இந்திய மருத்துவ ஆய்வு இதழ்

இந்திய மருத்துவ ஆய்வு இதழ் (Indian Journal of Medical Research) என்பது ஒரு திறனாய்வு செய்யப்பட்ட இணையம் வழி திறந்த-அணுகல் உள்ள மருத்துவ ஆய்வு இதழாகும்.[1] available as a print-on-demand compilation.[2] இது தேவைக்கேற்ப அச்சு வடிவில் தொகுப்பாகவும் கிடைக்கிறது. இந்த ஆய்விதழானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவின் சார்பில் மெட்னோ பதிப்பகம் வெளியிடுகிறது.[1] 1977 முதல், ஒரு தொகுதிக்கு ஆறு இதழ்களாக மாதந்தோறும் வெளியிடப்படுகிறது.[3] இந்த ஆய்விதழில் உயிரியல், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆய்வுக் கட்டுரை, "சுகாதாரம், நெறிமுறை மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான தொழில்நுட்ப மற்றும் மருத்துவ ஆய்வுகள்" குறித்த செய்திகள் வெளியிடுகிறது.[1][4] இந்த ஆய்விதழின் தற்போதைய தலைமை ஆசிரியர் அஞ்சு சர்மா[5] (இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம்),[6] முன்னதாக இணை ஆசிரியர் பதவிகளில் பணியாற்றிய பின்னர் ஜனவரி 2012இல் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.[7] வழக்கமான பதிப்புகளுடன் மேலதிகமாக, சிறப்பு வெளியீடுகளையும், கூடுதல் இணைப்புகளுடனும் இந்த ஆய்விதழ் வெளியாகிறது. இந்த இணைப்புகள்/வெளியீடுகள்[1] வேறு ஐ.எஸ்.எஸ்.என். குறியீட்டுடன் வெளியிடப்படுகிறது.[8]

இந்திய மருத்துவ ஆய்வு இதழ்
Indian Journal of Medical Research
 
Indian Journal of Medical Research cover.png
சுருக்கமான பெயர்(கள்) Indian J. Med. Res.
துறை உயிர்வேதியியல் ஆய்வு
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: பலராம் பார்கவ
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் மெட்னோ பதிப்பகம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (இந்தியா)
வரலாறு 1913–present
வெளியீட்டு இடைவெளி: மாதந்தோறும்
Open access ஆம்
தாக்க காரணி 1.503 (2020)
குறியிடல்
ISSN 0971-5916
Supplements:
0367-9012
CODEN IMIREV
OCLC 475425104
இணைப்புகள்

வரலாறு தொகு

இந்த ஆய்விதழ் முதன்முதலில் ஜூலை 1913இல் காலாண்டு வெளியீடாக நிறுவப்பட்டது.[9] பின்னர் 1958ஆம் ஆண்டில் இருமடங்காகவும் பின்னர் 1964இல் மாதாந்திர இதழாக வெளியிடப்பட்டுத் தொடர்கிறது.[1] எவ்வாறாயினும், 1940ஆம் ஆண்டிலும் பின்னர் 1943 மற்றும் 1946க்கு இடையில் அரை ஆண்டு ஆய்விதழாக வெளியிடப்பட்ட காலகட்டமும் இருந்தது. 1977ஆம் ஆண்டிலிருந்து ஒரு தொகுதிக்கான எண்ணிக்கை குறைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஆறு வெளியீடுகளுடன் கூடிய இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படுகின்றன. 1989ஆம் ஆண்டில், பத்திரிகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது: பிரிவு A தொற்று நோய்கள் குறித்த வெளியீடுகளை உள்ளடக்கியது. இதைத் தவிர்த்த உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி பிரிவு B ஆக வெளியிடப்பட்டன. இந்த பிரிவுகள் 1994 முதல் மீண்டும் இணைக்கப்பட்டு புதிய ISSN எண்ணுடன் (0971-5916) வெளியானது. இந்த எண் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இந்த பத்திரிகை ஜூலை 2012 முதல் ஜூலை 2013 வரை இதன் வெளியீடுகளின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.[2][3]

பத்திரிகையின் தொடக்க ஆசிரியர் சர் பர்தே லூகிஸ் (1857 – 1917), இந்திய மருத்துவ சேவையின் இயக்குநர் ஜெனரல் (1910 – 1917), இவர் இறக்கும் வரை இரு பதவிகளிலும் பணியாற்றினார்.[10]

சுருக்கம் மற்றும் அட்டவணைப்படுத்தல் தொகு

ஆய்விதழ் கட்டுரைகள் சுருக்கமாக கீழ்க்காணும் தரவைப்பகங்களில் அட்டவணையிடப்பட்டுள்ளது:[2]

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையின்படி, இந்த இதழ் 2020இன் 1.503 தாக்கக் காரணியைக் கொண்டுள்ளது.[11] இது "நோயெதிர்ப்பு" என்ற பிரிவில் உள்ள 135 பத்திரிகைகளில் 101வது இடத்தைப் பிடித்துள்ளது.[12] "மருத்துவம், பொது மற்றும் உள்," என்ற பிரிவில் உள்ள 151 பத்திரிகைகளில் 38வது இடத்தினையும்[13] "மருத்துவம், ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை" என்ற பிரிவில் உள்ள 121 பத்திரிகைகளில் 70வது இடத்தினையும் பெற்றுள்ளது.[14]

மேலும் காண்க தொகு

  • இந்தியாவில் திறந்த அணுகல்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Indian Journal of Medical Research – About Us". Indian Council of Medical Research. February 25, 2011. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013.
  2. 2.0 2.1 2.2 "Indian Journal of Medical Research". Indian Council of Medical Research. February 25, 2011. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013.
  3. 3.0 3.1 Sharma, A. (2012). "Celebrating 100 years of IJMR's existence". Indian J. Med. Res. 136 (1): 1–2. பப்மெட்:22885255. Sharma, A. (2012). "Celebrating 100 years of IJMR's existence". Indian J. Med. Res. 136 (1): 1–2. PMC 3461709. PMID 22885255.
  4. "Indian Journal of Medical Research – Instructions to the Authors". Indian Council of Medical Research. February 25, 2011. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013.
  5. "Indian Journal of Medical Research – Editorial Board". Indian Council of Medical Research. February 25, 2011. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013.
  6. "Anju Sharma". Indian Council of Medical Research. Archived from the original on செப்டம்பர் 8, 2013. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Sharma, A. (2012). "Moving on with challenges & new initiatives". Indian J. Med. Res. 135 (1): 1–2. doi:10.4103/0971-5916.93414. பப்மெட்:22382173. 
  8. "Indian Journal of Medical Research – About IJMR". Indian Council of Medical Research. Archived from the original on ஜனவரி 18, 2013. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Review: The Indian Journal of Medical Research". The British Medical Journal 2 (2754): 942. October 1913. 
  10. "Obituary: Sir Pardey Lukis, K.C.S.I., M.D., F.R.C.S., Director-General Indian Medical Service". The British Medical Journal 2 (2965): 569. October 1917. doi:10.1136/bmj.2.2965.569. 
  11. https://academic-accelerator.com/Impact-Factor-IF/Indian-Journal-of-Medical-Research[தொடர்பிழந்த இணைப்பு]
  12. 2012 Journal Citation Reports. Thomson Reuters.
  13. 2012 Journal Citation Reports. Thomson Reuters.
  14. 2012 Journal Citation Reports. Thomson Reuters.