ஆதித்தியன்
ஆதித்தியன் (இயற்பெயர்: டைட்டஸ், 9 ஏப்ரல், 1954 - 6 டிசம்பர், 2017) என்பவர் இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இவர் தான் இசையமைத்த படங்களிலும், பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் இந்தியாவிலும், மலேசியாவிலும் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.[2] இவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், இவரது ஓவியங்கள் பல வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. இவர் 2017 திசம்பர் 5 அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.[3][4]
ஆதித்யன் | |
---|---|
இயற்பெயர் | டைட்டஸ் |
பிறப்பு | ஏப்ரல் 9, 1954 தமிழ்நாடு, தஞ்சாவூர் |
இறப்பு | திசம்பர் 6, 2017 ஆந்திரப் பிரதேசம், ஐதராபாத்து | (அகவை 63)
தொழில்(கள்) | இசையமைப்பாளர்[1] |
இசைத்துறையில் | 1992–2003 |
வாழ்க்கை
தொகுஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய இவர், "வெத்தல போட்ட" மற்றும் "சந்திரரே சூரியரே" போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் இவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 இக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[5]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
1992 | அமரன் | தமிழ் | |
1992 | நாளைய செய்தி | தமிழ் | |
1992 | டேவிட் அங்கிள் | தமிழ் | |
1993 | மின்மினி பூச்சிகள் | தமிழ் | |
1994 | சீவலப்பேரி பாண்டி | தமிழ் | |
1994 | சின்னபுள்ள | தமிழ் | |
1995 | தொட்டில் குழந்தை | தமிழ் | |
1995 | உதவும் கரங்கள் | தமிழ் | |
1995 | லக்கி மேன் | தமிழ் | |
1995 | அசுரன் | தமிழ் | |
1995 | மாமன் மகள் | தமிழ் | |
1996 | அருவா வேலு
|
தமிழ் | |
1996 | கிழக்கு முகம்
|
தமிழ் | |
1996 | துறைமுகம்
|
தமிழ் | |
1997 | மை இந்தியா
|
தமிழ் | |
1997 | ரோஜா மலரே
|
தமிழ் | |
1998 | கலர் கனவுகள்
|
தமிழ் | |
1998 | ஆசைத் தம்பி
|
தமிழ் | |
1999 | சிவன்
|
தமிழ் | |
1999 | காமா
|
தமிழ் | |
2000 | அதே மனிதன் | தமிழ் | |
2001 | சூப்பர் குடும்பம்
|
தமிழ் | |
2003 | கோவில்பட்டி வீரலட்சுமி
|
தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Guess List". www.indolink.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11.
- ↑ "Noted musician Adithyan passes away". 6 December 2017 – via www.thehindu.com.
- ↑ "INDOlink Film Review: Lucky Man". www.indolink.com. Archived from the original on 1997-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.
- ↑ "A-Z (I)". indolink.com. Archived from the original on 2017-07-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-08. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08.