ஆர். டி. ராஜா
ஆர். டி. ராஜா (R.D. Raja) என்பவர் ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், படைப்பு உருவாக்குநர், பாடலாசிரியர் மற்றும் திரைப்பட மேம்பாட்டு ஆலோசகராக தமிழ்த் திரையுலகில் இயங்கி வருபவர் ஆவார். மேலும் இவரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோ மூலம் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்காக இவர் சிறப்பாக அறியப்படுகிறார்.[1]
ஆர். டி. ராஜா | |
---|---|
பணி | திரைப்படபடத் தயாரிப்பளார், படைப்பு உருவாக்குநர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது |
துவக்க ஆண்டுகள்
தொகுஇவர் அறிவுமதி, செல்வபாரதி போன்றோரிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து திரைப்படத் துறையில் முறையான அனுபவம் பெற்றார். பின்னர் பல விளம்பரப் படைப்புகளை உருவாக்கி இருக்கிறார்.[2] தமிழ்த் திரைத்துறையில் ஆர். டி. ராஜா அவரது தொழில் வாழ்க்கையை திரைப்படங்களின் மேம்பாட்டு ஆலோசகராகத் துவக்கினார். இவர் மேம்பாட்டு ஆலோசகராக பாஸ் என்கிற பாஸ்கரன், ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஜில்லா. போன்ற படங்களுக்கு பணியாற்றியுள்ளார். படைப்பு உருவாக்குநராக கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே. போன்ற படங்களுக்கு பணியாற்றினார். மேலும் இவரால் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட பன்மொழிப் படமும் சிவ கார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்த ரெமோ திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதையடுத்து இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்த வேலைக்காரன் படத்தை தயாரித்தார். நிவின் பாலியுடனான ஒரு படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.[3][4][5]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | பெயர் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2011 | ஏழாம் அறிவு | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2012 | ராட்டினம் | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2012 | வழக்கு எண் 18/9 | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2012 | மெரினா | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2012 | சகுனி | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2012 | அட்டகத்தி | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2013 | அலெக்ஸ் பாண்டியன் | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2013 | கேடி பில்லா கில்லாடி ரங்கா | தமிழ் | படைப்பு உருவாக்குநர் |
2013 | மூடர் கூடம் | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2013 | ஜில்லா | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2013 | தேசிங்கு ராஜா | தமிழ் | மேம்பாட்டு ஆலோசகர் |
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் | தமிழ் | படைப்பு உருவாக்குநர் |
2014 | மான் கராத்தே | தமிழ் | படைப்பு உருவாக்குநர்/பாடலாசிரியர் |
2016 | ரஜினி முருகன் | தமிழ் | படைப்பு உருவாக்குநர் |
2016 | ரெமோ | தமிழ்/தெலுங்கு/மலையாளம் | தயாரிப்பாளர் |
2017 | வேலைக்காரன் | தமிழ் | தயாரிப்பாளர் |
2018 | சீமராஜா | தமிழ் | தயாரிப்பாளர் |
2019 | எஸ்கே 14 | தமிழ் | தயாரிப்பாளர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RD Raja becomes producer for SIvakarhitkeyan next - Tamil Movie News". indiaglitz.com. Retrieved 2016-09-26.
- ↑ ம.மோகன் (22 சூலை 2015). "தமிழ் சினிமா மீண்டும் கதாசிரியர்களின் கையில் வரும்: ஆர்.டி.ராஜா நேர்காணல்". செவ்வி. தி இந்து தமிழ். Retrieved 16 ஏப்ரல் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Producer RD Raja says that he will foray into Hollywood in three years - The Hindu". thehindu.com. Retrieved 2016-09-26.
- ↑ "Producer RD Raja on Sneha's role in Mohan Raja-Sivakarthikeyan's film". behindwoods.com. Retrieved 2016-09-26.
- ↑ "'RD Raja to produce and script Nivin Pauly's next in Tamil' Tamil Movie, Music Reviews and News". moviecrow.com. Retrieved 2016-09-26.