அப்துல் காதிர் பதாயுனி

முஸ்லிம் சமூகத்தின் மிகவும் மூத்த மற்றும் செல்வாக்குமிக்க மத அதிகாரி

அப்துல் காதிர் பதாயுனி (Abd al-Qadir Badayuni) ( பிறப்பு: 1540 ஆகஸ்ட் 21- இறப்பு: 1605 நவம்பர் 5) இவர் முகலாயப் பேரரசில் வாழ்ந்த ஒரு வரலாற்றாசிரியராவார். மேலும் இவர் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்துள்ளார். [1]

முஸ்லிம் சமூகத்தின் மிகவும்
மூத்த மற்றும் செல்வாக்குமிக்க மத அதிகாரி
அப்துல் காதிர் பதாயுனி
Abdul Qadir Badayuni
1576 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹல்டிகாட்டில் நடந்த வெற்றியின் செய்தியை பதாயுனி கொண்டு வருகிறார். அக்பர்நாமா
பிறப்புஅப்துல் காதிர்
1540
பதாவுன், முகலாயப் பேரரசு[1]
இறப்பு1615
ஆக்ரா, ஆக்ரா சுபா, முகலாயப் பேரரசு
சுய தரவுகள்
Home townஆக்ரா
அறியப்படுதல்வரலாற்றாளர், இசுலாமிய அறிஞர், மொழியியல் மற்றும் அரசவை அதிகாரி
பதவிகள்
Influenced by
  • உசுமான் பெங்காளி[2]
Literary worksமுந்தகாப்-உத்-தவாரிக் என்றும் அழைக்கப்படும் தாரிக்-இ-பதாயுனி
சகாப்தம்முகலாயப் பேரரசு

இந்துக் காவியங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றை இவர் மொழிபெயர்த்துள்ளார். [1] இருப்பினும், ஒரு மரபு வழி முஸ்லீமாக, அக்பரின் சீர்திருத்தங்களையும், இந்துக்களை உயர் பதவிகளுக்கு உயர்த்துவதையும் இவர் கடுமையாக எதிர்த்தார். அபுல்-ஃபசல் இப்னு முபாரக்குடனான போட்டிக்காகவும் இவர் புகழ் பெற்றவராக இருந்துள்ளார்.  

வாழ்க்கை

தொகு

இவர் முலுக் ஷா என்பவரின் மகனாவார். சம்பல் மற்றும் ஆக்ராவில் தனது கல்விப் படிப்பை முடித்துள்ளர். பசாவரில் வாழ்ந்துள்ளார். [1] 1562 ஆம் ஆண்டில் பட்டியாலாவில் இளவரசர் உசைன் கானின் அரசவையில் நுழைவதற்கு முன்னர் இவர் தனது பெயரின் ஊரான பதாயுன் நகருக்குச் சென்றுள்ளார். இவரது பிற்கால ஆய்வுகள் முஸ்லீம் சூபித்துவவாதிகளால் நிர்வகிக்கப்பட்டன. முகலாயப் பேரரசர் அக்பர் இவரை 1574 இல் தனது அரசவையிலுள்ள மத அலுவலகத்திற்கு நியமித்தார். அங்கு இவர் தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தார்.

முக்கிய படைப்புகள்

தொகு

பதாயுனியின் குறிப்பிடத்தக்க படைப்பு 1595 இல் இயற்றப்பட்ட முண்டகாப்-உத்-தவாரிக் அல்லது தாரிக்-இ-பதாயுனி (பதாயுனியின் வரலாறு) என்பதாகும். மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட இது இந்திய முஸ்லிம்களின் பொதுவான வரலாறாகும். முதல் தொகுதியில் பாபர் மற்றும் உமாயூன் பற்றிய விவரங்கள் உள்ளது. இரண்டாவது தொகுதியில் 1595 வரையிலான அக்பரின் ஆட்சியைக் குறிக்கிறது. இந்த தொகுதி அக்பரின் நிர்வாக நடவடிக்கைகள், குறிப்பாக மத மற்றும் அவரது நடத்தை பற்றிய வழக்கத்திற்கு மாறாக வெளிப்படையான மற்றும் விமர்சன நோக்கில் உள்ளது. இந்த தொகுதி அக்பர் இறக்கும் வரை மறைத்து வைக்கப்பட்டு பின்னர் ஜஹாங்கிரின் ஆட்சியில் வெளியிடப்பட்டது. மதம் குறித்த அக்பரின் கருத்துக்களின் வளர்ச்சி மற்றும் அவரது மதக் கொள்கை குறித்த சமகால முன்னோக்கை இந்த புத்தகம் தருகிறது. மூன்றாவது தொகுதி முஸ்லீம் மத பிரமுகர்கள், அறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் கவிஞர்களின் வாழ்க்கை மற்றும் படைப்புகளை விவரிக்கிறது. இந்த படைப்பின் உரையின் முதல் அச்சிடப்பட்ட பதிப்பு 1865 இல் கொல்கத்தா கல்லூரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பின்னர் இந்த படைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பதாயுனியின் பிற படைப்புகளில் பஹ்ர்-உல்-அசுமர், கிதாப் அல்-அதீசு "[முஹம்மதுவின் சொற்கள் அடங்கிய ஒரு புத்தகம்", (தற்போது கிடைக்க வில்லை), தாரிக்-இ-ஆல்பி (நூற்றாண்டின் வரலாறு) என்ற நூலில் ஒரு அத்தியாயம், ஹிஜ்ராவின் நூற்றாண்டைக் கொண்டாட அக்பரால் நியமிக்கப்பட்ட ரஷித் அல்-தின் ஹமாதனியின் மற்றும் நஜாத்-உர்-ரசீத் மற்றும்[3] ஜமி அல்-தவரிக்கின் சுருக்கமான வரலாறாகும்.  

ஹிஜ்ரா

தொகு

ஹிஜ்ரா என்பது அதாவது "புறப்படுதல்" என்பது இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மது மற்றும் அவரது ஆதரவாளர்கள் மக்காவிலிருந்து யாத்ரிபிக்கு இடம்பெயர்ந்தது அல்லது பயணம் செய்ததை குறிக்கிறது. அவர் பயணம் செய்த இடம் பின்னர் 622 ஆம் ஆண்டில் மதீனா என மறுபெயரிடப்பட்டது. இஸ்லாமிய நாட்காட்டியின் தொடக்கத்தோடு ஹிஜ்ராவும் பெரும்பாலும் அடையாளம் காணப்படுகிறது. இது ஜூலியன் நாட்காட்டியில் 622 ஏப்ரல் 19ஆக அமைக்கப்பட்டது. முதல் ஹிஜ்ரா 615 அல்லது ரஜாப் (செப்டம்பர்-அக்டோபர்) 613 என்று தேதியிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "Abd al-Qadir Bada'uni". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 6 July 2016.
  2. ʽAbd al-Qadir Badayuni (1899). "II. An account of the learned men, most of whom the author has met, or from those whom he has received instruction.". In Haig, Wolseley (ed.). Muntakhab-ut-Tawārīkh. Vol. 3. p. 188.
  3. Abu'l Fazl Allami (1927, reprint 1993) (tr. into English by Heinrich Blochmann).The Ain-I Akbari, Vol. I, Calcutta: The Asiatic Society, pp.110-11n

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_காதிர்_பதாயுனி&oldid=4131270" இலிருந்து மீள்விக்கப்பட்டது