ஆழ்வார்திருநகரி

(ஆழ்வார் திருநகரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆழ்வார்திருநகரி (Alwarthirunagari), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இது ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும்.

ஆழ்வார்திருநகரி
—  முதல் நிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் திருச்செந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

9,289 (2011)

929/km2 (2,406/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10 சதுர கிலோமீட்டர்கள் (3.9 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/alwarthirunagari


ஆழ்வார் திருநகரி

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தூத்துக்குடியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 9,289 ஆகும்[4]

10 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

இவ்வூரின்சிறப்பு

தொகு

இவ்வூர் நம்மாழ்வார் பிறந்த தலமாகும். இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்றாகும். ஆழ்வார்திருநகரி நவதிருப்பதி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. வைணவ ஆச்சார்யர்களில் ஒருவரான மணவாள மாமுனிகளின் அவதாரத் தலமும் இதுதான். இங்கு மேலும் திருவேங்கடமுடையான் கோயிலும், திருவரங்கநாதன் கோவில் பிள்ளைலோகாச்சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள் திருக்கோவில், உடையவர் கோவில், உய்யக்கொண்டார், பெரியநம்பி, கிருஷ்ணன், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் ஆகிய கோவில்கள் உள்ளன.

"பூதலவீரராம" என்று பொறிக்கப்பட்ட பழைமையான காசுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. [6]

தமிழ்தாத்தா உ.வே.சா.

தொகு

இவ்வூரில் பத்துப்பாட்டு நூல்களைத் தேடி சுமார் முப்பது கவிராயர்கள் வீட்டு ஓலைச்சுவடிகளைப் பிரித்துப் பார்த்துத் தேடியிருக்கிறார் தமிழ்தாத்தா உ.வே.சா. இவ்வூரில் கிடைத்த ஐங்குறுநூறு ஏட்டுப்பிரதியே தாம் ஐங்குறுநூற்றைப் பதிப்பிப்பதற்கு ஆதாரமானது என்று குறிப்பிடுகின்றார்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. [https://indikosh.com/city/700456/alwarthirunagiri ஆழ்வார்திருநகரி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]
  5. ஆழ்வார்திருநகரி பேரூராட்சியின் இணையதளம்
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-25.
  7. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்வார்திருநகரி&oldid=3984614" இலிருந்து மீள்விக்கப்பட்டது