அமர்னா அரச கல்லறைகள் திட்டம்

தொல்லியல் திட்டம்

அமர்னா அரச கல்லறைகள் திட்டம் (Amarna Royal Tombs Project) என்பது பதினெட்டாம் வம்சத்தின் பிற்பகுதியில் எகிப்திலிருந்த அமர்னா காலத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொல்லியல் ஆய்வு ஆகும். இது 1998 ஆம் ஆண்டில் நிலத்திலும், பண்டைய பதிவுகளிலும் காணாமற்போன அமர்னா அரச மரபினரை கண்டறிய நிறுவப்பட்டது. அவை பார்வோன் துட்டன்காமனின் 18 வது வம்ச ஆட்சியின் போது அமர்னா கைவிடப்பட்ட பின்னர் மன்னர்களின் பள்ளத்தாக்குக்கு மாற்றப்பட்டன. நிக்கோலஸ் ரீவ்ஸ் இத்திட்டத்தின் திட்ட இயக்குநராக பணியாற்றினார்.

உரோமைப் பேரரசு மற்றும் உரோமை கோப்திக் அர்தடாக்ஸ் திருச்சபை ஆட்சியின் கீழ் சில காலம் அமர்னா நகரம் இருந்தது. பண்டைய அமர்னா நகரத்தின் தெற்கில் உள்ள தொல்லியல் மேடுகளை அகழ்வாய்வு செய்ததில் பல கட்டிட அமைப்புகள், நினைவுச் சின்னங்கள் போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

அமர்னா நகரத்தின் மீள் கண்டுபிடிப்பு மற்றும் அகழாய்வுகள்

தொகு
 
பார்வோன் அக்கெனதென், பட்டத்து இராணி நெஃபர்டீட்டீ மற்றும் இளவரசி மெரிததேன் சிற்பம், இலண்டன் அருங்காட்சியகம்
 
அமர்னா நிருபங்களில் ஒன்று

1714-இல் பிரான்சு நாட்டின் இயேசு சபை பாதிரியாரான கிளவுட் சிகார்டு, அமர்னா பகுதியின் நைல் ஆற்றின் கரை வழியாக பயணிக்கும் போது முதன் முதலில் சில சிற்பத்தூண்]]களை கண்டுபிடித்தார். 1798-99-களில் நெப்போலியனின் படைவீரர்கள் அமர்னா நகரத்தின் வரைபடத்தை வரைந்து, 1820 -1830-களுக்கிடையே வெளியிட்டனர்.[2]

1824-இல் சர் ஜான் கார்டினர் வில்கின்சன் எனும் ஐரோப்பிய அமர்னா நகரத்தின் சிதிலங்களை கண்டுபிடித்து, வரைபடம் தயாரித்தார். பின்னர் பிரித்தானியர்கள் 1883-இல் அமர்னா நகரத்தின் தெற்கில் உள்ள பல கல்லறைக் கோயில்களின் நினைவுச் சின்னங்களை படியெடுத்தனர். [3]

1887-இல் எகிப்தின் உள்ளூர் பெண்மணி அமர்னா நகரத்தில் ஒரிடத்தைத் தோண்டும் போது அக்காடிய மொழியின் ஆப்பெழுத்தில் எழுதப்பட்ட முப்பது அமர்னா நிருபங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.[4]

1891 - 1892 ஆண்டுகளின் அகழாய்வில் எகிப்திய சூரியக் கடவுளான அதேனின் பெருங்கோயில் மற்றும் மன்னர்களின் கல்லறைக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அமர்னா நகரத்த்தின் எல்லையைக் குறிக்கும் 14 சிற்பத்தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டது. புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட பதினெட்டாம் வம்ச பார்வோன் அக்கேடாதேன், இராணி நெபெர்திதி மற்றும் இளவரசி மெரிததேன் சிற்பம் மற்றும் துட்டன்காமன் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. "Middle Egypt Survey Project 2006". Amarna Project. 2006. Archived from the original on 22 June 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-06-06.
  2. "Mapping Amarna". Archived from the original on 8 October 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-10-01.
  3. "The Robert Hay Drawings in the British Library". Archived from the original on 2006-06-27. பார்க்கப்பட்ட நாள் 2008-10-01.
  4. "Wallis Budge describes the discovery of the Amarna tablets". பார்க்கப்பட்ட நாள் 2008-10-01.

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Freed, Rita A., Yvonne J. Markowitz, and Sue H. D’Auria, eds. 1999. Pharaohs of the Sun: Akhenaten, Nefertiti, Tutankhamun. London: Thames and Hudson.
  • Giles, Frederick John. 2001. The Amarna Age: Egypt. Warminster, Wiltshire, England: Aris & Phillips.
  • Kemp, Barry J. 2006. Ancient Egypt: Anatomy of a Civilization. 2d ed. London: Routledge.
  • –––. 2012. The City of Akhenaten and Nefertiti: Amarna and Its People. London: Thames and Hudson.
  • Murnane, William J. 1995. Texts from the Amarna Period in Egypt. Atlanta: Scholars.
  • Mynářová, Jana. 2007. Language of Amarna – Language of Diplomacy: Perspectives On the Amarna Letters. Prague: Czech Institute of Egyptology; Faculty of Arts, Charles University in Prague.
  • Watterson, Barbara. 1999. Amarna: Ancient Egypt's Age of Revolution. Stroud, Gloucestershire: Tempus.

வெளி இணைப்புகள்

தொகு
முன்னர் பண்டைய எகிப்தின் தலைநகரம் (அக்கெனதென்)
கிமு 1353 – கிமு 1332
பின்னர்