ஆப்கானித்தானில் பாலியல் தொழில்

ஆப்கானித்தானில் பாலியல் தொழில் (Prostitution in Afghanistan) என்பது சட்டவிரோதமானது. இதற்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.[1] இந்த நாடு ஆழ்ந்த மத மற்றும் உலகின் பழமைவாத நாடுகளில் ஒன்றாகும்.அங்கு திருமணத்திற்கு வெளியே பாலுறவு சட்டத்திற்கு எதிரானது. மேலும் மரணத்திற்கு வழிவகுக்கும்.[2][3]

பல அரசு சார்பற்ற அமைப்புகள் வறுமை காரணமாக வரும் விபச்சாரம் அதிகரித்து வருவதாக அறிவித்துள்ளன.[4] ஒரு அறிக்கை 2015 இல் நாட்டில் 12,500 பாலியல் தொழிலாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5] 2019ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் அடிப்படையில் காபுல், எறாத்து, மசார் ஈ சரீப், ஜலாலாபாத்தில் 11,000 பாலியல் தொழிலாளிகள் இருப்பதாக எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகள் திட்டம் மதிப்பிட்டுள்ளது.[6] நாட்டில் இருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதற்கு முன்பு, அமெரிக்கத் தளங்களைச் சுற்றி பாலியல் தொழிலாளி விடுதிகள் பற்றியும், பாலியல் பற்றிய செய்திகளும் வந்துள்ளன.[7]

சீனா, ஈரான், பாக்கித்தான், பிலிப்பீன்சு, இலங்கை, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆப்கானித்தானுக்கு பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டுள்ளனர்.[8] ஆப்கானித்தான் பெண்களும் பாலியல் சுரண்டலுக்காக மற்ற நாடுகளுக்கு கடத்தப்படுகிறார்கள் 'பச்சா பாசி' வடிவத்தில் குழந்தை விபச்சாரமும் நாட்டில் ஒரு பிரச்சனையாக உள்ளது.[8]

சட்டபூர்வமான மற்றும் விளைவுகள்

தொகு

ஆப்கானித்தானில் பாலியல் தொழில் செய்வது சட்டவிரோதமானது. இதற்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், திருமணமாகவில்லை என்றால் 80 கசையடிகளும் கிடைக்கும். ஆப்கான் தண்டனைச் சட்டத்தின் கீழ் திருமணமான பாலியியல் தொழிலாளிகளிலும் ஆப்கானித்தான் தண்டனை சட்டத்தின் கீழ் முறைபிறழ்புணர்ச்சியாளர்களாக கருதப்படுகிறார்கள். தாலிபான்களால் பாலியியல் தொழில் இன்றும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. கலாச்சார அடிப்படைவாதிகள் மற்றும் இசுலாமியர்களால் சட்டத்திற்கு புறம்பான கொலைக்கு ஆபத்தில்லாத திருமணத்திற்கு புறம்பான பாலுறவு கொண்டவர்கள் உட்படுத்தப்படுகிறார்கள்.

சட்டத்திற்கு புறம்பான அபாயங்கள்

தொகு

சூலை 2008 இல், கசுனி மாகாணத்தில் இரண்டு பெண்கள் இரகசியமாக பாலியல் தொழிலை நடத்தியதாகவும், அவர்கள் காவல்துறையில் பணிபுரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு, தாலிபான்களால் கொல்லப்பட்டனர். இருப்பினும் அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த உள்ளூர் அதிகாரிகளும் அமெரிக்க இராணுவமும் அந்தப் பெண்கள் குற்றமற்றவர்கள் என்று கூறினார்கள்.[9] பாலியியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பெண்கள் சூலை 2010இல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[10]

இயக்கவியல்

தொகு

1990களில், காபுலில் பாலியல் தொழில் இரகசியமாக இருந்தது. இசுலாமியச் சட்டத்தின் மிகக் கடுமையான விளக்கத்தைத் தொடர்ந்து அரசாங்கம் இதை சட்டவிரோதமாக்கியது. மெலிசா டிட்மோர் என்பவர் "பாலியலும் பாலியல் பணியும்" பற்றிய கலைக்களஞ்சியத்தில் "அவர்களின் ஆட்சியின் போது பெண்களில் பாலியல் தொழிலுக்கான போக்குவரத்து செழித்து வளர்ந்தது" என்று எழுதினார்.[11][12] பாலியல் தொழிலாளிகள் பெரும்பாலும் 'காலாஸ்' என்று அழைக்கப்படும் தங்கள் தனிப்பட்ட வீடுகளில் இருந்து வேலை செய்தனர். காபுலில் 25 முதல் 30 மறைக்கப்பட்ட இவ்வாறான விடுதிகள் இருந்தன.[12][13][14]

நாட்டில் பாலியல் தொழில் பெரும்பாலும் வறுமை மற்றும் இடப்பெயர்ச்சியால் உந்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.[15] தாலிபான் ஆட்சியின் போது பெண்கள் வேலை செய்ய தடை விதித்ததால், சில தெரு குழந்தைகள் வாழ்வாதாரத்திற்காக இதில் தள்ளப்பட்டனர்.[16] 2010 ஆம் ஆண்டு காபுலில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் ஆள் கடத்தல் அறிக்கையின் படி, ஈரான், தஜிகிஸ்தான், சீனா, உகாண்டா மற்றும் பிற இடங்களிலிருந்து வரும் பெண்கள் ஆப்கானித்தானில் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்டனர்.[17]

ஈரான், தஜிகிஸ்தான், உகாண்டா, சீனாவைச் சேர்ந்த சிறுமிகளும் பெண்களும் ஆப்கானித்தானில் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சில சர்வதேச ஒப்பந்ததாரர்கள் இந்தப் பெண்களின் பாலியல் கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம். பாலியல் தொழில் விடுதிகளும் வளையங்களும் சில சமயங்களில் வெளிநாட்டினரால் நடத்தப்படுகின்றன. சில சமயங்களில் பெரிய குற்றப் பின்னணி கொண்ட வலையமைகளுடன் இணைப்புகள் உள்ளன. தஜிக் பெண்கள் பாலியல் தொழிலுக்காக ஆப்கானித்தான் வழியாக மற்ற நாடுகளுக்கு கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. கடத்தப்பட்ட ஈரானிய பெண்கள் பாக்கித்தானுக்கு செல்லும் வழியில் ஆப்கானித்தானுக்கு செல்கின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "2008 Human Rights Report: Afghanistan". US Department of State. 2008. Archived from the original on 26 February 2009. பார்க்கப்பட்ட நாள் 13 October 2008.
  2. "An Afghan city economic success extend to its sex trade". Azam Ahmed. April 17, 2013. https://www.nytimes.com/2013/04/18/world/asia/mazar-i-sharifs-economic-success-extends-to-its-sex-trade.html. 
  3. Carlotta Gall (19 March 2007). "A New Sorrow for Afghanistan: AIDS Joins List (page 1)". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 17 August 2010.
  4. Glinski, Stefanie (14 June 2021). "'I'm sacrificing myself': agony of Kabul's secret sex workers". The Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
  5. Burrows, D.; McCallum, L.; Parsons, D.; Falkenberry, H. (April 2019). "Global Summary of Findings of an Assessment of HIV Service Packages for Key Populations in Six Regions" (PDF). APMG Health. Washington, DC. p. 134. Archived from the original (PDF) on 17 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 5 March 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Afghanistan". www.unaids.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 March 2021.
  7. Vine, David (8 October 2017). "Women's labor, sex work and U.S. military bases abroad". Salon (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.
  8. 8.0 8.1 "Afghanistan 2020 Trafficking in Persons Report". United States Department of State. பார்க்கப்பட்ட நாள் 22 August 2021.  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  9. "Afghan women shot dead by Taleban". BBC News. 13 July 2008. பார்க்கப்பட்ட நாள் 31 July 2010.
  10. Jafar Tayar (7 July 2010). "Women barred from venturing out of homes". Pajhwok Afghan News. பார்க்கப்பட்ட நாள் 2 November 2010.
  11. Encyclopedia of Prostitution and Sex Work.
  12. 12.0 12.1 "Prostitution Under the rule of Taliban". RAWA. August 1999. பார்க்கப்பட்ட நாள் 22 August 2010.
  13. M. Ilyas Khan (August 1999). "Beyond Good or Evil". The Herald Magazine. RAWA. பார்க்கப்பட்ட நாள் 22 August 2010.
  14. "RAWA Interview with some prostitutes". RAWA. June 2002. பார்க்கப்பட்ட நாள் 22 August 2010.
  15. Tahir Qadiry (18 May 2008). "Under wraps, prostitution rife in north Afghanistan". Reuters. பார்க்கப்பட்ட நாள் 25 May 2010.
  16. Cesar Chelala (17 July 1999). "Taliban conducts a war against women". The Japan Times. பார்க்கப்பட்ட நாள் 16 August 2010.
  17. {{Cite web|url=http://kabul.usembassy.gov/tip2010report.html%7Ctitle=Trafficking[தொடர்பிழந்த இணைப்பு] in Persons Report 2010|year=2010|publisher=United States Embassy in Kabul|archive-url=https://web.archive.org/web/20110615030720/http://kabul.usembassy.gov/tip2010report.html%7Carchive-date%3D15 June 2011|access-date=2 August 2010