அலுமினியம் அயோடைடு
அலுமினியம் அயோடைடு (Aluminium iodide) என்பது அலுமினியம் மற்றும் அயோடின் தனிமங்களைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். AlI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது. அலுமினியமும் அயோடினும் சேர்ந்து வினைபுரிவதால் அல்லது அலுமினியத்தின் மீது ஐதரசன் ஐயோடைடு வினைபுரிவதால் அலுமினியம் அயோடைடு உருவாகிறது.[3] உலோக அலுமினியம் அல்லது அலுமினியம் ஐதராக்சைடுடன் ஐதரசன் அயோடைடு அல்லது ஐதரயோடிக் அமிலம் ஆகியவற்றுக்கு இடையேயான வினையிலிருந்து அறுநீரேற்று பெறப்படுகிறது. தொடர்புடைய குளோரைடு மற்றும் புரோமைடுகள் போலவே அலுமினியம் அயோடைடும் ஒரு வலுவான இலூயிசு அமிலம் ஆகும். வளிமண்டலத்தில் இருந்து இது தண்ணீரை உறிஞ்சும். சில வகையான C-O மற்றும் N-O பிணைப்புகளை வெட்டுவதற்கு ஒரு வினைப்பொருளாக அலுமினியம் அயோடைடு பயன்படுத்தப்படுகிறது. அரைல் ஈதர்களை பிளவுபடுத்துகிறது. எப்பாக்சைடுகளை ஆக்சிசனேற்றுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் அயோடைடு | |
வேறு பெயர்கள்
அலுமினியம்(III) அயோடைடு
அலுமினியம் அயோடைடு | |
இனங்காட்டிகள் | |
7784-23-8 (நீரிலி) 10090-53-6 (அறுநீரேற்று) | |
ChemSpider | 74202 (நீரிலி) |
EC number | 232-054-8 |
யேமல் -3D படிமங்கள் | Image Image இருமம் |
பப்கெம் | 82222 (நீரிலி) |
| |
UNII | L903Z8J9VR (நீரிலி) VWS43EUO9V (அறுநீரேற்று) |
UN number | UN 3260 |
பண்புகள் | |
AlI3, AlI3·6H2O (hexahydrate) | |
வாய்ப்பாட்டு எடை | 407.695 கி/மோல் (நீரிலி) 515.786 கி/மோல் (அறுநீரேற்று)[1] |
தோற்றம் | வெண்மை (நீரிலி) அல்லது மஞ்சள் தூள் (அறுநீரேற்று)[1] |
அடர்த்தி | 3.98 கி/செ.மீ3 (நீரிலி)[1] 2.63 g/cm3 (hexahydrate)[2] |
உருகுநிலை | 188.28 °C (370.90 °F; 461.43 K) (நீரிலி) 185 °செல்சியசு, சிதைவடையும் (அறுநீரேற்று)[1][2] |
கொதிநிலை | 382 °C (720 °F; 655 K) நீரிலி, பதங்கமாகும்[1] |
நன்றாகக் கரையும், சிறிதளவு கரையும் | |
எத்தனால், டை எத்தில் ஈதர்-இல் கரைதிறன் | கரையும் (அறுநீரேற்று) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு, mP16 |
புறவெளித் தொகுதி | P21/c, எண். 14 |
Lattice constant | a = 1.1958 நானோமீட்டர், b = 0.6128 நானோமீட்டர், c = 1.8307 நானோமீட்டர் |
படிகக்கூடு மாறிலி
|
|
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-302.9 கிலோயூல்/மோல் |
நியம மோலார் எந்திரோப்பி S |
195.9 யூல்/(மோல்·கெல்வின்) |
வெப்பக் கொண்மை, C | 98.7 யூல்/(மோல்·கெல்வின்) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பு
தொகுதிண்மநிலை அலுமினியம் அயோடைடு ஓர் இருபடிச் சேர்மமாகும். அலுமினியம் முப்புரோமைடைப் போலவே இதிலும் Al2I6 சேர்மம் உள்ளது.[4] அலுமினியம் அயோடைடின் ஒருபடி மற்றும் இருபடி வடிவங்களின் அமைப்பு வாயு நிலையில் வகைப்படுத்தப்படுகிறது.[5] ஒருபடி வடிவ அலுமினியம் அயோடைடு 2.448(6) Å பிணைப்பு நீளம் கொண்ட முக்கோணத் தள வடிவம் கொண்டுள்ளது. பாலம் அமைக்கப்பட்ட இருபடி வடிவம் (Al2I6) 430 கெல்வின் வெப்பநிலையில் Al2Cl6 மற்றும் Al2Br6 சேர்மங்களைப் போலவே 2.456(6) Å பிணைப்பு நீளம் கொண்ட Al−I பிணைப்பும் (விளிம்பு), 2.670(8) Å (பாலம்) பிணைப்பு நீளம் கொண்ட Al−I பிணைப்பும் கொண்டுள்ளது. அலுமினியம் அயோடைடின் கட்டமைப்பு D2h என்ற சமநிலை வடிவவியலுடன் நெகிழ்வாக விவரிக்கப்படுகிறது.
அலுமினியம்(I) அயோடைடு
தொகுஅலுமினியம் அயோடைடு என்ற பெயர் மூவயோடைடு அல்லது இதன் இருபடியை விவரிக்கப் பரவலாக கருதப்படுகிறது. உண்மையில், ஒரு மோனோ அயோடைடு Al-I அமைப்பில் பங்கு வகிக்கிறது, இருப்பினும் AlI சேர்மமானது மூவயோடைடுடன் ஒப்பிடும்போது அறை வெப்பநிலையில் நிலையற்றதாக உள்ளது[6]
- 3AlI -> AlI3 + 2Al
அலுமினியம் மோனோ அயோடைடின் வழிப்பெறுதி (Al4I4(NEt3)4) மூவெத்திலமீனுடன் உருவாக்கப்பட்ட வளைய கூட்டுசேர் பொருள் ஆகும்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Haynes, William M., ed. (2011). CRC Handbook of Chemistry and Physics (92nd ed.). Boca Raton, FL: CRC Press. p. 4.45. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1439855110.
- ↑ 2.0 2.1 Perry, Dale L. (19 April 2016). Handbook of Inorganic Compounds, Second Edition. CRC Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8.
- ↑ Watt, George W; Hall, James L; Taylor, William Lloyd; Kleinberg, Jacob (1953). "Aluminum Iodide". Inorganic Syntheses. Vol. 4. pp. 117–119. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132357.ch39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470132357.
- ↑ Troyanov, Sergey I.; Krahl, Thoralf; Kemnitz, Erhard (2004). "Crystal structures of GaX3(X= Cl, Br, I) and AlI3". Zeitschrift für Kristallographie 219 (2–2004): 88–92. doi:10.1524/zkri.219.2.88.26320.
- ↑ Hargittai, Magdolna; Réffy, Balázs; Kolonits, Mária (2006). "An Intricate Molecule: Aluminum Triiodide. Molecular Structure of AlI3and Al2I6 from Electron Diffraction and Computation". The Journal of Physical Chemistry A 110 (10): 3770–3777. doi:10.1021/jp056498e. பப்மெட்:16526661.
- ↑ Dohmeier, C.; Loos, D.; Schnöckel, H. (1996). "Aluminum(I) and Gallium(I) Compounds: Syntheses, Structures, and Reactions". Angewandte Chemie International Edition 35 (2): 129–149. doi:10.1002/anie.199601291.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் அலுமினியம் அயோடைடு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.