அப்பல்லோ சிறுகோள்கள்

அப்பல்லோ சிறுகோள்கள் (Apollo asteroids) என்பது புவியருகு விண்பொருட்களின் கூட்டம் ஆகும். கார்ல் வில்லெம் ரெய்ன்முத் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கூட்டத்தின் முதலாவது சிறுகோள் 1862 அப்பல்லோ என்ற பெயரைக் கொண்டு இக்கூட்டத்திற்கு அப்பல்லோ சிறுகோள்கள் எனப் பெயரிடப்பட்டது. இவை புவிக்குக் குறுக்கே செல்லும் விண்பொருட்கள் ஆகும். இவற்றின் சுற்றுவட்ட அரைப்பேரச்சு புவியினதை விட அதிகமாகும். (> 1 AU) ஆனால் இவற்றின் ஞாயிற்றண்மைத்தூரங்கள் புவியின் ஞாயிற்றுச்சேய்மைத் தூரத்தை விடக் குறைவாகும். (q < 1.017 AU).[1] இக்கூட்டத்தின் சில பொருட்கள் புவிக்கு மிக அண்மையாகவும் வரக்கூடியமையினால், இவை பூமிக்கு ஆபத்தானவை ஆகும். 2013 பெப்ரவரி 15 இல் உருசியாவின் செல்யாபின்ஸ்க் நகரில் அப்பல்லோ வகை விண்கல் வீழ்ந்து வெடித்ததில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.[2][3]

அப்பல்லோ சிறுகோள் கூட்டம் (பச்சையில் காட்டப்பட்டுள்ளது). சூரியன் நடுவில், புதன் (கருப்பு), வெள்ளி (மஞ்சள்), புவி (நீலம்), செவ்வாய் (சிவப்பு).

அப்பல்லோ கூட்டத்தின் மிகப்பெரிய சிறுகோள் 1866 சிசிபஸ் ஆகும். இதன் விட்டம் 8.5 கிமீ. As of பெப்ரவரி 2014 வரை 5766 அப்பல்லோ-வகை சிறுகோள்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றில் 832 சிறுகோள்கள் எண்களால் பெயரிடப்பட்டுள்ளன.

அறியப்பட்ட அப்பல்லோ சிறுகோள்கள் சில:

பெயர் ஆண்டு கண்டுபிடித்தவர்
2013 எஃப்டபிள்யூ13 2013 கேட்டலினா வானாய்வு
2013 ஆர்எச்74 2013 கேட்டலினா வானாய்வு
2011 எம்டி 2011 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
2011 ஈஓ40 2011 மவுன்ட் லெம்மன் ஆய்வு
2010 ஏஎல்30 2010 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
2009 டபிள்யூஎம்1 2009 கேட்டலினா வானாய்வு
2009 டிடி45 2009 சிடிங் ஸ்ப்ரிங் வானாய்வு நிலையம், ஆத்திரேலியா
(386454) 2008 எக்சுஎம் 2008 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
2008 டிசி3 2008 கேட்டலினா வானாய்வு
2008 எஃப்எஃப்5 2008 மவுன்ட் லெம்மன் ஆய்வு
2007 விகே184 2007 கேட்டலினா வானாய்வு
2007 டியூ24 2007 கேட்டலினா வானாய்வு
2007 டபிள்யூடி5 2007 கேட்டலினா வானாய்வு
2007 ஓஎக்சு 2007 மவுன்ட் லெம்மன் ஆய்வு
(277810) 2006 எஃப்வி35 2006 ஸ்பேஸ்வாட்ச்
(394130) 2006 எச்வை51 2006 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
(292220) 2006 எஸ்யூ49 2006 ஸ்பேஸ்வாட்ச்
(308635) 2005 வையூ55 2005 ஆர். எஸ். மாக்மிலன், அமெரிக்கா
2005 எச்சி4 2005 LONEOS
2005 டபிள்யூவை55 2005
(374158) 2004 யூஎல் 2004 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
2004 எக்சுபி14 2004 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
2004 ஏஎஸ்1 2004 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
(89958) 2002 எல்வை45 2002 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
(179806) 2002 ரிடி66 2002 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
54509 யோர்ப் 2000 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
(137108) 1999 ஏஎன்10 1999 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
101955 பென்னு 1999 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
1998 கேவை26 1998 ஸ்பேஸ்வாட்ச்
1997 எக்சுஆர்2 1997 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
65803 டிடிமொசு 1996 ஸ்பேஸ்வாட்ச்
69230 எர்ம்சு 1937 கார்ல் வில்லெம் ரெய்ன்முத்
(53319) 1999 ஜேஎம்8 1999 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
(52760) 1998 எம்எல்14 1998 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
(35396) 1997 எக்சுஎஃப்11 1997 ஸ்பேஸ்வாட்ச்
25143 இட்டோகாவா 1998 லிங்கன் புவியருகு சிறுகோள் ஆய்வு
(136617) 1994 சிசி 1994 ஸ்பேஸ்வாட்ச்
(175706) 1996 எஃப்ஜி3 1996 சிடிங் ஸ்ப்ரிங் வானாய்வு நிலையம், ஆத்திரேலியா
6489 கோலெவ்கா 1991 எலனோர் எஃப் எலின்
4769 கஸ்டாலியா 1989 எலனோர் எஃப் எலின்
4660 நெரூசு 1982 எலனோர் எஃப் எலின்
4581 ஆஸ்கிளெபயசு 1989 என்றி ஈ. ஹோல்ட், நோர்மன் ஜி. தாமசு
4486 மித்ரா 1987 எரிக் எல்ஸ்ட், விளாதிமிர் ஸ்கோதுரொவ்
14827 இப்னோசு 1986 கரொலைன் சூமேக்கர், யூஜின் சூமேக்கர்
(4197) 1982 டிஏ 1982 எலனோர் எஃப் எலின், யூஜின் சூமேக்கர்
4183 கூனோ 1959 கூனோ ஒஃப்மெயிஸ்டர்
4179 டூட்டாடிசு 1989 கிறித்தியான் பொலாசு
4015 வில்சன்-ஹரிங்டன் 1979 எலனோர் எஃப் எலின்
3200 பீத்தோன் 1983 சைமன் கிரீன், ஜோன் டேவிசு / IRAS
2063 பக்கூசு 1977 சார்ல்சு கோவல்
1866 சிசிபசு 1972 பவுல் வைல்டு
1620 ஜியோகிராபொசு 1951 ஆல்பர்ட் வில்சன், ருடோல்ஃப் மின்கோவ்ஸ்கி
(29075) 1950 டிஏ 1950 கார்ல் நிர்டானென்
1566 இகாரசு 1949 வால்டர் பாடி
1685 டோரோ 1948 கார்ல் விர்ட்டானென்
2101 அடோனிசு 1936 யூகின் டெல்போர்ட்டே
1862 அப்பல்லோ 1932 கார்ல் வில்லெம் ரெய்ன்முத்

மேற்கோள்கள்

தொகு
  1. Weisstein, Eric. "Apollo Asteroid". Wolfram Research. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Cantor, Matt (26 பெப்ரவரி 2013). "Scientists figure out Russia meteor's origin Ron Jeffery". USA Today. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. http://www.newscientist.com/article/dn23213-russian-meteor-traced-to-apollo-asteroid-family.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_சிறுகோள்கள்&oldid=3484719" இலிருந்து மீள்விக்கப்பட்டது