அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (list of countries by aluminium oxide production) பிரித்தானிய நில அளவைத் துறை 2006 ஆம் ஆண்டின் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினாவின் தரவுகள் அடிப்படையில் யூன் 2008 இல் தயாரிக்கப்பட்டது.
அலுமினியம் ஆக்சைடு என்பது Al2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள அலுமினியத்தின் ஓர் ஈரியல்பு ஆக்சைடு ஆகும். சுரங்க, பீங்கான தொழில்துறைகள் மற்றும் பொருளறிவியல் துறையினர் பொதுவாக இதை அலுமினா என்றும் அலாக்சைட்டு[1] என்றும் குறிப்பிடுவார்கள். பாக்சைட்டு தாதுவில் இருந்து பேயர் முறையில் அலுமினா தயாரிக்கப்படுகிறது. அலுமினாவின் மிகமுக்கியமான உப்யோகம் அலுமினியம் தயாரிப்பது ஆகும். இதனுடைய கடினத்தன்மை காரணமாக உராய்வுப் பொருளாகவும், உயர் உருகுநிலை காரணமாக ஒளிவிலகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது[2].
தரம் | நாடு/பகுதி | அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி (டன்கள்) |
---|---|---|
உலகம் | 72,200,000 | |
1 | ஆத்திரேலியா | 18,312,000 |
2 | சீனா | 13,696,000 |
3 | பிரேசில் | 6,720,200 |
4 | அமெரிக்கா | 5,012,000 |
5 | ஜமைக்கா | 4,099,548 |
6 | உருசியா | 3,265,250 |
7 | இந்தியா | 3,080,000 |
8 | சுரிநாம் | 2,151,148 |
9 | வெனிசுவேலா | 1,920,000 |
10 | அயர்லாந்து | 1,800,000 |
11 | உக்ரைன் | 1,671,620 |
12 | கசக்ஸ்தான் | 1,514,509 |
13 | கனடா | 1,476,959 |
14 | எசுப்பானியா | 1,400,000 |
15 | இத்தாலி | 1,090,000 |
16 | செருமனி | 830,000 |
17 | சப்பான் | 780,000 |
18 | ருமேனியா | 621,973 |
19 | கினியா | 555,000 |
20 | கிரீசு | 510,000 |
21 | பிரான்சு | 500,000 |
22 | அசர்பைஜான் | 352,665 |
23 | அங்கேரி | 300,000 |
24 | மொண்டெனேகுரோ | 236,740 |
25 | துருக்கி | 140,089 |
26 | ஈரான் | 130,000 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aloxite" பரணிடப்பட்டது 2007-06-25 at the வந்தவழி இயந்திரம், ChemIndustry.com database, retrieved 24 February 2007
- ↑ "Alumina (Aluminium Oxide) – The Different Types of Commercially Available Grades". The A to Z of Materials. பார்க்கப்பட்ட நாள் 2007-10-27.