அ. இரகுமான்கான்
அ. ரஹ்மான்கான் (A. Rahman Khan, 1942-1943 – ஆகத்து 20, 2020)[1] என்பவர் திராவிட முன்னேற்றக் கழக,தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இருமுறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
பிறப்பு
தொகுரஹ்மான்கான் அப்துல் ரசீது கான் என்பவருக்கு மகனாக அன்றைய மதுரை மாவட்டமும் தற்போதைய தேனி மாவட்டம் கம்பத்தில் பிறந்தார்.
கல்வி
தொகுபள்ளிக்கல்வியை கம்பத்தில் உள்ள ஏல விவசாயிகள் ஐக்கிய உயர்நிலைப் பள்ளியிலும், பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டமும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று பட்டம் பெற்றார்.[1]
குடும்பம்
தொகுஇவர் அண்ணன் பெயர் மஜித்கான், தம்பி பெயர் இப்ராஹிம் கான். மனைவி பெயர் நிலோபர் நிஷா. மகன்கள் பொறியாளர் ரியாஸ்கான், மருத்துவர் சுபேர்கான். [2]
சட்டக்கல்லூரியில்
தொகுதிமுகவை அண்ணா துவங்கிய பின்னர், மாணவரான ரகுமான்கான். சென்னை சட்டக் கல்லூரியில் துரைமுருகன், முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன் இணைந்து பல போராட்டங்களில் பங்கேற்றார். அதுவே பின்னர் அவரை அரசியலில் உயரத்துக்கு கொண்டு சென்றது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்
தொகுசட்டப்பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார் ரகுமான்கான்.அதன் ஒரு பகுதியாக நடந்த சட்டநகல் எரிப்பு போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார். இதன்மூலம் கருணாநிதியின் மனதில் இடம்பிடித்தார். [3]
தி.மு.க.வில்
தொகுநாவண்மை மிக்க இவர் தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தலைமை செய்தித் தொடர்பாளராகவும் இருந்தார். தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். மேடைப் பேச்சில் இலக்கியமும், உலக வரலாறும் அருவியாகக் கொட்டும். சட்டசபையில் அவரது வார்த்தை வீச்சில் வந்து விழும் புள்ளிவிவரங்கள் எதிர்கட்சியினரை தெறிக்கவிடும்.[4]
சட்டமன்றத்தில்
தொகுசட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
1977 | சேப்பாக்கம் | திமுக | 38.40 | |
1980 | சேப்பாக்கம் | திமுக | 55.64 | |
1984 | சேப்பாக்கம் | திமுக | 56.26 | |
1989 | பூங்கா நகர் | திமுக | 49.25 | |
1996 | இராமநாதபுரம் | திமுக | 51.22 [5][6][7][8],[9],[10],[11] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மரணம்
- ↑ தினமலர் 2020 08 01 பக்.10
- ↑ எம்ஜிஆருக்கு சிம்மசொப்பனமாக இருந்த ரகுமான்கான்: திமுகவின் இடி முழக்கம் ஓய்ந்தது
- ↑ தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா பாதிப்பால் மரணம் - மு.க.ஸ்டாலின் இரங்கல்
- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2015-04-10.
- ↑ திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் மரணம்
- ↑ Former Tamil Nadu minister A Rahman Khan dies of Covid-19
- ↑ Former Tamil Nadu minister and DMK leader A Rahman Khan passes away