அபு முகமது அல்-சுலானி
[4](பிறப்பு: 1982), அபு ஜாபர் சேக்கிற்குப் பின் 2017ஆம் ஆண்டு முதல் சிரியா நாட்டின் போராளிகள் குழுவான சாம் விடுதலை அமைப்பின் 2வது அமீர் ஆவார். [5]சவூதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் பிறந்த இவர் 1980களில் தனது குடும்பத்துடன் சிரியாவிற்கு குடிபெயர்ந்தார்.[6]2016ஆம் ஆண்டில் அல் காயிதாவுடனான தொடர்புகளை துண்டிப்பதற்கு முன்[7] அல் காயிதாவின் கிளை அமைப்பான அல் நுஸ்ரா முன்னணியின் அமீராக அபு முகமது அல்-சுலானி செயலாற்றினார்.[8]
அபு முகமது அல்-சுலானி | |
---|---|
أبو محمد الجولاني | |
2006ல் அபு முகமது அல்-சுலானி | |
சாம் விடுதலை அமைப்பின் 2வது அமீர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 அக்டோபர் 2017 | |
முன்னையவர் | அபு ஜாபர் சேக் |
ஜபாத் பதே அல்-சாமின் அமீர் | |
பதவியில் 28 சூலை 2016 – 28 சனவரி 2017 | |
அல்-நுஸ்ரா முன்னணியின் அமீர் | |
பதவியில் 23 சனவரி 2012 – 28 சூலை 2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அகமது உசைன் அல்-சாரா 1982 (அகவை 41–42) ரியாத், சவூதி அரேபியா |
இராணுவப் பணி | |
சார்பு | நடப்பு: சிரியா இரட்சிப்பு அரசு (2017–தற்போது வரை) சாம் விடுதலை அமைப்பு (2017–தற்போது வரை) முன்னர்: அல் காயிதா(2003–2016)[1]
|
சேவைக்காலம் | 2003-தற்போது வரை |
தரம் | தலைமைப் படைத்தலைவர், சாம் விடுதலை அமைப்பு |
போர்கள்/யுத்தங்கள் | ஈராக் போர், சிரிய உள்நாட்டுப் போர் |
அல் கைதா அமைப்பிலிருந்து விலகிய சுலானி, சிரியாவில் இசுலாமிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தவதில் சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொண்டார். இவரது தலைமையிலான சாம் விடுதலை அமைப்பு அதன் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் ஒரு நிர்வாகத்தை நிறுவி, பொதுமக்களிடமிருந்து வரி வசூலித்தல், பொது சேவைகளை வழங்குதல் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல், தந்திரோபாயங்கள் மற்றும் எதிர்ப்பை அடக்குதல் போன்ற விமர்சனங்களை அதிருப்தியாளர்களிடம் எதிர்கொண்டார்.[6] மே 2013ல் அமெரிக்க பாதுகாப்புத் துறை, அல்-சுலானியை உலகாளவிய தீவிரவாதி என அறிவித்தது..[9]நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இவரை பிடிக்க தகவல் கொடுப்பவர்களுக்கு $10 மில்லியன் டாலர்கள் சன்மானத் தொகை வழங்கும் என சிரியா அரசு அறிவித்தது.[10][11][12]
27 செப்டம்பர் 2014 அன்று இசுலாமிய அரசுப் படைகளுக்கு எதிரான போரில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் மேற்குலக கூட்டணி நாடுகளிலிருந்து எவ்வித உதவிகள் பெறுவதில்லை என அறிவித்தார்.[13]இருப்பினும் அண்மைய ஆண்டுகளில், அவர் தன்னைப் பற்றி மிகவும் மிதமான பார்வையை முன்வைத்தார். மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகப் போரை நடத்த அவருக்கு எந்த உத்வேகமும் இல்லை என்றும், சிறுபான்மை கிறித்தவர்களை பாதுகாப்பதாக உறுதியளித்தார்.[14][15][16]
2024ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற சிரியா உள்நாட்டுப் போரின் முடிவில், இவரது தலைமையிலான சாம் விடுதலை அமைப்பினர் சிரியாவை 54 ஆண்டுகளாக ஆண்ட பசார் அல்-அசத்த்தின் குடும்ப ஆட்சியை முடிவிற்கு கொண்டு வந்தனர்.[17]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "State Department amends terror designation for al Nusrah Front | FDD's Long War Journal". June 2018. Archived from the original on 26 February 2021. பார்க்கப்பட்ட நாள் 14 March 2021.
- ↑ சிரியா கிளர்ச்சித் தலைவர் அல் ஜொலானி யார்?
- ↑ "The Nusra Front breaks ties with al-Qaeda". The World Weekly. Archived from the original on 7 August 2016. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
- ↑ "Who is Abu Mohammed al-Golani, the leader of Syria's shock insurgency?". AP News (in ஆங்கிலம்). 2024-12-04. பார்க்கப்பட்ட நாள் 2024-12-07.
- ↑ "Julani is a temporary leader of the "Liberation of the Sham" .. This is the fate of its former leader". HuffPost. 2 October 2017. Archived from the original on 2 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2 October 2017.
- ↑ 6.0 6.1 Adam Rasgon and Raja Abdulrahim (8 December 2024). "Who Is the Leader of Syria's Rebel Offensive?". The New York Times இம் மூலத்தில் இருந்து 8 December 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.is/FP5yo.
- ↑ "Al-Nusra leader Jolani announces split from al-Qaeda". Al Jazeera. 29 July 2016 இம் மூலத்தில் இருந்து 3 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221203103759/https://www.aljazeera.com/news/2016/7/29/al-nusra-leader-jolani-announces-split-from-al-qaeda.
- ↑ "Syrian Nusra Front announces split from al-Qaeda". BBC News. 29 July 2016 இம் மூலத்தில் இருந்து 30 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160730021539/https://www.bbc.com/news/world-middle-east-36916606.
- ↑ "Terrorist Designations of Al-Nusrah Front Leader Muhammad Al-Jawlani". U.S. Department of State. Archived from the original on 22 August 2019. பார்க்கப்பட்ட நாள் 24 June 2017.
- ↑ Cone, Allen (May 10, 2017). "U.S. offers $10M reward for information on al-Nusra leader". United Press International. Archived from the original on May 11, 2017. பார்க்கப்பட்ட நாள் December 6, 2024.
- ↑ "Muhammad al-Jawlani". Rewards for Justice. Archived from the original on 20 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2 August 2021.
- ↑ Jalabi, Raya (December 5, 2024). "Abu Mohammad al-Jolani, the Syrian rebel leader hoping to overthrow Assad". Financial Times. பார்க்கப்பட்ட நாள் December 6, 2024.
- ↑ "U.S. and its allies strike ISIS tank, refineries and checkpoints". CNN. 28 September 2014 இம் மூலத்தில் இருந்து 12 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181212040737/https://www.cnn.com/2014/09/28/world/meast/isis-syria-iraq-strikes/index.html.
- ↑ Kourdi, Jomana Karadsheh, Gul Tuysuz, Brice Laine, Lauren Kent, Eyad (6 December 2024). "Syrian rebel leader says goal is to 'overthrow' Assad regime". CNN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2024.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Who is Abu Mohammed al-Jolani, the Islamist rebel leading the Syrian advance?". Washington Post. https://www.washingtonpost.com/world/2024/12/06/jolani-syria-hts/.
- ↑ "Leader of Syria's Resurgent Rebels Lays Out Strategy to Oust Assad". New York Times.
- ↑ Abouzeid, Rania (2024-12-08). "The Fall of Assad's Syria". The New Yorker (in அமெரிக்க ஆங்கிலம்). பன்னாட்டுத் தர தொடர் எண் 0028-792X. Archived from the original on 2024-12-08. பார்க்கப்பட்ட நாள் 2024-12-08.