ஆர்தர் அரசர்

மன்னர் ஆர்தர் (King Arthur), என்பவர் புராணங்களின் படி, பிரித்தானியாவின் அரசர். இவர் ஒரு நாட்டுப்புறக் கதாநாயகனும், பிரித்தானிய விவகாரம் என அழைக்கப்படும் இடைக்கால இலக்கியப் பாரம்பரியத்தில் ஒரு மைய நபராகவும் உள்ளார்.

மன்னர் ஆர்தரை 9 தகுதியானவர்களில் ஒருவராகக் காட்டும் ஓவியத் திரை,[1] அண். 1385

உவேல்சிய ஆதாரங்களில், ஆர்தர் கிபி 5-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 6-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆங்கிலோ-சாக்சன்களுக்கு எதிரான போர்களில் உரோமானியர்களுக்குப் பிந்தைய பிரித்தானியர்களின் தலைவராகச் சித்தரிக்கப்படுகிறார். இவர் முதன்முதலில் இரண்டு இடைக்காலத் தொடக்க வரலாற்று ஆதாரங்களான அன்னாலசு கேம்பிரியா, இசுத்தோரியா பிரிட்டோனம் ஆகியவற்றில் தோன்றினார், ஆனால் இவை அவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் 300 ஆண்டுகளுக்குப் பிற்பட்டவை, மேலும் அந்தக் காலத்தை ஆய்வு செய்யும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அவரை ஒரு வரலாற்று நபராகக் கருதவில்லை.[2][3] 'ஒய் கோடோடின்' போன்ற தொடக்ககால உவெல்சியக் கவிதைகளிலும் இவரது பெயர் உள்ளது.[4] மனித மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட எதிரிகளிடமிருந்து பிரித்தானியாவைப் பாதுகாக்கும் ஒரு சிறந்த போர்வீரனாக அல்லது நாட்டுப்புறக் கதைகளின் மாயாசால உருவமாக உவேல்சியப் புராணங்களில் உருவானது.[5]

மான்மவுத்தின் ஜாஃப்ரி என்பவரின் 12-ஆம் நூற்றாண்டு "பிரிட்டன் அரசர்களின் வரலாறு" புகழ் பெற்றதன் மூலம் ஆர்தர் சர்வதேச ஆர்வமுள்ள ஆளுமையாக வளர்ந்தார்.[6] ஆங்கிலோ-சாக்சன்களைத் தோற்கடித்து ஒரு பரந்த பேரரசை நிறுவிய பிரித்தானியாவின் அரசராக ஆர்தரை ஜெஃப்ரி சித்தரித்தார். ஆர்தரின் தந்தை ஊதர் பென்ட்ராகன், மந்திரவாதி மெர்லின், ஆர்தரின் மனைவி கினிவெரே, வாள் எக்ஸ்காலிபர், டின்டேஜலில் ஆர்தரின் கருத்தரிப்பு, சாம்லானில் மோர்ட்ரெட்டுக்கு எதிரான அவரது இறுதிப் போர், அவலோனில் இறுதி ஓய்வு உள்ளிட்ட பல கூறுகளும் நிகழ்வுகளும் இப்போது ஆர்தரின் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஜெஃப்ரியின் "வரலாற்றில்" தோன்றும். மேலும், 12-ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு எழுத்தாளர் கிரெட்டியன் டி ட்ராய்சு, ஆர்தரின் கதையில் லான்சலாட், ஹோலி கிரெயில் ஆகியோரைச் சேர்த்து, ஆர்தரின் காதல் கதையைத் தொடங்கினார், இது இடைக்கால இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க இழையாக மாறியது. இந்த பிரெஞ்சுக் கதைகளில், கதையின் கவனம் பெரும்பாலும் ஆர்தர் மன்னரிடமிருந்து பலவிதமான மற்றக் கதாபாத்திரங்களுக்கு மாறுகிறது. ஆர்தரின் புராணத்தின் கருப்பொருள்கள், நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் ஆகியன உரையிலிருந்து உரைக்கு பரவலாக வேறுபடுகின்றன, மேலும் ஒரு ஒழுங்குமுறையான பதிப்பு இல்லை. ஆர்தரிய இலக்கியம் இடைக்காலத்தில், 19-ஆம் நூற்றாண்டில் அது ஒரு பெரிய எழுச்சியை அனுபவிக்கும் வரை செழித்து வளர்ந்து, பின்னர் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் வீழ்ச்சியடைந்தது. ஆனாலும், 21-ஆம் நூற்றாண்டில், புராணக்கதை இலக்கியத்தில் மட்டுமல்லாமல், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, வரைகதைகள் மற்றும் பிற ஊடகங்களுக்கான தழுவல்களிலும் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

விவாதிக்கப்படும் வரலாறு

தொகு

ஆர்தர் அரசருக்கான வரலாற்று அடிப்படையை பன்னெடுங்காலமாக கல்வியாளர்கள் விவாதித்து வருகின்றனர். இவற்றில் ஒரு பிரிவைச் சார்ந்த கருத்தாக்கம் ஹிஸ்டோரியா பிரிட்டோனம் (பிரிட்டனின் சரித்திரம்) மற்றும் அன்னாலெஸ் காம்பிரேயி (வெல்ஷ் சரித்திரக் கூறு) ஆகியவற்றைச் சுட்டிக் காட்டி ஆர்தர் மெய்யான, வரலாற்று அடிப்படையிலான ஒரு நபர் என்று கூறுகிறது; இவர் ஐந்தாவது நூற்றாண்டின் இறுதியிலிருந்து ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலான ஒரு கால கட்டத்தில், ஆங்கிலேய-சாக்சன் படையெடுப்பை எதிர்த்துப் போரிட்ட ஒரு உரோம-பிரித்தானிய தலைவர் என்று குறிப்பிடுகிறது. பிற்காலத்திய கையெழுத்துப் பிரதிகளில், நென்னியஸ் என்று அழைக்கப்பட்ட மத குரு ஒருவருடையது என்று குறிப்பிடப்படும், ஒன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த இலத்தீன் வரலாற்றுத் தொகுப்பான ஹிஸ்டோரியா பிரிட்டோனம் ஆர்தர் போரிட்டதாக 12 போர்களைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்திற்கும் உச்சக் கட்டமாக மான்ஸ் படோனிகஸ் அல்லது பாடன் மலைப் போர் அமைந்தது. இதில் அவர் ஒற்றை வீரராக 960 பேரைப் போரிட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இக்காலத்திற்கான ஒரு வரலாற்றுத் தோற்றுவாயாக ஹிஸ்டோரியா பிரிட்டோன த்தைக் கொள்வதின் நம்பகத்தன்மை பற்றி அண்மைக் காலத்திய ஆராய்ச்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.[7]

வரலாற்று ரீதியாக ஆர்தரின் இருப்பிற்கு ஆதரவளிக்கும் மற்றொரு உரை பத்தாவது நூற்றாண்டைச் சார்ந்த அன்னாலெஸ் காம்பிரேயி என்பதாகும். இதுவும், பாடன் மலைப் போருடன் ஆர்தரைத் தொடர்புபடுத்துகிறது. இந்தப் போர் 516-518 ஆகிய வருடங்களில் நிகழ்ந்ததாக அன்னாலெஸ் குறிப்பிடுகிறது; மற்றும் ஆர்தர் மற்றும் மெட்ரௌட்(மார்ட்ரெட்) ஆகிய இருவருமே மரணமடைந்த காம்லான் போர் 537-539ஆம் வருடங்களில் நிகழ்ந்ததாகவும் இது குறிப்பிடுகிறது. இத்தகைய விபரங்கள், ஹிஸ்டோரியா 'வின் குறிப்புகளில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும், மெய்யாகவே பாடன் மலைப் போரில் ஆர்தர் ஈடுபட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஹிஸ்டோரியா பிரிட்டோனத்தின் குறிப்பு களுக்கு ஆதரவளிப்பதற்காக இத்தோற்றுவாயைப் பயன்படுத்துவதில் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிக அண்மையிலான ஒரு ஆராய்ச்சி , அன்னாலெஸ் காம்பிரேயி வேல்ஸ் நாட்டில் எட்டாவது நூற்றாண்டில் தொடங்கிய ஒரு வரலாற்றுக்கூறின் அடிப்படையிலானதாகச் சுட்டிக் காட்டுகிறது. மேலும், அன்னாலெஸ் காம்பிரேயியின் நுணுக்கமான வரலாற்று உரைகள் , ஆர்தரிய வரலாற்றுக் கூறுகள் முன்னரே அதனுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதான எத்தகைய தீர்மானத்தையும் விலக்குவதாக உள்ளன . அவை பத்தாவது நூற்றாண்டின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக் கூறுகளே அதிகமாக உள்ளன; மற்றும் அவை அதற்கு முந்தைய எந்த ஒரு வரலாற்றுத் தொகுப்பிலும் இடம் பெறாது இருந்திருக்கவும் கூடும். பாடன் மலைப் போரானது 'ஹிஸ்டோரியா பிரிட்டோன த்திலிருந்து எடுத்துக் கையாளப்பட்டிருக்கலாம் .[8]

இவ்வாறு வரலாற்று அடிப்படை இன்மையின் காரணமாகவே, அண்மைக் காலத்திய பல வரலாற்று ஆசிரியர்களும் ஆர்தரைத் தங்களது உரோம காலத்திற்குப் பிந்தைய பிரிட்டன் வரலாற்றிலிருந்து ஒதுக்கியுள்ளனர். தாமஸ் சார்லஸ்-எட்வர்ட்ஸ் என்னும் வரலாற்று ஆசிரியரின் கருத்துப்படி, "ஆய்வின் இந்தக் கட்டத்தில், வரலாற்று ரீதியாக ஒரு ஆர்தர் இருந்திருக்கக் கூடும் என்று மட்டுமே சொல்ல இயலும் [ஆனால்...] அவரைப் பற்றி மதிப்பு மிக்க தகவல்கள் எதையும் ஒரு வரலாற்று ஆசிரியர் அளிக்க இயலாது.[9] இவ்வாறு நவீன காலத்தில் ஒப்புக் கொள்ளப்படும் அறியாமையானது, அண்மைக்காலத்திய போக்கேயாகும்; முந்தைய தலைமுறை வரலாற்று ஆசிரியர்கள் இதைப் பற்றிக் குறைவான ஐயப்பாடே கொண்டிருந்தனர். ஜான் மோரிஸ் (John Morris) என்னும் வரலாற்று ஆசிரியர் ஆர்தரின் உத்தேசமான ஆட்சிக் காலத்தையே தமது துணை-உரோம பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் வரலாறு என்னும் நூலில் ஆர்தரின் காலம் எனப் பெயரிட்டு அதனுடைய ஒரு ஒருங்கிணைப்புக் கோட்பாடாக அமைத்தார். இருப்பினும், வரலாற்று ரீதியான ஆர்தரைப் பற்றிக் கூறுவதற்கு அவரிடம் மிகக் குறைவாகவே இருந்தது.[10]

 
ஒரு கையெழுத்துப் பிரதியில் படியெடுக்கப்பட்ட பத்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த அன்னாலெஸ் காம்பிரெயி.1100

இத்தகைய கருத்தாக்கங்களுக்கு எதிர் விளைவாக, மற்றொரு கருத்தாக்கம் உருவாகலானது; இது வரலாற்று ரீதியாக ஆர்தர் இருந்ததே இல்லை என்று வாதிட்டது. மோரிஸின் ஆர்தரின் காலம் என்னும் நூலானது, "வரலாறு மற்றும் இதிகாசம் ஆகியவற்றின் விளிம்பில் இருக்கும் எந்த ஒரு உருவும் இந்த அளவு ஒரு வரலாற்று ஆசிரியரின் நேரத்தை வீணடித்ததில்லை" எனக் கூறுமாறு தொல்பொருள் ஆய்வாளர் நோவெல் மைரெஸினைத் தூண்டியது.[11] பாடன் மலைப் போர் நினைவிருக்கும் கால கட்டத்திலேயே எழுதப்பட்டதான கில்டாஸின், ஆறாவது நூற்றாண்டைச் சார்ந்த சர்ச்சைக்குரிய நூலான டெ எக்சிடியோ எட் காங்குவெஸ்டு பிரிட்டானியா (பிரிட்டன் வெல்லப்பட்டதும் அதன் வீழ்ச்சியும்), அப்போரைப் பற்றி உரைக்கிறதே ஒழிய, ஆர்தரைப் பற்றி ஏதும் கூறவில்லை.[12] ஆங்கிலேய-சாக்சன் வரலாற்றுக் கூறுகள் அல்லது 400ஆம் ஆண்டு துவங்கி 820ஆம் ஆண்டு வரையிலான தற்காலத்தில் கிடைக்கப்பெறும், எந்த ஒரு சுவடியிலும் ஆர்தர் பற்றிய குறிப்புகள் கிடைக்கப் பெறவில்லை.[13] பாடன் மலை பற்றிக் கூறும், பிந்தைய-உரோமானிய வரலாற்றிற்கான ஆரம்ப காலத் தோற்றுவாய்களில் ஒன்றான, எட்டாவது நூற்றாண்டின் துவக்க காலத்தைச் சார்ந்த, பெடெ எழுதிய நூலான ஆங்கிலேய மக்களின் மத வரலாறு என்னும் நூலிலும் ஆர்தர் காணப்படவில்லை.[14] வரலாற்றாசிரியர் டேவிட் டும்வில்லி இவ்வாறு எழுதுகிறார்: "அவரை [ஆர்தரை] மிகச் சுருக்கமாகவே நாம் ஒதுக்கி விடலாம் என்றே நான் நினைக்கிறேன். 'நெருப்பில்லாமல் புகையாது' என்ற எண்ணத்தைச் சார்ந்திருக்கும் வரலாற்றுப் புத்தகங்கள் காரணமாகவே அவர் நமது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்.... உண்மையில் சொல்லப்போனால், ஆர்தர் வாழ்ந்ததற்கான சரித்திரப் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை; அவரை நாம் நமது வரலாறுகளிலிருந்தும், அனைத்திற்கும் மேலாக, நமது புத்தகத் தலைப்புகளிலிருந்தும் நீக்க வேண்டும்."[15]

ஆர்தர் என்பவர் அசலாக- மிகவும் பண்டைய காலத்தில் நிகழ்ந்த உண்மையான நிகழ்ச்சிகளுடன் இணைக்கப்பட்டு அதற்கான மதிப்புப் பெற்ற கிராமியப் புனைவுகளின் நாயகனாக - ஏன் ஓரளவு மறக்கப்பட்டு விட்ட செல்ட் கடவுளாகக்கூட இருந்திருக்கலாம்- எனச் சில கல்வியாளர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் மதரீதியான மதிப்புப் பெறுவதான கெண்ட் குதிரைக் கடவுளரான ஹெங்கெஸ்ட் மற்றும் ஹார்ஸா ஆகியோர் பிற்காலத்தில் வரலாற்றில் இணைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி, அதற்கு இணையான ஒரு படிமமாகவே ஆர்தரைக் கருதுகின்றனர். ஐந்தாவது நூற்றாண்டில் ஆங்கிலேய-சாக்சர்கள் கிழக்கு பிரிட்டனை வென்ற நிகழ்வுடன் இத்தகைய மரபு உருக்களை பெடெ இணைக்கிறார்.[16] ஆரம்பகால உரைகளில் ஆர்தர் ஒரு அரசர் என்பதாகக் கூட அறியப்படவில்லை. ஹிஸ்டோரியா மற்றும் அன்னலெஸ் ஆகிய இரண்டுமே அவரை மன்னன் ("ரெக்ஸ் ") என அழைக்கவில்லை: முதலாம் நூல் அவரை டக்ஸ் பெல்லோரம் போர்த் தலைவன்) மற்றும் "மிலெஸ் " (படைவீரன்) என்றே அழைக்கிறது.[17]

பிந்தைய-உரோமானிய காலத்திற்கான வரலாற்று ஆவணங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன; எனவே, வரலாறு பூர்வமாக ஆர்தரின் இருப்பு பற்றிய பதில் நிச்சயிக்கப்பட இயலாததாகவே உள்ளது. 12ஆம் நூற்றாண்டிலிருந்து[18] பல்வேறு இடங்களும் "ஆர்தரியன்" என அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆயினும், பாதுகாப்பான வரையறைகளுக்கு உட்பட்டுக் காணப்படும் கல்வெட்டுகளின் மூலமே தொல்பொருள் ஆய்வுகள் பெயர்களை வெளியிட இயலும். 1998ஆம் வருடம், கார்ன்வால் நகரில் டிண்டேஜல் மாளிகையின் இடிபாடுகளுக்கு இடையில் கண்டுபிடிக்கப்பட்ட, ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்ததான குறிப்புகளுடன் காணப்பட்ட "ஆர்தர் கல்" எனக் கூறப்பட்டதானது, சொற்ப காலத்திற்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும், தொடர்பற்ற ஒன்றாக நிரூபிக்கப்பட்டு விட்டது.[19] கிளாஸ்டன்பரி சிலுவையை உள்ளிட்ட ஆர்தர் பற்றிய பிற கல்வெட்டு ஆதாரங்கள், அவை மோசடியாக இருக்கக் கூடும் என்னும் கருத்தினால் களங்கமுற்றே உள்ளன.[20] ஆர்தருக்கு அடிப்படை என பல வரலாற்று உருக்கள் முன்வைக்கப்படினும்,[21] இத்தகைய அடையாளங்களுக்கான, ஏற்கப்படும் வகையிலான சான்றுகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை.

பெயர்

தொகு

ஆர்தர் என்னும் வெல்ஷ் பெயரின் தோற்றுவாயும் விவாதப்பொருளாகவே உள்ளது. இலத்தீனியக் குடும்பப் பெயரான ஆர்தோரியஸ் என்னும் தெளிவற்ற, வாதத்துக்குரிய சொல் இலக்கணத்திலிருந்து[22] இது பெறப்பட்டிருக்கக் கூடும் (ஆயினும் சாத்தியமான முறையில் மெசாபிக்[23][24][25] அல்லது எட்ருஸ்கான் தோற்றுவாய்[26][27][28]) கொண்டிருந்திருக்கக் கூடும்) எனச் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். வேறு சிலர் இச் சொல்லை வெல்ஷ் வார்த்தையான "கரடி" எனப் பொருள்படும் அர்த் (முன்னர் அர்ட் ) என்பதிலிருந்து பெறப்பட்டதாக ஒரு வாதத்தை முன்வைத்து, இதன் பொருள் அதன் மூல வடிவமான அர்த்-உர் (முன்னர் *ஆர்தோ-உயிரொஸ் ), "கரடி மனிதன்" என்பதன் மூல வடிவம், எனக் கூறுகின்றனர். ஆயினும், இந்தக் கருத்தினை ஏற்பதில் சில பிரச்சினைகள் உள்ளன- குறிப்பாக *ஆர்தோ-உயிரொஸ் என்னும் பிரிட்டானிய சேர்க்கைப் பெயர், பழம் வெல்ஷ் சொல்லான "*ஆர்த்குர் " என்பதையும் மற்றும் இடைக்கால/ நவீன வெல்ஷ் சொல்லான *ஆர்த்வ்ர் என்பதையுமே உருவாக்க வேண்டும்- ஆர்தர் என்பதை அல்ல (வெல்ஷ் கவிதைகளில் ஆர்தர் என்னும் பெயர் எப்போதுமே -அர் என முடியும் சொற்களுக்கு எதுகையாக அமைக்கப்பட்டுள்ளது; -வ்ர் என்னும் சொற்களுக்கு எதுகையாக அல்ல. இதனால், இச்சொல்லின் இரண்டாம் பகுதி [க்]வர் "மனிதன்" என இருக்க முடியாது என இது உறுதி செய்கிறது).[29][30] ஆரம்ப கால இலத்தீனிய ஆர்தரிய உரைகளில் ஆர்தரின் பெயர் ஆர்தர் அல்லது ஆர்தரஸ் என்றே காணப்படுகிறது என்பதும் எந்தவொரு இடத்திலும் ஆர்தோரியஸ் எனக் காணப்படவில்லை என்பதும் இந்த விவாதத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும். இருப்பினும், ஆர்தர் என்னும் பெயரின் தோற்றுவாயைப் பற்றி இது ஏதும் குறிப்பிடாது போகலாம்; காரணம், ஆர்தோரியஸ் என்னும் சொல்லானது, வெல்ஷ் மொழியிலிருந்து கடனாகப் பெறப்படும்போது, வழக்கமாக ஆர்(த)அர் என்றே மாறுபடும். ஜான் கோச் சுட்டிக்காடியுள்ளதைப் போல, இவை அனைத்தும் வரலாற்று ஆர்தருக்கு தற்போது கிடைக்கப்பெறும் இலத்தீனியக் குறிப்புகள் (அதாவது அவர் ஆர்தோரியஸ் என்று அழைக்கப்பட்டு உண்மையிலேயே வாழ்ந்திருந்தால்) ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகான கால கட்டத்தைக் குறிப்பதாக இருக்கும் என்பதேயாகும்.[31]

மற்றொரு கருத்தாக்கம் ஆர்தர் என்னும் பெயரை ஆர்க்துரஸ், அதாவது உர்ஸா மேஜர் அல்லது பெரும் கரடிக்கு அருகில் உள்ள பேரொளி மிக்க விண்மீனான பூட்டெஸ் என்பதனுடன் தொடர்பு படுத்துகிறது. இப்பெயர், "கரடியின் காவலன்"[32] அல்லது "கரடிக் காவலன்"[33] எனப் பொருள்படும். பண்டைய இலத்தீன் மொழியின் ஆர்க்துரஸ் பிற்கால இலத்தீனில் ஆர்துரஸ் என மாறுபாடு அடைந்து, வெல்ஷ் மொழியிலிருந்து கடனாகப் பெறப்படுகையில், ஆர்(த்)அர் என மாறியிருக்கலாம்.[32] வானத்தில் இந்த விண்மீனின் இடம் மற்றும் அதன் ஒளி (உர்ஸா மேஜருக்கு அருகாமையில் அது இருந்தமையால்) மேலும், பூட்டெஸ்லில் இதர விண்மீங்களுக்கு அது கொண்டிருந்த "தலைமை" ஆகியவற்றால் மக்கள் "கரடியின் காவலன்" என்பதாக அதனை மதித்தனர்.[34] இருப்பினும், ஆர்க்துரஸ் என்பது உரோமானியர்களால் தனிப்பட்ட நபர் அல்லது கடவுளர் பெயராகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய சொல் இலக்கணக்கங்களின் துல்லியமான முக்கியத்துவம் தெளிவாக இல்லை. ஆர்தோரியஸ் என்னும் சொல் பெறப்பட்ட தன்மையானது மெய்யாகவே ஆர்தர் ஒரு வரலாற்று இருப்பைக் கொண்டிருந்தார் எனப் பொருள்படும் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆயினும், அண்மைய ஆய்வுகள், இந்த அனுமானமானது முறையான அடிப்படையற்று இருக்கலாம் எனக் கருத்துரைக்கின்றன.[35] இதற்கு மாறாக, ஆர்க்துரஸ் என்பதிலிருந்து ஆர்தர் என்னும் பெயர் பெறப்பட்டது என்னும் கருத்து ஆர்தர் பற்றிய புனைவுகளுக்கு வரலாறு-அல்லாத ஒரு தோற்றுவாயைச் சுட்டிக் காட்டக் கூடும்.

இடைக்கால இலக்கியப் பாரம்பரியங்கள்

தொகு

மிகுந்த அளவில் பரிச்சயமான ஒரு இலக்கிய உருவாக ஆர்தரைப் படைத்தவர் ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத் ஆவார். 1130ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட தமது சரித்திரப் புனைவான ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா வில் (இங்கிலாந்து அரசர்களின் சரித்திரம்) இதனை அவர் உருவாக்கினார். ஆர்தரின் உரை ரீதியான தோற்றுவாய்கள் வழக்கமாக ஜியோஃப்ரேயின் ஹிஸ்டோரியா வுக்கு முன்னதாக எழுதப்பட்டவை (ஜியோஃப்ரேயின் இலத்தீன் வடிவமான கால்ஃபிரிடியஸ் என்னும் கால்ஃபிரிடியன் உரைகளுக்கு முன்பானவை என அறியப்படுபவை) மற்றும் அதற்குப் பின்னர் அவரது செல்வாக்கைத் தவிர்க்க இயலாது எழுதப்பட்டவை (கால்ஃபிரிடியன் அல்லது கால்ஃபிரிடிற்குப்-பிந்தைய உரைகள்) என்று பிரிக்கப்படுகின்றன.

கால்ஃபிரிடியனுக்கு-முந்தைய பாரம்பரியங்கள்

தொகு
 
ஆர்தர் சியைப் பற்றிய பிரபலமான ஆரம்பகால வெல்ஷ் உரைகளில் ஒன்றான ஒய் கோடாட்டின் என்பதன் ஒரு உருமாதிரிப் பக்கம். 1275

ஆர்தருக்கான துவக்க கால இலக்கியக் குறிப்பீடுகள் வெல்ஷ் மற்றும் பிரெட்டான் தோற்றுவாய்களிலிருந்து வருகின்றன. ஆர்தரின் இயல்பு மற்றும் குணாதிசயம் ஆகியவற்றை, ஒரு தனி உரை அல்லது உரைநடைக் கதை வகை என்பதைப் போல அன்றி, ஒட்டு மொத்தமாக கால்ஃபிரிடியனுக்கு-முந்தைய மரபாக வரையறுக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்மையில், தாம்ஸ் க்ரீன் என்பவர் நிகழ்த்திய ஒரு கல்விசார் கருத்தாய்வு இவ்வாறே முயற்சிக்கிறது. இது, இந்த ஆரம்ப காலப் பொருளில் ஆர்தரின் சித்தரிப்பிற்கான மூன்று முக்கிய உட்கூறுகளை அடையாளம் காட்டுகிறது.[36] முதலாவது, அவர் பிரிட்டன் நாட்டை அதன் அனைத்து உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்களிலிருந்து காத்த, விலங்கு வேட்டையாளராகச் செயலாற்றிய ஒப்பற்ற போராளி என்பதாகும். இவற்றில் சில அச்சுறுத்தல்கள் மனித முகம் கொண்டவை. எடுத்துக்காட்டாக, ஹிஸ்டோரியா பிரிட்டோன த்தில் அவருடன் போரிட்ட சாக்சன்களைக் குறிப்பிடலாம். ஆனால், பெரும்பான்மையானவை அமானுஷ்யமானவை. இவற்றில் மிகப் பெரும் பூனையரக்கர்கள், அழிவுண்டாக்கும் தெய்வீகப் பன்றிகள், டிராகன் என்னும் வேதாளங்கள், நாய்த் தலையர்கள், அரக்கர்கள் மற்றும் சூனியக்காரர்கள் ஆகியோர் அடங்குவர்.[37] இரண்டாவது, கால்ஃப்ரிடியன் கால கட்டத்திற்கு முந்தைய ஆர்தர் ஒரு கிராமிய மற்றும் குறிப்பிட்ட பகுதிக்கான (குறிப்பாக பகுதி சார்ந்த அல்லது பெயர் சார்ந்த நாட்டுப்புறப் புனைவு) அதாவது காட்டு வெளிப்பகுதிகளில் வாழ்பவர்களின் அதிசக்தி வாய்ந்த நாயகன் என்பது போன்ற மாயப் புனைவுகளின் பாத்திரம் என்பதாகக் குறிக்கின்றது.[38] மூன்றாவதும் இறுதியானதுமான உட்கூறு, துவக்ககால வெல்ஷ் ஆர்தர், வெல்ஷ் மறுவுலகான ஆன்வின் என்பதனுடன் நெருக்கமான தொடர்புற்றிருந்தார் என்பதாகும். ஒரு புறம், அவர் புதையலைத் தேடி, மறுவுலகின் கோட்டைகளைத் தாக்கி அவற்றின் கைதிகளை விடுவிக்கிறார். மறுபுறம், ஆரம்பகாலத் தோற்றுவாய்களில் அவரது போர்க்குழுவானது முந்தைய கிரேக்கக் கடவுளர், அவரது மனைவி மற்றும் அவரது உடமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.[39]

ஆர்தரைக் குறிப்பிடும் மிகப் பிரபலமான வெல்ஷ் கவிதைக் குறிப்பீடுகளில் ஒன்று, ஆறாவது நூற்றாண்டைச் சார்ந்தவராகக் குறிப்பிடப்படும் அனெயிரின் என்னும் கவிஞரின் ஒய் கோடாட்டின் (தி கோடாட்டின்) என அறியப்படும் நாயகனின் மரணத்தை ஒட்டிய இரங்கற்பாக்களின் தொகுப்பாகும். இதன் ஒரு சரணத்தில், 300 எதிரிகளைச் சீவிய போராளி ஒருவரது வீரம் புகழப்படுகிறது. ஆனால், இது இவ்வாறு இருப்பினும், "அவர் ஆர்தர் அல்ல" என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, அவரது சாதனைகள் ஆர்தரின் பேராண்மைக்கு ஒப்பானதல்ல எனக் குறிப்பிடப்படுகிறது.[40] ஒய் கோடாட்டின் ஒரு 13ஆவது நூற்றாண்டு கையெழுத்துப் பிரதியிலிருந்தே அறியப்படுகிறது. எனவே, இப்பகுதியானது அசலாகவே எழுதப்பட்டதா அல்லது பிற்காலத்திய இடைச் செருகலா என்று உறுதி செய்வது சாத்தியமல்ல. ஆனால், இந்தச் சரணமானது ஏழாவது நூற்றாண்டு அல்லது அதற்கும் முந்தைய காலகட்டத்துப் பதிப்பு என்னும் ஜான் கோச்சின் கருத்து நிரூபணமாகவில்லை. ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டுகளே இதற்கான காலகட்டமாகப் பெரும்பாலும் முன்வைக்கப்படுகின்றன.[41] ஆறாவது நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் தலியிசின் என்னும் ஒரு கவிஞரின் பல கவிதைகளும் ஆர்தரைக் குறிப்பிடுகின்றன. ஆயினும், இவை யாவும் எட்டாவது மற்றும் 12ஆவது நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சார்ந்தவையாகவே உள்ளன.[42] இவை, "ஆசி பெற்ற ஆர்தரை"க் குறிப்பிடுவதான "காதெயிர் தெயிர்னோன்" ("இளவரசனின் ஆசனம்")[43], மறுவுலகுக்கு ஆர்தர் மேற்கொண்ட ஒரு படையெடுப்பைக் குறிப்பிடும் "பிரெய்தியு அன்வின்" ("அன்வின்னின் கேடுகள்")[44], மற்றும் ஆர்தரின் வீரத்தைக் குறிப்பிடுவதாகவும், ஆர்தர் மற்றும் உதர் ஆகியோரிடையே தகப்பன்-மகன் உறவைக் குறிப்பதான, ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்தின் காலத்திற்கு முந்தைய, "மார்வ்னத் உதிர் பென்[டிராகன்]" (உதர் பென்(டிராகனின்) இரங்கற்பா")[45] ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. இதர ஆரம்ப கால வெல்ஷ் ஆர்தரியன் உரைகளில் கார்மதெனின் கருப்புப் புத்தகம் என்பதில் காணப்படும் ஒரு கவிதையான "பா குர் யு ஒய் போர்தர்" என்பது அடங்கும்.

("இந்தக் காவலாளி என்ன மனிதன்?").[46] இது ஆர்தருக்கும் அவர் நுழைய விரும்பும் ஒரு கோட்டையின் காவலாளிக்கும் இடையிலான உரையாடலாக வடிவம் கொள்கிறது. இதில், ஆர்தர் தமது மற்றும் தமது வீரர்களின், குறிப்பாக கெய் (கே) மற்றும் பெட்விர் (பெடெவிரெ) ஆகியோரின் பெயர்களையும் செயல்களையும் நினைவுறுத்துகிறார். நவீன மாபிநோஜியோன் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள கல்விச் அண்ட் ஓல்வென் (சி. 1100) என்னும் வெல்ஷ் உரை நடைக் கதை, இதில் கெய் மற்றும் பெட்விர் ஆகியோரே மையப் பாத்திரங்களாக இருப்பினும், இரு நூறுக்கும் மேற்பட்டதாக ஆர்தரின் வீரர்களின் மேலும் நீண்ட பட்டியல் ஒன்றினைக் கொண்டுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்தக் கதை, ஆர்தர் தமது உறவினர் கல்விச் என்பவர், டிவ்ரெச் டிவ்ரெத் என்னும் மிகப் பெரும், பாதி-தெய்வீகமான பன்றி வேட்டையை உள்ளிட்டு அசாத்தியமாகத் தோன்றும் பல சாகசத் தொடர்களை நிறைவேற்றி, யஸ்படாதென் என்னும் தலைமை அரக்கனின் மகளான ஓல்வென் என்பவளைக் கரம்பிடிக்க உதவுவதான கதையைக் கூறுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிஸ்டோரியா பிரிட்டோன மும் இந்தக் கதையைக் குறிப்பிடுகிறது. அதில், இப்பன்றியின் பெயர் டிராய்(ன்)ட் என்பதாகக் காணப்படுகிறது.[47] இறுதியாக, நினைவு கூர ஏதுவாக மூன்று பாத்திரங்கள் அல்லது மூன்று நிகழ்ச்சிகளாகப் பிரிக்கப்படும் வெல்ஷ் மரபின்படி வெல்ஷ் புனைவுகளின் சுருக்கங்களின் தொகுப்பான வெல்ஷ் மூவர்கள் என்பதில் ஆர்தர் பன்முறைகள் குறிப்பிடப்படுகிறார். இந்த மூவர்கள் என்னும் தொகுப்புக்களின் பிற்காலத்திய கையெழுத்துப் பிரதிகள் ஜியோஃப்ரே மான்மௌத்திடமிருந்து பெறப்பட்டதாகவும் மற்றும் பிற்காலத்திய ஐரோப்பிய மரபுகளுக்குட்பட்டதாகவும் உள்ளன. ஆயினும், முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த பிரதிகள் எந்த வித பாதிப்பையும் வெளிக்காட்டாது, பொதுவாக முன்னரே நிலவிய வெல்ஷ் மரபாக ஒப்புக் கொள்ளப்படுகின்றன. இருப்பினும், இவற்றிலும், ஆர்தரின் அரசவையானது மரபுப் புனைவான பிரிட்டனை முழுவதுமாகக் குறிப்பிடுவதாகவே சித்தரிக்கப்படுகிறது. சில சமயங்களில் "ஆர்தரின் அரசவை" என்பது "பிரிட்டன் தீவு" என "பிரிட்டன் தீவின் மூன்று எக்ஸ்எக்ஸ்எக்ஸ்" என்னும் சூத்திரப்படி மாற்றி அமைக்கப்படுகிறது.[48] ஆர்தர் ஒரு அரசராகக் கருதப்பட்டாரா என்பதே ஹிஸ்டோரியா பிரிட்டோன மற்றும் அன்னலெஸ் காம்பியரே ஆகியவற்றில் தெளிவாகப் புலப்படாதபோது, கல்விச் மற்றும் ஓல்வின் மற்றும் மூவர்கள் தொகுப்பு ஆகியவை எழுதப்பட்ட காலத்தில் அவர் பெந்திர்னெட் யர் யன்ஸ் ஹான் , அதாவது "இந்தத் தீவின் பிரபுக்களின் தலைவர்", வேல்ஸ், கார்ன்வால் மற்றும் வடக்கு ஆகியவற்றின் பெரும் பிரபு என்பனவாகக் கூறப்படுகிறார்.[49]

இந்த கால்ஃபிரிடிய காலத்திற்கு-முந்தைய வெல்ஷ் கவிதைகள் மற்றும் கதைகளுக்குக் கூடுதலாக, ஹிஸ்டோரியா பிரிட்டோனம் மற்றும் அன்னாலெஸ் காம்பிரேயி ஆகியவற்றைத் தவிர, வேறு சில துவக்க கால இலத்தீன் உரைகளிலும் ஆர்தர் தென்படுகிறார். குறிப்பாக, (மிக ஆரம்ப காலத்தியதான, 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கக் கூடிய) உரோம காலத்திற்குப் பிந்தைய, பெருமளவில் அறியப்படுவதான துறவிகளின் பல விடாயீ களில் ("வாழ்க்கைகள்") ஆர்தர் காணப்படுகிறார். இவற்றில் ஏதும் வரலாற்றுத் தோற்றுவாய் கொண்டுள்ளதாகத் தற்போது கருதப்படுவதில்லை.[50] 12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கார்தோக் ஆஃப் லாங்கார்ஃபேன் என்பவரால் எழுதப்பட்ட கில்தாஸ் என்னும் துறவியின் வாழ்க்கை யில், ஆர்தர் கில்தாஸின் சகோதரன் ஹ்யூயிலைக் கொன்று அவரது மனைவி கிவென்விஃபரை கிளாஸ்டோன்பரியிலிருந்து காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.[51] லிஃப்ரிஸ் ஆஃப் லாங்கார்ஃபென் என்பவரால் 1100ஆம் ஆண்டோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ எழுதப்பட்ட காதோக் துறவியின் வாழ்க்கை யில், அத்துறவி ஆர்தரின் மூன்று வீரர்களைக் கொன்ற ஒரு மனிதனுக்கு அடைக்கலம் அளிப்பதாகவும், தமது வீரர்களுக்குப் பதிலாக ஆர்தர் ஒரு கால்நடை மந்தையை வெர்ஜெல்டா கக் கோருவதாகவும் காணப்படுகிறது. கோரப்பட்டபடி காதோக் அவற்றை அளிக்கிறார். ஆனால், அவ்விலங்குகளை ஆர்தர் உடமையாக்கிக் கொள்ளும் வேளையில், அவை இறகுகளைக் கொண்ட படர்செடிக் கூட்டமாக மாறிவிடுகின்றன.[52] 12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கக் கூடிய இடைக்காலத்திய வாழ்க்கை வரலாறுகளான காரன்னோக், பதார்ன் மற்றும் இயூஃப்லாம் ஆகியவை இதனை ஒத்த நிகழ்வுகளைச் சித்தரிக்கின்றன. 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கையெழுத்துப் பிரதியே கிடைக்கப் பெற்றிருப்பினும், பெரும்பாலும் 11ஆம் நூற்றாண்டைச் சார்ந்த குறிப்பிடப்படும் லெஜண்டா சாங்க்தி கோயஜனோவி யில் ஆர்தரைப் பற்றிய அதிகப் புனவற்ற குறிப்பு காணப்படுகிறது.[53] வில்லியம் ஆஃப் மாம்ஸ்பெரியின் டி ஜெஸ்டிஸ் ரேகம் அங்கோலோரம் மற்றும் ஹெர்மென்னின் டி மிராகுலிஸ் சாங்க்டே மாரியே லௌடென்சிஸ் ஆகியவற்றில் ஆர்தரைப் பற்றிக் காணப்படும் குறிப்புகளும் முக்கியமானவை. ஆர்தர் உண்மையிலேயே மரிக்கவில்லை எனவும் அவர் ஒரு கால கட்டத்தில் மீள்வார் எனவும் கால்ஃபிரிடிய காலத்திற்குப் பிந்தைய மரபுப் புனைவுகளில் அடிக்கடி மொழியப்படும் ஒரு நம்பிக்கையின் முதற் சான்றினை, இவை இரண்டும் இணைந்து அளிக்கின்றன.[54]

ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்

தொகு
 
ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்தின்படி ஆர்தரின் இறுதி எதிரியான மார்ட்ரெட்டை, ஆன்ட்ரூலாங்கின் ஆர்தர் அரசர் நூலுக்காக, ஹெச். ஜே.ஃபோர்ட் வரைந்த சித்திரம்: வட்ட மேசைக் கதைகள், 1902.

ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்தின் இலத்தீன் நூலான ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா (பிரிட்டன் அரசர்களின் வரலாறு) என்பதில்தான் ஆர்தரின் வாழ்க்கை பற்றிய முதல் உரைத் தொகுப்பு காணப்படுகிறது.[55] சி.1138ஆம் ஆண்டு நிறைவு பெற்ற இந்த நூலானது, மரபுப் புனைவான ப்ரூட்டஸ் என்னும் டிரோஜன் அகதியின் காலம் துவங்கி ஏழாவது நூற்றாண்டின் வெல்ஷ் அரசரான காத்வாலேடர் வரையிலான பிரித்தானிய அரசர்களைப் பற்றிய கட்டற்ற கற்பனைப் புனைவாகும்.

ஜியோஃப்ரேவும், ஹிஸ்டோரியா பிரிட்டோனம் மற்றும் அன்னாலெஸ் காம்பிரேயி வைப் போன்று உரோமர்களுக்குப் பிந்தைய கால கட்டத்தில்தான் ஆர்தரை வைக்கிறார். ஆர்தரின் தந்தையான உதர் பெண்டிராகன், அவரது மாயவித்தை ஆலோசகரான மெர்லின் மற்றும் மெர்லினின் மாயவித்தையால் உதர் தனது எதிரியான கோர்லோயிஸ் வடிவெடுத்து கோர்லோயிஸின் மனைவியான இகெர்னாவுடன் டிண்டேஜெல் என்னுமிடத்தில் முயங்கி அவள் ஆர்தரைக் கருத்தரிக்கும் ஆர்தர் கருத்தரிப்புக் கதை ஆகியவற்றை உள்ளிறுத்துகிறார். உதரின் மரணத்திற்குப் பின்னர், பதினைந்தே வயதான ஆர்தர் பிரிட்டனின் அரசராக அவரது வாரிசு உரிமையேற்று, ஹிஸ்டோரியா பிரிட்டோன த்தில் காணப்படுவனவற்றை ஒத்த, பல போர்களில் சண்டையிடுகிறார். இப்போர்த் தொடரானது பாத் போரில் உச்சமுறுகிறது.

பிறகு, அயர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஓர்ங்கி தீவுகள் ஆகியவற்றை வென்று ஆர்தரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குவதற்கு முன்னர் பிக்ட் மற்றும் ஸ்காட்ஸ் ஆகியவற்றை வெல்கிறார். 12 வருட அமைதிக்குப் பிறகு, ஆர்தர் மீண்டும் தமது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தப் புறப்பட்டு நார்வே, டென்மார்க் மற்றும் கௌல் ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார். கௌல் நாடு வெல்லப்படும்போது அது இன்னமும் உரோமப் பேரரசின் பிடியில்தான் உள்ளது. எனவே, ஆர்தரின் வெற்றியானது உரோமப் பேரரசுடனான அவரது மோதலுக்கு மேலும் வழி வகுக்கிறது. ஆர்தரும், கெயஸ் (கே), பெடுரியஸ் (பெடிவெரெ) மற்றும் குவால்குனௌஸ் (குவைன்) ஆகியோரை உள்ளிட்ட அவரது படை வீரர்களும், உரோமப் பேரரசரான லூசியஸ் டைபீரியஸை கௌல் நாட்டில் வெல்கின்றனர். ஆனால், அவர் உரோமாபுரியின் மீது படையெடுக்கத் தயாராகுகையில், பிரிட்டனைப் பாதுகாப்பதற்காகத் தாம் விட்டுவிட்டு வந்த தமது மருமகன் மாட்ரெடஸ் (மார்ட்ரெட்) தமது மனைவியான குவென்ஹுவாரா(குவினெவெரெ)வை மணந்து விட்டதாகவும், அரியணையைக் கைப்பற்றி விட்டதாகவும் கேள்வியுறுகிறார்.

ஆர்தர் பிரிட்டனுக்குத் திரும்பி வந்து கார்ன்வாலில் கம்ப்லம் நதிப்படுகையில் மார்ட்ரெஸை வென்று கொல்கிறார்; ஆனால், அவரும் குற்றுயிராகிறார். தனது மணிமுடியை அவர் தமது உறவினரான கான்ஸ்டண்டைன் என்பவருக்கு அளித்துப் பிறகு தமது காயங்களை ஆற்றிக் கொள்வதற்காக அவலோன் தீவிற்குக் கொண்டு செல்லப்படுகிறார். அதன் பின்னர் அவர் தென்படுவதே இல்லை.[56]

 
மாயக்காரன் மெர்லின், சி. 1300

[57]

இப்புனைவில் எந்த அளவு ஜியோஃப்ரேயின் சொந்தக் கண்டுபிடிப்பு என்பது வாதத்துக்குரியது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிஸ்டோரியா பிரிட்டோன த்தில் ஆர்தர் சாக்சன்களுடன் நிகழ்த்திய 12 போர்களின் பட்டியலை ஜியோஃப்ரே கண்டிப்பாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதனுடன், அன்னாலெஸ் காம்பிரேயி விலிருந்து கம்ப்லம் போர் பற்றியும் ஆர்தர் இன்னமும் உயிருடன் இருப்பதான கருத்தையும் எடுத்து அவர் கையாண்டிருக்க வேண்டும்.[58] இங்கிலாந்து முழுமைக்கும் ஆர்தர் அரசராக இருந்தார் என்னும் அவரது சொந்த அந்தஸ்தும் கால்ஃபிரிடிய காலத்திற்கு முந்தைய மரபான கல்விச் மற்றும் ஓல்வென் , மூவர்கள் மற்றும் துறவிகளின் வாழ்க்கைகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன.[59] இறுதியாக, மூடிய குடும்பம் மற்றும் கையஸ் (கெய்), பெடெரியஸ் (பெட்விர்), குவென்ஹுவாரா (க்வென்விஃபர்), உதர் (உதிர்) மற்றும் ஒருவேளை, பிற்காலத்திய ஆர்தர் கதைகளில் எக்ஸ்காலிபர் என்று மாறிய, கலிபர்னஸ் (கலேட்ஃப்விச்) ஆகியவற்றை உள்ளிட்ட ஆர்தரின் உடமைகளில் பலவற்றின் பெயர்களை ஜியோஃப்ரே கால்ஃப்ரிடிய காலத்திற்கு முந்தைய வெல்ஷ் மரபிலிருந்து அவர் கடன் பெற்றார்.[60] பெயர்கள், பிரதான நிகழ்வுகள் மற்றும் தலைப்புகள் ஆகியவை கடன் பெற்றிருப்பினும், "ஆர்தரியப் பகுதியானது ஜியோஃப்ரேயின் இலக்கிய உருவாக்கம்; முன்னம் இருந்த உரைகளுக்கு அது எந்த விதத்திலும் கடன்பட்டிருக்கவில்லை" என பிரின்லே ராபர்ட்ஸ் வாதிடுகிறார்.[61] எடுத்துக் காட்டாக, வெல்ஷ் மாட்ரௌட் தீய மார்ட்ரெடஸ்ஸாக ஜியோஃப்ரேயினால் உருவாக்கப்படுகிறார். ஆனால், 16ஆம் நூற்றாண்டு வரையிலும் வெல்ஷ் தோற்றுவாய்களில், இந்தப் பாத்திரத்தில் அத்தகைய தீய குணங்கள் ஏதும் காணப் பெறவில்லை.[62] ஹிஸ்டரியா ரேகம் பிரிட்டானியா என்பது முதன்மையாக ஜியோஃப்ரேயின் நூல்தான் என்னும் கருத்தைக் கேள்விக்குறியதாக்கும் சில நவீன முயற்சிகள் இருந்துள்ளன. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் வில்லியம் ஆஃப் நியூபர்க் ஜியோஃப்ரே "பொய்யுரைக்கும் பேராவலின்" காரணமாகத் தமது உரையை "புனைந்தார்" என்று கூறிய கருத்தினை கல்விசார் கருத்துக்கள் பெரும்பாலும் எதிரொலிக்கின்றன.[63] இக்கருத்திலிருந்து மாறுபடும் ஒருவர் ஜியோஃப்ரே ஆஷ் ஆவார். ஐந்தாவது நூற்றாண்டைச் சார்ந்த ரியோதமஸ் என்னும் ஒரு அரசரைப் பற்றிக் கூறிப்பிடும், தற்போது தொலைந்து விட்ட, ஒரு தோற்றுவாயிலிருந்தே ஜியோஃப்ரேயின் உரையின் ஒரு பகுதியாவது பெறப்பட்டுள்ளதாக அவர் நம்புகிறார். இந்தப் பாத்திரமே அசலான ஆர்தர் என அவர் நம்பினாலும், வரலாற்றாசிரியர்களும் செல்ட்டிக் ஆய்வாளர்களும் ஆஷ் அளிக்கும் இவ்வாறான முடிவுகளை ஏற்கத் தயங்குகின்றனர்.[64]

தோற்றுவாய்கள் எதுவாக இருந்திருப்பினும், ஜியோஃப்ரேயின் ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா வின் பெரும் புகழானது மறுக்கப்பட இயலாதது. ஜியோஃப்ரேயின் இலத்தீன் நூலின் கையெழுத்துப் பிரதிகள் இரு நூறுக்கும் மேற்பட்டு எஞ்சியுள்ளன. இதில் பிற மொழிகளிலான மொழிபெயர்ப்புக்கள் அடங்கா.[65] உதாரணமாக, இவ்வாறு 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட, ஹிஸ்டோரியா வின் வெல்ஷ் மொழிப் பதிப்புகளைக் கொண்ட சுமார் 60 கையெழுத்துப் பிரதிகள் தற்போது உள்ளன. இவற்றில் மூத்தவை 13ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. இத்தகைய வெல்ஷ் பதிப்புக்களில் சில உண்மையில் ஜியோஃப்ரேயின் ஹிஸ்டோரியா வில் உள்ளார்ந்தவை என்று 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லூயிஸ் மோரிஸ் போன்ற பழம்பொருள் ஆர்வலர்கள் முன்வைத்த கருத்தானது பலகாலம் முன்னரே கல்வி சார் வட்டங்களில் ஒதுக்கப்பட்டு விட்டது.[66] இத்தகைய பிரபலத்தின் விளைவாக, ஜியோஃப்ரேயின் ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா இடைக்காலத்தின் பிற்பகுதியில், ஆர்தரியப் புனைவு மேம்பாடுகளில் மிகுந்த அளவில் செல்வாக்கு கொண்டிருந்தது. ஆர்தரிய வீரக்காதற்காதைகளுக்கு இதுதான் ஒரே வலிமையான கருத்திறன் என்றில்லாவிடினும், இதன் பல தனிமங்கள் (எடுத்துக்காட்டாக மெர்லின் மற்றும் ஆர்தரின் இறுதிப் போர் ஆகியவை) எடுத்தாளப்பட்டு மேம்படுத்தப்பட்டன. வீரக்காதற்காதைகளின் மாய மற்றும் அற்புத சாகசங்களை நுழைப்பதற்கான வரலாற்று வரைச் சட்டத்தை இது அளித்தது.[67]

வீரக்காதற்காதைப் பாரம்பரியங்கள்

தொகு
 
12ஆம் நூற்றாண்டில், டிரிஸ்தான் மற்றும் இசுயெல்ட் போன்ற "ஆர்தரிய" இணைக் கதைகள் பெருகியமையால், ஆர்தரின் கதாப்பாத்திரம் ஒதுக்கப்படத் துவங்கியது. ஜான் வில்லியம் வாட்டர்ஹௌஸ், 1916

12ஆவது மற்றும் 13ஆவது நூற்றாண்டுகளில் ஐரோப்பியக் கண்டத்தில், குறிப்பாக ஃபிரான்ஸ் நாட்டில், கணிசமான அளவில் புதிய ஆர்தரிய நூல்கள் உருவானதற்கு, ஜியோஃப்ரேயின் ஹிஸ்டோரியா வும் அதிலிருந்து (வேஸின் ரோமன் டி ப்ருட் போன்று) பெறப்பட்ட நூல்களின் பிராபல்யமுமே காரணம் எனப் பொதுவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.[68] ஆயினும் பிரிட்டன் விடயங்கள் என்பதன் உருவாக்கத்தின் மீதான ஆர்தரிய செல்வாக்கு இது மட்டுமே அல்ல. ஜியோஃப்ரேயின் நூல் பரவலாக அறியப்படுவதற்கு முன்னரே ஆர்தர் மற்றும் ஆர்தரியக் கதைகள் பற்றிய அறிவு ஆகியவை மற்றும் ஜியோஃப்ரெயின் ஹிஸ்டோரியா ஆர்தரிய வீரக் காதற்காதைகளில் காணப்படாத "செல்டிக்" பெயர்களும் கதைகளும் ஐரோப்பியக் கண்டத்தில் இருந்தமைக்கு தெளிவான ஆதாரம் உள்ளது. (எடுத்துக் காட்டிற்குக் காண்க: மொடெனா ஆர்ச்சிவலோட்).[69][70] ஆர்தர் என்னும் கருத்தாக்கத்திலிருந்து காண்கையில், புதிய ஆர்தரியக் கதைகள் இவ்வாறு வெள்ளமெனப் பாய்ந்து வந்தமையின் முழு முதல் விளைவானது அந்த அரசரின் மீதாகவே இருந்தது. 12ஆம் நூற்றாண்டு மற்றும் பிற்காலத்திய ஆர்தர் இலக்கியத்தின் பெரும்பகுதி ஆர்தரைக் குறைவாக மையப்படுத்தி, லேன்ஸ்லாட், மற்றும் குவென்வெரெ பர்சிவல், கலஹாட், கவைய்ன் மற்றும் திரிஸ்தான் மற்றும் ஐசோல்ட் ஆகிய பாத்திரங்களை அதிக அளவில் முன்னிறுத்துவதாக இருந்தது. கால்ஃபிரிடிய காலத்திற்கு முந்தைய இலக்கியம் மற்றும் ஜியோஃப்ரேயின் ஹிஸ்டோரியா ஆகியவற்றில் ஆர்தரே மையப் பாத்திரமாக இருந்த நிலையில், வீரக்காதற்காதை மரபில் அவரது முக்கியத்துவம் விரைவாகக் குறையலானது.[71] அவரது குணாதிசயமும் வெகுவாக மாறியது. ஆரம்பகால நூல்கள் மற்றும் ஜியோஃப்ரே ஆகியவற்றில் அவர் ஒரு மூர்க்கமான மாபெரும் வீரராகவும், சிரித்தவாறே சூனியக்காரர்களையும் அரக்கர்களையும் சிரம் அறுப்பவராகவும், அனைத்து இராணுவப் பணிகளிலும் முன்னணியில் நிற்பவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.[72] இதற்கு மாறாக, ஐரோப்பியக் கண்டத்தின் வீரக்காதற்காதைகளில் அவர் "ரோய் ஃபெய்ண்டினண்ட் " அதாவது "வெட்டி ராஜா"வாக, "மற்றபடி ஆதர்சமாக விளங்கும் தனது சமூகத்தில், செயலற்ற தன்மை சொல்பேச்சு கேட்கும் போக்கு ஆகியவற்றைத் தமது மையப் பழுதாக"க் கொண்டுள்ளவராகக் காணப்படுகிறார்.[73] இந்நூல்களில் ஆர்தரின் பாத்திரமானது, பல நேரங்களில், அறிவார்ந்த, கண்ணியமான, சுமுகமான நடத்தையுடைய, ஓரளவு நயநாகரிகமான, அவ்வப்போது வலிமையற்றவரான முடியரசராகக் காணப்படுகிறது. இதனால், மார்ட் ஆர்த்து வில் குனிவெரெவுடன் லேன்ஸ்லாட்டின் கள்ளத் தொடர்பு பற்றி அறியும்போது அவர் வெறுமே வெளிறிப்போய் மௌனமாகி விடுகிறார். கிரைட்டியன் டி ட்ராயெஸின் ஒய்வெய்ன், தி நைட் ஆஃப் தி லயன் என்னும் நூலில், ஒரு விருந்திற்குப் பின்பு விழித்திருக்க இயலாது சிற்றுறக்கம் கொள்வதற்காக ஓய்வெடுக்கச் சென்று விடுகிறார்.[74] இருப்பினும், நோரிஸ் ஜே. லேஸி குறிப்பிட்டுள்ளவாறு, இத்தகைய ஆர்தரிய வீரக் காதற்காதைகளில் அவரது பழுதுகளும் பலவீனங்களும் எவ்வகையாக இருப்பினும். "அவரது கௌரவம் எப்போதுமே- அல்லது ஓரளவு எப்போதுமே- தனிப்பட்ட பலவீனங்களால் சமரசம் செய்யப்படவில்லை. அவரது ஆணையுரிமை மற்றும் கீர்த்தி ஆகியவை சேதமடையாமலேயே உள்ளன."[75]

மேரி டி பிரான் [76] ஸின் லைஸ் சிலவற்றில் ஆர்தரும் அவரது பரிவாரமும் தோன்றுகின்றனர். ஆயினும், ஆர்தர் மற்றும் அவரது மரபுப் புனைவு ஆகியவற்றின் குணாதிசயம் மேற்கூறியவாறு மாறுவதற்கான முக்கியமான பாதிப்பை உருவாக்கியது மற்றொரு ஃபிரெஞ்சுக் கவிஞரான கிரைட்டியன் டி ட்ராயெசின் நூலேயாகும்.[77] கிரைட்டியன் (Chrétien) சி.1170 மற்றும் சி.1190 ஆகிய ஆண்டுகளுக்கு இடையினில் ஐந்து ஆர்தரிய வீரக் காதற்காதைகளை  எழுதினார். ஆர்தரின் அரசவைப் பின்னணியில் நிகழும் அரசவைக் காதல் கதைகளான எரெக் அண்ட் எனைட் மற்றும் கிளிஜெஸ் ஆகியவை ஆர்தரியக் கருத்தாக்கம் வெல்ஷ் மற்றும் கால்ஃபிரிடிய ஆர்தரின் சாகச உலகிலிருந்து இடம் பெயர்ந்து விட்டதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளன. மறுபுறம், ஒய்வெய்ன், தி நைட் ஆஃப் தி லயன் , ஒய்வெய்ன் மற்றும் கவெய்ன் ஆகியோரை அமானுஷ்ய சாகசத்தில் வெளிப்படுத்தி ஆர்தரின் பாத்திரத்தைப் பெருமளவில் ஒதுக்கிப் பலவீனமாக்குகிறது. இருப்பினும், ஆர்தரிய மரபுப் புனைவு அடைந்த மாற்றத்தின் மிக முக்கியமான அடையாளமாகத் திகழ்ந்தது லேன்ஸ்லாட், தி நைட் ஆஃப் தி கார்ட் மற்றும் பர்சிவல், தி ஸ்டோரி ஆஃப் தி கிரெயில் ஆகியவையாகும். இதில், முதலாம் நூல் லேன்ஸ்லாட் மற்றும் ஆர்தரின் ராணியான குவினெவெரெவுடன் அவனுக்குள்ள கள்ளக் காதல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி, மனைவியால் வஞ்சிக்கப்பட்டவர் என்னும் பிம்பத்தை ஆர்தருக்கு உறுதிப்படுத்தியது. இரண்டாவது நூலில், புனிதத் திருக்குருதிக் கலம், மற்றும் மீனவ அரசர் ஆகியவை அறிமுகமாகி, ஆர்தர் பாத்திரத்தின் பங்களிப்பானது பெருமளவு குறைந்தது.[78] இவ்வாறு "ஆர்தரிய மரபுப் புனைவு விலாவாரியாக விளக்கப்படுவதற்கும் மற்றும் மரபுப் புனைவு தளர்வுறும் வகையில் ஆதர்ச நிலையை நிறுவியதற்கும் ஒரு கருவியாக"[79] கிரைட்டியன் செயல்பட்டார். அவருக்குப் பின்னர், ஆர்தர் மற்றும் அவரது உலகைச் சித்தரித்து, வந்தவற்றில் பெரும்பாலானவை அவர் இட்ட அடித்தளத்தின் மீதே எழுப்பப்படலாயின. பர்சிவல் நூலானது நிறைவு செய்யப்படவில்லை எனினும், குறிப்பிடும் வண்ணம் பிரபலமடைந்தது. அடுத்த அரை நூற்றாண்டில் இக்கவிதையின் நான்கு வெவ்வேறு தொடர்கள் வெளியாயின. ராபர்ட் டி போரோன் போன்ற பிற எழுத்தாளர்களால் புனித திருக்குருதிக் கலம் மற்றும் அதற்கான தேடல் ஆகியவை உருவாக்கப்பட்டன. இது ஐரோப்பிய கண்டத்து வீரக்காதற்காதைகளில் ஆர்தரின் சரிவு விரைந்து நிகழ உதவலானது.[80] இவ்வாறே, லேன்ஸ்லாட் (சி.1225) உரைநடை மற்றும் அதற்குப் பின்னர் வந்த உரைகளில், கிரைட்டியனின் பாத்திரமும் உல்ரிச் வோன் ஜாட்ஜிகோவென்னின் லாஞ்செலெட் பாத்திரமும் கலந்துபட்டிருப்பினும், லேன்ஸ்லாட்டும் அவன் காரணமாக ஆர்தர் தம் மனைவி குவினெவெரெவினால் வஞ்சிக்கப்படுவதும் ஆர்தரிய மரபுப் புனைவின் புகழ்சான்ற பண்புக் கூறுகளாயின.[81] கிரைட்டியனின் நூலானது வெல்ஷ் ஆர்தரிய இலக்கியத்திற்கு மிகுந்த அளவில் உள்ளீடுகளை அளிப்பதாகக் காணப்படுகிறது. இதன் காரணமாக வீர சாகசம் புரிபவராகவும் துடிப்பானவராகவும் வெல்ஷ் இலக்கிய மரபில் காணப்படும் ஆர்தர், வீரக்காதற்காதைகளின் ஆர்தராக மாற்றமடைந்தார்.[82] இத்தகைய மாற்றமானது குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்டிருப்பினும், கிரைட்டியனின் நூலை ஒத்ததாகவே உள்ள, மூன்று வெல்ஷ் ஆர்தரிய வீரக் காதற் காதைகளில் முக்கியமாகக் காணப்படுகிறது: ஓவெயின் ஆர் லேடி ஆஃப் தி ஃபௌண்டன் கிரைட்டியனின் ஒய்வெய்னு க்குத் தொடர்புற்றுள்ளது. கெரைன்ட் அண்ட் எனிட் என்பதானது எரெக் அண்ட் எனைட் என்பதுடனும் மற்றும் பெரெடு சன் ஆஃப் எஃப்ராவ்க் பர்சிவல் உடனும் தொடர்புற்றுள்ளன.[83]

 
வட்ட மேசை அனுபவம்: திருக்குருதிக் கலத்தின் ஒரு தோற்றம். பதினைந்தாவது நூற்றாண்டைச் சார்ந்த ஒரு ஃபிரெஞ்சு கையெழுத்துப் பிரதியிலிருந்து.

சி.1210ஆம் ஆண்டு வரையிலும் ஆர்தரிய வீரக்காதற் காதைகள் கவிதைகள் வாயிலாகவே முதன்மையாக வெளியாயின. இதன் பின்னர், அக்கதைகள் உரை நடையில் வெளியாகத் துவங்கின. இந்த 13ஆம் நூற்றாண்டின் உரைநடை வீரக் காதற்காதைகளில் மிகவும் முக்கியமானது வல்கேட் சைக்கிள் என்பதாகும். (இது லேன்ஸ்லாட்-கிரெயில் சைக்கிள் என்பதாகவும் அறியப்படுகிறது). இது அந்த நூற்றாண்டின் முற்பகுதியில் ஐந்து இடைக்கால ஃபிரெஞ்சு உரை நடை நூல்களின் தொடராக எழுதப்பட்டது.[84] இந்த நூல்கள், எஸ்டோய்ரெ டெல் செயிண்ட் கிரெயில் , எஸ்டோய்ரெ டி மெர்லின் , (வல்கேட் சைக்கிளை தனிப்பட்ட தொகுப்பாக்கிய) லேன்ஸ்லாட் போப்ரெ (அல்லது உரைநடை லேன்ஸ்லாட் ), குவெஸ்டெ டெல் செயிண்ட் கிரால் மற்றும் மார்ட் ஆர்த்து ஆகியவையாகும். இவை ஆர்தரிய மரபுப் புனைவு முழுமைக்குமான முதல் சீரான பதிப்பாகத் திகழ்கின்றன. ஓரளவிற்கு,கலஹாட் என்னும் பாத்திரத்தின் அறிமுகத்தாலும் மற்றும் மெர்லினின் பாத்திரம் விரிவாக்கப்பட்டதாலும் ஆர்தர் தமது புனைவுகளில் கொண்டிருந்த பங்கானது குறையும் நிகழ்வை இந்தச் சுழற்சி தொடரலானது. இது ஆர்தர் மற்றும் அவரது சகோதரிக்கு இடையிலான முறையற்ற உறவின் விளைவாக மார்ட்ரெட் பாத்திரத்தை அமைத்து, கிரைட்டியனில் லேன்ஸ்லாட் டில் முதன் முறையாக, ஒரு கடந்து செல்லும் குறிப்பாக அமைந்த, காமிலோட்டை ஆர்தரின் முதன்மை அரசவையாக நிறுவியதிலும் விளைந்தது.[85] இவ்வுரைத் தொடர்களை வல்கேட் சுழற்சிக்குப் பிந்தையதான (சி.1230-40) நூல்கள் விரைந்து தொடர்ந்தன. இவற்றில், சியூட் டு மெர்லின் ஒரு பகுதியாகும். இது லேன்ஸ்லாட் குவினெவெரெவுடன் கொண்டிருந்த கள்ளக் காதல் விடயத்தை வெகுவாகக் குறைத்தது. இருப்பினும், புனித திருக்குருதிக் கலத்திற்கான தேடலே மையமாக்கி, ஆர்தர் ஒதுக்கப்படுவதைத் தொடர்ந்தது.[84] இத்தகைய ஃபிரெஞ்சு உரைநடை வீரக்காதற்காதைகளில் ஆர்தர் ஒப்புமையில் சிறு பாத்திரமாகச் சுருங்கலானார். வல்கேட்டிலேயே, எஸ்டோய்ரெ டி மெர்லின் மற்றும் மோர்ட் ஆர்த்து ஆகியவற்றில்தான் அவர் பிரதானமாகக் காணப்படுகிறார்.

இடைக்காலத்திய ஆர்தரிய சுழற்சியும் "வீரக்காதற்காதை ஆர்தர்" பாத்திரத்தின் உருவாக்கமும் லெ மார்ட்டெ டி'ஆர்தர் என்பதில் உச்சமடைந்தன. இது 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆர்தரின் முழு மரபுப் புனைவையும் ஒரே நூலாக தாமஸ் மேலாரி (Thomas Malory) ஆங்கிலத்தில் வரைந்த நூலாகும். முதலில் அரசர் ஆர்தரும் மற்றும் அவரது வட்ட மேசை பிரபு மாவீரர்களுக்குமான முழுப் புத்தகம் (தி ஹோல் புக் ஆஃப் கிங் ஆர்தர் அண்ட் ஆஃப் ஹிஸ் நோபிள் நைட்ஸ் ஆஃப் தி ரௌண்ட் டேபிள்) என்று பெயரிடப்பட்ட இப்புத்தகத்தை பல முந்தைய வீரக்காதற் காதைப் பதிப்புகளின் அடிப்படையில்தான் மேலோரி எழுதினார். இது ஆர்தரியக் கதைகளின் முழுமையான மற்றும் அதிகாரமுற்ற தொகுப்பாகத் திகழ்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது.[86] ஒரு வேளை இதன் விளைவாகவும் மற்றும் 1845ஆம் வருடம் வில்லியம் காக்ஸ்டன் என்பவரால் இங்கிலாந்தில் அச்சடிக்கப்பட்ட துவக்க காலப் புத்தகங்களில் லெ மார்ட்டெ டி'ஆர்தர் நூலும் ஒன்று என்னும் யதார்த்த உண்மை காரணமாகவும் பிற்காலத்திய ஆர்தரிய நூல்கள் மேலோரியிடமிருந்து பெறப்பட்டவையாகவே உள்ளன.[87]

சரிவும், புத்துயிராக்கமும் நவீனப் புனைவும்

தொகு

பின்-இடைக்கால இலக்கியம்

தொகு

இடைக்காலத்தின் இறுதிக் கட்டங்களில் ஆர்தர் புனைவில் ஆர்வம் குறையலானது. பெரும் ஃபிரெஞ்சு வீரக் காதற் காதைகளின் ஆங்கிலப் பதிப்பாக மேலோரி வரைந்தவை பிரபலமாக இருந்தனவெனினும், ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்தின் காலத்திலிருந்து நிறுவப்பட்டிருந்ததான ஆர்தரிய வீரக்காதற்காதைகளின் வரலாற்று வரைவுச் சட்டத்தின் உண்மைத்தன்மை மீதான தாக்குதல்கள் அதிகரிக்கலாயின. இதன் காரணமாக, பிரிட்டன் விடயம் முழுவதையும் பொறுத்த முறைமை நிலை கேள்விக்கிடமானது. உதாரணமாக, உரோமாபுரிக்குப் பிந்தைய கால கட்டத்தில் ஆர்தர் அரசராக இருந்தார் என கால்ஃபிரிடியனுக்குப் பிந்தைய இடைக்காலத்தின் "வரலாற்றுக் கூறு மரபு" முழுவதிலும் காணப்பட்டதை 16ஆம் நூற்றாண்டு மனிதநேயக் கல்வியாளர் பாலிடொரே வெர்ஜில் (Polydore Vergil) நிராகரித்தது மிகவும் பிரபலமடைந்து வெல்ஷ் மற்றும் ஆங்கிலேயே பழம்பொருள் ஆர்வலர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.[88] இடைக்காலத்தின் இறுதிக் கட்டத்துடன் தொடர்புடையதான சமூக மாற்றங்களும் மற்றும் மறுமலர்ச்சியும் ஆர்தரின் பாத்திரம் மற்றும் அவருடன் தொடர்புடைய புனைவுகள் ஆகியவை நேயர்களை வசீகரிக்கப் பெற்றிருந்த சக்தியை ஒழிப்பதிலேயே முனையலாயின. இதன் விளைவாக, 1634ஆம் வருடத்திய மேலோரியின் லெ மார்டெ டி'ஆர்தர் அச்சுப் பதிப்பே சுமார் 200 வருட காலத்திற்குக் கடைசிப் பதிப்பாக அமைந்தது.[89] ஆர்தர் அரசரும் மற்றும் அவரது ஆர்தரிய மரபுப் புனைவுகளும் முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு விடவில்லை. ஆயினும், 19ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை இது தொடர்பான விடயங்கள் கூர்ந்து கவனிக்கப்படவில்லை. மேலும், இவை 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டின் அரசியல் நிகழ்வுகளுக்கு உருவகக் கதைகளாகவே பயன்பட்டு வரலாயின.[90] இவ்வாறாக, ரிச்சர்ட் பிளாக்மோர் எழுதிய இதிகாசங்களான இளவரசர் ஆர்தர் (1695) மற்றும் அரசர் ஆர்தர் (1697) ஆகியவை இரண்டும் வில்லியம் III ஜேம்ஸ் IIவிற்கு எதிராகப் போராடியதன் உருவகமாகவே ஆர்தரைச் சித்தரிக்கின்றன.[90] இதைப் போலவே, இந்தக் கால கட்டம் முழுவதிலும் மிகவும் பிரபலமாக இருந்த ஆர்தரியக் கதை டாம் தம்ப் என்பதாகக் காணப்படுகிறது. இது முதலில் கைப்புத்தகங்களாக வெளியிடப்பட்டுப் பிறகு ஹென்ரி ஃபீல்டிங்கின் அரசியல் நாடகங்களாக வெளியானது. இவற்றில் செயற்பாடுகள் ஆர்தரின் பிரிட்டனில் அமைக்கப்பட்டிருப்பினும், அவற்றின் ஆக்க முறைமையானது முதன்மையாக ஆர்தரின் வீரக்காதற்காதைப் பாத்திரத்தின் நகைச்சுவைப் பதிப்பாகவே தோற்றமளிக்கிறது.[91]

டென்னிசனும் புத்துயிராக்கமும்

தொகு
 
ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசனின் இடில்ஸ் ஆஃப் தி கிங் கவிதைக்காக கஸ்டாவ் டோரெயின் சித்திரம், 1868.

19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இடைக்கால மரபுகள், வீரக்காதற்காதை மரபுகள் மற்றும் கோதிக் புத்துயிராக்கம் ஆகியவை ஆர்தர் மற்றும் இடைக்கால வீரக்காதற்காதைகளில் ஆர்வத்தை உருவாக்கின.

19ஆம் நூற்றாண்டின் கனவான்களுக்கான ஒரு புதிய நெறிமுறை உருவாக்கப்பட்டது. இதில் "வீரக்காதற்காதை ஆர்தர்" அளித்த ஆதர்சங்களால் உருவகப்படுத்தப்பட்ட பேராண்மைப் பண்பு முதன்மையாக இருந்தது. இவ்வாறு புத்துயிர் பெற்ற ஆர்வம் முதன் முதலாக 1816ஆம் வருடம், 1634ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன் முறையாக, மேலோரியின் லெ மார்டே டி'ஆர்தர் மீண்டும் அச்சுரு பெற்றபோது உணரப்பட்டது.[92] துவக்கத்தில், ஆர்தரியப் புனைவுகள் கவிஞர்களுக்கு ஆர்வமூட்டுபவனவாகவே இருந்தன. உதாரணமாக, இதன் ஊக்கத்தால் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (William Wordsworth) எகிப்தியக் கன்னி (1835) என்னும் புனிதத் திருக்குருதிக் கலத்தின் உருவகக் கதையை எழுதினார்.[93] இவற்றில் முதன்மையானது ஆல்ஃபிரட் லார்ட் டென்னிசன் (Alfred Lord Tennyson) வரைந்த முதல் ஆர்தரியக் கவிதையான ஷாலோட் மாதரசி 1832ஆம் ஆண்டு பிரசுரமானது.[94] இவற்றில் சிலவற்றில் ஆர்தர் சிறு பங்கினையே பெற்றிருந்தாலும், இடைக்காலத்திய வீரக்காதற்காதை மரபினை ஒட்டி, டென்னிசனின் ஆர்தரிய எழுத்தானது இடில்ஸ் ஆஃப் தி கிங் (அரசரின் கிராமியப் புனைவுகள்) என்பதனுடன் நன்மதிப்பின் உச்சத்தை அடைந்தது. விக்டோரியன் காலத்திற்காக, ஆர்தரின் வாழ்க்கை முழுவதையுமே மீண்டும் உருவாக்குவதாக இது அமைந்திருந்தது. 1859ஆம் வருடம் முதன் முறையாகப் பிரசுரிக்கப்பட்ட இது முதல் வாரத்திலேயே 10,000 பிரதிகள் விற்பனையாகியது.[95] இடில்ஸ் நூலில், புவியில் வழுவற்ற தேசம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு இறுதியில், மனித பலவீனத்தால் தோற்றுப் போகும் ஒரு ஆதர்ச மனிதனின் உருவகமாக ஆர்தர் விளங்கினார்.[96] டென்னிசனின் நூல்களை அடியொற்றி அநேக நூல்கள் வெளியாகி, ஆர்தரின் புனைவுகள் மற்றும் அவரது பாத்திரம் ஆகியவற்றில் பெருமளவு ஆர்வத்தை உண்டாக்கின. மேலும் இவை மேலொரியின் கதைகளுக்கு பெரும் பரப்பளவிலான வாசகர்களையும் உருவாக்கின.[97] உண்மையில், ஆர்தரின் கதைகளின் அற்புதத் தொகுப்பான மேலோரியின் முதல் நவீன நூல், இடில்ஸ் தோன்றியதற்குச் சில காலம் கழித்து 1862ஆம் ஆண்டு பிரசுரமானது. அந்த நூற்றாண்டின் இறுதிக்கு முன்னர் மேலும் இதன் ஆறு பதிப்புகளும், ஐந்து போட்டிப் பதிப்புக்களும் உருவாயின.[98]

"வீரக்காதாற்காதை சார்ந்த ஆர்தர்" மற்றும் அவரது தொடர்பான கதைகள் ஆகியவற்றில் கிளர்ந்த இந்த ஆர்வமானது 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து வில்லியம் மோரிஸ் போன்ற கவிஞர்கள் மற்றும் எட்வர்ட் பர்ன்-ஜோன்ஸ் உள்ளிட்ட ராஃபலைட்டிற்கு-முந்தைய கலைஞர்கள் மீது செல்வாக்கு செலுத்தலானது.[99] 18ஆம் நூற்றாண்டில் இடில்ஸ் பிரசுரிக்கப்பட்டதற்குப் பிறகு ஆர்தர் புனைவின் முதன்மை வெளியீட்டாக காணப்பட்ட டாம் தம்ப் போன்ற நகைச்சுவைப் புனைவுகள் கூட இடில்ஸ் பிரசுரத்திற்குப் பிறகு மீண்டும் எழுதப்பட்டன. டாம் தன்னை சிறு அளவினதான ஒரு நகைச்சுவைப் பாத்திரமாக முன்னிறுத்துகையில், அவரது கதையில் இடைக்காலத்திய ஆர்தரியன் வீரக்காதற்காதைகளிலிருந்து மேலும் பல தனிமங்கள் இணைக்கப்படலாயின. இப்புதிய பதிப்புக்களில் ஆர்தரின் பாத்திரம் மேலும் தீவிரத்தன்மையுடனும், வரலாற்றுப் பின்னணியுடனும் சித்தரிக்கப்பட்டது.[100] ஆர்தரின் வீரக்காதற்காதை மீதான இப்புதிய ஆர்வம் ஐக்கிய மாநிலங்களிலும் மிகுந்த செல்வாக்குப் பெறலானது. உதாரணமாக, சிட்னி லேனியரின் சிறுவனின் அரசர் ஆர்தர் (1880) பெருமளவு வாசகர்களை அடைந்து மார்க் டுவைனின் (Mark Twain) அங்கத நூலான "ஆர்தரின் அரசவையில் ஒரு கனெக்டிகட் யாங்கி "க்கு (எ கனெக்டிகட் இன் கிங் ஆர்தர்'ச் கோர்ட்) (1889) என்னும் நூலுக்கு ஊக்கமானது.[101] சில நேரங்களில், இப்புதிய ஆர்தரிய நூல்களுக்கு (பர்ன்-ஜோன்ஸின் "அவலானில் ஆர்தரின் கடைசி உறக்கம் " என்னும் நூலில் அவர் இருந்ததைப் போல) "வீரக் காதற்காதை ஆர்தர்" மையமாக இருப்பினும், பிற சமயங்களில் அவர் தமது இடைக்காலத்து அந்தஸ்திற்கே திருப்பப்பட்டு ஒதுக்கப்பட்டார் அல்லது முழுதுமாக தவிர்க்கப்பட்டார். உதாரணமாக வாக்னரின் அர்தரிய ஓபராக்கள் இவ்வாறான நிகழ்வுகளுக்கு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும்.[102] மேலும், ஆர்தர் மற்றும் ஆர்தரியப் புனைவுகளில் ஆர்வம் என்பதானது அடங்காது தொடர்ந்திருக்கவில்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், ராஃபலைட்டுக்கு-முந்தைய கலை ஒற்றியெடுப்பாளர்கள்[103] ஆகியோரிடம் மட்டுமே இது நிலவுவதானது. மேலும், முதலாம் உலகப் போர் பேராண்மை என்பதன் புகழை அழித்து, அதற்கு ஒரு இடைக்காலத்திய முன்னுதாரணமாக விளங்கிய ஆர்தரின் மீதான ஆர்வம் குறைவதையும் இதனால் தவிர்க்க இயலவில்லை.[104]

இருப்பினும், வீரக்காதற்காதை மரபு தாமஸ் ஹார்டி, லாரன்ஸ் பின்யான் மற்றும் ஜான் மேஸ்ஃபீல்ட் ஆகியோர் ஆர்தரிய நாடகங்களை[105] இயக்கும் அளவுக்குப் போதுமான வலு கொண்டே இருந்தது. டி.எஸ்.எலியட் (T. S. Eliot) விரய நிலம் என்னும் தமது கவிதையில் ஆர்தர் தொன்மத்தினை (ஆர்தரை அல்ல) மறைமுகமாக, மீனவ அரசர் என்பதாகக் குறிப்பிடுகிறார்.[106]

நவீனப் புனைவு

தொகு
 
ஆர்தர் மற்றும் மார்டிரெட்டிற்கு இடையிலான போர். என்.சி. வையெத், தி பாய்'ஸ் கிங் ஆர்தருக்காக வரைந்த சித்திரம், 1922.

ஆர்தரின் வீரக் காதற்புனைவு மரபின் செல்வாக்கானது, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் (1937ஆம் ஆண்டு முதலான) பிரின்ஸ் வேலியண்ட் போன்ற சித்திரக் கதைகளுக்குக் கூடுதலாக, டி.ஹெச். ஒயிட்டின் (T. H. White) தி ஒன்ஸ் அண்ட் ஃப்யூச்சர் கிங் (1958) மற்றும் மேரியான் ஜிம்மர் பிராட்லியின் தி மிஸ்ட்ஸ் ஆஃப் அவலோன் (1982) ஆகியவற்றின் வழி தொடரலானது.[107] டென்னிசன் தனது வாழ்நாளின் பிரச்சினைகளுக்குப் பொருந்துமாறும், அவற்றின் மீது கருத்துத் தெரிவிக்கும் வகையிலும் ஆர்தரின் வீரக் காதற்காதைகளை மீண்டும் எழுதினார். நவீன இலக்கியத்தில் ஆர்தரின் கதைகளின் மீதான செயற்பாடு இவ்வாறே உள்ளது.

உதாரணமாக, இடைக்காலத்திய இலக்கிய நூல்களில் காணப்படும் ஆர்தரின் கதைகளுக்கு மாறாக, பிராட்லேயின் கதை ஆர்தர் மற்றும் அவரது பழம்புனைவிற்கு ஒரு பெண்ணுரிமை அணுகலை மேற்கொள்கிறது.[108] அமெரிக்க எழுத்தாளர்கள் பல நேரங்களில், சம நிலை மற்றும் ஜனநாயகம் ஆகிய மதிப்புக் கோட்பாடுகளுக்கு ஒத்து இருக்குமாறு ஆர்தரின் கதைகளை மீண்டும் அமைக்கின்றனர்.[109] ஆர்தரின் வீரக்காதற்காதைகள் திரைப்படம் மற்றும் நாடகங்களிலும் பிரபலமாகி உள்ளது.

டி.ஹெச்.ஒயிட்டின் புதினம் கேமலோட் (1960) என்னும் லெர்னர்-லோவ் மேடை இசை நாடகமாகவும் மற்றும் டிஸ்னியின் தி ஸ்வோர்ட் இன் தி ஸ்டோன் என்னும் அசைவூட்டத் திரைப்படமாகவும் தழுவப்பட்டது. லேன்ஸ்லாட் மற்றும் குனிவெரெ ஆகியோரின் காதல் மற்றும் மனைவியால் வஞ்சிக்கப்படும் ஆர்தர் ஆகியவற்றைக் குவிமையப்படுத்திய கேமலோட் அதே பெயரில் திரைப்படமாக 1967ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது. ராபர்ட் ப்ரெஸ்ஸனின் லேன்ஸ்லாட் டு லாக் (1974), எரிக் ரொமரின் பெர்கெவல் லெ கல்லோயிஸ் (1978) மற்றும் ஓரளவு ஜான் பூர்மேனின் கட்டற்ற கற்பனைத் திரைப்படமான எக்ஸ்காலிபர் (1981) ஆகியவற்றில் ஆர்தரின் வீரக்காதற்காதை மரபும் குறிப்பிடத்தக்க வகையில் காணப்படுவது மட்டும் அன்றி விமர்சகர்களின் கூற்றுப்படி, வெற்றிகரமாகக் கையாளவும்படுகிறது. மேலும், ஆர்தரிய கேலிச் சித்தரிப்பான மோண்டி பைதான் அண்ட் தி ஹோலி கிரெயில் என்னும் திரைப்படத்திலும் இது பிரதான தோற்றுவாயாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[110]

வீரக்காதற்காதை மரபின் மறு விவரிப்புகளும் மறு கற்பனைகளும் மட்டுமே ஆர்தர் அரசர் பற்றிய நவீன மரபுப் புனைவுகளின் பிரதானமான அம்சம் அல்ல. சி.500 ஏடி என்னும் கால கட்டத்திற்கான உண்மையான வரலாற்று நபராக ஆர்தரைச் சித்தரிப்பதும் "வீரக்காதற் காதை"ப் பண்பை அகற்றுவதுமான முயற்சிகளும் தோன்றியுள்ளன. டெய்லர் மற்றும் ப்ரூவர் குறிப்பிட்டவாறு, இரண்டாம் உலகப் போர் வெடித்த காலகட்டத்தை அடுத்து வந்த வருடங்களில், ஜெர்மானிய படையெடுப்பாளர்களை எதிர்க்கும் இதிகாச மரபு ஆர்தரின் போக்கு பிரிட்டனில் நேச உணர்வை ஏற்படுத்தியதால்,இடைக்காலத்திய ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத் மற்றும் ஹிஸ்டோரியா பிரிட்டோனம் ஆகியவற்றின் வரலாற்றுக் கூறு மரபினை நோக்கி மீள்வதான ஒரு செயற்பாடு பிரதானமாக இருத்தல் ஆர்தரிய இலக்கியத்தில் அண்மைக்காலத்தில் விளைந்த ஒரு போக்காகும்.[111] கிளெமென்ஸ் டேன் என்பவரின் வானொலித் தொடர் நாடகங்களான தி சேவியர்ஸ் (1942), தவிர்க்க இயலாத இன்னல்களுக்கு எதிரான போராட்ட உணர்வின் குறியீடாக வரலாற்று ஆர்தரைப் பயன்படுத்தியது. ராபர்ட் ஷெரிஃபின் நாடகமான தி லாங் சன்செட் (1955) ஜெர்மானிய படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஆர்தர் உரோமானிய-பிரித்தானிய எதிர்த் தாக்குதலின் பேரணியை வகுப்பதைக் கண்ணுற்றது.[112] இக் காலகட்டத்தில் பிரசுரிக்கப்பட்ட வரலாற்று மற்றும் கட்டற்ற கற்பனைப் புதினங்களிலும் ஆர்தரை வரலாற்றுப் பின்னணியில் அமைக்கும் போக்கு தென்பட்டது.[113] சமீபத்திய வருடங்களில் ஐந்தாவது நூற்றாண்டின் ஒரு மெய்யான நாயகனாக ஆர்தரைச் சித்தரிப்பதும் ஆர்தரியப் புனைவுகளின் திரைப்பட ஆக்கங்களில், குறிப்பாக கிங் ஆர்தர் (2004) மற்றும் தி லாஸ்ட் லீஜன் (2007) ஆகியவற்றில் காணப்படுகிறது.[114]

நவீன காலத்து நடத்தைக்கு ஒரு முன்னுதாரணமாகவும் ஆர்தர் பயன்படுத்தப்படுகிறார். 1930களில் பிரிட்டனில் கிறிஸ்துவ ஆதர்சங்களையும் இடைக்காலத்திய பேராண்மை பற்றிய ஆர்தரியக் கருத்துக்களையும் ஊக்குவிப்பதற்காக வட்டமேசை மாவீரர்களின் கூட்டுறவு மரபொழுங்கு (ஆர்டர் ஆஃப் தி ஃபெல்லோஷிப் ஆஃப் தி நைட்ஸ் ஆஃப் தி ரௌண்ட் டேபிள்) உருவாக்கப்பட்டது.[115] ஐக்கிய மாநிலங்களில், ஆயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்தர் அரசரின் மாவீரர்கள் போன்ற ஆர்தரிய இளைஞர் குழாம்களில் இணைந்தனர். இவற்றில் ஆர்தரும் அவரது மரபுப் புனைவுகளும் முழுமையான உதாரணங்களாகப் போற்றப்பட்டன.[116] இருப்பினும், சமகாலத்திய கலாச்சாரத்தில் ஆர்தரின் ஊடுருவலானது இவ்வாறு வெளிப்படையான ஆர்தரியப் போக்குகளையும் தாண்டிச் செல்வதாக உள்ளது. பொருட்கள், கட்டிடங்கள் மற்றும் இடங்களுக்கு ஆர்தரியப் பெயர்கள் சூட்டப்படுவது வழமையாகி உள்ளது. நோரிஸ் ஜே. லேஸி குறிப்பிட்டதைப் போல, "ஆர்தரைப் பற்றிய வெகுஜனக் கருத்து, வியப்பூட்டாத வகையில், சில கலைப்பண்புக் கூறுகள் மற்றும் பெயர்களிலேயே அடங்குவதாக உள்ளது. ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் பிறந்த ஒரு மரபுப் புனைவு எந்த அளவிற்கு நவீன கலாச்சாரத்தின் ஒவ்வொரு நிலையிலும் தடங்காணா வகையில் முழுமையாக ஆழப் பொதிந்துள்ளது என்பதில் எந்தவொரு ஐயப்பாடும் இருக்க இயலாது."[117]

குறிப்புகள்

தொகு
  1. Neubecker 1998–2002
  2. Tom Shippey, "So Much Smoke", review of Higham 2002, London Review of Books, 40:24:23 (20 December 2018)
  3. Higham 2002, ப. 11–37, has a summary of the debate on this point.; Davies, John (1993). A history of Wales. Internet Archive. London: Allen Lane the Penguin Press. p. 133. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7139-9098-0.
  4. Charles-Edwards 1991, ப. 15; Sims-Williams 1991. Y Gododdin cannot be dated precisely: it describes 6th-century events and contains 9th- or 10th-century spelling, but the surviving copy is 13th-century.
  5. See Padel 1994; Sims-Williams 1991; Green 2007b; and Roberts 1991a
  6. Thorpe 1966, but see also Loomis 1956
  7. Dumville 1986; Higham 2002, ப. 116–69; Green 2007b, ப. 15–26, 30–38.
  8. Green 2007b, ப. 26–30; Koch 1996, ப. 251–53.
  9. Charles-Edwards 1991, ப. 29
  10. Morris 1973
  11. Myres 1986, ப. 16
  12. கில்தாஸ், s:The Ruin of Britain|டெ எக்சிடியோ எட் காங்குவெஸ்ட் பிரிட்டானியா, , அதிகாரம் 26.
  13. Pryor 2004, ப. 22–27
  14. பெடெ, ஹிஸ்டோரியா எக்லெஸியாஸ்டிகா ஜெண்டிஸ் அங்க்ளோரம், s:Ecclesiastical_History_of_the_English_People/Book_1#16|புத்தகம் 1.16.
  15. Dumville 1977, ப. 187–88
  16. Green 1998; Padel 1994; Green 2007b, அதிகாரங்கள் ஐந்தும் ஏழும்.
  17. ஹிஸ்டோரியா பிரிட்டோனம் s:History of the Britons#Arthuriana|56, s:History of the Britons#Wonders of Britain|73; அன்னாலெஸ் காம்பிரெயி s:Welsh Annals|516, 537.
  18. எடுத்துக் காட்டாக, Ashley 2005.
  19. Heroic Age 1999
  20. கிளாஸ்டோன்பரி சிலுவையானது 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்திருக்கக் கூடிய ஒரு மோசடியின் விளைவு என நவீன கல்வியாராய்ச்சி கருதுகிறது. காண்க Rahtz 1993 மற்றும் Carey 1999.
  21. இவை இரண்டாவது அல்லது மூன்றாம் நூற்றாண்டில்Littleton & Malcor 1994 பிரிட்டனில் பணிபுரிந்த ரோமானிய அதிகாரியான லூசியஸ் ஆர்தொரியஸ் காஸ்டஸ் என்பவரிலிருந்து ரோமானியப் பேரரசைக் கைப்பற்றிய மாக்னஸ் மாக்சிமஸ் என்னும் பேரரசர்கள் அல்லது உரோமின் கீழான பிரித்தானிய நாட்டின் ஆட்சியாளர்கள் ரியோதமஸ்(Ashe 1985), ஆம்ப்ரோசியஸ் ஔரெலியானஸ்,(Reno 1996) ஒவைன் ட்வாண்ட்க்வின்(Phillips & Keatman 1992) மற்றும் ஆதர்விஸ் அப் மெயுரிக்(Gilbert, Wilson & Blackett 1998) ஆகியோர் வரை கொண்டுள்ளது.
  22. Malone 1925
  23. மார்செல்லா செலோட்டி, வின்செஞ்சா மோரிஜியோ, மெரினா சில்வெசஸ்ட்ரினி, லெ எபிகிராஃபி ரொமானே டி கனோசா, தொகுப்பு 1, எடிபுக்லியா எஸ்ஆர்எல், 1990, பிஜி. 261, 264.
  24. சிரோ சான்ட்ரோ, "பெர் லெ நுவோவா இஸ்க்ரிஜியோன் மெசாபிகா டி ஒரியா", லா ஜாககாலியா, ஏ. VII என். 27, 1965, ப. 271-293.
  25. சிரோ சாண்ட்ரோ, லா நுவோவா இஸ்க்ரிஜியோன் மெசாபிகா", ஐஎம் 4. 16, I-III" டி ஓஸ்டுனி எட் நோமி இன் ஆர்ட்-, ரைசெர்ச்சி எ ஸ்டடி, தொகுப்பு 12, 1979, ப. 45-60.
  26. வில்ஹெல்ம் ஸ்கல்ஜ், ஜுர் ஜெஸிஷ்ட்ச் லேடினிஷர் ஐஜென்மேன் (அப்ஹாண்ட்லுஜென் டெர் ஜெசெல்ஸ்காஃப்ட் டெர் வைச்சென்ஷ்சாஃபெட்ன் ஜு காடிஞ்ஜென், ஃபிலோஜிஷ்-ஹிஸ்டாரிஷ் கிளாசி, ஜெஸெல்ஷாஃப்ட் டெர் வைசென்ஷாஃப்டென் காட்டிஞ்ஜென் ஃபிலோலோஜிஷ்-ஹிஸ்டோரிஷ் கிளாசி என்பதன் தொகுப்பு 5, இதழ் 2), இரண்டாம் பதிப்பு, வைட்மான், 1966, ப 72, பிபி. 333-338.
  27. ஓலி சலோமைஸ்:டை ரோமிஸென் வோர்னாமென் ஸ்டடியென் ஜுர் ரோமிஸென் நேமெஞ்சென்பங் ஹெல்சிங்கி 1987, ப. 68
  28. ஹெர்பிக், கஸ்ட்., "ஃபால்சிகா", க்ளோட்டா, பேண்ட் II, காட்டிஞ்ஜென், 1910, ப. 98
  29. காண்க Higham 2002, ப. 74.
  30. காண்க Higham 2002, ப. 80.
  31. Koch 1996, ப. 253. ஆர்தொரியஸ் வெல்ஷிடமிருந்து கடன் வாங்குகையில் எவ்வாறு வழமையான ஆர்தரி ன் உருவத்தைக் கொள்கிறார் என்பதற்கு மேலும் காண்க Malone 1925 மற்றும் Green 2007b, ப. 255.
  32. 32.0 32.1 Griffen 1994
  33. Harrison, Henry (1996) [1912]. Surnames of the United Kingdom: A Concise Etymological Dictionary. Genealogical Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-806-30171-6. பார்க்கப்பட்ட நாள் 2008-10-21.
  34. Anderson 2004, ப. 28–29; Green 2007b, ப. 191–94
  35. Green 2007b, ப. 178–87.
  36. Green 2007b, ப. 45–176
  37. Green 2007b, ப. 93–130
  38. ஆர்தரின் இந்த குணாதிசயம் பற்றிய ஒரு முழுமையான விவாதத்தைக் Padel 1994 கொண்டுள்ளது.
  39. Green 2007b, ப. 135–76. அவரது உடமைகள் மற்றும் மனைவி முதலானவற்றிற்கு, மேலும் காண்க Ford 1983.
  40. Williams 1937, ப. 64, வரி 1242
  41. Charles-Edwards 1991, ப. 15; Koch 1996, ப. 242–45; Green 2007b, ப. 13–15, 50–52.
  42. எடுத்துக்காட்டாகக் காண்க, Haycock 1983–84 மற்றும் Koch 1996, ப. 264–65.
  43. இந்தக் கவிதையின் நேரடிக் கணினி மொழிபெயர்ப்புகள் தற்காலத்திற்குப் பொருந்தாதவை மற்றும் துல்லியமற்றவை. ஆர்தரிய அம்சங்கள் மீதான விவாதம் மற்றும் ஒரு முழு மொழி பெயர்ப்புக்குக் காண்க Haycock 2007, ப. 293–311 மற்றும் Green 2007b, ப. 197
  44. உதாரணத்திற்கு, ஒரு மொழி பெயர்ப்பை உள்ளடக்கிய Green 2007b, ப. 54–67 மற்றும் Budgey 1992 ஆகியவற்றைக் காண்க.
  45. Koch & Carey 1994, ப. 314–15
  46. இந்தக் கவிதையின் முழு மொழி பெயர்ப்பு மற்றும் பகுப்பாய்வினை Sims-Williams 1991, ப. 38–46 கொண்டுள்ளது.
  47. கதையின் மீதான விவாதத்திற்குக் காண்க Bromwich & Evans 1992; Padel 1994, ப. 2–4 என்பதனையும் காண்க; Padel 1994, ப. 2–4; Roberts 1991a மற்றும் மூன்றாம் அதிகாரம் ஆகியவற்றையும் காண்க.
  48. Barber 1986, ப. 17–18, 49; Bromwich 1978
  49. Roberts 1991a, ப. 78, 81
  50. Roberts 1991a
  51. Coe & Young 1995, ப. 22–27-இல் மொழி பெயர்க்கப்பட்டது. கிளாஸ்டோன்பரி கதை மற்றும் வேற்றுலக முன்னுதாரணங்கள் ஆகியவற்றிற்குக் காண்க Sims-Williams 1991, ப. 58–61.
  52. Coe & Young 1995, ப. 26–37
  53. இந்த விட்டா வை ஒரு வரலாற்றுத் தோற்றுவாயாகப் பயன்படுத்தும் முயற்சியை Ashe 1985-இல் காணவும்
  54. Padel 1994, ப. 8–12; Green 2007b, ப. 72–5, 259, 261–2; Bullock-Davies 1982
  55. Wright 1985; Thorpe 1966
  56. ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத், ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா s:History of the Kings of Britain/Book 8#19|புத்தகம் 8.19–24, s:History of the Kings of Britain/Book 9|புத்தகம் 9, s:History of the Kings of Britain/Book 10|புத்தகம் 10, s:History of the Kings of Britain/Book 11|புத்தகம் 11.1–2
  57. [136]
  58. Roberts 1991b, ப. 106; Padel 1994, ப. 11–12
  59. Green 2007b, ப. 217–19
  60. Roberts 1991b, ப. 109–10, 112; Bromwich & Evans 1992, ப. 64–5
  61. Roberts 1991b, ப. 108
  62. Bromwich 1978, ப. 454–55
  63. எடுத்துக் காட்டிற்கு காண்க, Brooke 1986, ப. 95.
  64. Ashe 1985, ப. 6; Padel 1995, ப. 110; Higham 2002, ப. 76.
  65. Crick 1989
  66. Sweet 2004, ப. 140. மேலும் காண்க, Roberts 1991b மற்றும் Roberts 1980.
  67. உதாரணமாக, Ashe 1996-ஆல் குறிப்பிட்டவாறு
  68. உதாரணமாக, Thorpe 1966, ப. 29
  69. Stokstad 1996
  70. Loomis 1956; Bromwich 1983; Bromwich 1991.
  71. Lacy 1996a, ப. 16; Morris 1982, ப. 2.
  72. உதாரணமாக, ஜியோஃப்ரே ஆஃப் மான்மௌத்., ஹிஸ்டோரியா ரேகம் பிரிட்டானியா s:History of the Kings of Britain/Book 10#3|புத்தகம் 10.3]].
  73. Padel 2000, ப. 81
  74. Morris 1982, ப. 99–102; Lacy 1996a, ப. 17.
  75. Lacy 1996a, ப. 17
  76. Burgess & Busby 1999
  77. Lacy 1996b
  78. Kibler & Carroll 1991, ப. 1
  79. Lacy 1996b, ப. 88
  80. Roach 1949–83
  81. Ulrich, von Zatzikhoven 2005
  82. Padel 2000, ப. 77–82
  83. மூன்று உரைகளின் துல்லியமான மொழிபெயர்ப்பிற்குக் காணவும் Jones & Jones 1949 வெல்ஷ் வீரக்காதற்காதைகள் மற்றும் கிரைட்டியனின் எழுத்துக்கள் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு என்ன என்பது முழுவதுமாக நன்கு அறியப்படவில்லை; இருப்பினும், கருத்துக்களின் ஒரு மேலாய்வுக்குக் காண்க:Koch 1996, ப. 280–88
  84. 84.0 84.1 Lacy 1992–96
  85. இச்சுழற்சியின் ஒரு ஆய்விற்குக் காண்க Burns 1985.
  86. மலோரி மற்றும் அவரது பணி ஆகியவற்றிற்குக் காண்க, Field 1993 மற்றும் Field 1998.
  87. Vinaver 1990
  88. Carley 1984
  89. Parins 1995, ப. 5
  90. 90.0 90.1 Ashe 1968, ப. 20–21; Merriman 1973
  91. Green 2007a
  92. Parins 1995, ப. 8–10
  93. Wordsworth 1835
  94. இக் கவிதையை எழுதுகையில் டென்னிசன் பயன்படுத்திய தோற்றுவாய்களுக்குக் காண்க Potwin 1902
  95. Taylor & Brewer 1983, ப. 127
  96. தி இடில்ஸ் ஆஃப் தி கிங் என்னும் கவிதையின் பகுப்பாய்வுகளுக்குக் காண்க Rosenberg 1973 மற்றும் Taylor & Brewer 1983, ப. 89–128
  97. எடுத்துக் காட்டிற்குக் காண்க, Simpson 1990.
  98. Staines 1996, ப. 449
  99. Taylor & Brewer 1983, ப. 127–161; Mancoff 1990.
  100. Green 2007a, ப. 127; Gamerschlag 1983
  101. Twain 1889; Smith & Thompson 1996.
  102. Watson 2002
  103. Mancoff 1990
  104. Workman 1994
  105. Hardy 1923; Binyon 1923; மற்றும் Masefield 1927
  106. Eliot 1949; Barber 2004, ப. 327–28
  107. White 1958; Bradley 1982; Tondro 2002, ப. 170
  108. Lagorio 1996
  109. Lupack & Lupack 1991
  110. Harty 1996; Harty 1997
  111. Taylor & Brewer 1983, ஒன்பதாவது அதிகாரம்; மேலும் காண்க Higham 2002, ப. 21–22, 30.
  112. Thompson 1996, ப. 141
  113. எடுத்துக் காட்டாக: ரோஸ்மேரி சுட்கிளிஃபின் தி லேண்டர்ன் பேரர்ஸ் (1959) மற்றும் ஸ்வோர்ட் அட் சண்ட்செட் (1963); மேரி ஸ்டீவார்ட்டின் தி கிரிஸ்டல் கேவ் (1970) மற்றும் அதன் இணைகள்; பார்க் காட்வின்னின் ஃபயர்லார்ட் (1980) மற்றும் அதன் இணைகள்; ஸ்டீஃபன் லாஹெட்டின் தி பெண்டிராகன் சைக்கிள் (1987-99); நிக்கோயி டால்ஸ்டாயின் தி கமிங் ஆஃப் தி கிங் (1988); ஜாக் வைட்டின் தி காமுலோட் கிரானிகிள்ஸ் (1992-97); மற்றும் பெர்னார்ட் கார்ன்வெல்லின் தி வார்லார்ட் கிரானிகிள்ஸ் (1995-97). காண்க: அரசர் ஆர்தரைப் பற்றிய புத்தகங்களின் பட்டியல்
  114. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆர்தர் அரசர்  ; இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் The Last Legion  
  115. Thomas 1993, ப. 128–31
  116. Lupack 2002, ப. 2; Forbush & Forbush 1915
  117. Lacy 1996c, ப. 364

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆர்தர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • "Arthurian Gwent", Blaenau Gwent Borough County Council, archived from the original on 2008-05-12, பார்க்கப்பட்ட நாள் 2008-05-22. வெல்ஷ் ஆர்தரியன் கிராமியப் புனைவுகளை விளக்கும் ஒரு அற்புதமான வலைத்தளம்.
  • Arthurian Resources: King Arthur, History and the Welsh Arthurian Legends, பார்க்கப்பட்ட நாள் 2008-05-22. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த தாமஸ் க்ரீன் என்பவரது ஆழ்புலமை வாய்ந்த எண்ணற்ற கட்டுரைகளை உள்ளடக்கிய, ஒரு விபரமான மற்றும் முழுமையான கல்விசார் வலத்தளம்.
  • Arthuriana, பார்க்கப்பட்ட நாள் 2008-05-22. ஆர்தரியப் புனைவுகளுக்கு மட்டுமேயான ஒரே கல்விசார் இதழ்; ஆர்தரிய வளங்கள் மற்றும் இணைப்புகளுக்கான ஒரு சிறந்த தேர்வு.
  • Celtic Literature Collective, பார்க்கப்பட்ட நாள் 2008-05-22. வெல்ஷ் இடைக் காலத் தோற்றுவாய்களின் (மாறுபட்ட தரமுடைய) உரைகளையும் மொழி பெயர்ப்புகளையும் இது அளிக்கிறது; இவற்றில் பல ஆர்தரைப் பற்றிக் கூறுகின்றன.
  • "Faces of Arthur", Faces of Arthur, பார்க்கப்பட்ட நாள் 2009-11-16. பல்வேறு ஆர்தரிய ஆர்வலர்கள் ஆர்தர் அரசர் பற்றிப் புனைந்த கட்டுரைகளின் ஒரு சுவாரசியமான தொகுப்பு.
  • Ford, David Nash, "King Arthur, General of the Britons", Britannia History, பார்க்கப்பட்ட நாள் 2008-05-22.
  • The Camelot Project, The University of Rochester, பார்க்கப்பட்ட நாள் 2008-05-22. மதிப்பு மிக்க புத்தக விபரத் தொகுப்புக்களையும் மற்றும் இலவசமாக கணினியிலிருந்து இறக்கிக் கொள்ளப்படக் கூடிய ஆர்தரிய உரைகளையும் அளிக்கிறது.
  • The Heroic Age: A Journal of Early Medieval Northwestern Europe, பன்னாட்டுத் தர தொடர் எண் 1526-1827, பார்க்கப்பட்ட நாள் 2008-05-22 {{citation}}: Check |issn= value (help). வழமையான ஆர்தரியக் கட்டுரைகளை உள்ளடக்கிய, ஒரு சமகாலப் புனைவாளர் மறு ஆய்வு செய்த கணினி- நேரடி இதழ்; குறிப்பாக முதல் இதழைப் பார்க்கவும்.
  • "The Medieval Development of Arthurian Literature", h2g2, BBC, பார்க்கப்பட்ட நாள் 2008-05-22
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_அரசர்&oldid=4097740" இலிருந்து மீள்விக்கப்பட்டது