ஆர்சனிக் மூவயோடைடு
ஆர்சனிக் மூவயோடைடு (Arsenic triiodide ) என்பது AsI3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் சிவப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் எளிமையாக பதங்கமாகிறது பட்டைக்கூம்பு மூலக்கூறான இச்சேர்மம் கரிம ஆர்சனிக் சேர்மங்கள் தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆர்சனிக் மூவயோடைடு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவயோடோ ஆர்சேன் | |
வேறு பெயர்கள்
ஆர்சனிக்(III) அயோடைடு
ஆர்சனசு அயோடைடு | |
இனங்காட்டிகள் | |
7784-45-4 | |
ChemSpider | 22979 |
EC number | 232-068-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24575 |
வே.ந.வி.ப எண் | CG1950000 |
| |
பண்புகள் | |
AsI3 | |
வாய்ப்பாட்டு எடை | 455.635 கி/மோல் |
தோற்றம் | ஆரஞ்சு-சிவப்பு நிறப் படிகத் திண்மம் |
அடர்த்தி | 4.69 கி/செ.மீ3 |
உருகுநிலை | 146 °C (295 °F; 419 K) |
கொதிநிலை | 403 °C (757 °F; 676 K) |
6 கி/100 மி.லி | |
கரைதிறன் | ஆல்ககால், ஈதர், CS2 ஆகியனவற்றில் கரையும். |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.23 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம், hR24, இடக்குழு = R-3, No. 148 |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
[1910.1018] TWA 0.010 மி.கி/மீ3[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
Ca C 0.002 மி.கி/மீ3 [15-நிமிடங்கள்][1] |
உடனடி அபாயம்
|
Ca [5 மி.கி/மீ3 (As தனிமமாக)][1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஆர்சனிக் முக்குளோரைடு மற்றும் பொட்டாசியம் அயோடைடு வினைபுரிவதால் ஆர்சனிக் மூவயோடைடு உருவாகிறது:[2]
- AsCl3 + 3KI → AsI3 + 3 KCl.
வினைகள்
தொகுஆர்சனிக் மூவயோடைடு தண்ணீரில் மெல்ல நீராற்பகுப்பு அடைந்து ஆர்சனிக் மூவாக்சைடு மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைத் தருகிறது. ஐதரயோடிக் அமிலத்துடன் சமநிலை கொண்டுள்ள ஆர்சனசமிலம் உருவாதல் வழியாக இவ்வினை நிகழ்கிறது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசல் உயர் அமிலத்தன்மையுடன் காணப்படுகிறது. (0.1N கரைசலின் pH =1.1) 200° செல்சியசு வெப்பநிலையில் இது, ஆர்சனிக் மூவாக்சைடு, தனிமநிலை ஆர்சனிக் மற்றும் அயோடினாகச் சிதைவடைகிறது. இருப்பினும் இச்சிதைவு வினையானது 100° செல்சியசு வெப்பநிலையில் அயோடின் வாயுவை வெளியேற்றும் செயலுடன் தொடங்கிவிடுகிறது.
பண்டைய பயன்கள்
தொகுலையாம் தோனெலியின் கரைசல் என்ற பெயரில் முற்காலத்தில் இச்சேர்மம் வாத நோய், மூட்டழற்சி, மலேரியா, உறக்கநோய் நச்சுயிரி தொற்றுகள், காசநோய் மற்றும் நீரிழிவு நோய்[3] ஆகியனவற்றிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0038". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ John C. Bailar, Jr. "Arsenic Triiodide" Inorganic Syntheses 1939, volume 1, pp. 103–104, 2007. எஆசு:10.1002/9780470132326.ch36
- ↑ Shakhashiri BZ, "Chemical of the Week: Arsenic" பரணிடப்பட்டது 2008-08-02 at the வந்தவழி இயந்திரம், University of Wisconsin–Madison Chemistry Dept.