ஆம்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

ஆம்பள்ளி (Ampalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், பருகூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது குட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

ஆம்பள்ளி
ஆழ்வாருக்கு பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 107

பெயராய்வு தொகு

இந்த ஊரின் மேற்கே உள்ள பாறையில் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது மூன்றாம் இராஜராஜ சோழனது ஏழாவது ஆட்சியாண்டு காலக் கல்வெட்டு ஆகும். அதில் கங்க காமிண்டன் என்பவர் விடுகாதழகிய பெருமாள் ஆழ்வாருக்கு பள்ளிச் சந்தமாக கட்டின குட்டையைப் பற்றிய குறிக்கிறது. இதில் வரும் ஆழ்வாருக்கு பள்ளி என்ற பெயரே பிற்காலத்தில் ஆம்பள்ளி என சுருங்கி வழங்கப்படுகிறது.[1]

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரிக்கு கிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவிலும், பருகூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 246 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]

சமணத் தலம் தொகு

ஆம்பள்ளி ஒரு சமணத் தலமாக இருந்தது பல சான்றுகள் வழியாக அறிய முடிகிறது. பதிமூன்றாம் நூற்றாண்டில் அதியர் மரபின் மன்னனான விடுகாதழகிய பெருமாள் இங்கு சமணப் பள்ளி அமைத்ததும். அப்பள்ளி அதியமான் பெயரிலேயே இராச ராச அதியமானார் விடுகாதழகிய பெருமாளேன் ஆழ்வான் பள்ளி என்று அழைகப்பட்டது கல்வெட்டுகள் வழியாக தெரியவருகிறது. இக் கல்வெட்டு ஆம்பள்ளிக்கு மேற்கே ஜிஞ்சம்பட்டி ஊருக்கு செல்லும் சாலையில் 2-3 கிலோமீட்டர் தொலைவில் மூன்று குண்டுகள் என்று அழைக்கப்படும் மூன்று பெரிய பாறைகளில் முதல் பாறையில் உள்ளது. இரண்டாம் பாறையில் சமண தீர்த்தரங்கரின் சிற்பம் அமைந்துள்ளது. மூன்றாவது பாறையில் சித்திர மேழி எனப்படும் ஏர்கலப்பை கோட்டுருவமாக செதுக்கபட்டுள்ளது. [3]

மேற்கோள் தொகு

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 119. 
  2. "Ampalli Village , Bargur Block , Krishnagiri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
  3. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். பக். 121-122. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பள்ளி&oldid=3752784" இலிருந்து மீள்விக்கப்பட்டது