ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம்
ஆவடி மாநகரக் காவல் ஆணையரகம், சட்டமன்றக் கூட்டத்தில் காவல் துறை மானியக்கோரிக்கையின் போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 13 செப்டம்பர் 2021 அன்று, புதிதாக தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார்.[1][2][3]
ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் 25 காவல் நிலையங்கள் செயல்படும். ஆவடி காவல் ஆணையரகத்தை நிறுவதற்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் தலைவர் கி. சங்கர் இ. கா.ப நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையரக அலுவலகம், தற்காலிகமாக ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2வது அணி வளாகத்திலுள்ள கட்டிடத்தில் அலுவலகம் செயல்படும்.
1 சனவரி 2022 அன்று ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தை தமிழக முதலமைச்சர் காணொலி வாயிலாக முறைப்படி துவக்கி வைத்தார். [4][5]இதன் முதல் ஆணையாளராக சந்தீப் ராய் ரத்தோர் இ. கா.ப பதவியேற்றார்.[6][7]
கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்கள்
தொகுசென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தின் கீழ் செயல்பட்ட 20 காவல் நிலையங்களுடன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்கள் இணைக்கப்பட்டு ஆவடி காவல் ஆணையரகம் இயங்கும்.[8][9]
சென்னை மாநகரக் ஆணையகரத்திலிருந்து இணைக்கப்பட்ட காவல் நிலையங்கள்
தொகு- மாதவரம் பால்பண்ணை
- செங்குன்றம்
- மணலி
- மணலி நியூ டவுன்
- எண்ணூர்
- மாங்காடு
- பூந்தமல்லி
- சாத்தாங்காடு
- நசரத்பேட்டை
- முத்தாபுதுப்பேட்டை
- பட்டாபிராம்
- அம்பத்தூர்
- அம்பத்துார் எஸ்டேட்
- கொரட்டூர்
- திருவேற்காடு
- போரூர்
- ஆவடி
- ஆவடி டேங்க் பேக்டரி
- திருமுல்லைவாயல்
- திருநின்றவூர்
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து இணைக்கப்பட்ட காவல் நிலையங்கள்
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ தாம்பரம், ஆவடியில் புதிய போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் - மு.க.ஸ்டாலின்
- ↑ Greater Chennai Police may be bifurcated
- ↑ Stalin’s move to trifurcate Chennai police commissionerate welcomed Stalin’s move to trifurcate Chennai police commissionerate welcomed
- ↑ TN CM M K Stalin to inaugurate Tambaram, Avadi police commissionerates on January 1
- ↑ New Police Commissionerates in Tambaram, Avadi opened
- ↑ TN CM M K Stalin to inaugurate Tambaram, Avadi police commissionerates on January 1
- ↑ New Police Commissionerates in Tambaram, Avadi opened
- ↑ காவல் ஆணையரக எல்லைகள் வரையறை!
- ↑ Tamil Nadu: Officials work on details of new commisionerates