ஆதவ் அர்ஜுனா


ஆதவ் அர்ஜுனா (ஆங்கில மொழி: Aadhav Arjuna) என்பவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் தேர்தல் வியூக வகுப்பாளரும் விளையாட்டுத்துறை நிர்வாகியுமாவார். இவர் அரைஸ் கேப்பிட்டல் என்ற நிறுவத்தின் நிர்வாக இயக்குநராகவும் 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் 2023 ஆம் ஆண்டு முதல் இந்தியக் கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராகவும் வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற அரசியல் வியூக நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளார்.[1] இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து, 2024 டிசம்பரில் ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா
பிறப்புஏப்ரல் 12, 1982 (1982-04-12) (அகவை 42)
திருச்சி, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிதொழில்முனைவோர், விளையாட்டுத்துறை நிர்வாகி
அமைப்பு(கள்)வாய்ஸ் ஆப் காமன்ஸ்
அரசியல் கட்சிவிசிக
வாழ்க்கைத்
துணை
டெய்சி மார்டின்
உறவினர்கள்ஜி. திலகவதி (பெரியம்மா)
வலைத்தளம்
aadhavarjuna.com/tamil/

இளமைக்காலம்

தொகு

இவர் 1982 ஆம் ஆண்டு 12 ஏப்ரலில் திருச்சியில் ஒரு வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே தனது தாயாரை இழந்தார். இவரது ஆரம்பக் கல்வியை ஒய்.டபள்யூ.சி.ஏ விலும் பள்ளிக் கல்வியை திருச்சி இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.[2][3] பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளான டைய்சி மார்ட்டினை திருமணம் செய்தார்.

விளையாட்டுத்துறை

தொகு

2016 ஆம் ஆண்டு வரை இவர் கூடைப்பந்தாட்ட வீரராக விளையாடி வந்தார். பின்னர் நிர்வாகத்தில் கவனம் செலுத்தி 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

தொழில்

தொகு

இவர் அரைஸ் கேப்பிட்டல் என்ற சிறுநிதி நிறுவத்தின் நிர்வாக இயக்குநராக இருந்துவருகிறார். இந்த நிறுவனத்திற்காக இவரது மாமனார், மார்ட்டின் அவரின் நிறுவனமான மார்ட்டின் ஹாப்பி ஹோம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் மூலம் 82.5 கோடி கடன் பெற்றுள்ளார்.[5]

அரசியல் வாழ்க்கை

தொகு

2011 முதல் 2016 வரை மு. க. ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவராக இருந்தார்.[6] 2016 இல் சுனில் கனுகோலுவுடன் இணைந்தும், 2021 இல் பிரசாந்த் கிஷோருடன் இணைந்தும் திமுகவிற்குத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.[6] 2023 இல் திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டில் அக்கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளரானார். 2024 டிசம்பரில் கட்சியின் தலைமை அறிவுறுத்தலை மீறியதாகக் கட்சியை விட்டு ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[7]

2024 டிசம்பர் 14 தேதியில் விசிக வில் இருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார்.[8]

விருதுகள்

தொகு

2022 செப்டம்பரில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் நிகழ்வில் சிறந்த ஒருங்கிணைப்பாளர் விருதினைப் பெற்றார்.[9] விளையாட்டுத் துறையில் இவரது சிறந்த நிர்வாகத்திறனுக்கு விகடன் நம்பிக்கை விருது 2022 மேடையில் கௌரவிக்கப்பட்டார்.[10] கலாட்டா கிரோன் 2022 இல் விளையாட்டு ஐகான் என்ற விருதையும் பெற்றார்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக ஆதவ் அர்ஜூனா தேர்வு,". தினத்தந்தி. பார்க்கப்பட்ட நாள் 6 July 2024.
  2. "Expelled by South Asian University, Scholar Heads to Oxford for MPhil". The Wire. பார்க்கப்பட்ட நாள் 29 February 2024.
  3. Staff, T. N. M. (23 June 2023). "TN Dalit student successfully crowdfunds MPhil at Oxford". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 February 2024.
  4. "Basketball Federation of India president underscores need to modernise coaching methods". Hindustan Times (in ஆங்கிலம்). 3 December 2023. பார்க்கப்பட்ட நாள் 29 February 2024.
  5. "Arise Investments & Capital Pvt Ltd". arisecapital.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-16.
  6. 6.0 6.1 "பிரசாந்த் கிஷோர் பாதையைப் பின்பற்றுகிறாரா? ஆரம்பம் முதல் தற்போது வரை... யார் இந்த ஆதவ் அர்ஜுனா?". புதிய தலைமுறை. https://www.puthiyathalaimurai.com/tamilnadu/who-is-aadhav-arjuna-and-what-does-he-had-done-in-tn-politics-so-far. பார்த்த நாள்: 10 December 2024. 
  7. "Aadhav Arjuna: `ஆதவ் கருத்து கட்சியின் நலன் எனத் தோன்றினாலும்..!’ - இடை நீக்கம் செய்த திருமாவளவன்". விகடன். https://www.vikatan.com/government-and-politics/governance/thol-thirumavalavan-on-aadhav-arjunas-expelled-from-the-vck-party. பார்த்த நாள்: 10 December 2024. 
  8. "ஆதவ்".
  9. "செய்திக்குறிப்பு 1570". தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் 10 December 2024.
  10. "VIKATAN AWARDS டீம் தேர்வுல அதிகார மட்டத்தோட தலையீடு நிறைய இருக்கு - ஆதவ் அர்ஜூனா". யூட்டியூப். பார்க்கப்பட்ட நாள் 10 December 2024.
  11. "ஒரே கனவு , புதிய வரலாறு Sports Icon Aadhav Arjuna..! Galatta Crown Award 2022". யூட்டியூப். பார்க்கப்பட்ட நாள் 10 December 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதவ்_அர்ஜுனா&oldid=4168890" இலிருந்து மீள்விக்கப்பட்டது