அம்சத் பாசா சேக் பேபரி
அம்சத் பாசா சேக் பேபரி (Amzath Basha Shaik Bepari) ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். கடப்பா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவர் ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய துணை முதல்வராக இருக்கிறார்.
அம்சத் பாசா சேக் பேபரி | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆந்திரப் பிரதேச அரசின் நான்காவது துணைமுதல்வர் | |||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||
பதவியில் 8 ஜூன் 2019 | |||||||||||
ஆளுநர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் பிசுவபூசண் அரிச்சந்தன் | ||||||||||
முன்னையவர் | என். சின்ன ராஜப்பா க. எ. கிருட்டிணமூர்த்தி | ||||||||||
| |||||||||||
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||
பதவியில் 7 மே 2014 | |||||||||||
முன்னையவர் | அகமதுல்லா முகமது சையது | ||||||||||
தொகுதி | கடப்பா | ||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி | ||||||||||
வேலை | அரசியல்வாதி | ||||||||||
2009 ஆம் ஆண்டு எ. சா. ராஜசேகரின் கீழ் கடப்பா மாநகராட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பின்னர் 2014 தேர்தலில் 30,000 க்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 தேர்தலிலும் 50,000 க்கும் அதிகமான வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஜெகன்மோகன் ரெட்டியுடனும் தனது விசுவாசத்தைத் தொடர்ந்தார். இவர் "ஹாரூன் சப்" குடும்பம் என்று அழைக்கப்படும் வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது பள்ளிக் கல்வியை நிர்மலா ஆங்கில வழிப் பள்ளியிலும், இடைநிலைப் படிப்பை புனித சூசையப்பர் கல்லூரியிலும் முடித்தார். கடப்பா அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பைப் படித்தார்.[1]
2019 ஆம் ஆண்டில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் ஆந்திரப் பிரதேசத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் இவரும் ஒருவரானார். மேலும் கூடுதலாக சிறுபான்மை நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். [2] [3]