ஆ. தியாகராசா
ஆறுமுகம் தியாகராசா (Arumugam Thiagarajah, 17 ஏப்ரல் 1916 – 25 மே 1981) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிரியரும் ஆவார்.
ஆ. தியாகராஜா A. Thiagarajah | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for வட்டுக்கோட்டை | |
பதவியில் 1970–1977 | |
முன்னையவர் | அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் |
பின்னவர் | தா. திருநாவுக்கரசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மலேசியா | 17 ஏப்ரல் 1916
இறப்பு | 25 மே 1981 | (அகவை 65)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
துணைவர் | மகேசுவரி |
தொழில் | ஆசிரியர் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதியாகராசா, ஆறுமுகம் மற்றும் அமிர்தவல்லி ஆகியோருக்கு 1916 ஏப்ரல் 17 இல்[1] மலேசியாவில் பிறந்தார். தனது எட்டு வயதில் இலங்கை வந்து யாழ்ப்பாணத்திலே கல்வி கற்றார். பின்பு இவர் சென்னை அடையாறு கலாசேத்திராவில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றார்.[2]
1936 இல் இளங்கலைப் பட்டமும், 1938 இல் முதுகலைப் பட்டமும், 1941 இல் எம்.லிட்., பட்டமும் பெற்று இலங்கை திரும்பி காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] 1942 இல் மகேசுவரி சிவகுருநாதன் என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2] 1946 இல் காரைநகர் இந்துக் கல்லூரியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்று,[3] 1970 இல் கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் இறங்கினார். 1979 ஆம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார்.[2]
அரசியலில்
தொகுதியாகராசா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு கட்சியின் வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ. அமிர்தலிங்கத்தை 725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] தேர்தலில் வெற்றி பெற்ற சில நாட்களில் அவர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி அரசில் சேர்ந்து புதிய குடியரசு அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தார்.[5][6] 1972 ஆம் ஆண்டில் இவரது கொழும்பு இல்லத்தில் வைத்து இவர் மீது இடம்பெற்ற கொலை முயற்சியில் உயிர் தப்பினார்.[5]
தியாகராசா 1977 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் தா. திருநாவுக்கரசுவிடம் 18,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[7] இவர் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். 1981 சூன் 4 இல் நடத்தப்படவிருந்த முதலாவது மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அக்கட்சியின் முதன்மை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[8] ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக ஈழப்போராளிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.[9]
படுகொலை
தொகு1981 மே 24 இல் மூளாய் என்ற ஊரில் கட்சித் தேர்தல் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு இரவு பத்தரை மணியளவில் தனது வாகனத்தில் வந்து அமர்ந்த போது புளொட் போராளி ஒருவரால் சுடப்பட்டார்.[3][10] இவர் பின்னர் அவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,[9] அடுத்த நாள் 1981 மே 25 அன்று இரவு 07:30 மணியளவில் தனது 65-ஆவது அகவையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.[11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Thiagarajah, Arumugam". இலங்கைப் பாராளுமன்றம்.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "வெள்ளி விழா அதிபர் அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை". காரை இந்து கனடா. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 3.0 3.1 டி. பி. எஸ். ஜெயராஜ் (16 March 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". The Nation இம் மூலத்தில் இருந்து 20 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ 5.0 5.1 Sri Kantha, Sachi (30 May 2013). "Book Burning in 1933 and 1981: Nazi and Sinhalese goons: style comparisons". Sangam.
- ↑ Rajasingham, K. T. "Chapter 24: Tamil militancy - a manifestation". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-02-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-24.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-24.
- ↑ ஹூல், இராசன்; Somasundaram, Daya; Sritharan, Kopalasingham; திரனகம, ராஜினி (1990). "Chapter 2: Some Milestones in the Development of Tamil Political Consciousness". Broken Palmyra. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு.
- ↑ 9.0 9.1 Rajasingham, K. T. "Chapter 27 - Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-08-24.
- ↑ Sabaratnam, T. (10 October 2010). "The order: Chase voters and stuff ballot boxes". The Nation இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304031948/http://www.nation.lk/2010/10/10/newsfe7.htm.
- ↑ "முன்னாள் வட்டு எம்பி தியாகர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி" (அச்சு). ஈழநாடு (யாழ்ப்பாணம்). மே 25, 1981.