அல்லைல் மெத்தில் சல்பைடு
அல்லைல் மெத்தில் சல்பைடு (Allyl methyl sulphide) என்பது CH2=CHCH2SCH3 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம கந்தகச் சேர்மமாகும். ஆங்கிலத்தில் சுருக்கமாக இதை ஏ.எம்.எசு (AMS) என்பார்கள். அல்லைல் மெத்தில் சல்பைடு மூலக்கூற்றில் அல்லைல் (CH2=CHCH2) மற்றும் சல்பைடு என்ற இரண்டு வேதி வினைக்குழுக்கள் காணப்படுகின்றன. நிறமற்ற திரவமாகக் காணப்படும் இச்சேர்மம் ஆல்கைல் சல்பைடுகள் போல வலிமையான நெடியை கொண்டதாக உள்ளது. வெள்ளைப் பூண்டின் வளர்சிதை மாற்றத்தின் உடன் விளைபொருளான இச்சேர்மமே வெள்ளைப் பூண்டின் நாற்றத்திற்கு காரணாமுமாகும்[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-மெத்தில்சல்பனைல்புரப்-1-யீன் | |
வேறு பெயர்கள்
மெத்தில் புரப்பினைல் சல்பைடு
3-மெத்தில்தயோ-1-புரப்பீன் | |
இனங்காட்டிகள் | |
10152-76-8 | |
ChemSpider | 21159856 |
EC number | 233-422-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
ம.பா.த | அல்லைல்+மெத்தில்+சல்பைடு |
பப்கெம் | 66282 |
வே.ந.வி.ப எண் | UD1015000 |
| |
UN number | 1993 |
பண்புகள் | |
C4H8S | |
வாய்ப்பாட்டு எடை | 88.17 g·mol−1 |
மணம் | வெள்ளைப்பூண்டு |
அடர்த்தி | 0.803 கி செ.மீ−3 |
கொதிநிலை | 92 °C; 197 °F; 365 K |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225 | |
P210 | |
ஈயூ வகைப்பாடு | F |
R-சொற்றொடர்கள் | R11 |
S-சொற்றொடர்கள் | S16, S29, S33 |
தீப்பற்றும் வெப்பநிலை | 18.0 °C (64.4 °F; 291.1 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அல்லைல் குளோரைடுடன் சோடியம் ஐதராக்சைடும் மீத்தேன் தயாலும் சேர்த்து வினைபுரியச் செய்தால் அல்லைல் மெத்தில் சல்பைடு தயாரிக்கலாம்.
CH2=CHCH2Cl + NaOH(aq) + CH3SH → CH2=CHCH2SCH3 + NaCl + H2O
மேற்கோள்கள்
தொகு- ↑ Eric Block (2010-01-04). Garlic and Other Alliums: The Lore and the Science. Royal Society of Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-190-9.