ஆண்டமுக்கம்
ஆண்டமுக்கம் (Aandamukkam) என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரின் சுற்றுப்புறப் பகுதியாகும். கொல்லம் நகரின் ஒரு பகுதியாக இப்பகுதி கருதப்படுகிறது. அண்டமுக்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் மிக முக்கியமான துறைமுக நகரமாகவும் கொல்லம் நகரின் முதன்மையான வணிக மையங்களில் ஒன்றாகவும் ஆண்டமுக்கம் திகழ்ந்தது. கொல்லத்தில் மாநகர பேருந்து நிலையம் ஆண்டமுக்கத்தில். [1] கொல்லத்தின் பிற சுற்றுப்புறங்களும் ஆண்டமுக்கத்திற்கு அருகாமையில் இருப்பதால், நகரின் முக்கிய வணிக மையமாகவும் போக்குவரத்து மையமாகவும் இப்பகுதி திகழ்கிறது. [2]
ஆண்டமுக்கம்
Andamukkam ஆண்டமுக்கம் | |
---|---|
அக்கம் | |
ஆள்கூறுகள்: 8°53′04″N 76°35′23″E / 8.884466°N 76.589775°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | கொல்லம் மாநகராட்சி ஆணையம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691001 |
வாகனப் பதிவு | KL-02 |
மக்களவை (இந்தியா) தொகுதி | கொல்லம் |
குடிமை நிறுவனம் | கொல்லம் மாநகராட்சி ஆணையம் |
சராசரி கோடைகால வெப்பநிலை | 34 °C (93 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | http://www.kollam.nic.in |
வணிகமும் வணிகமயமாக்கலும்
தொகுஆண்டமுக்கம் கொல்லத்தின் மத்திய வணிக மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். நகரின் பெரும்பாலான அச்சு மற்றும் ஊடக வெளியீடு அலுவலகங்கள் இங்கு இயங்குகின்றன. [3] கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூன்று பிராந்திய அலுவலகங்களில் ஒன்று மற்றும் அவற்றின் மாவட்ட அலுவலகம் ஆண்டமுக்கத்தில் உள்ளது [4] கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மற்ற பிராந்திய அலுவலகங்கள் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் உள்ளன. [5] பல பதிவு செய்யப்பட்ட விளம்பரதாரர்கள் மற்றும் முகவர்கள் ஆண்டமுக்கத்தில் செயல்படுகின்றனர். [6]
நிறுவனங்கள்
தொகு- நகர பேருந்து நிலையம்
- கேரள பொது சேவை ஆணையத்தின் பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலகங்கள்
- மாநகராட்சி ஆணையக கட்டிடம்
- நானி உணவு விடுதி
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Restore Chinnakkada bus stand". The New Indian Express. http://www.newindianexpress.com/states/kerala/article105424.ece?service=print.
- ↑ "Shortage of drivers may hit services". The New Indian Express. http://www.newindianexpress.com/states/kerala/article278225.ece?service=print.
- ↑ "Media in Kerala". http://www.kerala.gov.in/docs/2014/medialist_14.pdf.
- ↑ "Kerala PSC" இம் மூலத்தில் இருந்து 2014-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141015225255/http://pscsuccess.com/kerala-psc/kerala-public-service-commission/.
- ↑ "Kerala PSC Help Desk" இம் மூலத்தில் இருந்து 2014-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141015182107/http://www.keralapschelpdesk.net/2011/06/kerala-psc-regional-offices-phone.html.
- ↑ "Trademarks". http://ipindia.nic.in/tmr_new/tm_journal/Journal_TMR_1632.pdf.