அ. சேசையா சாத்திரி

சர் அமராவதி சேசையா சாத்திரி (Sir Amaravati Seshayya Sastri) (1828 மார்ச் 22 - 1903 அக்டோபர் 29), இவர் ஓர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் திருவிதாங்கூர் திவானாக 1872 மே முதல் 1877 மே 4, வரை பணியாற்றினார். மேலும் 1878 முதல் 1894 வரை புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாகவும் பணியாற்றினார். புதுக்கோட்டை நகரத்தை நவீனமயமாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அமராவதி சேசையா சாத்திரி
அ. சேசையா சாத்திரியின் உருவப்படம்'
புதுக்கோட்டையின் திவான்
பதவியில்
1878–1894
ஆட்சியாளர்கள்இராமச்சந்திர தொண்டைமான் (1878-1886),
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (1886-1894)
பின்னவர்ஆர். வேதாந்தாச்சார்லு
திருவிதாங்கூரின் திவான்
பதவியில்
1872 மே – 1877
ஆட்சியாளர்ஆயில்யம் திருநாள்
முன்னையவர்டி. மாதவ ராவ்
பின்னவர்நாணு பிள்ளை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1828-03-22)22 மார்ச்சு 1828
தஞ்சாவூர், சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு29 அக்டோபர் 1903(1903-10-29) (அகவை 75)
சென்னை மாகாணம், இந்தியா
தேசியம்பிரிட்டிசு இந்தியா
துணைவர்சுந்தரி
முன்னாள் கல்லூரிசென்னைப் பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர், நிர்வாகி
தொழில்அரசியல்வாதி

சேசையா சாஸ்திரி 1828 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி என்ற கிராமத்தில் ஒரு ஏழை இந்து குடும்பத்தில் பிறந்தார். தனது ஒன்பது வயதில், இவர் தனது மாமா கோபால ஐயருடன் சென்னை நகரத்திற்கு குடிபெயர்ந்தார். சேசையா சாதிதிரி சென்னையில் தனது கல்வியைக் கற்றார். மேலும் 1848இல் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

1848 ஆம் ஆண்டில், இவர் வருவாய் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பின்னர் வட்டாச்சியர், தலைமை சிரஸ்தார் போன்ற பணிகளை அடைந்தார். 1872 ஆம் ஆண்டில், இவர் திருவிதாங்கூரின் திவானாக நியமிக்கப்பட்டு 1872 முதல் 1877 வரை பணியாற்றினார். அப்போது அரண்மனை சூழ்ச்சிகள் இவரை வெளியேற நிர்பந்தித்தன. இவர் 1878 முதல் 1886 வரை புதுக்கோட்டையின் திவானாகவும், 1886 முதல் 1894 வரை திவான்-அரசப் பிரதிநிதியாகவும் பணியாற்றினார். புதுக்கோட்டை நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பி புதுக்குளம் ஏரியை உருவாக்கினார். சேசைய்யா சாத்திரி 1894 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1903 அக்டோபர் 29 அன்று தனது 75 வயதில் இறந்தார்.

இவர் 1902 ஆம் ஆண்டில் இந்தியப் பேரரசின் ஒழுங்கு என்று கௌவரவிக்கபட்டார்.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் 828 மார்ச் 22 அன்று [1] தஞ்சை மாவட்டத்தில் அமராவதி என்ற கிராமத்தில் வைதீகப் பிராமணாரான இவரது தந்தைக்கு ஆறு குழந்தைகளில் இளையவராகப் பிறந்தார் [2] சாத்திரியின் பெற்றோர் ஏழைகளாக இருந்ததால் இவர் வளரும்போது குடும்பக் கஷ்டங்களை அனுபவித்தார். மிகச் சிறிய வயதில், இவர் தனது மாமா கோபால ஐயருடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். சென்னையில், ஒரு ஆசிரியர்டமிருந்து தமிழ் மொழியைக் கற்றுக்கொண்டார். பிரான்சிஸ் ரோட்ரிக்ஸ் என்ற போர்த்துகீசியரால் நடத்தப்படும் பள்ளியில் தனது முதல் ஆங்கிலப் பாடங்களைப் பெற்றார். பின்னர், 1837 இல், ஆண்டர்சன் பள்ளியில் சேர்ந்தார். சிறுவனாக இருந்தபோது, இவர் விவிலியத்தின் வசனங்களை மனனம் செய்து, பங்குத்தந்தை திரு ஆண்டர்சன் அவர்களின் அபிமானத்தைப் பெற்றார். 1840 ஆம் ஆண்டில், மதமாற்றம் செய்யப்படும் குற்றச்சாட்டுகளின் விளைவாக எழுந்த ஆண்டர்சனுக்கு எதிராக வன்முறை ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சென்னை அரசாங்கத்தால் ஒரு கல்வி வாரியம் அமைக்கப்பட்டது. மேலும் ஒரு ஆரம்பப்பள்ளியும் மற்றும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் வாரியத்தால் நிறுவப்பட்டது. இவர் 1841 இல் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக மேம்படுத்தப்பட்டது. இவர் 1848 வரை பள்ளியில் படித்தார். நிதி சிக்கல்கள் இவரை பள்ளியைவிட்டு வெளியேற நிர்பந்தித்தன. பள்ளியின் தலைமை ஆசிரியர் புகழ்பெற்ற ஈ.பி. பவல், இவர் மேல் ஒரு சிறப்பு கவனத்தை மேற்கொண்டார். பள்ளியில் சாத்திரியின் வகுப்பு தோழர்களாக புகழ்பெற்ற வெ. இராமையங்கார் மற்றும் டி. மாதவ ராவ் ஆகியோர் இருந்தனர். 1848 ஆம் ஆண்டில், பச்சையப்பன் பள்ளியில் சேர்ந்து, அரசாங்கத்தின் உதவித்தொகையுடன் படித்தார்.

இதற்கிடையில், சாத்திரியின் மாமா கோபால ஐயர் 1847 இல் இறந்தார். அதே வருடத்தில் சேசையா கோனேரிராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தரி என்பவரை மணந்து கொண்டார். 1848 செப்டம்பரில் சாத்திரி வருவாய் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார்.

தொழில்

தொகு

எழுத்தராக தனது பணியை ஆரம்பித்த இவரின் திறமையால் 1851 மே மாதம் மச்சிலிப்பட்டணத்தின் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார். சாத்திரி 1853 இல் துணை சிரஸ்தாராகவும், 1855 நவம்பர் 5, இல் தலைமை சிரஸ்தாராகவும் பதவி உயர்வு பெற்றார். இவர் தஞ்சை துணைஆட்சியராக நியமிக்கப்பட்டு 1858 நவம்பர் முதல் 1865 வரை பணியாற்றினார். சாத்திரி 1866 ஏப்ரலில் தஞ்சை நகராட்சியில் ஒரு வருடம் பணியாற்றினார். 1869 ஆம் ஆண்டில், சேசையாசிரஸ்தாராக நியமிக்கப்பட்டார். மே 1872 இல், இவர் தனது வகுப்புத் தோழர் மாதவ ராவிற்குப் பின் திருவிதாங்கூரின் திவானாக நியமிக்கப்பட்டார்.[1][3]

திருவிதாங்கூரின் திவானாக

தொகு

இவர் திவானாக இருந்த காலத்தில், வர்க்கலையில் இரண்டு ஏரிகளை இணைக்கும் வர்க்கலை சுரங்கம், திருவனந்தபுரம் நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.[3] 1875 மே 18 அன்று திருவிதாங்கூர் மாநிலத்தின் முதல் முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

திருவிதாங்கூர் அரசியல் சூழ்ச்சிகளால் சூழப்பட்டிருந்த நேரத்தில் இவர் திவானாக ஆனார். சாத்திரியின் முன்னோடி மாதவ ராவ் மன்னரை முறியடிக்க முயன்றார். அதனால் அவர் வெளியேற வேண்டியதாயிற்று.[4] சாத்திரியும் மாதவ ராவ் போலவே ஆதிக்கம் செலுத்தியவர், சமரசம் செய்யாதவர், ராஜாவுடன் அடிக்கடி மோதல்களைக் கொண்டிருந்தார்.[5] இந்த நெருக்கமான உறவு இருந்தபோதிலும், கொச்சி ஆட்சியாளரான கேரள வர்மா, மகாராஜா ஆயிலியம் திருநாளின் வடிவமைப்புகள் குறித்து எச்சரிக்கும் ஒரு கடிதத்தை இவருக்கு எழுதினார், ஆனால் அந்த கடிதம் திருவிதாங்கூர் ராஜாவின் கைகளில் விழுந்தது.[6]

ஆகத்து 1877 இல், இவர் திருவிதாங்கூர் திவான் பதவியை விட்டு வெளியேறி திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார். அங்கு இவர் துணைத் தலைவராகவும், மேன்சன் ஹவுஸ் பஞ்ச நிவாரணக் குழுவின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். சனவரி 1878 இல், சேசையா சென்னை, சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டார். பின்னர் ஆகத்து 1878 வரை புதுக்கோட்டையின் திவானாக பொறுப்பேற்றார்.

புதுக்கோட்டையின் திவானாக

தொகு

1878ஆம் ஆண்டில், இராமச்சந்திர தொண்டைமான் புதுக்கோட்டையின் ஆட்சியாளராக இருந்தபோது, இவர் திவானாக நியமிக்கப்பட்டார்.[7] இவர் பல சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். இவர் நகரத்தை மறுவடிவமைத்து, நகர திட்டமிடல் நவீன கொள்கைகளை உள்ளடக்கி அதை மீண்டும் கட்டியமைத்தார்.[8][9] புதுக்கோட்டை நிர்வாக அலுவலக கட்டிடம் இவரின் காலத்தில் கட்டப்பட்டது.[10] புதுக்கோட்டையில் உள்ள புகழ்பெற்ற புதுக்குளம் ஏரி இவரின் உருவாக்கம் தான். இவரின் ஆலோசனையின் பேரில், இராமச்சந்திர தொண்டைமான் மாநிலத்தில் பல கோயில்களை புதுப்பித்தார். தனது சொந்த ஊரான தஞ்சையில் பிறந்த மனைவியின் ஆலோசனையின் பேரில்,[11] இராமச்சந்திர தொண்டைமான் திவான் இவரின் சம்மதத்துடன் "பிரிகதம்பலதாசு" என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

1886 ஆம் ஆண்டில், இராமச்சந்திர தொண்டமான் இறந்தார். பின்னர் சிறுவயதாக இருந்த மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் புதுக்கோட்டையின் சிம்மாசனத்தில் அமர்ந்தார்.[7] மார்த்தாண்ட பைரவ தொண்டைமானுக்கு உரிய வயது வரும் வரை, திவானாக இருந்த இவர், புதுக்கோட்டையை அரசப் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். 1894 ஆம் ஆண்டில் இவர் திவானாக இருந்த காலம் முடிவடைந்து சொந்த வாழ்க்கைக்குத் திரும்பினார்.[8]

பிற்கால வாழ்வு

தொகு

1902 ஆம் ஆண்டில், இவர் பிரிட்டிசு பேரரசின் சேவைகளுக்காக இந்திய நட்சத்திரங்களின் ஒழுங்கு ஆனார்.[12]

இவர் 1903 அக்டோபர் 29 அன்று இறந்தார்.[2]

மரியாதை

தொகு

இவர் 1868 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சக ஊழியராகவும், 1878 சனவரி 1 இல், புத்தாண்டு மரியாதை பட்டியலில் இந்திய நட்சத்திரத்தின் ஆணையின் தோழராகவும் ஆனார். 1901 ஆம் ஆண்டில், பேரரசின் அரசரின் பிறந்தநாள் மரியாதை பட்டியலில் இவருக்கு இந்திய நட்சத்திரங்களின் ஒழுங்கு என்ற கௌரவம் வழங்கப்பட்டது.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Pillai, Poovattoor Ramakrishna (1990). Visakhavijaya, a Study. Anitha Publications. p. 85.
  2. 2.0 2.1 Tanjore District Handbook. Madras (India : State) Record Office, Tamil Nadu, India, B. S. Ranga Record Office. 1957. p. 419.
  3. 3.0 3.1 Nayar (1974). In Quest of Kerala. Accent Publications. p. 98.
  4. Chaitanya, Krishna (1971). A History of Malayalam Literature. Orient Longman. p. 167.
  5. Pillai, P. K. Narayana (1988). Kerala Varma. Sahitya Academy. p. 33.
  6. Keralodaya: An Epic Kāvya on Kerala History. University of Calicut.
  7. 7.0 7.1 Imperial Gazetteer of India, 1908, Pg. 232
  8. 8.0 8.1 "Modern History of Pudukkottai". Archived from the original on 19 March 2008. பார்க்கப்பட்ட நாள் 13 July 2008.
  9. Imperial Gazetteer of India, 1908, Pg. 241
  10. "Official website of Pudukottai District". Archived from the original on 18 September 2008. பார்க்கப்பட்ட நாள் 13 July 2008.
  11. Criminal Gods and Demon Devotees: Essays on the Guardians of Popular Hinduism.
  12. Shaw, William Arthur (1971). The Knights of England. Genealogical Publishing Company. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8063-0443-X.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._சேசையா_சாத்திரி&oldid=3725944" இலிருந்து மீள்விக்கப்பட்டது