101955 பென்னு
101955 பென்னு (101955 Bennu)[10] என்பது அப்பல்லோ கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரிம-வகை சிறுகோள் (asteroid) ஆகும். இது 1999 செப்டெம்பர் 11 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது புவியைத் தாக்கவல்ல இரண்டாவது பெரிய விண்பொருளாக பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் மூலம் இனங்காணப்பட்டுள்ளது.[11] 22-ம் நூற்றாண்டில் இச்சிறுகோள் புவியைத் தாக்குவதற்கு 2700-இல்-1 வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.[12] அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் ஒசைரிசு-ரெக்சு விண்கலம் இச்சிறுகோளை இலக்கு வைத்தே அனுப்பப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இவ்விண்கலம் சிறுகோளின் மாதிரிகளை மேலதிக ஆய்விற்காக பூமிக்கு எடுத்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.[13][14][15][16]
கண்டுபிடிப்பு and designation
| ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
கண்டுபிடித்தவர்(கள்) | லிங்கன் புவிக்குக் கிட்டவான சிறுகோள் ஆய்வு | |||||||||
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | லிங்கன் ஆய்வுகூடம் ETS | |||||||||
கண்டுபிடிப்பு நாள் | 11 செப்ப்டம்பர் 1999 | |||||||||
பெயர்க்குறிப்பினை
| ||||||||||
பெயரிடக் காரணம் | பென்னு | |||||||||
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 101955 பென்னு | |||||||||
வேறு பெயர்கள்[3] | 1999 RQ36 | |||||||||
சிறு கோள் பகுப்பு |
அப்பல்லோ · புவியருகு · PHA | |||||||||
காலகட்டம்31 July 2016 (JD 2457600.5) | ||||||||||
சூரிய சேய்மை நிலை | 1.3559 AU (202.84 Gm) | |||||||||
சூரிய அண்மை நிலை | 0.89689 AU (134.173 Gm) | |||||||||
அரைப்பேரச்சு | 1.1264 AU (168.51 Gm) | |||||||||
மையத்தொலைத்தகவு | 0.20375 | |||||||||
சுற்றுப்பாதை வேகம் | 1.20 yr (436.65 d) | |||||||||
சராசரி சுற்றுப்பாதை வேகம் | 28,000 metres per second (63,000 mph) | |||||||||
சராசரி பிறழ்வு | 101.7039° | |||||||||
சாய்வு | 6.0349° | |||||||||
Longitude of ascending node | 2.0609° | |||||||||
Argument of perihelion | 66.2231° | |||||||||
சராசரி ஆரம் | 246±10 m[1] | |||||||||
நிலநடுக்கோட்டு ஆரம் | 275±10 m[1] | |||||||||
நிறை | 6.0×1010 kg[5] to 7.76×1010 kg | |||||||||
அடர்த்தி | 1.26 ± 0.070 g/cm3 | |||||||||
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் | 10 micro-g[6] | |||||||||
சுழற்சிக் காலம் | 4.288 h (0.1787 d) | |||||||||
அச்சுவழிச் சாய்வு | 176 ± 2°[7] | |||||||||
வடிவியல் ஒளி திருப்புத்திறன் | 0.046[8] | |||||||||
மேற்பரப்பு வெப்பநிலை Kelvin[9] Fahrenheit |
| |||||||||
Spectral type | B[8] | |||||||||
விண்மீன் ஒளிர்மை | 20.9 |
101955 பென்னுவின் சராசரி விட்டம் அண்ணளவாக 492 மீட்டர்கள் ஆகும். அரிசிபோ வானிலை ஆய்வுகூடத்தின் வான்கோள் ரேடார், கிளாட்ஸ்டன் தொலை தூர விண்வெளி வலைப் பின்னல் ஆகியவை இச்சிறுகோளை மிகத்துல்லியமாக ஆராய்ந்து வருகிறது.[1][2][17] பென்னு சிறுகோள் பம்பரத்தை ஒத்த கிட்டத்தட்ட நெட்டுருளை வடிவத்தை ஒத்தது.[12]
2018 திசம்பர் 3 இல், ஒசைரிசு-ரெக்சு விண்கலம் இரண்டு ஆண்டுகள் பறப்பின் பின்னர் பென்னுவை அடைந்தது.[18] இது சிறுகோளைச் சுற்றிவந்து, அதன் மாதிரிகளை சேகரிக்கத் தகுந்த இடங்களைத் தேர்ந்தெடுக்க பென்னுவின் மேற்பரப்பை விரிவாக ஆராய்ந்து. இதன் ஆய்வுகள் பென்னுவின் திணிவு, மற்றும் அதன் பரம்பலைக் கணிக்க ஆய்வாளர்களுக்கு உதவின.[19]
2019 சூன் 18 இல், ஒசைரிசு-ரெக்சு விண்கலம் மென்னுவின் மேற்பரப்பில் இருந்து 600 மீட்டர் தூரத்தை அணுகியதாக நாசா அறிவித்தது.[20]
2020 அக்டோபர் 20 இல், இவ்விண்கலம் தனது நீட்டிக்கக்கூடிய கைகளைக் கொண்டு பென்னுவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி மாதிரிகளைச் சேகரித்தது.[21]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Nolan, M. C.; Magri, C.; Howell, E. S.; Benner, L. A. M.; Giorgini, J. D.; Hergenrother, C. W.; Hudson, R. S.; Lauretta, D. S. et al. (2013). "Shape model and surface properties of the OSIRIS-REx target Asteroid (101955) Bennu from radar and lightcurve observations". Icarus 226 (1): 629–640. doi:10.1016/j.icarus.2013.05.028. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 2013Icar..226..629N.
- ↑ 2.0 2.1 "Goldstone Delay-Doppler Images of 1999 RQ36". Asteroid Radar Research. Jet Propulsion Laboratory. Archived from the original on 2016-11-18. பார்க்கப்பட்ட நாள் 2016-09-13.
- ↑ [1]
- ↑ "JPL Small-Body Database Browser: 101955 Bennu (1999 RQ36)" (2013-01-20 last obs.). Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 20 August 2016.
- ↑ "101955 1999 RQ36: Earth Impact Risk Summary". NASA. Jet Propulsion Laboratory. August 5, 2010. Archived from the original on 9 பெப்பிரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 24 November 2013.
- ↑ "One of NASA's cleanest spacecraft ever is ready to fly". Spaceflight Now. Spaceflight Now Inc. பார்க்கப்பட்ட நாள் 23 August 2016.
- ↑ Hergenrother, CW; Barucci, MA; Barnouin, O (16 Sep 2014). The Design Reference Asteroid for the OSIRIS-REx Mission Target (101955) Bennu. http://arxiv.org/abs/1409.4704. பார்த்த நாள்: 20 August 2016.
- ↑ 8.0 8.1 "(101955) Bennu". NEODyS. University of Pisa. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.
- ↑ "Planetary Habitability Calculators". Planetary Habitability Laboratory. University of Puerto Rico at Arecibo. Archived from the original on 24 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 6 December 2015.
- ↑ Murphy, Diane (1 May 2013). "Nine-Year-Old Names Asteroid Target of NASA Mission in Competition Run By The Planetary Society". The Planetary Society. http://www.planetary.org/press-room/releases/2013/nine-year-old-names-asteroid.html. பார்த்த நாள்: 20 August 2016.
- ↑ "Sentry Risk Table". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 2016-09-11. பார்க்கப்பட்ட நாள் 2014-03-26. பரணிடப்பட்டது 2013-11-25 at the வந்தவழி இயந்திரம்
- ↑ 12.0 12.1 Lauretta, D. S.; Bartels, A. E. et al. (April 2015). "The OSIRIS-REx target asteroid (101955) Bennu: Constraints on its physical, geological, and dynamical nature from astronomical observations". Meteoritics & Planetary Science 50 (4): 834–849. doi:10.1111/maps.12353.
- ↑ Corum, Jonathan (8 September 2016). "NASA Launches the Osiris-Rex Spacecraft to Asteroid Bennu". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/interactive/2016/09/08/science/space/nasa-osiris-rex-launch.html. பார்த்த நாள்: 9 செப்டெம்பர் 2016.
- ↑ Chang, Kenneth (8 செப்டெம்பர் 2016). "The Osiris-Rex Spacecraft Begins Chasing an Asteroid". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/2016/09/09/science/nasa-launches-osiris-rex-spacecraft-to-retrieve-asteroid-pieces.html. பார்த்த நாள்: 9 செப்டெம்பர் 2016.
- ↑ Brown, Dwayne; Neal-Jones, Nancy (31 March 2015). "RELEASE 15-056 – NASA's OSIRIS-REx Mission Passes Critical Milestone". நாசா. பார்க்கப்பட்ட நாள் 4 April 2015.
- ↑ "NASA to Launch New Science Mission to Asteroid in 2016". NASA. 25 May 2011. பார்க்கப்பட்ட நாள் 21 May 2013.
- ↑ Hudson, R. S.; Ostro, S. J.; Benner, L. A. M.. "Recent Delay-Doppler Radar Asteroid Modeling Results: 1999 RQ36 and Craters on Toutatis". Bulletin of the American Astronomical Society (American Astronomical Society) 32: 1001. Bibcode: 2000DPS....32.0710H.
- ↑ Chang, Kenneth (December 3, 2018). "NASA's Osiris-Rex Arrives at Asteroid Bennu After a Two-Year Journey — The spacecraft now begins a close study of the primitive space rock, seeking clues to the early solar system.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/12/03/science/osiris-rex-bennu-asteroid-arrival.html.
- ↑ Plait, Phil (2018-12-04). "Welcome to Bennu!". SYFY WIRE (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-05.
- ↑ "NASA captures closest-ever photo of massive asteroid Bennu flying near Earth". Sky News. 18 June 2019. https://news.sky.com/story/nasa-captures-closest-ever-photo-of-massive-asteroid-bennu-flying-near-earth-11744332.
- ↑ Chang, Kenneth (20 October 2020). "Seeking Solar System’s Secrets, NASA’s OSIRIS-REX Mission Touches Bennu Asteroid - The spacecraft attempted to suck up rocks and dirt from the asteroid, which could aid humanity’s ability to divert one that might slam into Earth.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2020/10/20/science/osiris-rex-mission.html. பார்த்த நாள்: 21 October 2020.
வெளி இணைப்புகள்
தொகு- Earth Impact Risk Summary: 101955 1999 RQ36 பரணிடப்பட்டது 2009-02-09 at the வந்தவழி இயந்திரம் (Years: 2169–2199) – JPL near-Earth object website
- Orbit parameters – NASA website
- Temperature History and Dynamical Evolution of (101955) 1999 RQ 36: A Potential Target for Sample Return from a Primitive Asteroid (2011 ApJ 728 L42)
- Physical Properties of OSIRIS-REx Target Asteroid (101955) 1999 RQ36 derived from Herschel, ESO-VISIR and Spitzer observations (arXiv:1210.5370 : 19 Oct 2012)
- The Design Reference Asteroid for the OSIRIS-REx Mission Target (101955) Bennu (arXiv:1409.4704 : 16 Sep 2014)