ஒசைரிசு-ரெக்சு

ஒசைரிசு-ரெக்சு (OSIRIS-REx, ஆங்கிலத்தில் "தோற்றம், நிறமாலை விளக்கம், வளங்களை அடையாளமிடல், பாதுகாப்பு, பாறைப்படிவு ஆய்வுப்பணி" என்பவற்றின் சுருக்கம்) என்பது தற்போது நாசா நடத்தும் சிறுகோள்களை ஆய்வு செய்யவும் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவரவுமான செயற்திட்டமாகும்.[11] இத்திட்டத்தின் விண்கலம் 2016 செப்டம்பர் 8-இல் ஏவப்பட்டது, இது 101955 பென்னு என்ற சிறுகோளை ஆய்வுசெய்து 2023இல் பூமிக்கு இதன் மாதிரியை மேலதிக ஆய்வுக்காக கொண்டுவரவுள்ளது. பூமிக்கு கொண்டுவரப்பட்ட மாதிரியிலிருந்து சூரிய குடும்பத்தின் தோற்றம், வளர்ச்சி, கோள்களின் உருவாக்கத்தின் ஆரம்ப கட்டங்கள், மற்றும் பூமியில் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணமான கரிம சேர்மங்களின் மூலம் பற்றி விஞ்ஞானிகள் மேலும் அறியலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டம் வெற்றியளித்தால் இது பூமிக்கு மாதிரிகளை கொண்டுவந்த முதலாவது அமெரிக்க விண்திட்டமாக அமையும்.

ஒசைரிசு-ரெக்சு
OSIRIS-REx
OSIRIS-REx spacecraft model.png
ஓவியரின் கைவண்ணத்தில் "ஒசைரிசு-ரெக்சு" விண்கலம்
திட்ட வகைசிறுகோளில் இருந்து மாதிரிகளைக் கொண்டு வருவது[1][2]
இயக்குபவர்நாசா
காஸ்பார் குறியீடு2016-055A
சாட்காட் இல.41757
இணையதளம்AsteroidMission.org
திட்டக் காலம்சிறுகோளில் 7 ஆண்டுகள்
505 நாட்கள்
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புலாக்கீது மார்ட்டின்
ஏவல் திணிவு1,529 கிகி[3]
உலர் நிறை880 கிகி
பரிமாணங்கள்2.44 × 2.44 × 3.15 மீ[4]
திறன்1,2226 முதல் 3,000 W
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்8 செப்டம்பர் 2016 23:05 ஒசநே[5]
ஏவுகலன்அட்லஸ் 5 411, ஏவி-067[6]
ஏவலிடம்கேப் கனவேரல் SLC-41
ஒப்பந்தக்காரர்யுனைட்டட் லோன்ச் அலையன்சு
திட்ட முடிவு
தரையிறங்கிய நாள்திட்டம்: 24 செப்டம்பர் 2023, 15:00 ஒசநே)[7]
தரையிறங்கும் இடம்யூட்டா சோதனைக்களம்
புவி-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்22 செப்டம்பர் 2017[8]
101955 பென்னு சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்31 திசம்பர் 2018 [9]
Departed orbit3 மார்ச் 2021 (திட்டம்)[8]
Sample mass0.1–2.0 கிகி[10]
OSIRIS-REx mission logo (circa 2015).png
New Frontiers program
← யூனோ

இத்திட்டத்தின் செலவு கிட்டத்தட்ட 800 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும், அத்துடன் அட்லஸ்-V ஏவூர்திக்கு 183.5 மில்லியன் டாலர்கள் செலவு.இது "புதிய எல்லைகள்" திட்டதின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது கோள் அறிவியல் பணியாகும். இதற்குமுன் "ஜூனோ" மற்றும் "நியூ ஹரைசன்ஸ" விண்கலங்கள் "புதிய எல்லைகள்" திட்டதில் ஏவப்பட்டன. இத்திட்டத்தின் முதன்மை விசாரணையாளர் அரிசோனா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டான்டி லோரெட்டா (Dante Lauretta) ஆவர்.

2018 டிசம்பர் 3 -இல், ஒசைரிசு-ரெக்சு விண்கலம் பென்னு என்ற சிறுகோளை இருந்து 19 கிமீ தூரத்தில் அணுகியது. 2018 டிசம்பர் 31 இல் சிறுகோளின் சுற்றுவட்டத்தினுள்[9] 1.4 கிமீ உயரத்தில் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[12]

செயற்திட்டம்தொகு

இத்திட்டம் அரிசோனா பல்கலைக்கழகதின் "சந்திரன் மற்றும் கிரக ஆய்வகம்", நாசாவின் "கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் மையம்" மற்றும் "லாக்ஹீட் மார்டின் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ்" என்பவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டது, செப்டம்பர் 8 2016 அன்று ஏவப்பட்டது. இப்பணியின் விஞ்ஞானிகள் அணி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய ராஜ்யம், மற்றும் இத்தாலி நாட்டினர்களை உறுப்பினர்களாகக்கொண்டுள்ளது.

சுமார் இரண்டு ஆண்டுகள் பயணத்திற்குப் பின் ஓசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் 2018இல் உடுக்கோள் 101955 பின்னுஐ சந்தித்து சுமார் 5 கி.மீ. (3.1 மைல்) தொலைவிலிருந்து அதன் மேற்பரப்பை 505 நாட்களில் வரைபடமாக்கும் பணியை தொடங்கஉள்ளது. அவ்வரைபடத்தை பயன்படுத்தி உடுக்கோளின் எப்பகுதியிலிருந்து மாதிரியை எடுப்பதென அணி முடிவுசெய்யும். பின்னர் விண்கலம் உடுக்கோளை நெருங்கி அணுகி (உடுக்கோள் மீது தரையிறங்காமல்) ஒரு இயந்திர கையை நீட்டி மாதிரியை சேகரிக்கும்.

ஓர் சிறுகோள் தெரிவு செய்யப்பட்டதற்கு காரணம் சிறுகோள்கள் சூரிய குடும்பம் பிறந்த காலத்திலிருந்து வந்த 'காலப் பேழை' ஆகும். குறிப்பாக பின்னு தெரிவுசெய்யப்பட்டதட்கு காரணம் இது கொண்டுள்ள ஆதியான கரிம பொருள்களும், பூமியின் தோற்றத்திற்கு முந்திய பொருள்களை கொண்டுள்ளதுமாகும். கரிம பொருள்கள் உயிரினங்களின் தோற்றத்திட்டக்கு முக்கிய காரணியாகும். அமினோ அமிலங்கள் போன்ற சில கரிமவேதியல் சேர்மங்கள் விண்கல் மற்றும் வால்மீன் மாதிரிகளில் முன்பு அவதானிக்கப்பட்டுள்ளன. அதனால் உயிரினக்களின் தோற்றத்திற்காண சில காரணிகள் விண்வெளியில் உருவாகியிருக்கலாம் கருதப்படுகிறது.

அறிவியல் நோக்கங்கள்தொகு

இப்பணியின் அறிவியல் நோக்கங்கள்

 1. பீன்னுவின் மேற்பரப்பு மாதிரியை பூமிக்கு ஆய்வுக்காக கொண்டுவருவது.
 2. சிறுகோள் பின்னுவை வரைபடமாக்குவது.
 3. மாதிரி எடுக்கப்பட்ட இடத்தை ஆவணப்படுத்துவது.
 4. ஈர்ப்பு தவிர்ந்த வேறு விசைகளால் (யார்க்கோவ்ஸ்க்கி விளைவு) சிறுகோளின் சுற்றுப்பாதையின் ஏற்படும் விலகலை அளவிடுவது.
 5. சிறுகோளின் பூமியிலிருந்தான அவதானிப்புடன் ஒப்பிடுவது.

விவரக்குறிப்புதொகு

நீளம்: 6.2m (குரிய காலங்கள் வரிசைப்படுத்தியபடி)

அகலம்: 2.4m

உயரம்: 3.2m

நிறை: 880 kg (எரிபொருளற்று), 2110 kg (எரிபொருளுடன்)

சக்தி: இரண்டு குரிய கலங்கள், 8.5 m2 பரப்பு, 1226 W தொடக்கம் 3000 W வரை சக்தியை பிறப்பிக்கவல்லன.

மேற்கோள்கள்தொகு

 1. "NASA To Launch New Science Mission To Asteroid In 2016". NASA.
 2. "OSIRIS-REx Factsheet". University of Arizona.
 3. "NASA Plans Asteroid Sample Return". Aviation Week. http://www.aviationweek.com/aw/generic/story.jsp?id=news/awst/2011/05/30/AW_05_30_2011_p32-327979.xml&headline=NASA%20Plans%20Asteroid%20Sample%20Return&channel=awst. 
 4. OSIRIS-REx brochure.
 5. "NASA Selects Launch Services Contract for OSIRIS-REx Mission". நாசா (5-08-2013). பார்த்த நாள் 8-09-2013.
 6. "NASA Selects United Launch Alliance Atlas V for Critical OSIRIS REx Asteroid Sample Return Mission". PRNewswire (5-08-2013).
 7. NASA to Launch New Science Mission to Asteroid in 2016 (05.25.2011)| NASA
 8. 8.0 8.1 "OSIRIS-REx: Asteroid Sample Return Mission". NASA (August 2016). பார்த்த நாள் 18-09-2016.
 9. 9.0 9.1 "NASA'S OSIRIS-REx Spacecraft Arrives at Asteroid Bennu". NASA (3-12-2018). பார்த்த நாள் 6-12-2018.
 10. Ray, Justin (9-09-2016). "OSIRIS-REx probe launched to asteroid in compelling search for the origins of life". Astronomy Now. https://astronomynow.com/2016/09/09/osiris-rex-probe-launched-to-asteroid-in-compelling-search-for-the-origins-of-life/. பார்த்த நாள்: 18-09-2016. 
 11. https://www.nasa.gov/osiris-rex
 12. Chang, Kenneth (December 3, 2018). "NASA's Osiris-Rex Arrives at Asteroid Bennu After a Two-Year Journey". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2018/12/03/science/osiris-rex-bennu-asteroid-arrival.html. பார்த்த நாள்: December 3, 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒசைரிசு-ரெக்சு&oldid=2919190" இருந்து மீள்விக்கப்பட்டது