அறந்தாங்கி தொடருந்து நிலையம்
அறந்தாங்கி தொடருந்து நிலையம் (Aranthangi railway station, நிலையக் குறியீடு:ATQ) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1]
அறந்தாங்கி | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | அறந்தாங்கி-கட்டுமாவடி சாலை, அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°12′09″N 78°58′47″E / 10.2025°N 78.9797°E | ||||
ஏற்றம் | 95 m (312 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - இராமேசுவரம் வழித்தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | ATQ | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
அமைவிடம்
தொகுஅறந்தாங்கி தொடருந்து நிலையம் அறந்தாங்கியில் இருந்து கட்டுமாவடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையத்தின் அருகாமையிலேயே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அருகிலுள்ள விமான நிலையமான திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆனது 76 கி.மீ (47 மைல்கள்) தொலைவில் வடக்கே உள்ளது.
வழித்தடம்
தொகுஅறந்தாங்கி தொடருந்து நிலையம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை - இராமேசுவரம் தொடருந்து வழித்தடத்தின் முக்கிய உள்ளூர் நிலையமாகும். இது திருவாரூருக்கும் - காரைக்குடிக்குமிடையே அமைந்துள்ள முக்கிய நிலையமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னையில் இருந்து அறந்தாங்கி வழியாக ராமேஸ்வரம் வரை ரயில் சேவை தொடங்கப்படுமா?". Archived from the original on 2019-03-13. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13. தினகரன் (13 மார்ச், 2019)
வெளியிணைப்புகள்
தொகு- அறந்தாங்கி தொடருந்து நிலையம் பரணிடப்பட்டது 2016-01-14 at the வந்தவழி இயந்திரம் Indiarailinfo.