இந்தியாவில் வன்கலவி

வன்கலவி என்பது பெண்களுக்கு எதிராக அதிகமாக நடைபெறும் குற்றங்களில் நான்காவது குற்றமாகும்.[1][2] தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2019 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, நாடு முழுவதும் 32033 வன்கலவி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அல்லது சராசரியாக தினசரி 88 வழக்குகள் பதியப்படுகின்றன [3] இது 2018 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் சற்றே குறைவான எண்ணிக்கை ஆகும். 2018 ஆம் ஆண்டில் தினசரி 91 வன்கலவி வழக்குகள் இந்தியாவில் பதியப்பட்டன.[4] 2018 ஐப் போன்றே இதில், 30,165 வன்கலவிகள் பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த குற்றவாளிகளால் செய்யப்பட்டவை (94.2% வழக்குகள்) ஆகும்.[5][6] இந்த கற்பழிப்புகளில் பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதிற்குட்பட்டவர்கள் 15.4% ஆக இருந்தனர்.[7] 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான வன்கலவி, தாக்குதல் மற்றும் வன்முறை முயற்சி ஆகியவற்றுக்காக தினசரி 3 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவிலேயே சிறார்கள் குற்றவியல் வழக்குகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.[8]

வன்கலவி விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.[9][10][11][12] திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து உடலுறவில் ஈடுபட்ட பின்னர் திருமணம் செய்யவில்லை எனில் அதனை இந்திய அரசு வன்கலவி வகைப்படுத்துகிறது.[13] பல சம்பவங்கள் பரவலான ஊடக கவனத்தைப் பெற்று உள்ளூர் மற்றும் நாடு தழுவிய பொது எதிர்ப்புகளைத் தூண்டிய காரணத்தினால், சமீபத்திய ஆண்டுகளில் வன்கலவிகளைப் புகாரளிக்கும் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. .[14][15][16][17][18] இது வன்கலவி மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான தண்டனைக் குறியீட்டை அரசு சீர்திருத்த வழிவகுத்தது.[19]

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2019 புள்ளிவிவரங்களின்படி, ராஜஸ்தான் [7] இந்திய மாநிலங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான வன்கலவி வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. மத்தியப்பிரதேசம், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் போன்ற வட இந்திய இந்தி மண்டலத்தில் உள்ள பிற மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகமாக உள்ளன.[20] தேசிய தலைநகர் டெல்லியில் 2019 ஆம் ஆண்டில் 1253 வழக்குகள் பதியப்பட்டு அதிக வன்கலவி நிகழ்ந்த பெருநகர பட்டியலில் முதலிடம் பெற்றது[21][22] மக்கட் தொகை அடிப்படையில் ஜெய்ப்பூரில் அதிக வன்கலவி பதிவு செய்யப்பட்டுள்ளது.[7]

இந்திய தண்டனைச் சட்டத்தில் வரையறை

தொகு

3 பிப்ரவரி 2013 க்கு முன், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375 கற்பழிப்பை பின்வருமாறு வரையறுத்தது:[23]

§375. கற்பழிப்பு. பின்வரும் ஆறு விளக்கங்களில் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்ட நபரானவர் வன்லகவி செய்தவராக குற்றம் சாட்டப்படுவார்.[24]

முதலில் –– பெண்ணுடைய விருப்பத்திற்கு எதிராக பாலியல் உறவில் ஈடுபடல்.

இரண்டாவதாக. - அவளுடைய ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடல்.

மூன்றாவதாக. –– பெண்ணிற்கு விருப்பமான நபரை தாக்கியோ அல்லது கொலை முயற்சியில் ஈடுபடச் செய்வதன் மூலம் பெண்ணின் ஒப்புதலுடன் பாலியல் உறவில் ஈடுபடும் போது.

நான்காவது. –– அந்தப் பெண் தனது மனைவி அல்ல என்பதனைப் புரிந்து கொண்ட போதும் அந்தப் பெண் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வார் எனும் நம்பிக்கையில் அந்தப் பெண்ணின் ஒப்புதலோடு பாலியல் உறவில் ஈடுபடல்,

ஐந்தாவது. - திருமணம் செய்துகொள்வதாக ஆண் கூறியதை ஏற்றுக் கொண்டு அந்த சமயத்தின் நிலைமையினை புரிந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் சமத்தில் பெண்ணின் ஒப்புதலோடு பாலியல் உறவில் ஈடுபடும் போது.

ஆறாவதாக. –– பெண் பதினாறு வயதிற்குட்பட்டவாராக இருக்கும் சமயத்தில் அவரது ஒப்பதலோடு அல்லது அவரது ஒப்புதல் இல்லாத போதும்[25]

விதிவிலக்கு. –– ஒரு மனிதன் பதினைந்து வயதிற்கு மேல் உள்ள தனது சொந்த மனைவியுடன் பாலியல் உடலுறவு கொள்வது வன்கலவி அல்ல.

மேற்கண்ட வரையறையில் திருமண கற்பழிப்பு, ஒரே பாலினக் குற்றங்கள் தவிர்த்து, பதினாறு வயதிற்குட்பட்ட சிறாருடன் பாலியல் உறவில் ஈடுபடும் அனைத்தும் கற்பழிப்பாகக் கருதப்படுகின்றன.3 பிப்ரவரி 2013 க்குப் பிறகு, குற்றவியல் வரையறைச் சட்டம் (திருத்தம்) 2013 மூலம் திருத்தப்பட்டது, இதில் சட்டப்பூர்வ இளவர் வயது பதினெட்டாக உயர்த்தப்பட்டது.[26]

பின்வரும் ஏழு விளக்கங்களில் ஏதேனும் ஒன்றின் கீழ் வரும் சூழ்நிலையில் பெண்ணிடம் பாலியல் உறவில் ஈடுபடுதல்

முதலில் –– பெண்ணுடைய விருப்பத்திற்கு எதிராக பாலியல் உறவில் ஈடுபடல்.

இரண்டாவதாக. - அவளுடைய ஒப்புதல் இல்லாமல் பாலியல் உறவில் ஈடுபடல்.

மூன்றாவதாக. –– பெண்ணிற்கு விருப்பமான நபரை தாக்கியோ அல்லது கொலை முயற்சியில் ஈடுபடச் செய்வதன் மூலம் பெண்ணின் ஒப்புதலுடன் பாலியல் உறவில் ஈடுபடும் போது.

நான்காவது. –– அந்தப் பெண் தனது மனைவி அல்ல என்பதனைப் புரிந்து கொண்ட போதும் அந்தப் பெண் அவர் தன்னை திருமணம் செய்து கொள்வார் எனும் நம்பிக்கையில் அந்தப் பெண்ணின் ஒப்புதலோடு பாலியல் உறவில் ஈடுபடல்,

ஐந்தாவது. - திருமணம் செய்துகொள் வதாக ஆண் கூறியதை ஏற்றுக் கொண்டு அந்த சமயத்தின் நிலைமையினை புரிந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் இருக்கும் சமத்தில் பெண்ணின் ஒப்புதலோடு பாலியல் உறவில் ஈடுபடும் போது.

ஆறாவதாக. –– பெண் பதினாறு வயதிற்குட்பட்டவாராக இருக்கும் சமயத்தில் அவரது ஒப்பதலோடு அல்லது அவரது ஒப்புதல் இல்லாத போதும்

ஏழாவது. –– அவளால் சம்மதம் தெரிவிக்க முடியாதபோது.

சான்றுகள்

தொகு
  1. Kumar, Radha (2003) [1993], "The agitation against rape", in Kumar, Radha (ed.), The history of doing: an illustrated account of movements for women's rights and feminism in India 1800-1990, New Delhi: Zubaan, p. 128, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185107769. Preview.
  2. "Chapter 5: Crime against women", Crime in India 2012 Statistics (PDF), ncrb.gov.in, p. 81, archived from the original (PDF) on 16 January 2016
  3. "No country for women: India reported 88 rape cases every day in 2019". indiatoday.in. 30 September 2020. https://www.indiatoday.in/diu/story/no-country-for-women-india-reported-88-rape-cases-every-day-in-2019-1727078-2020-09-30. 
  4. "Average 80 murders, 91 rapes daily in 2018: NCRB data". 9 January 2020. https://www.thehindu.com/news/national/average-80-murders-91-rapes-daily-in-2018-ncrb-data/article30523916.ece. 
  5. "Crime in India report 2019" (PDF). ncrb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 October 2020.
  6. "Crime in India report 2018" (PDF). ncrb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 October 2020.
  7. 7.0 7.1 7.2 "Crime in India report 2019" (PDF). ncrb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 3 October 2020."Crime in India report 2019" (PDF). ncrb.gov.in. Retrieved 3 October 2020.
  8. "3 minors held for rape each day in 2019". https://timesofindia.indiatimes.com/india/3-minors-held-for-rape-each-day-in-2019/articleshow/78455979.cms. 
  9. Humphrey, John A.; Schmalleger, Frank (2012), "Mental illness, addictive behaviors, and sexual deviance", in Humphrey, John A.; Schmalleger, Frank (eds.), Deviant behavior (2nd ed.), Sudbury, Massachusetts: Jones & Bartlett Learning, p. 252, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780763797737.
  10. Gregg Barak. Crime and Crime Control: A Global View: A Global View. ABC-CLIO. p. 74. Overall, however, rape rates are still lower than most other countries.
  11. United Nations (2009). African Women's Report 2009: Measuring Gender Inequality in Africa - Experiences and Lessons from the African Gender and Development Index. United Nations Publications. pp. 68–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-054362-0.
  12. Colonel Y Udaya Chandar (23 September 2016). The Ailing India. Notion Press. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-945926-26-6.
  13. Correspondent, Legal (2019-04-13). "Sex on false promise of marriage is rape: Supreme Court" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/sex-on-false-promise-of-marriage-is-rape-supreme-court/article26831183.ece. 
  14. Siuli Sarkar (2016-06-17). Gender Disparity in India: Unheard Whimpers. PHI Learning. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120352513.
  15. Tamsin Bradley (2017-02-28). Women and Violence in India: Gender, Oppression and the Politics of Neoliberalism. I.B. Tauris. p. 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781786721181.
  16. Shahid M. Shahidullah (2017). Crime, Criminal Justice, and the Evolving Science of Criminology in South Asia: India, Pakistan, and Bangladesh. Springer. p. 96. police-recorded rape rate in India has shown a sharp increasing trend in recent years against the declining trend of all other violent and property crimes.
  17. Staff writer (19 December 2012). "Protests grow over gang rape of Indian woman (video)". The Telegraph (London) இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190327090933/https://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/9756318/Protests-grow-over-gang-rape-of-Indian-woman.html. 
  18. Staff writer (31 May 2014). "Perceived government inaction over rape and murder of two teenage girls sparks public anger". India'sNews.Net இம் மூலத்தில் இருந்து 31 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140531164140/http://www.indiasnews.net/index.php/sid/222467201/scat/701ee96610c884a6/ht/Perceived-government-inaction-over-rape-and-murder-of-two-teenage-girls-sparks-public-anger. 
  19. "The Criminal Law (Amendment) Act, 2013". இந்திய அரசிதழ். 2013. http://indiacode.nic.in/acts-in-pdf/132013.pdf. 
  20. Shaswati Das (10 Jan 2020). "Women most unsafe in Hindi heartland states, MP registers the highest number of rapes at 5,450". livemint.com. https://www.livemint.com/news/india/uttar-pradesh-most-unsafe-for-women-madhya-pradesh-records-maximum-rapes-says-ncrb-2018-data-11578567097964.html. 
  21. "Three rapes, 126 vehicle thefts per day in Delhi in 2019: NCRB". hindustantimes.com. 1 October 2019. https://www.hindustantimes.com/cities/three-rapes-126-vehicle-thefts-per-day-in-delhi-in-2019-ncrb/story-qRAe1Buwwrkombvl3ngDkJ.html. 
  22. "NCRB Report:Five women raped everyday in Delhi last year:Police". indiatoday.in. 10 January 2019. https://www.indiatoday.in/india/story/five-women-raped-everyday-in-delhi-last-year-police-1427501-2019-01-10. 
  23. Mitra, Hem Chandra; Mukhurji, Bamapada. The Indian Penal Code, Act XLV of 1860. Calcutta. p. 322. இணையக் கணினி நூலக மைய எண் 84414842. Details.
  24. Devasia, V.V.; Kumar, Ajit (2009), "Child sexual abuse - breaking the silence", in Devasia (ed.), Social work concerns and challenges in the 21st century, New Delhi: A.P.H. Pub. Corp, p. 71, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131304679. Preview.
  25. Kalra, Kush; Barupal, Priyanka (2013), "Rape", in Kalra, Kush; Barupal, Priyanka (eds.), Law, sex & crime, India: Vij Books, pp. 66–87, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789382652229.
  26. Mehta, Siddharth (April 2013). Rape law in India: problems in prosecution due to loopholes in the law. doi:10.2139/ssrn.2250448. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியாவில்_வன்கலவி&oldid=4154588" இலிருந்து மீள்விக்கப்பட்டது