இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம்
இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம் என்பது இந்தியாவில் கூடைப்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் அமைப்பாகும். இந்தியா முழுவதும் கூடைப்பந்தாட்டத்தை மேம்படுத்துவதும் பரப்புவதும் இந்த அமைப்பின் பொறுப்பாகும். இந்தியாவின் அதிகாரப்பூர்வ அணியின் பெயர் இந்தியன் கேஜர்ஸ் ஆகும்.[1]
இந்தியக் கூடைப்பந்து சம்மேளனம் பிஎப்ஐ | |
விளையாட்டு | கூடைப்பந்தாட்டம் |
ஆளுகைப் பகுதி | இந்தியா |
நிறுவபட்ட நாள் | 1950 |
இணைப்பு | பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி |
மண்டல இணைப்பு | எப்.ஐ.பி.ஏ ஆசியா |
தலைமையகம் | புது தில்லி |
தலைவர் | ஆதவ் அர்ஜுனா |
செயலாளர் | குல்விந்தர் சிங் கில் |
ஆடவர் பயிற்றுனர் | ஸ்காட் பிலெம்பிங் |
மகளிர் பயிற்றுனர் | பாஸ்கர் சப்பாணியம்பலம் |
அலுவல்முறை இணையதளம் | |
basketballfederationindia | |
வரலாறு
தொகு1934 ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. 1936 இல் இந்தியத் தேசியக் கூடைப்பந்தாட்ட அணி பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணியில் இணைந்தது. 1950 இல் அந்த அணியினை நிர்வகிக்க இந்தியக் கூடைப்பந்தாட்ட சம்மேளனம் உருவானது.
முன்னாள் தலைவர்களாக குல்விந்தர் சிங் கில், கோவிந்தராஜ் கெம்பரெட்டி போன்றோர் இருந்துள்ளனர்[2][3][4] தற்போதைய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா உள்ளார்.[5] முதல் பெண் தலைவராக பூனம் மகாஜன் பொறுப்பு வகித்தார்.[6]
தேசிய அணிகள்
தொகு- இந்தியத் தேசிய ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி
- இந்தியத் தேசிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணி
- இந்தியத் தேசிய ஆடவர் 3x3 அணி
- இந்தியத் தேசிய மகளிர் 3x3 அணி
- 18 வயதுக்குட்பட்ட இந்தியத் தேசிய ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி
- 18 வயதுக்குட்பட்ட இந்தியத் தேசிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணி
- 16 வயதுக்குட்பட்ட இந்தியத் தேசிய ஆடவர் கூடைப்பந்தாட்ட அணி
- 16 வயதுக்குட்பட்ட இந்தியத் தேசிய மகளிர் கூடைப்பந்தாட்ட அணி
சாதனைப் பட்டியல்
தொகுவயதுப் பிரிவு | ஆடவர் | மகளில் |
---|---|---|
முத்தோர் (ஆடவர்) (மகளிர்) |
1987 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 1991 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019 2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் |
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் 2019 2014 லுசோபோனியா போட்டிகள் |
18-வயதுக்குட்பட்டோர் | N/A | 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி (பிரிவு பி) |
16-வயதுக்குட்பட்டோர் |
5 ஆவது – 2022 ஆசிய விளையாட்டுப் போட்டி | 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி (பிரிவு பி) |
அங்கீகாரங்கள்
தொகுஇந்தியக் கூடைப்பந்தாட்ட வீரர்கள் பல கேடயங்களை நாட்டிற்காகப் பெற்றுள்ளனர். 17 கூடைப்பந்தாட்ட வீரர்கள் இந்திய அரசின் அருச்சுனா விருது பெற்றுள்ளனர்.[7] வாழ்நாள் சாதனைபுரிந்ததற்காக தியான் சந்த் விருதுகளை இரு வீரர்கள் பெற்றுள்ளனர்[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Indian Cagers: Know your Indian men's basketball team". 2 October 2015.
- ↑ "India to host 3x3 basketball Olympic qualifiers in March". இந்துஸ்டான் டைம்ஸ். https://www.hindustantimes.com/other-sports/india-to-host-3x3-basketball-olympic-qualifiers-in-march/story-ws1YqrwzUu2jcEEk7D6lMM.html. பார்த்த நாள்: 10 December 2024.
- ↑ "AGM held in the shadow of dissension". தி இந்து. https://www.thehindu.com/sport/other-sports/agm-held-in-the-shadow-of-dissension/article7040818.ece. பார்த்த நாள்: 10 December 2024.
- ↑ "Ajay Sud resigns from post of Basketball Federation of India's Secretary-General while the BFI divides in disarray". hoopistani. பார்க்கப்பட்ட நாள் 10 December 2024.
- ↑ "BFI - Basketball Federation of India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-15.
- ↑ Poonam Mahajan becomes first women president of Basketball Federation of India
- ↑ 7.0 7.1 "Techolac - Computer Technology News". Archived from the original on January 10, 2013. பார்க்கப்பட்ட நாள் January 29, 2013.