ஆர்ட்டிமிசு 1

ஆர்த்திமிசு 1 (Artemis 1), அலுவல் ரீதியில் ஆர்ட்டிமிசு I,[5] என்பது தற்போது செயல்நிலையில் இருக்கும் ஆளற்ற நிலவைச் சுற்றும் பயணத் திட்டமாகும். இது நாசாவின் ஆர்ட்டிமிசு திட்டத்தின் கீழான முதல் விண்வெளிப் பறப்பும், நாசாவின் விண்வெளி ஏவு முறைமை ஏவுகணையினதும் முழுமையான ஒராயன் விண்கலத்தினதும் முதற் பறப்பும் ஆகும்.[note 1] கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 2022 நவம்பர் 16 அன்று மு.ப. 1:47:44 கிநேவ (6:47:44 ஒசநே) மணியளவில் ஆர்த்திமிசு 1 வெற்றிகரமாக ஏவப்பட்டது.[6][2][7] இதன் முக்கிய நோக்கம் ஒராயன் விண்கலத்தை சோதிப்பதாகும், குறிப்பாக அதன் வெப்பக் கவசத்தை[8] நிலவில் மனித இருப்பை மீண்டும் நிலைநிறுத்தவும் அறிவியல் ஆய்வுகளைத் தொடரவும் முயற்சிக்கும் ஆர்த்திமிசு பயணங்களில் பயன்படுத்தப்படும்.[9]

ஆர்த்திமிசு 1
Artemis 1
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏர்த்திமிசு 1 விண்ணுக்கு ஏவப்படுகிறது
திட்ட வகைஆளில்லாத நிலாச் சுற்றுப்பாதை சோதனைப் பறப்பு
இயக்குபவர்நாசா
இணையதளம்www.nasa.gov/artemis-1
திட்டக் காலம்25 நாட்கள், 11 மணி, 36 நிமி (திட்டம்)[1][2]
726 நாள்-கள் and 25 நிமிடம்-கள் (செயலில்)
சென்ற தூரம்1.3 மில்லியன் மைல்கள் (2.1 மில்லியன் கிலோமீட்டர்கள்)
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்ஒராயன் CM-002
விண்கல வகைஒராயன் MPCV
தயாரிப்பு
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்16 நவம்பர் 2022[3]
ஏவுகலன்விண்வெளி ஏவுதல் அமைப்பு கட்டம் 1
ஏவலிடம்கென்னடி விண்வெளி மையம்
திட்ட முடிவு
தரையிறங்கிய நாள்11 திசம்பர் 2022 09:42 காலை PST[2]
தரையிறங்கும் இடம்சான் டியேகோவிற்கு வெளியே பசிபிக் பெருங்கடலில்[4]
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemநிலவுமைய
சுற்றுவெளிதொலைதூர பிற்போக்கு சுற்றுப்பாதை
சுற்றுக்காலம்14 நாட்கள்
ஒராயன் விண்கலம் சுற்றுக்கலன்

ஆர்த்திமிசு 1 திட்ட இணைப்பு
ஆர்த்திமிசு திட்டம்
← Ascent Abort-2 ஆர்த்திமிசு 2

விண்வெளி ஏவுதள அமைப்பு ஏவுகணையில் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுகணை வளாகம் 39B இலிருந்து இந்த விண்கலம் புறப்பட்டது.[10] ஒராயன் விண்கலம் 26 மற்றும் 42 நாட்களுக்கு இடைப்பட்ட பயணத்திட்டத்தில் ஏவப்பட்டது,[11] இதில் குறைந்தது 6 நாட்கள் நிலாவைச் சுற்றியுள்ள தொலைதூரப் பிற்போக்கு சுற்றுப்பாதையில் அது இருக்கும்.[11] பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததன் பின்னர், இத்திட்டம் பத்து கியூப்சாட் செயற்கைக் கோள்களை அனுப்பும். ஒராயன் விண்கலம் பின்னர் ஆறு நாட்களுக்கு தொலைதூர பிற்போக்கு சுற்றுப்பாதையில் நுழையும். ஒராயன் அதன் வெப்பக் கவசத்தின் பாதுகாப்புடன் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து, பசிபிக் பெருங்கடலில் இறங்கும். ஆர்த்திமிசு 2 திட்டத்தில் தொடங்கும் ஆளுடன் கூடிய பறப்புகளுக்கு ஒராயன், மற்றும் விண்வெளி ஏவல் திட்டங்களுக்கு இந்த ஆரம்பக் கட்டப் பணி சான்றளிக்கும்.[12] ஆர்த்திமிசு 1 ​​பயணத்திற்குப் பிறகு, ஆர்த்திமிசு 2 இல் விண்வெளி வீரர்கள் நிலாவுக்கு அருகில் பறப்பர். அதன் பின்னர் ஆர்த்திமிசு 3 பறப்பில் செல்லும் குழுவினர் நிலாவில் தரயிறங்குவர். கடைசி சந்திர அப்பல்லோ பயணத்திற்கு ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு குழுவினர் சந்திர தரையிறக்கத்தை இதன் மூலம் நிகழ்த்துவர்.

காட்சிமேடை

தொகு


குறிப்புகள்

தொகு
  1. ஒராயன் விண்கலக் குமிழ் 2014 இல் பறக்கவிடப்பட்டது, ஆனால் முழு ஒராயன் விண்கலமும் பறக்கவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. "Artemis 1 Press Kit" (PDF). Archived (PDF) from the original on 15 November 2022. பார்க்கப்பட்ட நாள் 16 November 2022.
  2. 2.0 2.1 2.2 "NASA Prepares Rocket, Spacecraft Ahead of Tropical Storm Nicole, Re-targets Launch". நாசா. 8 November 2022. பார்க்கப்பட்ட நாள் 8 November 2022.
  3. Roulette, Joey; Gorman, Steve (16 November 2022). "NASA's next-generation Artemis mission heads to moon on debut test flight" (in en). Reuters. https://www.reuters.com/lifestyle/science/nasas-artemis-moon-rocket-begins-fueling-debut-launch-2022-11-15/. 
  4. Davis, Jason. "Artemis I launch guide: What to expect". The Planetary Society. Archived from the original on 15 August 2022. பார்க்கப்பட்ட நாள் 24 August 2022.
  5. Artemis: brand book (Report). Washington, D.C.: NASA. 2019. NP-2019-07-2735-HQ. MISSION NAMING CONVENTION: While Apollo mission patches used numbers and roman numerals throughout the program, Artemis mission names will use a roman numeral convention.
  6. Artemis I Launch to the Moon (Official NASA Broadcast) - Nov. 16, 2022 (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2022-11-16
  7. Kraft, Rachel (2022-05-16). "Artemis I Mission Availability". NASA. Archived from the original on 2022-12-11. பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
  8. "NASA: Artemis I". NASA. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  9. Dunbar, Brian (2019-07-23). "What is Artemis?". NASA. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  10. Hambleton, Kathryn (20 February 2018). "Artemis I Overview". NASA. Archived from the original on 17 August 2022. பார்க்கப்பட்ட நாள் 24 August 2022.
  11. 11.0 11.1 Sloss, Philip (1 November 2021). "Inside Artemis 1's complex launch windows and constraints". NASASpaceflight.com. Archived from the original on 25 March 2022. பார்க்கப்பட்ட நாள் 25 March 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  12. Clark, Stephen (18 May 2020). "NASA will likely add a rendezvous test to the first piloted Orion space mission". Spaceflight Now. Archived from the original on 8 July 2020. பார்க்கப்பட்ட நாள் 19 May 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ட்டிமிசு_1&oldid=4110753" இலிருந்து மீள்விக்கப்பட்டது