அம்மு சுவாமிநாதன்

இந்திய அரசியல்வாதி (1894-1978)

அம்மு சுவாமிநாதன் (Ammu Swaminathan) அல்லது அம்முக்குட்டி சுவாமிநாதன் (22 ஏப்ரல் 1894 - 4 சூலை 1978) இந்திய சுதந்திர இயக்கத்தின் போது ஒரு இந்தியச் சமூக சேவகராகவும், அரசியல் ஆர்வலராகவும், இந்திய அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

அம்மு சுவாமிநாதன்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்
பதவியில்
1951–1957
பிரதமர்ஜவகர்லால் நேரு
முன்னையவர்இல்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1894
பாலக்காடு, இந்தியா
இறப்பு1978
பாலக்காடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சுப்பராம சுவாமிநாதன்
தொழில்அரசியல்வாதி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அனக்கரை என்ற ஊரில் வடக்கத் குடும்பத்தில் அம்முக்குட்டி பிறந்தார். இவரது தந்தை கோவிந்த மேனன் ஒரு உள்ளூர் அதிகாரியாக இருந்தார். அம்முவின் பெற்றோர் இருவரும் நாயர் சாதியைச் சேர்ந்தவர்கள், இவரது பெற்றோரது பதின்மூன்று குழந்தைகளில் இளையவராக இருந்தார். அதில் ஒன்பது மகள்கள் அடங்குவர். அம்மு ஒருபோதும் பள்ளிக்குச் செல்லவில்லை, வீட்டிலேயே ஒரு அடிப்படைக் கல்வியை மட்டுமே பெற்றார். அதில் மலையாளத்தில் குறைந்தபட்ச வாசிப்பு, எழுதுதல், சமையல், வீட்டை கவனித்தல், திருமண வாழ்க்கைக்குத் தயாராவது ஆகியவை அடங்கும். இவர் மிகச் சிறிய வயதிலேயே தனது தந்தையை இழந்தார். மேலும் இவரது தாய் தனது குழந்தைகளை வளர்ப்பதற்கும், பல மகள்களுக்கு திருமணங்களை ஏற்பாடு செய்வதற்கும் சிரமப்பட்டார்.

திருமணம்

தொகு

ஒரு வழக்கறிஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட சென்னையைச் சேர்ந்த முனைவர் சுவாமிநாதன் என்பவர் இவரை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். நகரத்தில் தனக்கு முழு சுதந்திரம், ஒரு நல்ல கல்வி, நல்ல வாழ்க்கை ஆகியவை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று இவர் கூறினார். ஒரு பிராமண ஆணுக்கும் நாயர் பெண்ணுக்கும் இடையிலான வழக்கமான நடைமுறையில் இருந்த ஒரு சம்பந்தம் என்ற முறைசாரா திருமணத்தை செய்து கொள்ளவில்லை. ஆனால் ஒரு பாரம்பரிய நாயர் திருமணமாக இருந்தது. இதனால் பிராமணர்கள் இதை புறக்கணித்தனர்.

ஒரு கேரள ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த, எடின்பர்க் மற்றும் லண்டன் பல்கலைக்கழகங்களில் உதவித்தொகையுடன் பயின்ற சுப்பராம சுவாமிநாதன், லண்டனில் உள்ள ஒரு பதிவு அலுவலகத்தில் அம்முவை முறையாக திருமணம் செய்து கொண்டார். 13 வயதான அம்முவைவிட சுவாமிநாதன் 20 வயது மூத்தவராக இருந்தார்.

தொழில்

தொகு

அம்முவின் வாழ்க்கை தனது கணவரின் துணையால் மாறியது. சுவாமிநாதன் தனது மனைவியின் திறமைகளை ஊக்குவித்தார். அவருக்கு ஆங்கிலம் மற்றும் பிற பாடங்களை வீட்டிலேயே கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தார். பின்னர், அம்மு மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவராகி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். 1936 ஆம் ஆண்டில், இவர் இந்திய தேசிய காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்ய இந்தியா முழுவதும் பயணம் செய்தார். வெள்ளையனே வெளியேறு இந்தியா இயக்கம் தொடர்பாக இவர் 1942 இல் கைது செய்யப்பட்டார். இவர் 1947 இல் அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக பணியாற்றினார்.

1952 ஆம் ஆண்டில், சென்னை மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பல கலாச்சார மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தார். இந்தியாவின் முதல் பெண்கள் அமைப்பான மெட்ராஸ் பெண்கள் சங்கத்தின் ஆர்வலரானார். மேலும் பாரத சாரண சாரணியர் இயக்கத் தலைவராக 1960 நவம்பர் முதல் 1965 மார்ச் வரை பணியாற்றினார். 1975 அனைத்துலக பெண்கள் ஆண்டின் தொடக்க விழாவில் இவர் 'ஆண்டின் தாய்' ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடும்பம்

தொகு

சுவாமிநாதன் மற்றும் அம்முவுக்கு நான்கு குழந்தைகள் இருந்தன:

  • கோவிந்த சுவாமிநாதன், மூத்த மகன், இவர் 1969 முதல் 1976 வரை தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இவர் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1969 ஆம் ஆண்டு கோவிந்த், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் 1976 வரை பணியாற்றினார். கோவிந்த் 1997 வரையில் அதாவது 87 வயதாகும் வரை வழக்கறிஞராக தீவிரமாகப் பணியாற்றி வந்தாா்.[1]
  • சுப்புராம், ஒரு நிர்வாகி. [2]
  • கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் (1914-2012). இந்திய விடுதலை இராணுவப் போராட்ட வீராங்கனை, ஆசாத்து இந்து, சுபாசு சந்திர போசின் பற்றாளர்.
  • மிருணாளினி சாராபாய், ஒரு பரதநாட்டியக் கலைஞர்.[3] இவர் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் மனைவி.

மேற்கோள்கள்

தொகு
  1. "Govind Swaminadhan passes away". The Hindu. 1 October 2003 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040113024015/http://www.thehindu.com/2003/10/01/stories/2003100105741100.htm. 
  2. "Nuru Swaminathan". Archived from the original on 2002-10-29. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. Debra Craine and Judith Mackrell (2010). The Oxford Dictionary of Dance. Oxford: University Press. p. 396. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0199563446.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மு_சுவாமிநாதன்&oldid=3953237" இலிருந்து மீள்விக்கப்பட்டது