அபிமன்யு ஈஸ்வரன்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

அபிமன்யு ஈஸ்வரன் (Abhimanyu Easwaran பிறப்பு: செப்டம்பர் 6, 1995) ஓர் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் வங்காளத்திற்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடுகிறார். [1] 31 ஜனவரி 2017 அன்று 2016–17 மாநில இருபதுக்கு20 போட்டியில் வங்காளத்திற்காக அறிமுகமானார். [2] அக்டோபர் 2018 இல், 2018–19 தியோதர் வாகையாளர் கோப்பைக்கான இந்தியா அ அணியில் இடம் பெற்றார். [3] 2018-19 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் ஆறு போட்டிகளில் 861 ஓட்டஙளுடன், வங்காளத்திற்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக இருந்தார். [4]

அபிமன்யு ஈஸ்வரன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அபிமன்யு ரங்கநாதன் பரமேஸ்வரன் ஈஸ்வரன்
பிறப்பு6 செப்டம்பர் 1995 (1995-09-06) (அகவை 29)
தேராதூன், இந்தியா
மட்டையாட்ட நடைவலக்கை மட்டையாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013–தற்போதுவரைமேற்கு வங்காளத் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது பஅது இ20
ஆட்டங்கள் 58 57 19
ஓட்டங்கள் 4227 2656 471
மட்டையாட்ட சராசரி 46.96 49.18 33.64
100கள்/50கள் 13/17 6/17 1/1
அதியுயர் ஓட்டம் 233 149 107*
வீசிய பந்துகள் 210 6 0
வீழ்த்தல்கள் 2 0 0
பந்துவீச்சு சராசரி 73.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
48/– 13/– 4/–
மூலம்: Cricinfo, ஜனவரி 24, 2020

ஆகஸ்ட் 2019 இல், 2019–20 துலீப் கோப்பைக்கான இந்தியா ரெட் அணியில் இடம் பெற்றார். [5] [6] தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியா கிரீன் அணிக்கு எதிராக 153 ஓட்டங்கள் எடுத்தார். [7] அக்டோபர் 2019 இல், 2019–20 தியோதர் கிண்ணத்திற்கான இந்தியா அ அணியில் இடம் பெற்றார். [8]

ஜனவரி 2021 இல், இங்கிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கான இந்திய அணியில் ஐந்து கூடுதல் வீரர்களில் ஒருவராக இவர் இடம் பெற்றார். [9] மே 2021 இல், 2019–2021 ஐ.சி.சி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை இறுதி மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இடம் பெற்றார். [10] [11]

சான்றுகள்

தொகு
  1. "Abhimanyu Easwaran". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 October 2015.
  2. "Inter State Twenty-20 Tournament, East Zone: Bengal v Tripura at Kolkata, Jan 31, 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 January 2017.
  3. "Rahane, Ashwin and Karthik to play Deodhar Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 October 2018.
  4. "Ranji Trophy, 2018/19 - Bengal: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 January 2019.
  5. "Shubman Gill, Priyank Panchal and Faiz Fazal to lead Duleep Trophy sides". ESPN Cricinfo. https://www.espncricinfo.com/story/_/id/27331972/shubman-gill-priyank-panchal-faiz-fazal-lead-duleep-trophy-sides. 
  6. "Duleep Trophy 2019: Shubman Gill, Faiz Fazal and Priyank Panchal to lead as Indian domestic cricket season opens". Cricket Country. https://www.cricketcountry.com/news/duleep-trophy-2019-shubman-gill-faiz-fazal-and-priyank-panchal-to-lead-duleep-trophy-2019-squad-fixtures-schedule-876560. 
  7. "Duleep Trophy 2019 Final: Abhimanyu Easwaran's 153 hands India Red 114-run lead". My Nation. பார்க்கப்பட்ட நாள் 7 September 2019.
  8. "Deodhar Trophy 2019: Hanuma Vihari, Parthiv, Shubman to lead; Yashasvi earns call-up". SportStar. பார்க்கப்பட்ட நாள் 25 October 2019.
  9. "India's squad for first two Tests against England announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  10. "No Hardik, Kuldeep in India's squad of 20 for WTC final and England Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
  11. "India's squad for WTC Final and Test series against England announced". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிமன்யு_ஈஸ்வரன்&oldid=3146968" இலிருந்து மீள்விக்கப்பட்டது