அலோக் கபாலி

வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர்

அலோக் கபாலி (Alok Kapali, பிறப்பு: சனவரி 1 1984), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 65 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2002 – 2006 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஹாட்ரிக் இலக்குகளை வீழ்த்திய முதல் வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்துள்ளார்.

அலோக் கபாலி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலோக் கபாலி
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 26)சூலை 28 2002 எ. இலங்கை
கடைசித் தேர்வுபிப்ரவரி 28 2006 எ. இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 56)ஆகத்து 4 2002 எ. இலங்கை
கடைசி ஒநாபசெப்டம்பர் 6 2008 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 17 65 78 122
ஓட்டங்கள் 584 1,170 3,653 2,686
மட்டையாட்ட சராசரி 17.69 19.83 27.26 25.82
100கள்/50கள் 0/2 1/5 8/12 4/11
அதியுயர் ஓட்டம் 85 115 173 115
வீசிய பந்துகள் 1,103 1,368 8,211 3,046
வீழ்த்தல்கள் 6 24 128 68
பந்துவீச்சு சராசரி 118.16 49.75 29.98 35.44
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 5 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 3/3 3/49 7/33 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 25/– 51/– 55/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 17 2008

ஆரம்பகால் வாழ்க்கை தொகு

அலோக் கபாலி சனவரி 1, 1981 இல் சில்ஹெட்டில் பிறந்தார். இவருக்கு ஆறு சகோதரர்கள் நான்கு சகோதரிகள் உள்ளனர்.[1] இவரின் தந்தை சில்ஹெட்டில் உள்ள இந்து கோயிலில் பணிபுரிந்து வந்தார்.

சர்வதேச போட்டிகள் தொகு

தேர்வுத் துடுப்பாட்டம் தொகு

2002 ஆம் ஆண்டில் கொழும்பு, இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் உபுல் சந்தானா மற்றும் மைக்கேல் வந்தோர்ட் ஆகியோரின் இலக்கினை வீழ்த்தினார். மேலும் முதல் ஆட்டப் பகுதியில் 39 ஓட்டங்களும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 23 ஓட்டங்களும் எடுத்தார். அடுத்த 16 போட்டிகளில் 4 இலக்குகளை மட்டுமே வீழ்த்தினார் அதில் 2003 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்தினார்.உமர் குல் இலக்கினை எல் பி டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் முதல் முறையாக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஹாட்ரிக் இலக்குகளை வீழ்த்திய வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார். மேலும் மிக இளம் வயதில் (19 ஆண்டுகள், 240 நாள்கள்) இந்தச் சாதனையைப் புரிந்த வீரர் எனும் சாதனை படைத்தார். அந்தப் போட்டியில் 3 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.

சிட்டகொங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 85 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாகும். இவர் பங்கெடுத்த பதினேழு போட்டிகளிலும் வங்காளதேச அணி தோல்வியடைந்துள்ளது.[2]

ஒருநாள் போட்டிகள் தொகு

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 86 பந்துகளில் 100 ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் மிக விரைவாக நூறுகள் அடித்த வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார்.[3] அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து சகீப் அல் அசன் இந்தச் சாதனையை முறியடித்தார்.[4]2006 ஆம் ஆண்டில் கென்ய துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கலீது மசூத்துடன் இணைந்து 7 ஆவது இணைக்கு 89 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.[1]

ஐ சி எல் தொகு

2008 ஆம் ஆண்டில் முறையாக அறிவிக்கப்படாத இந்தியன் கிரிக்கெட் லீக்கில் தாகா வாரியர்ஸ் அணி சார்பாக இவர் விளையாடியதால் இவர் 2008 ஆம் ஆண்டில் 10 ஆண்டுகள் விளையாட வங்காளதேச துடுப்பாட்ட வாரியம் தடை விதித்தது. அந்தத் தொடரில் ஐதராபாத் ஹீரோஸ் அணிக்கு எதிராக 60 பந்துகளில் 100 ஓட்டங்கள் எடுத்தார். அந்தத் தொடரில் 8 போட்டிகளில் 324 ஓட்டங்கள் எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் இரன்டாவது இடம் பெற்றார். சூன் , 2009 இல் தேசிய அனியில் விளையாடுவதற்காக ஐ சி எல் போட்டிகளில் இருந்து விலகினார்.[5]

சான்றுகள் தொகு

  1. "Kapali remembers father after maiden ODI ton". Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 2018-11-13.
  2. Walmsley, Keith (2003). Mosts Without in Test Cricket. Reading, England: Keith Walmsley Publishing Pty Ltd. பக். 457. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0947540067. .
  3. "2008 Asia Cup - Bangladesh v India, Karachi, June 28, 2008". Cricinfo. Archived from the original on 28 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-29.
  4. "Cricket scores for Bangladesh in Zimbabwe ODI Series, 2nd ODI: Zimbabwe v Bangladesh at Bulawayo, Aug 11, 2009". Cricinfo.
  5. http://www.cricinfo.com/icl2008/content/story/407563.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலோக்_கபாலி&oldid=3586006" இலிருந்து மீள்விக்கப்பட்டது