ஆடி (நிறுவனம்)

 • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்

ஆடி ஏஜி (Audi AG) என்பது ஆடி அல்லது அவுடி என்ற வணிகப்பெயரில் கார்களைத் தயாரிக்கும் ஒரு செர்மானிய நிறுவனமாகும். இது வாக்ஸ்வேகன் குழுவில் ஒரு அங்கமாகும். ஆடி என்ற பெயர் இதன் நிறுவனரான ஆகஸ்ட் ஹார்ச்சின் குடும்பப்பெயரின் இலத்தீன் மொழியாக்கத்தின் அடிப்படையில் வந்ததாகும். ஆடி என்ற வார்த்தைக்கு ஜெர்மன் மொழியில் “கவனி!” என்ற அர்த்தமாகும்.

AUDI AG
வகைPrivate company,
subsidiary of Volkswagen Group
(FWB Xetra: NSU)
நிறுவுகைZwickau, Germany on July 16, 1909 [1]
நிறுவனர்(கள்)August Horch
தலைமையகம்Ingolstadt, Germany
அமைவிட எண்ணிக்கைproduction locations:
Germany:
Ingolstadt & Neckarsulm;
Hungary: Győr;
Belgium: Brussels;;
China: Changchun;
India: Aurangabad
சேவை வழங்கும் பகுதிWorldwide
முதன்மை நபர்கள்Rupert Stadler
Chairman of the Board of Management,
Martin Winterkorn
Chairman of the Supervisory Board (Volkswagen AG)
தொழில்துறைAutomotive industry
உற்பத்திகள்தானுந்துs, Engines
வருமானம் 33.617 billion (2007) [2]
இலாபம் 2.915 billion (2007)
மொத்த பங்குத்தொகை37.0%[சான்று தேவை]
பணியாளர்53,347 (2007)
துணை நிறுவனங்கள்quattro GmbH,
Lamborghini S.p.A.,
Audi Hungaria Motor Kft
இணையத்தளம்Audi.com

ஆடியின் தலைமை அலுவலகம் இன்கோல்ஸ்டாட், பவேரியா, ஜெர்மனியில் உள்ளது.

இது 1964 ஆம் ஆண்டு முதல் வாக்ஸ்வேகன் குழுவின் (வாக்ஸ்வேகன் AG ) ஒரு முழுவதும் உரிமையாக்கப்பட்ட (99.55%) துணை நிறுவனமாகும். வாக்ஸ்வேகன் குழு ஆடி 60/72/75/80/சூப்பர் 90 தொடரின் (ஒரு சில ஏற்றுமதி சந்தைகளில் வெறும் “ஆடி” என்றே விற்கப்படுவது) அறிமுகத்துடன் 1965 ஆம் ஆண்டில் ஆடி என்ற வணிகப்பெயரை மறுமுறை சந்தையில் புகுத்தினார்கள். இந்த பெயரை முந்தைய உரிமையாளரான டெய்மளர்-பென்ஸிடமிருந்து ஆட்டொ யூனியன் சொத்துகளை வாங்கியபோது இது செய்யப்பட்டது.

வரலாறு

தொகு

நிறுவனம் உருவானதும் பெயரும்

தொகு
 
ஆடி டைப் E

இந்த நிறுவனத்தின் உருவாக்கம் 1899 ஆம் ஆண்டு மற்றும் ஆகஸ்ட் ஹார்ச்சுக்கும் பின்னே செல்கிறது. முதல் ஹார்ச் வாகனம் 1901 ஆம் ஆண்டில் ஸ்விக்காவ்வில் தயாரிக்கப்பட்டது.[3] 1909 ஆம் ஆண்டில் அவர் நிறுவிய நிறுவனத்திலிருந்து ஹார்ச் வெளியேற்றப்பட்டார்.[3] இதன்பிறகு ஹார்ச் ஸ்விக்காவ்வில் ஒரு புதிய நிறுவனத்தை ஆரம்பித்து, ஹார்ச் என்ற வணிகப்பெயரை தொடர்ந்து பயன்படுத்தினார்.[4]

அவருடைய முன்னால் பங்காளர்கள் வர்த்தகச்சின்னம் சட்டமீறலுக்காக அவர் மீது வழக்குத் தொடுத்தார்கள். ஒரு ஜெர்மன் நீதிமன்றம் ஹார்ச் என்ற வணிகப்பெயர் முன்னால் நிறுவனத்திற்குதான் சொந்தமானதென்று தீர்மானித்தது.[3] ஆகஸ்ட் ஹார்ச் தன்னுடைய சொந்த கார் வணிகத்தில் தன்னுடைய சொந்த குடும்பப் பெயரையே பயன்படுத்தமுடியாமற்போனது. இதனால் அவர் ஃபிரான்ஸ் ஃபிக்கெண்ட்ஷெருடைய அபார்ட்மென்டில் தன்னுடைய நிறுவனத்திற்கான ஒரு புதிய பெயரை பிறப்பிக்க ஒரு கூடுகையை அமர்த்தினார். இந்த கூடுகையின் போது ஃபிரான்ஸின் மகன் அறையின் ஒரு மூலையில் அமைதியாக இலத்தீன் படித்துக் கொண்டிருந்தார். பலமுறை அவர் ஏதோ சொல்ல முயன்று தன்னுடைய வார்த்தைகளை விழுங்கிக்கொள்வார். ஆனால் இறுதியில் “அப்பா, – audiatur et altera pars ... ஹார்ச் என்றழைப்பதற்கு பதிலாக ஆடி என்றழைத்தால் நன்றாயிருக்காதா?” என்று உளறிக் கொட்டிவிட்டார். "ஹார்ச்!" ஜெர்மன் மொழியில் “ஹார்க்!” என்றால் “கவனி!” அல்லது ‘கேள்” என்று அர்த்தம். இது இலத்தீனில் “ஆடி” (கேட்கக் கூடிய என்ற ஆங்கில வார்த்தையை ஒப்பிட்டுப் பார்க்கவும்) என்று மொழிபெயர்க்கப்படலாம். கூடுகையில் கலந்துக் கொண்ட அனைவரும் இந்த யோசனையை உற்சாகத்துடன் வரவேற்றார்கள்.[5] சில நேரங்களின் ஆடி என்பது “ஆட்டோ யூனியன் டாய்ச்சலாண்ட் இங்கோல்ஸ்டாட்” என்பதின் சுருக்கப்பெயரென்று தவறாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது சொற்களை திறமையாக பின்வாட்டில் பொருத்தி அமைக்கப்பட்ட நிகழ்வாகும். உண்மையில் இந்த நிறுவனத்தின் பெயருக்கான பிறப்பிடம் அது கிடையாது.

ஆடி 2612 cc (2.6 லிட்டர்) நான்கு கலன் வடிவத்திலும், அதைத் தொடர்ந்து 3564 (3.6லி) வடிவம், மற்றும் 4680 cc (4.7லி) மற்றும் 5720 cc (5.7லி) வடிவங்களுடனும் துவங்கியது. இவை விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் வெற்றிகரமாக காணப்பட்டன. முதலாவது ஆறு கலன் வடிவம் [தெளிவுபடுத்துக] 4655 cc (4.7 L) 1924 ஆம் ஆண்டில் தோன்றியது.

ஆகஸ்ட் ஹார்ச் 1920 ஆம் ஆண்டில் ஆடி நிறுவனத்தை விட்டு, போக்குவரத்து துறையில் ஒரு உயர்ப்பதவிக்குச் சென்றார். ஆனால் தொடர்ந்து ஆடியின் பொறுப்புரிமையாளர்கள் குழுவில் ஒரு அங்கத்தினராக இருந்தார். 1921 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆடி நிறுவனம் இடது-கை ஓட்டுதல் உடைய தயாரிப்பு கார், ஆடி வகை K வைச் செய்து வழங்கி முதல் ஜெர்மன் கார் தயாரிப்பாளராக இருந்தது.[6] 1920களில் இடது-கை ஓட்டுவது பிரபலமானது. ஏனென்றால் அப்படி ஓட்டுவதால் முன்னே வரும் வாகனங்கள் தெளிவாக தெரிந்ததால், முந்தி செல்வது இன்னும் பாதுகாப்பானது.[6]

ஆட்டோ யூனியன் காலம்

தொகு

1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் DKW ன் உரிமையாளரான யோர்கன் ராஸ்முஸன், ஆடிவெர்க் AGன் பெரும்பாலான பங்குகளை வாங்கினார்.[7] அதே வருடத்தில், ராஸ்முஸன் US வாகன தயாரிப்பாளர் ரிக்கன்பேக்கரின் எட்டு கலன் இயந்திரங்களை செய்வதற்கான உற்பத்திக் கருவி உட்பட, ரிக்கன்பேக்கரில் மீதமுள்ளவைகளை வாங்கிக்கொண்டார். இந்த இயந்திரங்கள் 1929 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆடி ஸ்விக்காவ் மற்றும் ஆடி டிரெஸ்டன் வடிவங்களில் பயன்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் ஆறு கலன் மற்றும் நான்கு கலன் (பூஜோவிடமிருந்து உரிமம் பெறப்பட்டது) வடிவங்கள் தயாரிக்கப்பட்டன. அந்தக் காலகட்டத்திலான ஆடி கார்கள் அதி சொகுசானவைகளாகவும் சிறப்பு வேலைப்பாடுகள் உள்ளவைகளாகவும் இருந்தன.

1932 ஆம் ஆண்டில் ஆடி ஹார்ச், DKW , வாண்டரர் ஆகியவற்றுடன் ஒன்றாக இணைந்து ஆட்டோ யூனியன் உருவானது. இந்தக் காலகட்டத்தின் போது தான் அந்த நிறுவனம் ஆடி ஃப்ரண்ட் என்ற காரை அளித்தது. முன்-சக்கரம் ஓட்டுதலுடன் ஒரு ஆறு கலன் இயந்திரத்தை சேர்த்த முதல் ஐரோப்பிய கார் இது தான். இதில் வாண்டர்ருடன் பகிர்ந்துக் கொள்ளப்பட்ட ஒரு உடல் அமைப்பு, ஆனால் செலுத்தற் தண்டு முன்னோக்கிப் பார்க்கும் வண்ணம் 180 பாகைகள் திரும்பியது.

இரண்டாம் உலகப் போருக்கு முன் இந்த நான்கு வணிகப்பெயர்களை குறிக்கும் வண்ணம், இன்றைய ஆடி சின்னத்தைக் குறிக்கும் நான்கு ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வளையங்களை ஆட்டோ யூனியன் பயன்படுத்தியது. இந்த சின்னம் அந்தக் காலகட்டத்தில் ஆட்டோ யூனியன் பந்தயக் கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதில் அங்கமாயிருந்த நிறுவனங்கள் தத்தம் சொந்த பெயர்களையும் முத்திரைகளையும் பயன்படுத்தினர். தொழில் நுட்ப முன்னேற்றங்கள் அதிகமதிகமாக செறிவுற்று சில ஆடி வடிவங்கள் ஹார்ச் அல்லது வாண்டரரால் செய்யப்பட்ட இயந்திரங்களால் செலுத்தப்பட்டன.

அந்தக் காலக் கட்டத்துடைய பொருளாதார சிக்கல்களை பிரதிபலிக்கும் வகையில் 1930களில் ஆட்டோ யூனியன் சற்று சிறிய கார்களில் கவனம் செலுத்தியாது. இதனால் 1938 ஆம் ஆண்டு வாக்கில் அந்த நிறுவனத்துடைய DKW வணிகம் ஜெர்மானிய கார் சந்தையில் 17.9% பங்கை கைப்பற்றியது ஆனால் ஆடி 0.1% மட்டுமே கைக்கொள்ள முடிந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்

தொகு

பெரும்பாலான ஜெர்மன் உற்பத்தி இயக்கங்களைப் போல, இரண்டாம் உலகப் போர் துவங்கிய போது ஆட்டோ யூனியன் தொழிற்சாலைகள் இராணுவ உற்பத்திக்காக மாற்றியமைக்கப்பட்டன. மேலும் உடனே [சான்று தேவை] மீதமுள்ள போர் முழுவதிலும் பலத்த குண்டு வீச்சினால் அவை பாதிக்கப்பட்டு கடுமையான சேதமடைந்தன.

ரஷிய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டு 1945 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் இராணுவ நிர்வாகத்தின் ஆணைகளுக்கிணங்க அவை போர் இழப்புகளுக்காகத் தகர்க்கப்பட்டன.[8] இதைத் தொடர்ந்து, நிறுவனத்தின் மொத்த சொத்துகளும் எந்த நஷ்ட ஈடும் இல்லாமல் சொத்துப்பறிப்பு செய்யப்பட்டன.[8] ஆகஸ்ட் 17 1948 அன்று செம்னிட்ஸின் ஆட்டோ யூனியன் AG, வர்த்தக பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.[8] இந்த செயல்களால் ஜெர்மனியின் ஆட்டோ யூனியன் AG முடிவை எட்டும் நிலையை அடைந்தது. ஸ்விக்வா ஆடி தொழிற்சாலையின் எஞ்சிய ஆலை VEB (“மக்கள் சொந்தமாக்கப்பட்ட நிறுவனம்” என்பதற்கான ஜெர்மன்) ஆட்டோமொபில்வர்க் ஸ்விக்வா, சுருக்கமாக AWZ (ஆங்கில மொழிபெயர்ப்பு வாகன தொழிற்சாலை ஸ்விக்வா) ஆனது.[9]

1949 ஆம் ஆண்டில் ஸ்விக்வாவின் ஆடி தொழிற்சாலை போருக்கு-முந்தைய வடிவங்களை மறுபடியும் கட்டியமைக்கத் துவங்கியது. இந்த DKW வடிவங்கள் IFA F8 மற்றும் IFA F9 என்று மறுபெயரிடப்பட்டு மேற்கு ஜெர்மனிய வடிவங்களைப் போல காணப்பட்டன. மேற்கு மற்றும் கிழக்கு ஜெர்மன் வடிவங்கள் பாரம்பரியமான, புகழ்பெற்ற DKW இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களோடு பொருத்தப்பட்டன.

புதிய ஆட்டோ யூனியன்

தொகு

மேற்கு ஜெர்மனியில் ஒரு புதிய தலைமை அலுவலகம் கொண்ட ஆட்டோ யூனியன் இங்கோல்ஸ்டாட், பவேரியாவில் துவங்கப்பட்டது. இதற்கு பவேரியா மாநில அரசாங்கமும் மார்ஷல் பிளான் எய்டும் கடன்கள் வழங்கியிருந்தன.[10] மறுமுறை உருவாக்கப்பட்ட நிறுவனம் செப்டம்பர்-3 ,1949 அன்று துவங்கப்பட்டு, முன் -சக்கரம் ஓட்டப்படும் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களையுடைய DKW பாரம்பரியத்தைத் தொடர்ந்தது.[10] இதில் ஒரு சிறிய ஆனால் உறுதியான 125 cc மோட்டர்சைக்கிள் மற்றும் DKW F 89 L என்ற ஒரு DKW டெலிவரி வேனுடைய உற்பத்தியும் அடங்கியது.

டெய்ம்லர்-பென்ஸின் கீழ் சற்று காலம் சொந்தம் கொண்டாடபட்டபின் 1964 ஆம் ஆண்டில் வாக்ஸ்வேகன் குழு இங்கோல்ஸ்டாடிலுள்ள தொழிற்சாலையையும் ஆட்டோ யூனியனின் வணிகக் குறி உரிமைகளையும் வாங்கினது. 1960களின் மத்தியில் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்கள் வரவேற்பை இழந்தன. ஏனென்றால் வாடிக்கையாளர்கள் சௌகரியமான நான்கு-ஸ்டிரோக் இயந்திரங்களின் பக்கம் கவர்ந்திழுக்கப்பட்டனர். 1965 செப்டம்பரில் DKW F102ல் ஒரு நான்கு-ஸ்டிரோக் இயந்திரம் பொருத்தப்பட்டது மற்றும் சில முன்பக்க மற்றும் பின்பக்க தோற்ற மாற்றங்களையும் அடைந்தது. வாக்ஸ்வேகன் DKW என்ற வணிகப்பெயர் இரண்டு-ஸ்டிரோக் இயந்திரங்களோடு சம்பந்தப்படுத்தப்பட்டதால், அதை கைவிட்டனர். இந்த வடிவமும் நிறுவனத்திற்கு உள்ளே F103 என்று அழைக்கப்பட்டது, ஆனால் வெறும் “ஆடி” என்றே விற்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த வடிவங்கள், அதனுடைய குதிரைத் திறனின் தரத்தை அடிப்படையாக கொண்டு பெயரிடப்பட்டது மற்றும் 1972 ஆம் ஆண்டு வரை, ஆடி 60, 75, 80 மற்றும் சூப்பர் 90 என்ற பெயர்களில் விற்கப்பட்டது.

 
1973ம் ஆண்டில் வுல்ஃப்ஸ்பர்கில் ஆடி 80ன் கூட்டமைப்பு வரிசை

1969 ஆம் ஆண்டு NSUவுடன் ஆட்டோ யூனியன் இணைந்தது. இது ஸ்டட்கார்ட்டுக்கு அருகில் உள்ள நெக்கர்சும்மில் அமைந்துள்ளது. 1950களில் மோட்டார் சைக்கிள் தயாரித்தலில் உலகத்திலேயே மிகப்பெரிய நிறுவனமாக NSU இருந்துவந்தது. ஆனால் அதற்கு பிறகு NSU பிரின்ஸ், TT மற்றும் TTS ரகம் போன்ற சிறிய கார்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த கார்கள் தொன்மையான பந்தய கார்களில், இன்னும் பிரபலமாகத்தான் உள்ளன. ஃபெலிக்ஸ் வாங்கிலின் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சுழலும் இயந்திரங்களைத் தயாரிப்பதில் NSU தன்னுடைய கவனைத்தைத் திருப்பியது. 1967 ஆம் ஆண்டில் புதிய NSU Ro 80 என்பது விண்வெளி-யுக காராக இருந்தது. அக்காலத்தில், காற்றியக்கம் சார்ந்தவைகள், லேசான எடை மற்றும் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்ப விவரங்களில் முன்னோடியாக இருந்தது. சுழலும் இயந்திரங்களில் ஏற்பட்ட ஆரம்பகால பிரச்சனையின் காரணத்தினால் NSU தன்னிச்சையாக இயங்க முடியாமல் போய்விட்டது. இப்போது, A6 மற்றும் A8 ஆடி வடிவங்கள், மிகவும் பெரியளவில் தயாரிக்கப்படுவதற்கு நெக்கர்சும் ஆலை பயன்படுத்தப்படுகிறது. குவாட்ரோ நிறுவனம் கூட நெக்கர்சும் தொழிற்சாலையில்தான் அமைந்துள்ளது. ஆடியின் அதிகமான திறனுடைய கார்களான R8 மற்றும் "RS" போன்ற வடிவங்களை தயாரிப்பதும், உருவாக்குவதும் இந்த நிறுவனத்தின் வேலையாக இருக்கிறது.

நடுநிலை அளவுடைய கார்களை உருவாக்குவதில், NSU கவனம் செலுத்தி வருகிறது. பின்பக்க இயந்திரமுடைய ப்ரின்ஸ் வடிவங்கள் மற்றும் வருங்காலத்தை பிரதிபலிக்கும் NSU Ro 80 ஆகியவைற்றிற்கு இடையே, ஒரு பிளவை ஏற்படுத்தும் வகையில் K70 உருவாக்கப்படுகிறது. எனினும், வாக்ஸ்வேகன் K70 யை தன்னுடைய தயாரிப்புத் தொடரில் ஏற்றுக் கொண்டதால், NSU என்ற தனியான வணிகத் தயாரிப்பு அற்றுப்போனது.

நவீன காலம்

தொகு

புதிதாக இணைந்த நிறுவனம், ஆடி NSU ஆட்டோ யூனியன் AG என்று அழைக்கப்படுகிறது. போருக்கு முந்தைய காலத்திலிருந்து, முதல் முறையாக, ஆடியின் வெளிப்பாடு, ஒரு தனி வணிக சின்னமாக பார்க்கப்பட்டது. 1970 ஆம் வடிவ ஆண்டில், வால்ஸ்வாகன் ஆடியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி வைத்தது.

இந்த நிர்வாகத்தில் 1968 ஆம் ஆண்டில் ஆடி 100 தான் முதலாவதாக வந்த புதிய காராகும். 1972 ஆம் ஆண்டில் ஆடி 80/ஃபாக்ஸுடன் (1973 வால்ஸ்வாகன் பாசட் உருவாக்கப்படுவதற்கு இது அடித்தளமாக இருந்தது) இது இணைந்துக்கொண்டது. 1974 ஆம் ஆண்டில் ஆடி 50துடன் (அதற்கு பின்பு, வால்ஸ்வாகன் போலோ என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது) இணைந்துக்கொண்டது. பல வழிகளில், ஆடி 50 ஒர் வித்து வடிவமாக இருந்து வந்தது. ஏனெனில் கல்ஃப்/போலோ கருத்துப்படிவம் உருவாவதற்கு இது காரணமாக இருந்தது. இது உலகத்திலேயே மிகவும் வெற்றிகரமான கார் உருவாவதற்கு வழிவகுத்தது.

 
ஆடி குவாட்ரோ

இந்த நேரத்தில் ஆடியின் பேர், மாறாத ஒன்றாக இருந்தது. அதனால், அடித்தட்டு பொறியாளரான ஜோர்க் பென்சிங்கரிடமிருந்து வந்த செயற்குறிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது என்னவெனில், ஆடி செயற்திறன் கார் மற்றும் நெடுந்தூர பந்தய காருக்காக, வால்ஸ்வாகனின் இல்டிஸ் இராணுவ வாகனத்தில், நான்கு சக்கர இயக்க தொழில்நுட்பத்தை உருவாக்குவதாகும். "ஆடி குவார்ட்ரோ" என்று பெயரிடப்பட்ட செயற்திறன் கார், 1980 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது இரண்டு கதவுகளையுடைய சுழலி ஊட்டப்பட்ட காராகும். இது ஜெர்மனில், முதல் முறையாக அதிகளவு உற்பத்தி செய்யப்பட்ட வாகனமாகும். இந்த வாகனம், மைய வகையீட்டின் மூலம் எல்லா சக்கரங்களும் இயங்கும் நிரந்தரத் தன்மையை கொண்டதாக உள்ளது. இது பொதுவாக "Ur-Quattro" என்று தான் அழைக்கப்படுகிறது (இந்த வார்த்தையின் முற்பகுதியான "Ur-" என்பது, ஜெர்மன்னில் மிகைப்படுத்தல் என்ற வார்த்தைக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு அர்த்தம் "ஒரிஜினல்" (அசல்) என்று அர்த்தமாகும் மற்றும் இது ஆடியின் S4 மற்றும் S6 ஸ்போர்ட் செடனின் முதல் சந்ததியை குறிப்பதாகவும் உள்ளது. இதில் "UrS4" மற்றும் "UrS6"ம் அடங்கும். இதில் ஒரு சில வாகனங்களே (இவை அனைத்தும் ஒரே ஒரு குழுவின் மூலம் கைகளினாலேயே செய்யப்பட்டவையாகும்) தயாரிக்கப்பட்டன. ஆனால் இந்த வாகனம், நெடுந்தூர கார் பந்தயங்களில் மிகப்பெரிய வெற்றியைக் கண்டது. பந்தய கார்களின் அனைத்து-சக்கரமும் இயங்கும் மாறும்தன்மை, மிகவும் பிரபலமான வெற்றியை நிரூபித்துவிட்டது. ஆடியின் பெயர், தானியங்கி தொழில்நுட்பத்தில் உள்ள நவீனத்தன்மையுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

1985 ஆம் ஆண்டில் ஆட்டோ யூனியன் மற்றும் NSU தரவகையும் செயலற்று போனது. ஆடி AG ஐ எளிதாக்குவதற்காக இப்போது இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான பெயர் சுருக்கப்பட்டுவிட்டது.

1986 ஆம் ஆண்டில் பேசட் வகை ஆடி 80, ஒரு "வயதான கார்" வகையாக உருவாக்க ஆரம்பிக்கும் போது, வகை 89 என்ற கார் அறிமுகப்படுத்தப்பட்டது. முழுமையான இந்த புதிய உருவாக்கம், மிகவும் நன்றாகவே விற்கப்பட்டது. எனினும், அதன் வெளிப்புறத்தோற்றம் நவநாகரிகமாகவும் உற்சாகமூட்டக்கூடியதாகவும் இருந்து, அதன் அடித்தள இயந்திரத்தின் குறைந்த செயல்திறனை மழுப்பக்கூடிதாகவே இருந்தது. அதனுடைய அடித்தள அமைப்பு மிகவும் எளிமையாகவே இருந்தது (பயணி-பக்க கண்ணாடிக் கூட ஒரு விருப்பத்தேர்வாகவே அளிக்கப்பட்டது). 1987 ஆம் ஆண்டில் ஆடி ஒரு புதிய மற்றும் வெகு நளினமான ஆடி 90யை அறிமுகப்படுத்தினார்கள். அதில் நிலையான அம்சங்களின் அதி உயரிய அமைப்பிருந்தது. 1990 ஆம் ஆண்டின் ஆரம்பகாலங்களில், ஆடி 80 தொடரின் விற்பனை சரிய ஆரம்பித்து சில அடிப்படை கட்டமைப்பு பிரச்சனைகள் மேலெழும்பின.

தங்களது கார்களை மோதிய பிறகு ஆடி மீது வழக்கு தொடர்ந்த ஆறு பேரின் உணர்ச்சி பூர்வமான நேர்காணல்கள் மற்றும் ஆடி 5000ல் தடுப்பு மிதியை மிதித்தவுடன் “எதிர்பாராத முடுக்கம்” ஏற்படுவதாக காட்டப்பட்ட போலியான படம் ஆகியவை ஒரு 60 நிமி ஆவணமாக காட்டப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்காவில் ஆடி விற்பனையில் இருந்த சரிவை மேலும் அதிகமாக்கியது. தனிப்பட்ட சோதனையாளர்கள் எந்த வித இயந்திரக் கோளாறும் இல்லை என முடிவுக்கு வந்தனர். சில அமெரிக்க கார்களை விட வேகம் அதிகரிக்கும் சாதனமும் தடுப்பு மிதியும் அருகாமையில் இருப்பதை ஓட்டுனர்கள் சரியாக கவனிக்காதது ஓரளவு காரணமாக இருக்கலாம் எனக் கருதினர். இந்த வேறுபாடு, ஐரோப்பிய ஓட்டுனர்கள் மிருதுவான குதிகால் மற்றும் முன்கால் ஓட்டும் முறைகளை விரும்புவதனால் இருக்கலாம். ஐரோப்பாவில் மிகப் பெரிய பிரச்சனையாக ஆகாததற்கு, ஐரோப்பிய ஓட்டுனர்களின் மத்தியில் மனித ஆற்றலுடன் கூடிய அதிகப்படியான அனுபவமும் கூட காரணமாக இருக்கலாம்.

இந்த அறிக்கை உடனடியாக ஆடி விற்பனையைக் குறைத்தது மற்றும் பாதிக்கப்பட்ட மாதிரி வடிவத்தின் பெயரை மாற்றினர் (மற்ற இடங்களில் உள்ளதைப் போல 1989 ஆம் ஆண்டில் 5000 100/200 ஆக மாறியது). 1990களின் இடையில் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதற்கு முன் ஆடி அமெரிக்க சந்தையில் இருந்து வெளியேறுவதைப் பற்றி கூட யோசித்தது. 1996 ஆம் ஆண்டில் A4ன் விற்பனை மற்றும் A4/A6/A8 வரிசைகளின் வெளியீடு ஆகியவை ஆடிக்கு திருப்புமுனனயாக அமைந்தது. இவை VW மற்றும் மற்ற கூட்டு நிறுவனங்களோடு இணைந்து தயாரிக்கப்பட்டது (“பிளாட்ஃபார்ம்” என அழைக்கப்படுவது).

 
ஆடி R8

21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆடி ஜெர்மன் பந்தய களத்தில் கலந்து கொண்டு அதி வேக தாங்காற்றல் போன்ற பல உலக சாதனைகளை நிகழ்த்தி அவற்றை தக்கவைத்துக்கொண்டது. இந்த முயற்சி, 1930களின் ‘சில்வர் ஏரோஸ்’ பந்தயங்களில் இருந்து வந்த நிறுவனத்தின் பாரம்பரியத்தை ஒட்டி அமைந்தது.

தற்போது, ஐரோப்பாவில் ஆடியின் விற்பனை அதிகப்படியாக வளர்ந்து வருகிறது. 2004 ஆம் ஆண்டில் தொடர்ந்து 11வது முறையாக விற்பனை அதிகரித்தது, உலகெங்கும் 779,441 கார்கள் விற்பனையானது. 50 முக்கியமான விற்பனை சந்தைகளில் 21ல் சாதனை எண்ணிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. மிக அதிகமான விற்பனை அதிகரிப்பு கிழக்கு ஐரோப்பா (+19.3%), ஆப்பிரிக்கா (+17.2%) மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (+58.5%) ஆகிய இடங்களிலிருந்தது.[சான்று தேவை] இந்தியாவில் விற்பனை அதிகப்படியாக வளர்நததால் 2005 ஆம் ஆண்டு மார்ச்சில் ஆடி தனது முதல் இரண்டு விற்பனை மையங்களை அமைத்தது.

இந்த தரவகையின் மற்றொரு சாதனையாக 2007 ஆம் ஆண்டின் இதன் உலகளாவிய விற்பனை 964, 151 ஆக வெளியிடப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் தொடர்ந்து 13வது சாதனை வருடமாக, 1,003,400 கார்கள் விற்பனை செய்து 1 மில்லியன் எல்லையை தாண்டியது.[11]

தொழில்நுட்பம்

தொகு

வாகனத்தின் உடல் பகுதி

தொகு

அரித்தலை[12] தவிர்க்க 100% வெள்ளியம் பூசப்பட்ட கார்களை ஆடி தயாரிக்கிறது. இந்த முறையை போர்ஷே நிறுவனம் 1975 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய பிறகு முதன் முதலில் அதனை செய்த பெரிய சந்தை வாகனம் இது தான். மற்ற தடுப்பு நடவடிக்கைகளுடன் முழு மேற்பரப்பில் உள்ள துத்தநாக மேற்பூச்சு துருப்பிடிப்பதிலிருந்து பாதுகாப்பதில் மிக பயனுள்ளதாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் நிலைப்பு தன்மை ஆடியின் எதிர்பார்ப்பையே மிஞ்சியதால், முதலில் அளிக்கப்பட்ட 10 வருட துருப்பிடித்தலில் இருந்து உத்தரவாதத்தை தற்போது 12 வருடமாக நீடித்துள்ளது (துருப்பிடிக்காத அலுமினியம் மேற்பரப்புகளுக்குத் தவிர).[13]

முழுவதுமாக அலுமினியத்தால் ஆன காரை ஆடி நிறுவனம் கொண்டுவந்தது. 1994 ஆம் ஆண்டில் அலுமினிய இடைவெளி சட்டக தொழிநுட்பத்தை (ஆடி ஸ்பேஸ் ஃபிரேம் என அழைக்கப்படுகிறது) கொண்ட ஆடி A8ஐ அறிமுகப்படுத்தியது. தொண்ணூறுகளின் நடுவில் ஆடி பல புதிய வரிசை வாகனங்களை அறிமுகப்படுத்தியது மற்றும் தொடர்ந்து முதன்மையான தொழில்நுட்பம் மற்றும் உயரிய செயல்திறனை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இந்த முயற்சிக்கு முன், இந்த தொழில்நுட்பத்தைப் பரிசோதனை செய்ய ஆடி வகை 44ஐ சேர்ந்த அலுமினியத்தால் மேற்பூச்சு செய்யப்பட்ட அடிச்சட்டங்களை உதாரணங்களாக உபயோகித்தது.

ஓட்டும் முறை

தொகு

வாக்ஸ்வேகன் யுக மாதிரிகளுக்குப் பின்னர் தனது இரண்டு நீண்ட-நாள் போட்டியாளர்களான மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் BMW ஆகியவை விரும்பும் பாரம்பரிய பின்சக்கர ஓட்டு முறையை உபயோகிக்க திட்டவட்டமாக மறுத்தது. இதற்கு பதிலாக முன் சக்கர ஓட்டு முறை அல்லது நான்கு சக்கர ஓட்டு முறையை விரும்பியது. இதை அடைவதற்காக, ஆடி தனது கார்களை, அச்சாணிக்கு முன்னால், முன் சக்கரங்களில் மேல், – “மேல்தொங்கும்” முறையில், நீளவாக்கில் முன்புறத்தில் பொருத்தப்பட்ட இயந்திரம் இருப்பது போல வடிவமைத்தது. இதனால் நான்கு சக்கர ஓட்டு முறையை எளிதாக பின்பற்ற முடிந்தாலும், சரியான 50:50 எடை விநியோகம் (அனைத்து முன் சக்கர ஓட்டு முறை உள்ள கார்களில் இருப்பதுபோல) இல்லாமல் போகின்றது.

A3 மற்றும் TT போன்ற மாதிரிகளுக்கு குவாட்ரோ பேட்ஜை ஆடி அண்மையில் பயன்படுத்தியுள்ளது. இந்த மாதிரிகள் முந்தைய ஆண்டுகளில், இயந்திரம் சார்ந்த மைய வகையீடுகளை பயன்படுத்தியது போன்று டார்சன் அடிப்படையிலான கருவியை பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, சுவீடன் நாட்டு ஹால்டெக்ஸ் இழுவை மின் இயந்திர கிளட்ச் 4WD கருவியை பயன்படுத்துகிறது.

இயந்திரங்கள்

தொகு

1980களில் பாரம்பரியமான 6 கலன் இயந்திரங்களுக்கு பதிலாக, அதிகமாக உழைக்கும் உட்வரிசை 5 கலன் 2.1/2.2L இயந்தியங்களை உபயோகிப்பதில் ஆடி வோல்வோவுடன் இணைந்து தலைசிறந்த நிறுவனங்களாக விளங்கின. இந்த இயந்திரம் அவர்களது பொது கார்களில் மட்டும் இல்லாமல் பந்தய கார்களிலும் பொருத்தப்பட்டது. 1980களில் இந்த 2.1 L உட்வரிசை 5 கலன்கள் கொண்ட இயந்திரங்கள் பந்தய கார்களுக்கு அடிப்படையாக உபயோகப்படுத்தப்பட்டது. இது மாற்றங்களுக்குப் பிறகு 400 குதிரைத் திறன் (298 KW) வரை அளித்தது. 1990 ஆம் ஆண்டுக்கு முன் 2.0L மற்றும் 2.3L இடையே இடப்பெயர்ச்சி உடைய இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டது. இந்த வகையிலான இயந்திர சக்தி, எரிபொருள் சிக்கனம் (1980களில் இருந்த அனைத்து வாகன ஓட்டிகளின் மனதிலும் இருந்தது) மற்றும் அதிக வலிமையைக் கொடுக்கும் நல்ல இணைப்பாக இருந்தது.

சொகுசு போட்டியாளர்கள்

தொகு

1990களின் தொடக்கத்தில் ஆடி நிறுவனம், உலகளாவிய சொகுசு கார் நிறுவனங்களில் முதன்மையாக இருந்த மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் BMWக்கு சரியான போட்டியாளராக சந்தையில் உருவெடுத்தது. இந்த நிலை 1990 ஆம் ஆண்டில் ஆடி V8 வெளியிட்ட பிறகு உருவானது. இது ஆடி 100/200ன் மேற்பரப்பில் சில வேறுபாடுகளைச் செய்து ஒரு புது இயந்திரத்தைப் பொருத்தப்பட்டதாகும். மிகத் தெளிவான மாறுதல் முன் பகுதியில் பொருத்தப்பட்ட ஒரு புதிய கம்பிக் கதவாகும்.

1991 ஆம் ஆண்டில் ஆடியிடம் 4 கலன்கள் கொண்ட ஆடி 80, 5 கலன்கள் கொண்ட ஆடி 90 மற்றும் ஆடி 100, சுழலி ஊட்டப்பட்ட ஆடி 200 மற்றும் ஆடி V8 ஆகியவை இருந்தன. 4 மற்றும் 5 கலன் இயந்திரம் பொருத்தப்பட்ட இரண்டு கதவுகள் கொண்ட சிறிய காரும் இருந்தது.

ஐந்து கலன்கள் கொண்ட இயந்திரம் மிக வெற்றிகரமான மற்றும் திடமான வலிமை உடையதாக இருந்தாலும் அது இலக்கு சந்தையில் சற்று வித்தியாசமாகவே இருந்தது. 1992 ஆம் ஆண்டில் முற்றிலும் புதிய ஆடி 100 அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஒரு 2.8L V6 இயந்திரத்தையும் ஆடி அறிமுகப்படுத்தியது. இந்த இயந்திரம் முன் புறம் சற்று தூக்கப்பட்ட ஆடி 80லும் பொருத்தப்பட்டு (அமெரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் தற்போது 80 என்று பெயர் அளிக்கப்பட்ட அனைத்து 80 மற்றும் 90 மாதிரிகள்), 4,5 மற்றும் 6 கலன் இயந்திரத் தேர்வுகளும், சலூன்/செடான், இரு கதவுகள் கொண்ட சிறிய கார் மற்றும் காபிரியோலே பாணிகளும் இந்த மாதிரிகள் கிடைக்கப்பெறுவதாக இருந்தன.

விரைவில் இந்த 5 கலனும் முக்கிய இயந்திரத் தேர்வாக இல்லாமல் கைவிடப்பட்டது: ஆயினும், சுழலி ஊட்டப்பட்ட 230 குதிரைச் சக்தி வடிவம் நிலைத்திருந்தது. 1991ன் 200 குவாட்ரோ 20 Vல் முதலில் பொருத்தப்பட்ட இயந்திரம் விளையாட்டு குவாட்ரோவில் பொருத்தப்பட்ட இயந்திரத்தின் ஒரு வழிப்பொருளாகும். இது ஆடியின் இரு கதவு கொண்ட சிறிய காரில் பொருத்தப்பட்டு அது S2 என்றும் ஆடி 100 மேற்பரப்பில் பொருத்தப்பட்டு அது S4 என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு மாதிரிகளும் அதிகப்படியாக தயாரிக்கப்பட்ட S வரிசை செயல்திறன் கார்களுக்கான தொடக்கமாக அமைந்தது.

இடைவெளி சட்டகம்

தொகு

1994 ஆம் ஆண்டில் எடையைக் குறைப்பதற்காக “ஆடி இடைவெளி சட்டகம்” என அழைக்கப்படும். அலுமினிய இடைவெளி சட்டகத்தோடு வந்த ஆடி A8, V8க்கு பதிலாக கொண்டு வரப்பட்டது. குவாட்ரோ நான்கு சக்கர ஓட்டு முறை இந்த எடை குறைப்பை ஈடு செய்தது. இதன் காரணமாக இந்த கார் தனது போட்டியாளர்களைப் போன்ற செயல்திறன் கொண்டிருந்தது. ஆனால் அவர்களை விட அதிகப்படியான சாலை பிடிமானத்தைக் கொண்டிருந்தது. ஆடி A2 மற்றும் ஆடி R8 ஆகிய வாகனங்களும் ஆடி இடைவெளி சட்டக வடிவங்களை உபயோகித்தன.

ஆடி A2

தொகு

ஆடி A2 என்பது A12 கருத்திலிருந்து பிறந்த, வருங்காலத்தின் மிகத் திறமையான சிறிய வடிவத்தை கொண்டதாக உள்ளது. பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்த தொழில்நுட்பத்தில் முதல் இடத்தை இதில் உள்ள பல புதிய சிறப்பம்சங்கள் ஆடிக்கு வழங்கியது. உதாரணமாக கார் வடிவ தயாரிப்புக்களிலேயே முதன் முறையாக அலுமினியம் இடைவெளி சட்டகம் உபயோகிக்கப்பட்டது. ஆடி A2வில் விலைக் குறைவான மூன்று கலன் இயந்திரத்தை உபயோகித்து, ஆடி மேலும் தனது TDI தொழில்நுட்பத்தை விரிவாக்கியது. A2 மிகுந்த காற்றியக்க கட்டுப்பாடுடையது மற்றும் ஒரு காற்றுப்புழையை சுற்றி உருவாக்கப்பட்டது. அதிக விலையின் காரணத்தினால், ஆடி A2 குறைகூறப்பட்டது. விற்பனையின் அடிப்படையில் வெற்றியடையவில்லை, ஆனால் இது ஆடியை ஒரு சிறந்த தயாரிப்பாளராக நிலைநிறுத்தியது.

ஆடி A4

தொகு

ஆடி 80க்கு பதிலாக ஆடி A4 கொண்டு வரப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அடுத்த முக்கியமான வடிவ மாற்றமாகும். புதிய பெயரிடும் முறை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஆடி 100, ஆடி A6 ஆக மாறியது (ஒரு சிறிய மாற்றத்துடன்). இதனால் S4, S6 ஆனது மற்றும் A4ன் மேற்பரப்பில் புதிய S4 அறிமுகப்படுத்தப்பட்டது. S2 நிறுத்தப்பட்டது. இயந்திர வளர்ச்சிகளோடு 1999 ஆம் ஆண்டு வரை ஆடி காப்ரியோலே (ஆடி 80இன் களத்தின் அடிப்படையில்) தொடரப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் ஒரு புதிய A3 பின்புற உயர்த்துக் கதவுமாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது (வாக்ஸ்வேகன் கோல்ஃப் MK4 களத்தின் அடிப்படையில்) மற்றும் இதே கீழ்ச்செருகல்களின் அடிப்படையில் 1998 ஆம் ஆண்டில் ஆடி TT இரு கதவுகள் கொண்ட சிறிய கார் மற்றும் ரோட்ஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் A-பிரிவுக்கு போட்டியாக மற்றொரு சுவாரஸ்யமான மாதிரியான ஆடி A2 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை, ஐரோப்பாவில் அதிகமாக விற்பனையானது. ஆயினும், 2005 ஆம் ஆண்டில் இது நிறுத்தப்பட்டது மற்றும் ஆடி உடனடியாக ஒரு மாற்று வடிவத்தை தயாரிப்பதில்லை என முடிவெடுத்தது.

தற்போது கிடைக்கப்பெறக் கூடியதாக இருக்கும் இயந்திரங்களாவன: 1.4L, 1.6L மற்றும் 1.8L 4 கலன்கள், 1.8L 4-சுழலூட்டப்பட்ட கலன், 2.6L மற்றும் 2.8L V6, 2.2L சுழலூட்டப்பட்ட 5 கலன்கள் மற்றும் 4.2L V8 இயந்திரம் 1998 ஆம் ஆண்டில் வலிமை, முறுக்குத் திறன் மற்றும் மென்மை ஆகியவை அதிகரிக்கப்பட்ட 2.4L மற்றும் புதிய 2.8L 30V V6 ஆகியவை V6க்கு பதிலாக கொண்டுவரப்பட்டது. 3.7L V8 மற்றும் A8க்கான 6.0L W12 இயந்திரமாகும். மேலும் பல இயந்திரங்கள் வந்து கொண்டிருந்தன.

நேரடி மாற்று பல்சக்கரப்பெட்டி

தொகு

நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒரு வகையான இரட்டை கிளட்சு வெளியீடுடைய நேரடி மாற்று பல்சக்கரப்பெட்டியை (DSG) வாக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தியது. இது ஒரு வழக்கமான தானியங்கி வெளியீடு போல ஓட்டக்கூடிய தானியங்கு ஓர் அரை-தானியங்கி வெளியீடாகும் குழு B S1ல் இருக்கும் பல்சக்கரப் பெட்டியின் அடிப்படையில், இந்த முறையில் முறுக்குத்திறன் மாற்று கருவிக்கு பதிலாக இரண்டு மின்திரவாற்றலால் கட்டுப்படுத்தப்பட்ட கிளட்சுகள் அடங்கும். இது, DSG S-டிரோனிக் என்று அழைக்கப்படும் சில VW கோல்ஃப்கள், ஆடி A3 மற்றும் TT மாதிரிகளில் செயல்படுத்தப்படுகிறது.

எரிபொருள் படுகை உட்செலுத்துதல்

தொகு

பழைய 1.8லிட்டர் இயந்திரங்களுக்கு பதிலாக தற்போது புதிய எரிபொருள் படுகை உட்செலுத்து (FSI) இயந்திரங்கள் வந்த பின்னர், புதிய A3, A4, A6 மற்றும் A8 மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. கீழே குறிப்பிடப்பட்டவை உள்ளிட்ட இந்த வகைக்குள் அடங்கும் அனைத்து பெட்ரோல் இயந்திர மாதிரிகள், இந்த எரிபொருள் சேமிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது:

 
FSI இயந்திரப் பொறி.

கேஸோலின் இயந்திரங்கள்:

 • 1.6 லிட்டர் 4 கலன்115 bhp (86 kW; 117 PS)
 • 2.0 லிட்டர் 4 கலன் 150 bhp (112 kW; 152 PS) (TSI பொறிகளுக்கு வழியை ஏற்படுத்தும் வகையில் இந்த பொறிகள் மெதுவாக பயன்பாட்டிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன – கீழே உள்ள பிரிவைப் பார்க்கவும்)
 • 2.0 லிட்டர் சுழலி ஊட்டப்பட்ட 4 கலன் 200 bhp (149 kW; 203 PS)
 • 2.0 லிட்டர் சுழலி ஊட்டப்பட்ட 4 கலன் 261 bhp (195 kW; 265 PS)
 • 2.5 லிட்டர் சுழலி ஊட்டப்பட்ட 5 கலன் 335 bhp (250 kW; 340 PS)
 • 3.0 லிட்டர் சூப்பர்ச்சார்ஜ்டு v6 300 bhp (224 kW; 304 PS) - 333 bhp (248 kW; 338 PS)
 • 3.2 லிட்டர் V6 265 bhp (198 kW; 269 PS)
 • 4.2 லிட்டர் V8 350 bhp (261 kW; 355 PS)
 • 4.2 லிட்டர் V8 414 bhp (309 kW; 420 PS)
 • 5.2 லிட்டர் V10 435 bhp (324 kW; 441 PS) - 450 bhp (336 kW; 456 PS)
 • 5.2 லிட்டர் V10 525 bhp
 • 5.2 லிட்டர் இருசெயற்திறன் கொண்ட V10 573 bhp (427 kW; 581 PS)
 • 6.0 லிட்டர் W12 331 kW (450 PS)

ஆடி தரவகையின் தயாரிப்புகளில், விற்பனையில் உள்ள மற்ற இயந்திரங்களாவன:

 • 1.4 4 கலன் 75 bhp (56 kW; 76 PS)
 • 1.4 லிட்டர் TDI 3 கலன் 75 bhp (56 kW; 76 PS)
 • 1.4 லிட்டர் TDI 3 கலன் 90 bhp (67 kW; 91 PS)
 • 1.6 லிட்டர் 4 கலன் 102 bhp (76 kW; 103 PS)
 • 1.9 லிட்டர் TDI 4 கலன் 105 bhp (78 kW; 106 PS)
 • 2.0 லிட்டர் TDI 4 கலன் 141 bhp (105 kW; 143 PS)
 • 2.0 லிட்டர் TDI 4 கலன் 170 bhp (127 kW; 172 PS)
 • 2.5 லிட்டர் TDI V6 (110 kW )
 • 2.7 லிட்டர் TDI V6 180 bhp (134 kW; 182 PS)
 • 3.0 லிட்டர் TDI V6 233 bhp (174 kW; 236 PS)
 • 4.2 லிட்டர் TDI V8 326 bhp (243 kW; 331 PS)
 • 6.0 லிட்டர் TDI V12 500 bhp (373 kW; 507 PS) 1,000 N⋅m (740 lbf⋅ft)/1750 rpm

(எல்லா TDI மாதிரிகளும் சுழலி ஊட்டப்பட்ட டீசல் இயந்திரங்களை உடையதாக உள்ளது.)

மின் தொழில்நுட்பம்

தொகு

ஆடி ஜெப்பானின் மிகப்பெரிய மின்னணு நிறுவனமான சான்யோவுடன் வாக்ஸ்வேகன் குழுமத்திற்காக ஒரு முன்னோடியான கலப்பின மின் திட்டத்தில் கூட்டமைப்பை திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த கூட்டமைப்பினால் வருங்கால வாக்ஸ்வேகன் குழுமத்தின் மாதிரிகளில் சான்யோ மின்கலங்கள் (பாட்டரிகள்) மற்றும் மற்ற மின் உபகரணங்கள் பயன்படுத்தப்படக் கூடும்.[14]

பின்வருவன கலப்பின மின் வாகனங்களில் உட்படும்:

 • ஆடி A1 ஸ்போர்ட்பேக் (விளையாட்டு) மாதிரி[15]
 • ஆடி A4 TDI மாதிரி E[16]

முழு-மின் வாகனங்கள்:

 • ஆடி ஈ- ட்ரான் கான்செப்ட் சூப்பர்கார்[17]

LED பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள்

தொகு

2006 ஆம் ஆண்டு துவக்கி, ஆடி பகல் நேரங்களில் எரியும் விளக்குகளை தங்களுடைய வாகனங்களில் கொண்டு வந்தார்கள். இதில் ஆடி வெள்ளை LED தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள். DRLகளின் தனித்தன்மைவாய்ந்த வடிவம் ஆடிக்கு ஒரு வணிகத்தனித்தன்மையை அளித்திருக்கிறது. இந்த பாணி முதல் முறையாக R8ல் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிலிருந்து அதனுடைய அனைத்து மாதிரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பல்லூடக இடை இணைப்பு

தொகு

ஆடி அண்மையில் அதனுடைய கார்களுக்கு ஒரு கணிணி வழி கட்டுப்படுத்தும் அமைப்பை அளிக்கத் துவங்கியுள்ளது. இது பல்லூடக இடை இணைப்பு (MMI) என்றழைக்கப்படுகிறது. BMWவின் ஐடிரைவ் கட்டுப்படுத்தும் அமைப்பு மீதான விமர்சனங்களுக்கு மத்தியில் இது வந்தது. இது உண்மையில் ஒரு சுழலும் கட்டுப்படுத்தும் திருகியும் ‘பகுதிப்படுத்தப்பட்ட’ பொத்தான்களுள்ள ஒரு அமைப்பு அவ்வளவு தான். இந்த அமைப்பு அனைத்து உள்-கார் பொழுதுபோக்கு கருவிகளை (வானொலி, CD சேஞ்சர், ஐபாட், TV ட்யூனர்) செயற்கைக்கோள் வழிநடத்துதல், சூடாக்குதல் மற்றும் காற்றோட்டத்தை கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. BMWவின் ஐடிரைவை விட கணிசமாக மேம்படுத்தப்பட்டதாக பரவலாக அறிவிக்கப்பட்டது. எனினும், அதிலிருந்து BMW தன்னுடைய ஐடிரைவில் பயன்படுத்துவர் விருப்பத்திற்கேற்ற அதிக முன்னேற்றங்களைச் செய்துள்ளது.

MMIயில் நடுவில் உள்ள திருகியைச் சுற்றி பகுதிப்படுத்தப்பட்ட பொத்தான்கள் இருப்பதால் மென்யுவில் (முக்கிய பட்டியலில்) அதிக நேரம் தேடவேண்டிய அவசியம் குறைகிறது. மேலும், இதில் ‘முக்கிய செயற்பாட்டிற்கு’ நேரடியாக செல்லக்கூடிய பொத்தான்களும் வானொலி அல்லது தொலைபேசி இயக்கங்களுக்கு குறுக்குவழிகளும் இருக்கிறது. இத்தகைய அம்சங்கள் இருப்பதால், MMI பொதுவாக நன்றாகவே வரவேற்கப்பட்டிருக்கிறது. திரையானது பல வண்ணத்திலோ ஒரு வண்ணத்திலோ எந்த வகையாக இருந்தாலும் செங்குத்தான டேஷ்போர்டில் (கட்டுப்பாட்டகம்) நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் A4 (புதிய), A5, A6, A8, மற்றும் Q7 மாதிரிகளில் இந்த கட்டுப்பாட்டு பொத்தான்கள் கிடை மட்ட வாக்கில் உள்ளன.

கேட்டல் வழிநடத்துதல் அமைப்பு (ஆடியோ நேவிகேஷன் ஸிஸ்டம்) (RNS-E) உடன் செயற்கைக்கோள் வழிநடத்தும் அமைப்பிருக்கும்போது A3, TT, A4 (B7), மற்றும் R8 மாதிரிகளிலும் ஒரு “MMI-போன்ற” அமைப்பு காணப்படுகிறது.

தற்போதைய மாதிரிகள்

தொகு
ஆடி A3 ஆடி A4 ஆடி A5 ஆடி A6 ஆடி A8 ஆடி TT ஆடி R8 ஆடி Q5 ஆடி Q7
1996–இன்று வரை 1994–இன்று வரை 2007 இன்று வரை 1994–1997, 1998–2004, 2005–இன்று வரை 1994–இன்று வரை 1998–இன்று வரை 2006–இன்று வரை 2008—இன்று வரை 2006–இன்று வரை

S மாதிரிகள்

தொகு
ஆடி TTS ஆடி S3 ஆடி S4 ஆடி S5 ஆடி S6 ஆடி S8
1998–இன்று வரை 1999-2004,2006–இன்று வரை 1997-2001,2003-2004,2004-2008,2008–இன்று வரை 2006–இன்று வரை 1994–1997,1999–2003,2006–இன்று வரை 1996–2002,2006–இன்று வரை

RS மாதிரிகள்

தொகு
ஆடி TT RS ஆடி RS6
2009–இன்று வரை 2008— இன்று வரை

குறிப்பு: இது தொடரப்படாத மாதிரிகளைச் சேர்க்கவில்லை

மோட்டார் விளையாட்டுகள்

தொகு

ஆடி, பல வகையான மோட்டார் விளையாட்டுகளில் கலந்துகொண்டுள்ளது. மோட்டார் விளையாட்டில் ஆடியின் உயரிய பாரம்பரியம், அதன் முந்தைய நிறுவனமான ஆட்டோ யூனியனிலிருந்து 1930களில் தொடங்கியது. 1990களில், வட அமெரிக்காவின் சுற்று பந்தயத்தில் வெற்றி பெற்ற பிறகு ஆடி மோட்டார் பந்தயத்தின் டூரிங் மற்றும் சூப்பர் டூரிங் வகைகளில் ஆதிக்கம் செலுத்தியது.

பந்தயம்

தொகு
 
1984ம் ஆண்டின் ராலி போர்ட்சுகலின் போது தன்னுடைய குவாட்ரோ A2வுடன் வால்டர் ரோஹ்ரல்.

1980 ஆம் ஆண்டில் ஆடி ஒரு சுழலூட்டப்பட்ட நான்கு சக்கர ஓட்டு முறை கொண்ட குவாட்ரோவை வெளியிட்டு அதன் மூலம் பல உலக அளவில் திரளணிகள் மற்றும் பந்தயங்களை வென்றது. போட்டிப் பந்தயங்களில் நான்கு சக்கர ஓட்டு முறையை உபயோகிக்கலாம் என்ற விதிமுறை மாற்றப்பட்ட பின்னர் அதனை முதலில் உபயோகித்த காரணத்தினால் இது அனைத்து காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த பந்தயக் காராகக் கருதப்படுகிறது. இவை எடை மிகுந்ததாகவும், சிக்கலானதாகவும் இருப்பதால் பல திறனாய்வாளர்கள் நான்கு சக்கர ஓட்டு முறை பந்தய ஓட்டுனர்களின் நிலைக்கும் தன்மையை சந்தேகித்தனர் ஆயினும் குவாட்ரோ வெற்றி பெற்ற காரானது. முதல் திரளணியில் முதன்மை பெற்று இருக்கும் சாலையை விட்டு வெளியேறினாலும், பந்தய உலகுக்கு 4WD தான் வருங்காலத்தில் இருக்கப் போகிறது என்பதை பறைசாற்றியது. உலக திரளணி வகையகத்தில் குவாட்ரோ மேலும் வெற்றிகளை ஈட்டியது. 1983 (ஹானு மிக்கோலா) மற்றும் 1984 (ஸ்டிக் புலோம்க்விஸ்ட்) ஆகிய ஓட்டுனர் பட்டங்களை வென்றது.[18] 1982 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் இதன் மூலம் ஆடி சிறந்த தயாரிப்பாளருக்கான பட்டத்தையும் வென்றது.[19]

 
2007ம் ஆண்டின் ராலீ ட்யுஷ்லாண்டில் ஓட்டப்பட்ட ஆடி குவாட்ரோ S1

1984 ஆம் ஆண்டில் மோண்டே கார்லோ மற்றும் ஸ்வீடன் நாட்டின் திரளணி பந்தயங்களில் ஆதிக்கம் செலுத்திய சிறிய சக்கர அடித்தளமுடைய விளையாட்டு குவாட்ரோவை அறிமுகப்படுத்தி இந்த பந்தயங்களில் அனைத்து இடங்களையும் பிடித்தது. ஆனால் தொடர்ந்து WRCல் கலந்துக்கொள்ளும் போது பிரச்சனைகளுக்கு உள்ளானது. 1985 ஆம் ஆண்டில், பல சுமாரான முடிவுகளுக்குப் பின்னர் வால்டர் ரோல் தனது விளையாட்டு வகை குவாட்ரோ S1ல் பருவத்தை முடித்து, ஆடியை தயாரிப்பாளர் புள்ளிகளில் இரண்டாம் இடத்திற்குச் செல்ல உதவினார். ஆடிக்கு திரளணி பாராட்டுகள் அதே வருடத்தில் ஹாங்காங்கில் இருந்து பீஜிங் செல்லும் திரளணியிலும் கிடைத்தது. ஆடியும் ஓட்டுனரும், உலக திரளணி பந்தயத்தில் ஒரு சுற்றை வென்ற ஒரே பெண் ஓட்டுனரனுமான மிஷேல் மௌடன், தற்போது வெறும் S1 என்று அழைக்கப்பட்ட விளையாட்டு வகை குவாட்ரோ S1 காரில் பைக்ஸ் பீக் சர்வதேச மலை ஏறும் பந்தயத்தில் பங்கு பெற்றார். இந்த மலை ஏறும் பந்தயத்தில் கொலரேடோவில் உள்ள 4,302 மீட்டர் உயரமுள்ள மலையில் ஏற வேண்டும். 1985 ஆம் ஆண்டில் மிஷேல் மௌடன் ஒரு புதிய உலக சாதனையான 11:25.39 ஐ நிகழ்த்தி, இதன் மூலம் பைக்ஸ் பீக் சாதனை புரிந்த முதல் பெண்மணியானார். 1986 ஆம் ஆண்டில் போர்சுகலில், ஓட்டுநரான ஜோகுவிம் சாண்டோஸ், தனது ஃபோர்டு RS200 தொடர்புடைய விபத்தைத் தொடர்ந்து ஆடி சர்வதேச திரளணி பந்தயங்களில் இருந்து விலகியது. சாண்டோஸ் சாலையில் நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது பந்தய வழியை விட்டு விலகி பார்வையாளர் பக்கத்தில் புகுந்ததனால் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். பாபி அன்சர் அதே வருடத்தில் ஒரு ஆடியை உபயோகித்து பைக்ஸ் பீக் மலை ஏற்றத்தில் ஒரு புதிய உலக சாதனையான 11:09.22ஐ நிகழ்த்தினார்.

1987 ஆம் ஆண்டில் இரண்டு வருடங்களுக்கு முன்பே WRCல் இருந்து ஓய்வு பெற்ற தனது ஆடி S1ல் வால்டர் ரோரல் ஒரு புதிய பைக்ஸ் பீக் சர்வதேச மலை ஏறும் சாதனையான 10:47.85ஐ நிகழ்த்தி ஆடிக்கு பட்டத்தை வென்றார். தனது கடைசி மாதிரியில் கால சோதனை செய்யப்பட்ட, சுழலூட்டப்பட்ட உள்வரிசை ஐந்து கலன்கள் கொண்ட ஆடி இயந்திரத்தை ஆடி S1ல் உபயோகிக்கப்பட்டது441 kW (600 PS; 591 bhp).[20] இந்த இயந்திரம் ஆறு வேக முறைகள் கொண்ட பல் சக்கரப் பெட்டியுடன் பிரபலமான ஆடியின் நான்கு சக்கர ஓட்டு முறையையும் கொண்டிருந்தது. இந்த காரை ஓட்டிய, ஆடியின் அனைத்து சிறந்த ஓட்டுனர்கள்: ஹானு மிக்கோலா, ஸ்டிக் புலோம்க்விஸ்ட், வால்டர் ரோல் மற்றும் மிஷேல் மௌடன். இந்த ஆடி S1 ஆடியின் 'S' கார்களுக்கு தொடக்கமாக அமைந்து தற்போது இது முக்கிய வரிசை ஆடி மாதிரி வகைகளோடு அதிகமான விளையாட்டு செயல்திறனுடைய கருவிகளுக்கான சான்றாகவும் அமைகிறது.

அமெரிக்காவில்

தொகு

ஆடி நெடுந்தூர பந்தயத்திலிருந்து சுற்றோட்ட பந்தயத்திற்கு வந்த போது, அவர்கள் முதலில் அமெரிக்காவில் டிரான்ஸ்-ஆம் உடன் 1988 ஆம் ஆண்டு நுழைய முடிவு செய்தார்கள்.

1989 ஆம் ஆண்டு, ஆடி 90 என்ற மாதிரியுடன் ஆடி நிறுவனம் சர்வதேசிய மோட்டார் விளையாட்டு நிறுவனத்தின் (IMSA) GTOவிற்கு வந்தது. தொடர்ந்து வெற்றி பெற்றும், இரண்டு நீடித்து உழைக்கும் திறம் நிகழ்ச்சிகளை (டேடோனா மற்றும் செப்ரிங்க்) தவிர்த்ததால் அவர்கள் வெற்றிவாகையை இழந்தார்கள்.

சுற்றுப்பயணக் கார்கள்

தொகு

1990 ஆம் ஆண்டில், வட அமெரிக்காவில் தங்களுடைய கார்களை சந்தைப்படுத்த வேண்டுமென்ற குறிக்கோளை அடைந்துவிட்டு, ஆடி ஐரோப்பாவிற்குத் திரும்பினார்கள். இந்த முறை முதலாக ஆடி V8 உடன் Deutsche Tourenwagen Meisterschaft (DTM) தொடருக்கு திரும்பினார்கள். புதிய தேவைகளுக்கேற்ப கார்களை தயாரிக்க முடியாமல், 1993 ஆம் ஆண்டில் தொடர் தேசிய போட்டிகளை உள்ளடக்கிய அதிவேகமாக வளர்ந்து வரும் சூப்பர் டூரிங்க் தொடரின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பினார்கள். ஆடி முதலில் ஃப்ரென்ச் சூப்பர்டூரிஸம் மற்றும் இத்தாலியன் சூப்பர்டுரிஸ்மோவில் நுழைந்தார்கள். அடுத்த வருடம், ஆடி ஜெர்மன் சூப்பர் டூரன்வேகன் கோப்பைக்கு (STW என்றழைக்கப்படுவது) சென்றது. அதனையடுத்து பிரித்தானிய டூரிங்க் கார் போட்டிக்கு (BTCC) சென்றது.

Fédération Internationale de l'Automobile (FIA) குவாட்ரோ நான்கு சக்கர ஓட்டும் அமைப்பை முறைப்படுத்துவதிலும், போட்டியாளர்கள் மீது அது ஏற்படுத்திய தாக்கத்தையும் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் எதிர்கொண்டதால், 1998 ஆம் ஆண்டில் அனைத்து நான்கு சக்கர ஓட்டும் அமைப்பு கார்களையும் போட்டியிடுவதிலிருந்து விலக்கியது.[சான்று தேவை] ஆனால் அதற்குள் ஆடி தங்களுடைய அனைத்து வேலைப் பணிகளையும் விளையாட்டு கார் பந்தயத்திற்கு நேர்முகப்படுத்திவிட்டார்கள்.

2000 ஆம் ஆண்டு வரும்போது, ஆடி தொடர்ந்து அமெரிக்காவில் தன்னுடைய RS4ஐக் கொண்டு SCCA ஸ்பீட் வர்ல்ட் GT சேலஞ்சில் பங்கேற்றது. டீலர்/ அணி சேம்பியன் ரேசிங்க் மூலமாக போட்டியிடுவதால் கோர்வே, வைப்பர் மற்றும் சிறிய BMWகளுடன் (இந்த தொடர் மட்டுமே 4WD கார்களை அனுமதிக்கிறது) போட்டியிட்டது. 2003 ஆம் ஆண்டில், சேம்பியன் ரேசிங்க் ஒரு RS6ஐ அறிமுகப்படுத்தியது. மறுபடியும் குவாட்ரோ நான்கு சக்கரம் ஓட்டுதல் அதிக திறனுள்ளதாக இருந்து, சேம்பியன் போட்டியை ஆடி வென்றது. 2004 ஆம் ஆண்டு திரும்பவும் வந்து தங்களுடைய வெற்றிவாகையை தக்கவைத்துக்கொள்ள திரும்பி வந்தனர். ஆனால் காடிலாக் தங்களுடைய புதிய ஒமேகா சாஸிஸ் CTS-Vஐ அறிமுகப்படுத்தி ஆடிக்கு பலமான போட்டியை அளித்தது. நான்கு முறை தொடர்ந்து வெற்றிவாகை சூடினபின்பு, ஆடியில் பல்வேறு எதிர்மறை மாற்றங்கள் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த மாற்றங்கள் காருடைய செயற்திறனில் தாக்கம் ஏற்படுத்தின. கூடுதல் சரளை எடைகள் மற்றும் வித்தியாசமான டையர்கள் மற்றும் சுழல் ஊட்டலின் உந்து அழுத்தத்தை குறைத்தல் போன்ற மாற்றங்களை சேம்பியன் ஆடி செய்தது.

உயிரூட்டப்பட்ட DTM தொடரில் TT-Rஉடன் பல வருடங்கள் தனியார் அணியான ஏப்ட் ரேசிங்குடன்/கிறிஸ்டியான் அபட் 2002கோப்பையை வென்றார் (லாரண்ட் எயிலோவுடன் போட்டியிட்டப்பின் ஆடி 2004 ஆம் ஆண்டில் இரண்டு தொழிற்சாலை ஆதரவுபெற்ற ஜோஎஸ்ட் ரேஸிங்க் A4 DTM கார்களை நுழைத்து ஒரு முழு தொழிற்சாலை முனைப்பாக திரும்ப வந்தது.

விளையாட்டு கார் பந்தயம்

தொகு
 
ஆடி R10 TDI

1999ம் ஆண்டு தொடங்கி, ஆடி விளையாட்டு கார் பந்தயத்தில் போட்டியிடுவதற்காக ஆடி R8Rஐயும் (ஓட்டுநர் இடம்-திறந்தவெளி ‘சாலை’ மாதிரி) ஆடி R8Cஐயும் (ஓட்டுநர் இடம்-மூடப்பட்ட 'coupé' GT-மாதிரி) அறிமுகப்படுத்தினார்கள். இதில் 24 மணி நேர லெமான்ஸ் போட்டியில் கலந்துக்கொள்வதற்கான லெமான்ஸ் முன்மாதிரி LMP900ம் அடங்கும். 2000ம் ஆண்டின் பந்தய காலத்தின் போது, ஓட்டுநர் இடம்-திறந்தவெளி மாதிரிகளுக்கான சாதகமான விதிமுறைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஆடி தன்னுடைய புதிய ஆடி R8 மாதிரியில் கவனம் செலுத்தியது. தொழிற்சாலை-ஆதரிக்கப்பட்ட ஜோஎஸ்ட் ரேஸிங்க் அணி ஆடி R8ஐக் கொண்டு லெமான்ஸ்சில் மூன்று முறை (2000 — 2002) தொடர்ந்து வெற்றிபெற்றது. அதனோடு அதன் முதல் வருடத்தில் அமெரிக்க லெமான்ஸ் தொடரின் ஒவ்வொரு போட்டியையும் வென்றது. ஆடி அந்த காரை சேம்பியன் ரேஸிங்க் போன்ற வாடிக்கையாளர் அணிகளிடமும் விற்றது.

2003 ஆம் ஆண்டில் ஆடியால் வடிவமைக்கப்பட்ட இயந்திரப் பொறிகளையுடைய இரண்டு பெண்ட்லி ஸ்பீட் 8 கார்கள், உடன் பணியாற்றும் வாக்ஸ்வேகன் குழுமம் நிறுவனத்திற்கு கடனாக அளிக்கப்பட்ட ஜோஎஸ்ட் ஓட்டுநர்களால் ஓட்டப்பட்டு, GTP வகுப்பில் போட்டியிட்டு முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. சேம்பியன் ரேஸிங்க் R8 ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தது, LMP900 பிரிவில் முதலிடத்தில் வந்தது. 2004 ஆம் ஆண்டின் பந்தயத்தில் ஆடி வெற்றிமேடையின் மூன்று இடங்களையும் கைப்பற்றியது: ஆடி ஸ்போர்ட் ஜப்பான் டீம் கொ முதலிடம், ஆடி ஸ்போர்ட் UK வெலாக்ஸ் இரண்டாவது இடம் மற்றும் சேம்பியன் ரேஸிங்க் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றியது.

2005 ஆம் ஆண்டின் 24 மணி நேர லெமான்ஸ்சில், சேம்பியன் ரேஸிங்க் இரண்டு R8களை போட்டியில் நிறுத்தியது. அதோடு ஆடி பிளேஸ்டேஷன் அணி ஒரேகாவிலிருந்து ஒரு R8ஐயும் நிறுத்தியது. இந்த R8களில் (பழைய LMP900 கட்டுப்பாடுகளுக்கிணங்க தயாரிக்கப்பட்ட இவை) ஒரு நெருக்கமான காற்று உள்வழி தடுப்பு இருந்தது. மேலும் இதன் சக்தி குறைக்கப்பட்டு, அதன் புதிய LMP1 அடித்தட்டோடு ஒப்பிடும்போது கூடுதல் 50 kg (110 lb) எடையுடையதாயிருந்தது. சராசரியாக, R8கள் பெஸ்காரலோ-ஜட்டுடன் ஒப்பிடப்படும் போது 2 - 3 நோடிகள் பின் தங்கியிருந்தன. ஆனால் அனுபவமும் திறமையுமுள்ள ஓட்டுனர்களுள்ள அணியின் துணையால், சேம்பியன் R8ன் இரண்டு கார்களும் முதலாம் மற்றும் மூன்றாவது இடத்தைக் கைப்பற்றின. ORECA அணி நான்காவது இடத்தை பிடித்தது. 1967 ஆம் ஆண்டில் கல்ஃப் ஃபோர்டின் GTக்கு பிறகு சேம்பியன் டீம் தான் லெமான்ஸ்சில் வெற்றிபெறுவதற்கான முதல் அமெரிக்க அணியாகும். இது R8ன் நீண்ட சகாப்தத்தையும் முடிக்கிறது; எனினும், 2006 ஆம் ஆண்டின் அதின் மாற்றாக, ஆடி R10 TDI என்றழைக்கப்பட்ட கார், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி வெளிக்கொண்டுவரப்பட்டது.

R10 TDIல் பல புதிய அம்சங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது, இரட்டை-சுழலூட்டப்பட்ட நேரடி உட்செலுத்துதல் டீசல் இயந்திரப் பொறியாகும். அதன் முதல் பந்தயம் 2006 ஆம் ஆண்டின் 12 மணி நேர செப்ரிங்காகும். இது 2006 ஆம் ஆண்டின் 24 மணி நேர லெமான்சிற்கு சோதனைக்களமாக இருந்தது. இந்த லெமான்ஸ்சையும் இந்த கார் வென்றது. ஆடி, விளையாட்டு கார் பந்தயத்தின் முன்னணியில் இருந்திருக்கிறது. செப்ரிங்கில் 12 மணி நேர போட்டியை வென்ற முதல் டீசல் விளையாட்டு கார் என்ற வரலாற்றுப் பெருமையையும் சம்பாதித்தது. 2006ம் ஆண்டில் R10 TDI சரித்திரம் படைத்து, அதன் ஆற்றல்களை வெளிப்படுத்தி, 24 மணி நேர லெமான்ஸ்சை வெல்வதோடு பூஜோவை 908 HDi FAPவையும் தோற்கடித்தது. 2008ம் ஆண்டில் பூஜோவை மறுபடியும் தோற்கடித்தது.

சந்தைப்படுத்துதல்

தொகு
 
2009ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்த ஆடியின் சின்னம்

சின்னங்கள்

தொகு

ஆட்டோ யூனியனின் நான்கு வணிகச்சின்னங்களைக் குறிக்கும் நான்கு பிணைந்த வளையங்களை ஆடியின் வணிகச் சின்னம் கொண்டிருக்கிறது. ஆடியின் வணிகச்சின்னம் DKW, ஹார்ச் மற்றும் வாண்டரருடன் ஆடி சேர்ந்ததைக் குறிக்கிறது: முதல் வளையம் ஆடியை, இரண்டாவது, DKWஐ, மூன்றாவது ஹார்சையும் நான்காவது இறுதி வளையம் வாண்டரரையும் குறிக்கின்றது.[21][22] ஒலிம்பிக் வளையங்களுடன் அது ஒப்பிடக்கூடியதால், 1995 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் கமிட்டி ஆடியின் மீது ரோஷெஸ்டர், MN சிறிய கோரிக்கைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[23]

ஆடியின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2009 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் தன்னுடைய சின்னத்தை புதுமைப்படுத்தியது. எழுத்துருவை இடது-பக்கம் சாய்ந்த ஆடி வகை ஆக்கியது. பிணைந்த வளையங்களின் நிழல் வளைவை மாற்றியது.[24]

கோஷங்கள்

தொகு

ஆடியின் வணிக கோஷம் Vorsprung durch Technik ஆகும். இதன் அர்த்தம் “தொழில்நுட்பத்தின் மூலம் முன்னேற்றம்” என்பதாகும்.[25] ஜெர்மன் மொழியிலான இந்த கோஷம், இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும், லத்தீன் அமெரிக்கா, ஓசியானியா மற்றும் ஜப்பான் உட்பட ஆசியாவின் சில பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு வட அமெரிக்காவில் “தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடிப்பு” என்ற வணிக கோஷம் இருந்தது. ஆனால் கனடாவில் விளம்பரங்களில் Vorsprung durch Technik என்றே பயன்படுத்தப்பட்டது. இன்னும் அன்மையில், ஆடி அமெரிக்காவில் “பொறியியலில் உண்மை” என்ற வணிக கோஷமாக புதுமைப்படுத்தியிருக்கிறது.

நிதியளிப்புகள்

தொகு

ஆடி பலவிதமான விளையாட்டுகளை வலுவாக ஆதரிக்கிறது. கால்பந்தாட்டத்தில், ஆடிக்கும் FC பேயர்ன் ம்யூனிக், ரியால் மாட்ரி CF, FC பார்சிலோனா, AC மிலான் மற்றும் அயாக்ஸ் ஆம்ஸ்டெர்டாம் போன்ற கிளப்புகளும் நெடுங்கால கூட்டாளிகளாக இருக்கின்றனர். ஆடி பனி விளையாட்டுகளையும் ஆதரிக்கிறது: ஆடி FIS ஆல்பைன் (ஆல்ப்ஸ் மலை சார்ந்த) பனிச்சறுக்கு உலகக் கோப்பை இந்த நிறுவனத்தின் பேரில் பெயரிடப்பட்டிருக்கிறது. கூடுதலாக ஆடி ஜெர்மன் பனிச்சறுக்கு அமைப்பு (DSV) மற்றும் ஸ்விட்சர்லாந்து, ஸ்வீடன், ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், லீஷ்டென்ஸ்டைன், இத்தாலி, ஆஸ்த்ரியா மற்றும் அமெரிக்காவின் ஆல்பைன் பனிச்சறுக்கு அணிகளையும் ஆதரித்துவருகிறது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளாக ஆடி கால்ஃப் விளையாட்டை ஆதரித்துவருகிறது: உதாரணத்திற்கு ஆடி குவாட்ரோ கோப்பையும், ஹைப்போவெரியின்ஸ்பாங்க் மகளிர் ஜெர்மன் ஓப்பனும் ஆடியின் மூலம் வழங்கப்படுகிறது. பாய்மரப்படகோட்டுதலில் (செய்லிங்க்), ஆடி மெட்கப் படகுப்போட்டியில் (ரெகாட்டா) ஈடுபட்டுள்ளது. அதோடு லூயி வியுட்டன் பசிபிக் தொடரில் லூனா ரோஸா அணியையும் ஆதரிப்பதுடன், மெல்ஜஸ் 20 பாய்மரப் படகில் முதனிலை நிதியளிப்பவராகவும் இருக்கிறது. மேலும், ஆடி ERC இன்கோல்ஸ்டாட் (ஹாக்கி) மற்றும் FC இன்கோல்ஸ்டாட் (கால்பந்து) ஆகிய உள்ளூர் அணிகளையும் ஆதரிக்கிறது.[26] 2009 ஆம் ஆண்டில், ஆடியின் 100வது ஆண்டில், முதல் முறையாக, ஆடி நிறுவனம் ஆடி கோப்பையை நடத்துகிறது. FC பேயர்ன் ம்யுனிக், AC மிலான், மான்சஸ்டர் யுனைடட் FC மற்றும் CA போக்கா ஜூனியர்ஸ் ஆகிய கிளப்புகள் இரண்டு-நாள் போட்டியில் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொள்வார்கள்.[27]

அச்சுக்கலை

தொகு

மெடாடிசைனுக்காக ஒலெ சாஃபர் 1997 ஆம் ஆண்டில் முதலில் ஆடி சான்ஸை (யுனிவெர்ஸ் எக்ஸ்டண்டடின் அடிப்படையில்) உருவாக்கினார்.

பிற்பாடு போல்ட் மண்டேயின் பால் வான் டெர் லான் மற்றும் பீட்டர் வான் ரோஸ்மாலென் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட ஆடி டைப் என்ற ஒரு புதிய வணிக அச்சுமுகத்தை அமுல்படுத்த மெடாடிசைன் அமர்த்தப்பட்டனர். இந்த எழுத்துரு ஆடியின் 2009 ஆம் ஆண்டின் தயாரிப்புப் பொருட்களிலும் சந்தைப்படுத்தும் பொருட்களிலும் தோன்றத் துவங்கியது.[28]

வீடியோ கேம்களில்

தொகு

பிளேஸ்டேஷன் 3ன் இணையத்தள சமூக-அடிப்படையிலான சேவையான, பிளேஸ்டேஷன் ஹோமில், ஆடி ஹோமிற்கு அதன் தியேட்டர் வடிவத்தில் நிகழ்ச்சி உருவாக்கலுக்காக உதவிபுரியும். பிற்பாடு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஹோம்ஸ்பேஸ் உண்டாக்க உதவி செய்யும். ஹோமுக்கு ஒரு ஸ்பேஸ் உண்டாக்கிய முதல் கார் வடிமைப்பாளர் ஆடியாகும். இந்த ஸ்பேஸ் “ஆடி ஸ்பேஸ்” என்றழைக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டின் பிந்தையப் பகுதியில் வெளியிடப்படும். முதலில் ஒரு ஆடி TV சேனல் வீடியோ நிகழ்ச்சிகளை வழங்குவதாக வெளியிடப்படும். 2009 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆடியுடைய ஈ-டிரான் கருத்தாக்கத்தை முக்கியப்படுத்தும் ஒரு எதிர்கால சிறு-விளையாட்டான, சிறு-விளையாட்டு வெர்ட்டிக்கல் ரன் சேர்க்கப்படுவதற்கென விரிவாக்கப்படும். விளையாடுபவர்கள் மிக உயர்ந்த வேகம் எட்டும்போது சக்தி சேகரிக்கிறார்கள். மிகவும் வேகமான ஆட்டக்காரர்கள் ஆடி ஸ்பேஸின் மத்தியில் இருக்கும் பெரிய கோபுரத்தில் அமைந்திருக்கும் ஆடி அபார்ட்மெண்ட்ஸில் ஒரு இடத்தைப் பெறுகிறார்கள். கூடுதல் நிகழ்ச்சிகள் 2010 சேர்க்கப்படுமென்று ஆடி கூறியிருக்கிறது.[29]

ஆடியின் இணையத்தள விற்பனையில் வீடியோ விளையாட்டுகளுக்கும் மெய்நிகர் உலகங்களையும் உருவாக்கும் பொறுப்பையும் கொண்ட காய் மென்சிங்க், “பெரும்பாலான இளையோர் தங்களுடைய முதல் ஓட்டும் அனுபவத்தை வீடியோ விளையாட்டுகளிலிருந்து பெறுகிறார்கள்” என்றார். “இந்த சாராரான மக்களுக்கு எங்களுடைய அதி உணர்ச்சி-ததும்பும், ஊடாடும் சூழலில், எங்களுடைய 'Vorsprung durch Technik' ஐ வெளிக்காட்டவும், எங்களுடைய மெய்நிகர் ஈ-ட்ரான் பந்தயத்துடன் தொடர்பில் கொண்டுவரவும் எங்களுடைய வணிகப்பெயருடன் அறிமுகப்படுத்தவும் ஆடி ஸ்பேஸ் உதவுகிறது.”

ஆடி TDI

தொகு

2009 ஆம் ஆண்டில் ஆடி தன்னுடைய டீசல் தொழில்நுட்பத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஆடி மைலேஜ் நீண்டத் தூர ஓட்டப் பந்தயத்தைத் தொடங்கியது. இந்த ஓட்டும் நெடும் பயணத்தின் போது 4 மாதிரிகளிலிருந்து (ஆடி Q7 3.0 TDI, ஆடி Q5 3.0 TDI, ஆடி A4 3.0 TDI, S ட்ரானிக் டிரான்ஸ்மிஷனுடன் ஆடி A3 ஸ்போர்ட்பேக் 2.0 TDI) 23 ஆடி TDI வாகனங்கள் நியுயார்க் முதல் லாஸ் ஏஞ்சலிஸ் வரை அமெரிக்க கண்டத்தின் குறுக்கே சென்றன. இந்த 13 தினசரி கட்டங்களின் போது சிகாகோ, டல்லாஸ் மற்றும் லாஸ் வேகஸ் ஆகிய நகரங்களினூடாக இந்த கார்கள் சென்றதோடு இயற்கை அதிசயங்களான ராக்கி மலைகள், டெத் வேலி மற்றும் த கிராண்ட் கான்யன் ஆகியவற்றினூடாகவும் சென்றன.[30]

குறிப்புகள்

தொகு
 1. "1909 - Audi Automobilwerke is established in Zwickau". Audi Of America. Archived from the original on 2009-04-30. பார்க்கப்பட்ட நாள் 2009-04-05.
 2. 2007 Annual Report பரணிடப்பட்டது 2009-02-10 at the வந்தவழி இயந்திரம் Audi AG
 3. 3.0 3.1 3.2 ஆடி இணையதளம் http://www.audi.com/audi/com/en2/about_audi_ag/history/chronicle/chronicle_1899_1914.html பரணிடப்பட்டது 2009-02-07 at the வந்தவழி இயந்திரம்
 4. "Audi Company History". carautoportal.com. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2009-08-10.
 5. A History of Progress – Chronicle of the Audi AG. Audi AG, Public Relations. 1996. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8376-0384-6.
 6. 6.0 6.1 ஆடி இணையதளம் http://www.audi.com/audi/com/en2/about_audi_ag/history/chronicle/chronicle_1915_1929.html பரணிடப்பட்டது 2009-02-04 at the வந்தவழி இயந்திரம்
 7. ஆடி இணையதளம் http://www.audi.com/audi/com/en2/about_audi_ag/history/chronicle/chronicle_1930_1944.html பரணிடப்பட்டது 2009-02-04 at the வந்தவழி இயந்திரம்
 8. 8.0 8.1 8.2 ஆடி இணையத்தளம் http://www.audi.com/audi/com/en2/about_audi_ag/history/chronicle/chronicle_1945_1959.html பரணிடப்பட்டது 2009-02-04 at the வந்தவழி இயந்திரம்
 9. "VEB Automobilwerk Zwickau (german)". பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
 10. 10.0 10.1 "Audi Worldwide > Home". Audi.com. 2009-04-15. Archived from the original on 2009-02-04. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
 11. "Audi Press Release 2008 production (german)". பார்க்கப்பட்ட நாள் 2009-01-18.
 12. ஆடி இணையதளம் http://www.audiusa.com/audi/us/en2/tools/glossary/chassis_body/corrosion_protection.html
 13. Audi of America - http://www.audiusa.com. "Audi of America > Glossary > Chassis & Body > Galvanized body". Audiusa.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27. {{cite web}}: External link in |author= (help)
 14. "எரர் - LexisNexis வெளியீட்டாளர்". Archived from the original on 2008-06-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
 15. "Audi A1 Sportback concept". Next Concept Cars. 2008-10-02. Archived from the original on 2009-03-17. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
 16. Korzeniewski, Jeremy (2008-10-02). "Audi unveils A4 TDI concept e". Autobloggreen.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
 17. "Audi e-Tron Electric Supercar Concept Unveiled". Audisite.com. Archived from the original on 2017-11-29. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
 18. "World Rally Championship for Drivers - Champions". RallyBase.nl. பார்க்கப்பட்ட நாள் 2008-08-30.
 19. "World Rally Championship for Manufacturers - Champions". RallyBase.nl. பார்க்கப்பட்ட நாள் 2008-08-30.
 20. "25 Years of Audi Quattro". Audi AG. Audi Of America. 2005-02-22. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
 21. "History of the Four Rings-Part 1-Audi Auto Union". Seriouswheels.com. Archived from the original on 2016-12-10. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
 22. Alina Dumitrache. "Audi Reveals Updated Logo". autoevolution.com. பார்க்கப்பட்ட நாள் 2009-08-27.
 23. "நூற்றாண்டு கொண்டாட்டங்களையடுத்து ஆடி புதுமைப்படுத்தப்பட்ட சின்னத்தை வெளியாக்குகிறது". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
 24. "Eco-Culture". Audi magazine (3/08): 19. 
 25. "Audi Worldwide > Experience > Sponsoring > Sport". Audi.com. 2009-06-11. Archived from the original on 2009-09-23. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
 26. "FC Bayern". Fcbayern.t-home.de. 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
 27. "ஆடிக்கான அச்சுக்கலை மறு அறிமுகம்". Archived from the original on 2017-11-20. பார்க்கப்பட்ட நாள் 2010-01-04.
 28. "Audi creates virtual Audi Space within PlayStation Home". CNET Reviews.
 29. நாட்டின் குறுக்கே செல்லும் மைலேஜ் மாரத்தான் கொண்டு ஆடி டீசல் பயன்பாட்டை விளம்பரப்படுத்துகிறது

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடி_(நிறுவனம்)&oldid=3924545" இலிருந்து மீள்விக்கப்பட்டது