அயோடைல் புளோரைடு

வேதிச் சேர்மம்

அயோடைல் புளோரைடு (Iodyl fluoride) என்பது IO2F என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அயோடின், புளோரின், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. அயோடைல் புளோரைடு சேர்மம் ஆரம்பத்தில் 1951 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது..[1]

அயோடைல் புளோரைடு
Iodyl fluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோ(டையாக்சோ)-λ5-அயோடேன்
இனங்காட்டிகள்
28633-62-7 Y
ChemSpider 57449638
InChI
  • InChI=1S/FIO2/c1-2(3)4
    Key: FRYHXHDHQQGJSF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44546993
  • O=I(F)=O
பண்புகள்
FIO2
வாய்ப்பாட்டு எடை 177.90 g·mol−1
தோற்றம் colorless crystals
அடர்த்தி 4.982 கி/செ.மீ3
உருகுநிலை 200 °C (392 °F; 473 K)
நீருடன் வினை புரியும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

நைட்ரசனிலுள்ள் அயோடோசில் முப்புளோரைடை 110 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடேற்றினால் அயோடோசில் முப்புளோரைடு சிதைவடைந்து அயோடைல் புளோரைடு உருவாகும். இந்த வினை மீளக்கூடிய வினையாக இருப்பதால், அயோடின் பெண்டாபுளோரைடு தொடர்ந்து அகற்றப்பட வேண்டும்.[1]

2IOF3 ⇌ IO2F + IF5
I2O5 + HF → IO2F + HIO3

இயற்பியல் பண்புகள்

தொகு

அயோடைல் புளோரைடு செஞ்சாய் சதுரத்தில் நிறமற்ற படிகங்களாக காணப்படுகிறது.[3] இது தண்ணீருடன் வினை புரியும்.[4]

வேதிப்பண்புகள்

தொகு

அயோடைல் புளோரைடு வறண்ட காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. ஆனால் ஈரப்பதத்தில் மெதுவாக அயோடிக் மற்றும் ஐதரோபுளோரிக் அமிலங்களாக நீராற்பகுப்பு அடைகிறது.[1]

IO2F + H2O → HIO3 + HF

இச்சேர்மம் புரோமின் முப்புளோரைடு மற்றும் செலீனியம் டெட்ராபுளோரைடு போன்ற வலுவான புளோரினேற்ற முகவர்களுடன் வினைபுரிந்து அயோடின் பெண்டாபுளோரைடை உருவாக்குகிறது. தூய ஐதரசன் பெராக்சைடு மூலம் அயோடைல் புளோரைடை தனிம அயோடினாகக் குறைக்கலாம்.[5][6]

3IO2F + 4BrF3 -> 3IF5 + 2Br2 + 3O2
IO2F + 2SeF4 -> IF5 + 2SeOF2

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Aynsley, E. E.; Nichols, R.; Robinson, P. L. (1 January 1953). "126. Reactions of iodine pentafluoride with inorganic substances. Iodine oxytrifluoride and iodyl fluoride" (in en). Journal of the Chemical Society: 623–626. doi:10.1039/JR9530000623. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769. https://pubs.rsc.org/en/content/articlelanding/1953/JR/jr9530000623. பார்த்த நாள்: 24 May 2023. 
  2. Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  3. Minkwitz, Rolf; Berkei, Michael; Ludwig, Ralf (1 December 2001). "Crystal Structure of IO2F" (in en). Inorganic Chemistry 40 (25): 6493–6495. doi:10.1021/ic0105462. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:11720506. https://pubs.acs.org/doi/10.1021/ic0105462. பார்த்த நாள்: 24 May 2023. 
  4. Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  5. Schmeisser, M.; Brändle, K. (1 January 1963). "Oxides and Oxyfluorides of the Halogens" (in en). Advances in Inorganic Chemistry and Radiochemistry (Academic Press) 5: 41–89. doi:10.1016/S0065-2792(08)60152-1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780120236053. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0065279208601521. பார்த்த நாள்: 24 May 2023. 
  6. Advances in Inorganic Chemistry and Radiochemistry (in ஆங்கிலம்). Academic Press. 1 January 1963. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057854-5. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடைல்_புளோரைடு&oldid=3878420" இலிருந்து மீள்விக்கப்பட்டது