அமரான்தசு ரெட்ரோபிளக்சசு
அமரான்தசு ரெட்ரோபிளக்சசு (தாவரவியல் பெயர்: Amaranthus retroflexus, ஆங்கிலம்: red-root amaranth, redroot pigweed, red-rooted pigweed, common amaranth, pigweed amaranth, common tumbleweed.[4]) என்ற தாவரம் உண்மையான களை வகையாகும்.[4] இதன் தாயகம் வெப்பவலயத்திற்கு முன்னான (Neotropics) நிலப்பகுதிகள் ஆகும்.[5] அல்லது வட அமெரிக்காவின் நடுப்பகுதிகள், கிழக்குப் பகுதிகளாக இருக்கலாம்.[6] இது அறிமுகப்படுத்தப்பட்ட இனங்களாக அனைத்துக் கண்டங்களிலும் உள்ளது.
அமரான்தசு ரெட்ரோபிளக்சசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | A. retroflexus
|
இருசொற் பெயரீடு | |
Amaranthus retroflexus L. | |
வேறு பெயர்கள் [2][3] | |
|
வளரியல்புகள்
தொகுஇது நிமிர்ந்து வளரும் இயல்புடையது. வருடம் முழுவதும் வளரும் தன்மையைப் பெற்றிருக்கிறது. இதன் உயரம் 3 m (9.8 அடி) வரை வளரும் திறனுடையது. இதன் இலைகள் ஏறத்தாழ 15 cm (5.9 அங்) நீளமுடையது. இலைகள் பெரிதாக தனித்தனியாக இருக்கிறது. தண்டினை விட உயரமாக இருப்பது வேல் போன்ற வடிவிலும், குட்டையாக இருப்பது முட்டை வடிவத்திலும் இலைகள் உள்ளன. ஆண், பெண் என இரு வகைப்பட்ட (Monoecy|monoecious) இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே செடியில் உள்ளன. இதன் பூந்துணர் பெரிதாகவும், அடர்ந்த பூக்களைக் கொண்டதாகவும் உள்ளன. பழக்கூடுகள் 2 mm (0.079 அங்) நீளமுடையதாகவே உள்ளன.[7]
பயன்கள்
தொகு- இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான கேரளத்தில் தோரன் என்ற புகழ் பெற்ற உணவு இதன் இலைகள், தேங்காயப்பூ, வெள்ளைப்பூண்டு, மஞ்சள் (மூலிகை), மிளகு இன்னும் பிற பொருட்கள் கலந்து செய்யப்படுகிறது.
- இத்தாவரம் நஞ்சுள்ள தாவரமாக இருந்தாலும், இதன் இலைகளில் ஆக்சாலிக் அமிலம் உள்ளன. குறைந்த அளவு நைத்திரேட்டு உள்ளது. எனவே, இளம் இலைகளைக் கொதிக்க வைக்கும் போது, நீரில் இவை கரையும்.
- அமெரிக்க பழங்குடியினர் இதனை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ NatureServe (5 May 2023). "Amaranthus retroflexus". NatureServe Network Biodiversity Location Data accessed through NatureServe Explorer. Arlington, Virginia: NatureServe. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.
- ↑ "Amaranthus retroflexus". Tropicos. Missouri Botanical Garden.
- ↑ The Plant List
- ↑ 4.0 4.1 Louis Hermann Pammel (1903). Some Weeds of Iowa. Experiment Station, Iowa State College of Agriculture and the Mechanic Arts. page 470
- ↑ "Amaranthus retroflexus". Fire Effects Information System (FEIS).
- ↑ "Amaranthus retroflexus (red-rooted amaranth)". Go Botany.
- ↑ Elias, Thomas S.; Dykeman, Peter A. (2009) [1982]. Edible Wild Plants: A North American Field Guide to Over 200 Natural Foods. New York: Sterling. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4027-6715-9. இணையக் கணினி நூலக மைய எண் 244766414.
- ↑ "Native American Ethnobotany Data Base, search of Amaranthus retroflexus". பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.
வெளியிணைப்புகள்
தொகு- Jepson Manual Treatment
- Amaranthus retroflexus L. Medicinal Plant Images Database (School of Chinese Medicine, Hong Kong Baptist University) (in சீன மொழி) (in ஆங்கில மொழி)