுராதபுரச் சிலுவை

சிலுவை தொகு

அனுராதபுரத்தில் 1912 இல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராட்சியின்போது இச்சிலுவை கண்டுபிடிக்கப்பட்டது.[4] மேடு பள்ளமற்ற, சமதளமான கருங்கல் தூணின் ஒரு பக்கத்தில் சிலுவை செதுக்கப்பட்டிருந்தது. அது பற்றிய விளக்கத்தையும் வரையறையையும் உடனடியாக அப்போதைய இலங்கை தொல்பொருள் ஆணையாளர் எட்வட் ஆர். அய்ட்ரன் தெரிவித்தார். அவர் அதனை ஒரு போர்த்துக்கேயச் சிலுவை என்றே வரையறுத்தார். அவருக்குப் பின் ஆணையாளராக 1924 இல் பதவி வகித்த ஆத்தர் மயூரிஸ் கோகாட் அச்சிலுவை பற்றி விளக்க அதிக முயற்சி எடுத்தார். "இலங்கையில் தொல்பொருள் மதிப்பீட்டின் வரலாற்றுக் குறிப்புக்கள்" (Memoirs of the Archaeological Survey of Ceylon) எனும் வெளியீட்டில் அவர் அது பற்றி பின்வருமாறு விளக்கினார். "மலர்க் கொத்திலுள்ள சிறு மலர் வகைச் சிலுவை படிகளிலாளான அடிப்பீடத்தில் நிற்க, கொப்புகள் போன்ற இரு இலைகளை ஒத்த உறுப்பு சிலுவையின் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வெளிப்படுகின்றது".[4] மேலும், அது ஒரு போர்த்துக்கேயச் சிலுவை என்றே அவர் தீர்மானித்தார்.[1][4] இரு ஆணையாளர்களும் அது ஒரு போர்த்துக்கேயர் கால நொஸ்ரியன் சிலுவை அல்லது பாரசீகச் சிலுவை என்றே கருதினார்கள். சில வரலாற்றுக் குறிப்புக்கள் ஐந்தாம் நூற்றாண்டு நடுப்பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலம் வரை இலங்கையில் கிழக்கு அசீரிய திருச்சபை இருந்திருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன.[5][6][7] ஆகவே அச்சிலுவை அனுராதபுரக் காலத்திற்கு உரியது என நம்பப்பட்டது.[8] இவ்வாறு இருந்த போதிலும், பல்வேறு வரலாற்றக் காரணிகள் போர்த்துக்கேயச் சிலுவை என கருதப்படுவதில் கேள்வியை எழுப்பியது. குறிப்பாக, போர்த்துக்கேயர் அக்காலப்பகுதியில் அனுராதபுரத்தில் இருந்திருக்கவில்லை.[1]

1926 இல் வரலாற்று எழுத்தாளர் கம்பிரே டபிள்யு. கோட்ரிங்டன் சிலுவை பற்றிய மிகவும் ஏற்கத்தக்க தீர்மானத்தை தெரிவித்தார். ஆறாம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதியான "கிறிஸ்தவ விவரக் குறிப்பு" என்பதன் சான்று அடிப்படையில், பாரசீகக் கிறிஸ்தவர்களின் ஒரு சமூகம் தப்ரபேனில் (இலங்கைக்கான பண்டைய கிரேக்கப் பெயர்) குடியிருந்தது. கோட்ரிங்டன் எழுதிய அவருடைய புத்தகமான "இலங்கையின் ஒரு சுருக்க வரலாறு" (A Short History of Ceylon) என்பதில் "கிட்டத்தட்ட கி.பி 500 இல் நாங்கள் ஒரு பாரசீகக் குடியிருப்பைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அனுராதபுர தொல்பொருள் காட்சிச்சாலையில் காணப்படும் நொஸ்ரியன் சிலுவை ஐயமின்றி அச்சமுகத்தைச் சேர்ந்ததாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.[9][10] 1954 இல் உதவி தொல்பொருள் ஆணையாளர், தித்துஸ் தேவேந்திரா "கிறிஸ்தவ விவரக் குறிப்பு" பற்றிய வரலாற்று நம்பகத் தன்மையை மறுத்து, 1547 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட கால போர்த்துக்கேயருடன் சிலுவையை ஒப்பிட்டார்.[11] ஆயினும் "கிறிஸ்தவ விவரக் குறிப்பு" வரலாற்றுப் பிழையின்றி இருப்பதாக கல்வியியலாளர்கள் முடிவு செய்தனர்.[12] மாந்தையில் 1954 இல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வாராட்சியில் இலங்கையில் பாரசீகக் கிறிஸ்தவர்கள் இருந்தது உறுதியாகியது. அத்துடன் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலுவையை ஒத்த அமைப்புக்களுடன் நொஸ்ரியன் சிலுவையுடனான முத்திரையும் தொல்பொருள் அகழ்வாராட்சியில் உறுதி செய்யப்பட்டது.[13]

அடையாள விளக்கம் தொகு

ஓற்றுமையான வடிவம், இலங்கைக்கும் ஆரம்ப தென் இந்திய கிறிஸ்தவ சமூத்திற்கு இடையிலான சாத்தியமான தொடர்புகள் ஆகியவற்றால் அச்சிலுவை புனித தோமாவின் சிலுவையின் ஒரு வகை எனக் கருதப்பட்டது.[nb 1] ஆயினும் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலுவையை மற்ற சிலுவைகளோடு ஒப்பிடுகையில் தனித்துவமான அமைப்புக்களைக் கொண்டிருப்பதைக் காணலாம்.[2] நொஸ்ரியன் சிலுவையையும் அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலுவையையும் ஒப்பிடுகையில் அவற்றுக்கிடையே பொதுவான மூன்று பிரதான மூலங்கள் இருப்பதைக் காணலாம்.

அவையாவன
 1. சிலுவையின் அடியில் (மேல் நோக்கியபடி இருக்கும் தாவர உறுப்புக்கள்) காணப்படும் "இலைகள்". இது "வாழ்வின் மரம்" என்பதை அடையாளப்படுத்துகிறது. (மரத்தின் உயிர் வாழும் தன்மை பழம் போன்று வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் பகுதியால் அடையாளப்படுத்தப்படுகின்றது.
 2. சிலுவையின் கைப் பகுதிகள் ஒவ்வொன்றும் முத்துப் போன்று முடிக்கப்பட்டுள்ளது. முத்துக்கள் சிரிய கிறிஸ்தவ பக்தி இலக்கியத்திலும் உருவவியலிலும் மத்திய கருப் பொருளாகவுள்ளது.
 3. மூன்று படிகள் கொண்ட அடிப்பீடம் அடிப்படையாகவுள்ளது. ஓன்றன் மேல் ஒன்றான படிகள் சொர்க்கத்தின் மூன்று நிலைகளையும், பேழையின் மூன்று அறைகளையும், சீனாய் மலையின் மூன்று எல்லைகளையும் அடையாளப்படுத்துகிறது.[15]
ஒப்பீடு
சிலுவை பெயர் இலை அமைப்பு முத்து அமைப்பு அடிப்பீட அமைப்பு ஓற்றுமை/வேறுபாடு
  அனுராதபுரச் சிலுவை  Y  Y  Y -
  புனித தோமாவின் சிலுவை (கேரளா)  Y  Y  Y சிலுவையின் மேல் புறாவும் மேலதிக இலை அமைப்பும் உள்ளன.
  நொஸ்ரியன் சிலுவை (சீனா)  N  N  N வேறுபாடுகளுடன் அப்பீடத்தில் மலர் உள்ளது.
  போர்த்துக்கேயச் சிலுவை (1146)  N  Y  N முத்து அமைப்பைத் தவிர ஒற்றுமை இல்லை.
  போர்த்துக்கேயச் சிலுவை (1319)  N  N  N பாரிய வேறுபாடு
  மேற்கு சிரியச் சிலுவை  N  Y  N முத்து அமைப்பைத் தவிர ஒற்றுமை இல்லை.

முக்கிய பாவனை தொகு

அனுராதபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலுவை திருத்தந்தை பிரான்சிசின் இலங்கைக்கு 2015 இல் பயணம் செய்தபோது, அவரின் உத்தியோகபூர்வ சின்னத்தில் இடம் பெற்றிருந்தது.[16] இதனை கொழும்பு கத்தோலிக்க உயர்மறை மாவட்டம் "மகிமையின் சிலுவை" அல்லது "உயிர்த்தெழுதலின் சிலுவை" எனக் கூறிப்பிட்டது. குருணாகல் அங்கிலிக்கன் மறைமாவட்டம் தன் இலச்சினையில் இதனை உள்வாங்கியுள்ளது.[17] இவ்வாறு இலங்கையில் காணப்படும் பல திருச்சபைகளின் குறியீடுகளில் அச்சிலுவை இடம்பெறுகின்றது.

குறிப்பு தொகு

 1. புனித தோமாவின் சிலுவை நொஸ்ரியன் சிலுவையின் பல வடிவங்களில் ஒன்று என அல்லது நொஸ்ரியன் சிலுவை என்று கருதப்படுகின்றது.[14]

உசாத்துணை தொகு

 1. 1.0 1.1 1.2 Oswald Gomis, Emiretus (22 April 2011). "The Cross of Anuradhapura". Daily News. http://archives.dailynews.lk/2011/04/22/fea32.asp. பார்த்த நாள்: 27 February 2015. 
 2. 2.0 2.1 Pinto, Leonard (20 September 2013). "A Brief History Of Christianity In Sri Lanka". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/a-brief-history-of-christianity-in-sri-lanka/. பார்த்த நாள்: 27 February 2015. 
 3. Antony, Thomas. "Analogical review on Saint Thomas Cross- The symbol of Nasranis-Interpretation of the Inscriptions". Nasrani Syrian Christians Network. பார்க்கப்பட்ட நாள் 27 February 2015.
 4. 4.0 4.1 4.2 A. M. Hocart (Ed) (1924). The Ratana Pãsãda, the Western Monasteries of Anuradhapura, Excavations in the Citadel, The so-called Tomb of King Duttagamani, Privy Stones. Archeological Department (Ceylon). பக். 51–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-12-061093-4. 
 5. "Mar Aprem Metropolitan Visits Ancient Anuradhapura Cross in Official Trip to Sri Lanka". Assyrian Church News. 6 August 2013. Archived from the original on 26 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 27 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. Weerakoon, Rajitha (26 June 2011). "Did Christianity exist in ancient Sri Lanka?". The Sunday Times. http://www.sundaytimes.lk/110626/Plus/plus_07.html. பார்த்த நாள்: 28 February 2015. 
 7. "Main interest". Daily News. 22 April 2011 இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150329194052/http://www.highbeam.com/doc/1P3-2326613141.html. பார்த்த நாள்: 27 February 2015. 
 8. "Pioneer of inter religious dialogue". Daily News. 28 May 2009 இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150329194057/http://www.highbeam.com/doc/1P3-1731409951.html. பார்த்த நாள்: 27 February 2015. 
 9. Codrington, H. W. (1994). Short History of Ceylon. Asian Educational Services. பக். 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120609464. https://books.google.lk/books?id=tqpdlaPiOyEC&pg=PA32. 
 10. Scott, Andrew (20 December 2009). "Christmas in ancient Sri Lanka". தி அப்சர்வர் இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402105707/http://www.sundayobserver.lk/2009/12/20/spe12.asp. பார்த்த நாள்: 3 March 2015. 
 11. Devendra, Don Titus (1957). "The Date of the Anuradhapura Cross". Journal of the Royal Asiatic Society (Royal Asiatic Society) V: 85–96. 
 12. D. P. M. Weerakkody (1997). Taprobanê: Ancient Sri Lanka as Known by Greeks and Romans (Indicopleustoi). Brepols Publishers. பக். 120–121. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2503505527. 
 13. "Mar Aprem Metropolitan Visits Ancient Anuradhapura Cross in Official Trip to Sri Lanka". Assyrian Church News. 6 August 2013. Archived from the original on 26 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 14. "The cross". nestorian.org. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
 15. Mihindukulasuriya, Prabo (2012). The 'Nestorian' cross and the Persian Christians in the Anuradhapura Period. Colombo: Colombo Theological Seminary. பக். 41. http://books.google.lk/books/about/The_Nestorian_Cross_and_the_Persian_Chri.html?id=EdAInwEACAAJ&redir_esc=y. 
 16. Silva, Sunil De. "Official logo of the pope's visit to Sri Lanka". Archdiocese of Colombo. Archived from the original on 1 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 28 February 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 17. "The Diocese of Kurunegala". The Diocese of Kurunegala. பார்க்கப்பட்ட நாள் 30 March 2015.

மேலதிக வாசிப்பு தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதபுரச்_சிலுவை&oldid=3542249" இலிருந்து மீள்விக்கப்பட்டது