அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு
அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு (Ammonium dihydrogen phosphate) என்பது NH4)(H2PO4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மோனோ அமோனியம் பாசுபேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[5] விவசாய உரங்கள் [6] மற்றும் உலர் இரசாயன தீயை அணைக்கும் கருவிகளில் அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு முக்கிய மூலப்பொருள் ஆகும். இது ஒளியியல் [7]மற்றும் மின்னணுவியல் ஆகியவற்றிலும் குறிப்பிடத்தக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.[8]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு
| |
வேறு பெயர்கள்
மோனோ அமோனியம் பாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
7722-76-1 | |
ChEBI | CHEBI:62982 |
ChemSpider | 22812 |
EC number | 231-764-5 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24402 |
| |
UNII | 09254QB17T |
பண்புகள் | |
H6NO4P | |
வாய்ப்பாட்டு எடை | 115.02 g·mol−1 |
தோற்றம் | வெண் படிகங்கள் |
மணம் | none |
அடர்த்தி | 1.80 கி/செ.மீ3 |
உருகுநிலை | 190 °C (374 °F; 463 K) |
(கி/டெசிலிட்டர்) 28 (10 °செல்சியசு) 36 (20 °செல்சியசு) 44 (30 °செல்சியசு) 56 (40 °செல்சியசு) 66 (50 °செல்சியசு) 81 (60 °செல்சியசு) 99 (70 °செல்சியசு) 118 (80 °செல்சியசு) 173 (100 °செல்சியசு) [2][3] | |
கரைதிறன் | எத்தனால்,அசிட்டோன் கரைப்பான்களில் கரையாது[2] |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.525 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நாற்கோணம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−1445.07 கிலோயூல்/மோல்[4] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H319 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
5750 மி.கி/கி.கி (எலி,வாய்வழி) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் பாசுபேட்டு ஈரமோனியம் பாசுபேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | மோனோசோடியம் பாசுபேட்டு மோனோபொட்டாசியம் பாசுபேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வேதிப் பண்புகள்
தொகுஅம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு நீரில் கரையக்கூடியதாகும். இதிலிருந்து நாற்கோணக அமைப்பில் உள்ள நீரற்ற உப்பாக, நீளமான பட்டகம் அல்லது ஊசிகளாக படிகமாகிறது. நடைமுறையில் எத்தனாலில் இது கரையாது.[2]
திண்மநிலை மோனோ அம்மோனியம் பாசுபேட்டு 200 பாகை செல்சியசு வெப்பநிலை வரை நிலைப்புத்தன்மையுடன் உள்ளது. இதற்கு மேலான வெப்பநிலையில் அமோனியா வாயு மற்றும் உருகிய பாசுபாரிக் அமிலமாக (H3PO4) சிதைவடைகிறது.[9] 125 °செல்சியசு வெப்பநிலையில் அம்மோனியாவின் பகுதி அழுத்தம் 0.05 மில்லிமீட்டர் பாதரசம் ஆகும்.[10]
விகிதாச்சார அளவிலான மோனோ அம்மோனியம் பாசுபேட்டின் கரைசல் அமிலத்தன்மை கொண்டுள்ளது. 0.1 சதவீத அடர்த்தியில் இதன் காரகாடித்தன்மைச் சுட்டெண் 4.7 ஆகவும் 5 சதவீத அடர்த்தியில் இந்த மதிப்பு 4.2 ஆகவும் உள்ளது.[11]
தயாரிப்பு
தொகுசரியான விகிதத்தில் பாசுபாரிக் அமிலத்தையும் அம்மோனியாவையும் சேற்த்து வினைபுரியச் செய்தால் வெப்ப உமிழ்வினை நிகழ்ந்து தொழில்துறை அளவு ரீதியாக அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு தயாரிக்கப்படுகிறது.:[12]
- NH3 + H3PO4 → NH4H2PO4
படிகநிலை அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு வீழ்படிவாகிறது.
பயன்கள்
தொகுவிவசாயம்
தொகுஉரங்களின் மூலப்பொருளாக இருப்பதால் எடையளவில் அம்மோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு வேளாண்மைத்துறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தாவரங்கள் பயன்படுத்தக்கூடிய வடிவத்தில் நைட்ரசன் மற்றும் பாசுபரசு தனிமங்களை மண்ணுக்கு வழங்குகிறது. இதன் நைட்ரசன் பாசுபரசு பொட்டாசியம் விகிதவியல் அடையாளம் 12-61-0 (12-27-0) ஆகும்/ அதாவது தனிம நைட்ரசனின் எடையில் 12% மற்றும் 61% பாசுபரசு பெண்டாக்சைடு P2O5 அல்லது 27% தனிமநிலை பாசுபரசு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தீ அணைப்பான்
தொகுசில உலர் இரசாயன தீயை அணைக்கும் கருவிகளில் பயன்படும் பல்நோக்கு உலர் வேதித்தூளின் ஓர் அங்கமாக இந்த வேதிச் சேர்மம் உள்ளது.
ஒளியியல் பயன்பாடு
தொகுமோனோ அம்மோனியம் பாசுபேட்டு இதன் இரட்டை ஒளிவிலகல் பண்புகள் காரணமாக ஒளியியல் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் படிகமாகும். இதன் நாற்கோணகப் படிகக் கட்டமைப்பின் விளைவாக, இந்த வேதிப்பொருள் எதிர்மறையான ஒற்றை அச்சு ஒளியியல் சமச்சீர்நிலையைக் கொண்டுள்ளது. வழக்கமான ஒளிவிலகல் குறியீடு எண் = 1.522 மற்றும் அசாதாரண ஒளிவிலகல் குறியீடு எண்= 1.478 ஆகிய ஒளியியல் அலைநீளங்களில் உள்ளது.[7]
மின்னணுவியல் பயன்கள்
தொகுமோனோ அமோனியம் பாசுபேட்டு படிகங்கள் அழுத்த மின்சாரம் சார்ந்தவையாகும். சில செயல்படு ஒலி மாற்றுணரி ஆற்றல் மாற்றிகளில் இப்பண்பு மிகவும் அவசியத் தேவையாகும். பொதுவாக இதற்கு மாற்றாக காந்த அழுத்தம் பயன்படுத்தப்படுகிறது. 1950 ஆம் ஆண்டுகளில் அமோனியம் ஈரைதரசன் பாசுபேட்டுப் படிகங்கள் குவார்ட்சு மற்றும் ரோச்செல் உப்பு படிகங்களை செயல்படு ஒலி மாற்றுணரி ஆற்றல் மாற்றிகள் மாற்றியமைத்தன. ஏனெனில் அவை குவார்ட்சை விட வேலை செய்ய எளிதானவையாகவும் ஈரமுறிஞ்சும் பண்பற்றும் உள்ளன.[8]
இயற்கைத் தோற்றம்
தொகுஇச்சேர்மம் இயற்கையில் அரிய கனிம பைபாசுபமைட்டு கனிமமாகத் தோன்றுகிறது.[13][14] இது குவானோ படிவுகளில் உருவாகிறது. மோனோ ஐதரசன் இணையான தொடர்புடைய சேர்மமும் இன்னும் ஓர் அரிதான பாசுபமைட்டு ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, Florida: CRC Press. pp. 4–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
- ↑ 2.0 2.1 2.2 Dejun Xu, Xing Xiong, Lin Yang, Zhiye Zhang, and Xinlong Wang (2016): "Determination of the Solubility of Ammonium Dihydrogen Phosphate in Water-Ethanol System at Different Temperatures from 283.2 to 343.2 K". Journal of Chemincal Engineering Data, volume 61, issue 1, pages 78–82. எஆசு:10.1021/acs.jced.5b00224
- ↑ Chemical Book: "Ammonium dihydrogen phosphate". Accessed on 2018-08-14.
- ↑ National Bureau of Standards. Selected Values of Chemical Thermodynamic Properties. Technical note 270-3. 1968 [1]
- ↑ "Monoammonium Phosphate (MAP)" (PDF). www.mosaicco.com. Archived from the original (PDF) on 17 November 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-06-05.
- ↑ IPNI. "Monoammonium Phosphate (MAP)" (PDF). www.ipni.net. International Plant Nutrition Institute. பார்க்கப்பட்ட நாள் 21 July 2014.
- ↑ 7.0 7.1 Amnon Yariv, Pochi Yeh (1984). Optical Waves in Crystals. Wiley, Inc.
- ↑ 8.0 8.1 Willem Hackmann (1984). Seek and Strike: Sonar, Anti-Submarine Warfare and the Royal Navy, 1914–1954. Her Majesty's Stationery Office. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-11-290423-8.
- ↑ G. O. Guerrant and D. E. Brown (196): "Thermal Decomposition of High-Analysis Fertilizers Based on Ammonium Phosphate". Journal of Agricultural and Food Chemistry, volume 13, issue 6, pages 493-497. எஆசு:10.1021/jf60142a002
- ↑ John R Van Wazer (1958). Phosphorus And Its Compounds - Volume I: Chemistry. New York: Interscience Publishers, Inc. p. 503.
- ↑ Haifa Chemicals Ltd.: "Mono-Ammonium Phosphate 12-61-0 பரணிடப்பட்டது 2022-10-15 at the வந்தவழி இயந்திரம்". Product fact sheet, accessed on 2018-08-13.
- ↑ Martin Bäckman, Martin Gunnarsson, Linnea Kollberg, Martin Müller, and Simon Tallvod (2016): "Production of Monoammonium Phosphate at Yara AB பரணிடப்பட்டது 18 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம்". Technical Report, Lund University.
- ↑ "Biphosphammite".
- ↑ "List of Minerals". 21 March 2011.