ஆர். ஸ்ரீலேகா

காவல்துறை அதிகாரி

ஆர். ஸ்ரீலேகா (R. Sreelekha) (பிறப்பு 25 திசம்பர் 1960) இந்தியக் காவல் பணியில் பணியாற்றிய அதிகாரியும்,]] இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த முதல் பெண் காவல்பணி அதிகாரியும் ஆவார்.[1] ஒரு எழுத்தாளராகவும இருக்கும் இவர் ஒரு காவல் துறை அதிகாரியாக தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, இப்போது “SASNEHAM SREELEKHA” (அன்புடன் ஸ்ரீலேகா) என்ற ஒரு வெற்றிகரமான யூடியூப் அலைவரிசையையும் நடத்தி வருகிறார். கேரளாவில் பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் நடுவண் புலனாய்வுச் செயலகத்தில் பணியாற்றிய காலத்தில், 'ரெய்டு ஸ்ரீலேகா' என்ற புனைப்பெயரைப் பெற்றிருந்தார்.[2]

ஆர். ஸ்ரீலேகா
இந்தியக் காவல் பணி
காவல் துறை
பிறந்த நாள்: 25 திசம்பர் 1960 (அகவை 60)
பிறந்தயிடம்திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
Allegianceஇந்தியக் காவல் பணி
பணியிலிருந்த ஆண்டுகள்33
தரம்காவல்துறையின் தலைமை இயக்குனர்
விருதுகள்
  • Police Medal for Meritorious Services
  • சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம்

ஆரம்பகால வாழ்க்கையும், குடும்பமும் தொகு

ஸ்ரீலேகா 1960ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளில் (25 திசம்பர்),[3] பேராசிரியரான என். வேலாயுதன் நாயர் மற்றும் பி.இராதாம்மாள் ஆகியோரின் மகள்களில் ஒருவராக பிறந்தார்.[4] இவரது தந்தை இரண்டாம் உலகப் போரில் இந்திய இராணுவத்தில் சிப்பாயாக, நேச நாட்டுப் படைகளில் (சர்வாதிகாரிகளான இட்லர், பெனிட்டோ முசோலினி எதிராக அணி) போராடினார். அதன் பிறகு இவர் தனது கல்வியை முடித்து பேராசிரியர் ஆனார். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் குழந்தை அறுவை சிகிச்சை மருத்துவப் பேராசிரியரான எஸ் சேதுநாத் என்பவரை மணந்தார். இவர்களுக்கு கோகுல் என்ற ஒரு மகன் இருக்கிறார். கோகுல் கொச்சியில் சொந்த மேலாண்மை/வணிக ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

கல்வி தொகு

ஸ்ரீலேகா, திருவனந்தபுரத்தின் தனது பள்ளிப் படிப்பை பருத்தி மலை, அரசு உயர்நிலைப் பள்ளியில் முடித்தார்.[5] அங்கு இவர் இசை, நாடகம், தேசிய மாணவர் படை , நாட்டு நலப்பணித் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

பின்னர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.[1] 2005இல், சேவையில் இருந்தபோது, இக்னோவிலிருந்து மனிதவள மேலாண்மையில் எம்பிஏ பெற்றார்.[4]

இவருக்கு ஐக்கிய இராச்சியத்தின் மதிப்புமிக்க செவெனிங் உதவித் தொகை வழங்கப்பட்டது. இவர் செப்டம்பர் முதல் திசம்பர் 2015 வரை இலண்டன் கிங்ஸ் கல்லூரி, சயின்ஸ் போ பாரிஸ், எடின்பரோ பல்கலைக்கழகம், ஜெனீவா மற்றும் ஆக்ஸ்போர்டில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகங்களில் கூட்டுறவு ஆய்வுகளை மேற்கொண்டார்.

இஅவர் 2013 இல் இலண்டன் வணிகப் பள்ளியிலும், இலண்டன் பெருநகர காவல் துறையின் (இசுக்கொட்லாந்து யார்ட்) மத்திய தொழில் பயிற்சி திட்டத்திலும் கலந்து கொண்டார்.

தொழில் தொகு

காவல் பணியில் சேருவதற்கு முன்பு, ஸ்ரீலேகா, ஸ்ரீ வித்யாதிராஜா கல்லூரியில் விரிவுரையாளராக சிலகாலம் பணிபுரிந்தார். இவர் இந்திய ரிசர்வ் வங்கியில் பி தகுதி அதிகாரியாக பணியாற்றினார். பின்னர், மும்பையில் ஒரு புள்ளியியல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[6] சனவரி 1987இல், 26 வயதில், கேரளப் பிரிவில் முதல் பெண் இந்தியக் காவல் பணி அதிகாரியானார்.

1 சூன் 2020 அன்று கேரள தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளுக்கு தலைமை வகிக்கும் காவல்துறையின் தலைமை இயக்குன க இவர் பொறுப்பேற்றார். கேரளாவில் சுயாதீன பொறுப்பை ஏற்கும் முதல் 'பெண் டிஜிபி' ஆனார்.

சேவையில் 33 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் நிறைவடைந்த பிறகு , கேரளா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகளின் தலைமை இயக்குனராக 31 திசம்பர் 2020 அன்று ஓய்வு பெற்றார்.[7][8][9][10]

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 . 26 January 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/presidents-medal-for-r-sreelekha/article4347063.ece. 
  2. . 3 December 2013. http://webcache.googleusercontent.com/search?q=cache:4gy0qoqV49MJ:www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/gulfContentView.do%3FcontentId%3D15605895%26programId%3D11565535%26BV_ID%3D%40%40%40%26&hl=en&strip=1. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "IPS (Kerala Cadre) Civil List as on 01-01-2012" (PDF). General Administration Department, Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
  4. 4.0 4.1 "R.Sreelekha, IPS". Kerala.com. Archived from the original on 26 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Back to school". தி இந்து. 2010-02-11. Archived from the original on 24 March 2014. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "Sreelekha IPS". Who am I?. Sreelekha R. பார்க்கப்பட்ட நாள் 26 February 2014.
  7. "R Sreelekha, First woman IPS officer in Kerala retires - ET Government".
  8. "R Sreelekha, first woman DGP in Kerala, retires from service".
  9. https://keralakaumudi.com/en/news/mobile/news.php?id=463755&u=keralas-first-woman-ips-officer-sreelekha-retires-after-33-years-of-service
  10. "R. Sreelekha, the first woman IPS officer in Kerala, set to be the State's first woman DGP". https://www.thehindu.com/news/national/kerala/sreelekha-set-to-be-first-woman-dgp/article31689117.ece. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஸ்ரீலேகா&oldid=3927524" இலிருந்து மீள்விக்கப்பட்டது