ஆடா திருக்கை
ஆடா திருக்கை ( Common stingray ) என்பது வடகிழக்கு அத்திலாந்திக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடலில் காணப்படும் தஸ்யதிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை திருக்கை மீன் ஆகும். இது பொதுவாக கடலோர நீர்பகுதிகளில் உள்ள மணல் அல்லது சேறு நிறைந்த வாழ்விடங்களில் 60 m (200 அடி), ஆழமுள்ள தரையில் புதைந்திருக்கும். இது பொதுவாக 45 cm (18 அங்), குறுக்களவு கொண்டது. வைரத்தின் வடிவில் பக்கத் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் தோல் பொதுவாக மென்மையானதாக இருக்கும். வளர்ந்த பெரிய ஆடா திருக்கையின் முதுகில் நடுவில் வரிசையாக சலவைக் கற்கள் பதித்ததுபோல ஒரு புடைப்பு வரிசை காணப்படும். இதன் வால் நீளமாக அதன் உடலின் அளவில் முக்கால் பங்கு இருக்கும்.
ஆடா திருக்கை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Dasyatis |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/DasyatisD. pastinaca
|
இருசொற் பெயரீடு | |
Dasyatis pastinaca (லின்னேயஸ், 1758) | |
Range of the common stingray | |
வேறு பெயர்கள் | |
|
ஆடா திருக்கையின் பொதுவான உணவானது கடலடியில் வாழும் ஓடுடைய கணுக்காலிகளான சிப்பி பொன்றவை ஆகும். இருப்பினும் இது மொல்லுடலிகள், பாலிகேட் புழுக்கள், சிறிய எலும்பு மீன்களையும், நண்டுகளையும் உணவாக கொள்கிறது. இது உள்பொரி முட்டை மூலம் உடலுக்கு உள்ளேயே குஞ்சுகள் பொறிக்கிறது. பின்னர் தாயால் உற்பத்தி செய்யப்படும் ஹிஸ்டோட்ரோப் ("கருப்பை பால்") மூலம் வளர்க்கப்படுகின்றன. நான்கு மாத கர்ப்ப காலத்திற்குப் பிறகு, ஆண்டுக்கு இரண்டு முறை 4 முதல் 9 குஞ்சுகளை ஆழமற்ற நீரில் ஈணுகின்றன. ஆடா திருக்கையின் வாலில் நஞ்சு கொண்ட முள் உள்ளது. அது வாலால் தாக்கினால் மிகுந்த வலி ஏற்படும், அரிதாக உயிருக்கு ஆபத்தையுத் ஏற்படுத்தலாம். ஆடா திருக்கை மீன் உண்ணத்தக்க மீனல்ல. வலைகளில் தற்செயலாக பிடிபடுவதுண்டு. இதன் கல்லீரல் எண்ணை காயங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தினால் (IUCN) இவை குறித்து சரியாக மதிப்பிட தரவுகள் போதாமை உள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ Serena, F.; C. Mancusi; G. Morey; J.R. Ellis (2009). "Dasyatis pastinaca". IUCN Red List of Threatened Species 2009: e.T161453A5427586. doi:10.2305/IUCN.UK.2009-2.RLTS.T161453A5427586.en. https://www.iucnredlist.org/species/161453/5427586.